Madhura Geetham - maraindu vandu
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
- Composed and tuned by
Maharanyam Sri Sri Muralidhara Swamiji
Sung by
S. Thunga Vidhya
Lyrics
ராகம்: மாண்டு தாளம்: ஆதி
தோழன்
01. மறைந்து வந்து வெண்ணெய் திருடும் கண்ணா கண்ணா
மறை பொருளும் நீயே என்று கண்டு கொண்டேன்
நித்தம் உனைக் காணாமல் ராதா க்ருஷ்ணா
சித்தம் துடிக்குதடா ஶ்யாமள க்ருஷ்ணா
02. குழலோசை கேட்டவுடன் கோபீ க்ருஷ்ணா
சூழல் தன்னை மறந்து விட்டேன் மோஹன க்ருஷ்ணா
எங்கு நடனம் கற்றாயோ செல்ல க்ருஷ்ணா
எனக்கும் கற்றுத் தருவாயோ கள்ள க்ருஷ்ணா
03. வெண்ணெய் தன்னில் எனக்கும் பங்கு உண்டோ க்ருஷ்ணா
இல்லாவிட்டால் பேசமாட்டேன் போடா க்ருஷ்ணா
மாமி வந்தால் சொல்லிடுவேன் வெண்ணெய் கொடு
மாட்டிக் கொண்டு வருந்தாதே கள்ள க்ருஷ்ணா
04. அன்னையிடம் சொல்லிடுவேன் வெண்ணெய் கொடு
உன்னை உரலில் கட்டிப் போட்டிடுவாள் கண்ணா கண்ணா
என்னைப் போல் உனக்கு தோழன் உண்டோடா
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கின்றேன் வெண்ணெய் கொடு
க்ருஷ்ணன்
05. மண்ணை நான் தின்ற போது தோழா தோழா
வந்து நீயும் பங்கு கேட்டாயோடா
அன்னை அதட்டி அடிக்கும் போது
வந்து பங்கு கேட்டாயோ தோழா தோழா
06. மலையைக் குடையாய் பிடித்த போது
வந்து நீயும் நின்றாயோ தோழா தோழா
வெண்ணெய் மட்டும் பங்கு கேட்டால்
இது உனக்கு அழகோடா தோழா தோழா
தோழன்
07. வெண்ணெய் திருடி ஓடிச் செல்லும் க்ருஷ்ணா க்ருஷ்ணா
என்னைக் கண்டு ஒளியலாமோ க்ருஷ்ணா க்ருஷ்ணா
நித்தம் உன்னைக் காணாமல் ராதா க்ருஷ்ணா
சித்தம் துடிக்குதடா ஶ்யாமள க்ருஷ்ணா
********
English
********
rAgam: mANDu thALam: Adi
thOzhan
01. maRaindu vandu veNNey thiruDum kaNNA kaNNA
maRai poruLum nIyE enDru kaNDu koNDEn
nittham unaik kANAmal rAdhA kriShNA
chittham thuDikkudaDA shyAmaLa kriShNA
02. kuzhalOsai kETTavuDan gOpI kriShNA
sUzhal thannai maRandu viTTEn mOhana kriShNA
engu naTanam kaTrAyO chella kriShNA
enakkum kaTrut tharuvAyO kaLLa kriShNA
03. veNNey thannil enakkum pangu uNDO kriShNA
illAviTTAl pEsamATTEn pODA kriShNA
mAmi vandAl solliDuvEn veNNey koDu
mATTik koNDu varundAdE kaLLa kriShNA
04. annaiyiDam solliDuvEn veNNey koDu
unnai uralil kaTTip pOTTiDuvAL kaNNA kaNNA
ennaip pOl unakku thOzhan uNDODA
kenjchik kenjchik kETkinDrEn veNNey koDu
kriShNan
05. maNNai nAn thinDra pOdu thOzhA thOzhA
vandu nIyum pangu kETTAyODA
annai adaTTi aDikkum pOdu
vandu pangu kETTAyO thOzhA thOzhA
06. malaiyaik kuDaiyAy piDittha pOdu
vandu nIyum ninDrAyO thOzhA thOzhA
veNNey maTTum pangu kETTAl
idu unakku azhagODA thOzhA thOzhA
thOzhan
07. veNNey thiruDi ODi sellum kriShNA kriShNA
ennaik kaNDu oLiyalAmO kriShNA kriShNA
nittham unnaik kANAmal rAdhA kriShNA
chittham thuDikkudaDA shyAmaLa kriShNA
மிகமிக அற்புதமான வரிகள் அனுபவித்து பாட வேண்டிய எளிமையான வரிகள் கேட்ககேட்க இனிக்கும் குரல்வளம் கண்ணன் கருணை கட்டாயம் கிடைத்துவிடும் நமஸ்தே குருஜி🙏🙏
மனதிற்கு மிகவும் இதமாக அழகான பாடல் சிறு குழந்தைகள்க்கு கற்றுக் கொடுக்க ஏற்ற பாடல் மிகவும் நன்றி 🙏🙏🙏
Divine madhurageetham🙏 in soothing voice ...
Radhe Radhe
🦚மிக மிக சிறப்பு 🌷🦚🦚 ஹரி யின் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே ராதே ராதே 🌷🦚🌷🦚🦚🦚🦚🌷🌷🦚🌷🌷
குழந்தை க்ருஷ்ணனுடன் பேசவது போல் உள்ளது அருமை அருமை
Radhe Radhe ji✌️✌️🙏
Very nice song 👌👌👌🙏🙏🙏🙏
Radhe Radhe
Great ji... Bhakiyam ......Azhaga paditinga sister......
Arumai 🙂❤