கேட்டது கிடைக்கும் சோமவார பிரதோஷத்தின் சிறப்பு | Somavara Pradosham Vratham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • சோமவார பிரதோஷத்தின் சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள் என்ன?-What is Somavara Pradosham Vratham?
    பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கட்கிழமை) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம். திங்கட்கிழமை மட்டுமே சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சோம என்றால் பார்வதியுடனான சிவன் என்றும்  சந்திரன் என்றும் பொருள் படும். கொடிய நோயால் அவதிப்பட்ட சந்திரன் தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் செய்தார்.
    சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கி, நவகிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பை வழங்கினார். பிறகு சந்திரன் பரமேஸ்வரனை நோக்கி, தனது வாரத்தில் மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலனைத் தருமாறு வேண்டினார். அதன்படி பிறந்ததே சோமவார விரதம்.
    பிரதோஷ நேரம்
    பிரதோஷ நேரம் எனப்படும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அற்புத வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மன அமைதி கிடைக்கும், மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
    சோமவார பிரதோஷ நாளில் சிவாலயங்களில் நந்திதேவருக்கு வில்வ அர்ச்சனை, செவ்வரளி, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
    எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் அல்லது வெள்ளைப் பொங்கல் ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தால் வாழ்வு வளமாகும்.
    பிரதோஷ விரதமுறை:
    பிரதோஷ நாளில் அதிகாலையில் நீராடி, திருநீறு அணிந்து சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும். காலை முதல் மாலையில் பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷ தரிசனத்தை முடித்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். பிறகு இரவு உணவு உண்ணலாம். 11 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.
    பிரதோஷ நாளில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
    பிரதோஷ பலன்கள் :
    Visit informationneeds.com portal :
    informationneeds.com/Spiritual...
    Search Terms:
    பிரதோஷம் என்றால் என்ன?
    prathosam pooja live today
    tiruvannamalai, pradosham
    pradosham viratham in tamil
    சோமவார பிரதோஷம்
    பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்
    பிரதோஷம் விரதம் எப்படி இருப்பது
    பிரதோஷம் அன்று என்ன செய்ய கூடாதவை
    #murugandevotee #murugan #pradhosham #pradosham #astrology #aanmeegam #godmantra #aanmeegamtamil #tamilspirituality #hindutemple#hindugod#hindumantra #hindugod #lordshiva #shiva #pradoshvrat #பிரதோஷம் #சிவபெருமான் #சிவன்

ความคิดเห็น • 2

  • @NandhiniSugumar-sf1yy
    @NandhiniSugumar-sf1yy 21 วันที่ผ่านมา +1

    Om namah shivaya 🍃🔱📿🕉️

    • @murugandevotee
      @murugandevotee  21 วันที่ผ่านมา

      ஓம் நமசிவாய 🙏