🦋உள்ளம் காப்பாயடீ💞 | Headphones must💯 | Ajith bharathi kavithai | Tamil kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • தலைவன் தலைவியின் மீது தன்னையறியாமல் காதல் வயப்படுகிறார் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்பதையும் தனக்குள்ளாக எழுந்த காதல் மாற்றங்களையும் கவிதையாய் அவன் எழுதிய வரிகள் இதோ
    தலைப்பு : உள்ளம் காப்பாய் அடி
    மெல்ல வீசுமந்தத் தென்றல்🍁- என்
    மேனி தடவிட சுகம் கண்டேன்!
    காரிருள் பொழுதினில் அக்கருங்குயில்கள்🦜
    காதல் பொழிந்திட கண்டேன்❣
    நிலவுக்கு துணையாய் நானும்
    வானம் பார்த்து விழித்திருந்தேன்👀
    காதல் மயக்கத்தில் அன்று நான்
    கற்பனையில் சிரித்து இருந்தேன் 😊
    உலகம் தூங்குமந்த நேரம் என்
    உள்ளம் தூங்கவில்லை😞
    காதல் உணர்வுகள் நடத்திடும் போரில் உன்னை வெல்லும் திறனும் இல்லை!😔
    காதல் நோயினால் இன்று
    உணவும் கொள்ளவில்லை 🤷‍♂️
    உறங்க மறுத்தே இமை பொழுதும்
    எந்தன் உள்ளம் தவிக்குதடி 🤒
    காட்டு குழிகளில் பதுங்கி
    புலி வேட்டைகள் ஆடிடும் வீரர் 💪
    வீட்டுப் பூச்செடியின் அருகே
    காதல் கவிதைகள் கிறுக்குவதோ ?💑
    கரிகாலன் களம் புகுவான் என்றால்
    போர் படைகளும் அஞ்சி நடுங்குமன்றோ? ⚔🤴
    ஒரு கண்ணின் கருவிழிகள் கண்டு
    அவ்வீரன் நெஞ்சம் பதறுவதோ ?🤷‍♂️
    சிலம்பம் வீசும் பொழுதோ
    உன் சிவந்த இதழ் ஞாபகம்💋
    களரி வீசும் பொழுதோ
    உன் கரிய விழி ஞாபகம்👁
    வாள் வீசும் பொழுது என் நெஞ்சமுன் வண்ண முகம் நினைப்பதோ ?😣
    ஈட்டிகள் வீசிடும் வீரனை
    இனிய காதல் வீழ்த்துவதோ ?🥺
    ஆயுதம் ஏந்த மறுத்து அமரர்
    காதல் பிணி கொள்வதோ?❤
    என்ன செய்தாய் என்னை ?
    சொல்லடி பேரொளியே !🦋
    என்னைக் கொல்லத் துணிவின்றி அந்தக் காலன் அனுப்பினானோ ?🧜‍♂️
    என் கண்ணீரை காண வேண்டி
    அந்தக் கடவுள் அனுப்பினானோ ?🙏
    என்னை அறியாது என் இதயம் உன்னோடு காதல் கொண்டதேனோ ?💞
    உன்னை கட்டி அணைத்திடவே
    நெஞ்சம் ஏங்கித் தவிப்பதேனோ ?🥺
    காதல் பிணியினாலே கரிகாலன்
    மேனி நொந்தான் என்று😔
    ஊர் பழி தூற்றும் முன்பே
    என் உள்ளம் காப்பாயடி ! சகியே
    என் உள்ளம் காப்பாயே...🤗⚔🤴
    ~ அஜித் பாரதியார் ❣
    #love #sad #lovefailure #couples #romantic #bliss #sadpoem #lovepoem #onesidelove #heartmelting #evergreen

ความคิดเห็น •