சென்னை சூரியன் பரிகார தலம்| அகத்தீஸ்வரர் கோயில்| கொளப்பாக்கம்| Agatheeswarar Temple| Kolappakkam|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அனைவருக்கும் வணக்கம். கும்பகோணத்தில் நவகிரக பரிகார தலங்கள் உள்ளது என்பதை பற்றி நாம் அனைவரும் அறிவோம். இதே போல் சென்னையை சுற்றியும் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான நவகிரக பரிகார தலங்கள் உள்ளன. கும்பகோணம் சென்று வழிபட முடியாத பக்தர்கள் சென்னையில் உள்ள இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட அவர்கள் வாழிக்கையில் முன்னேற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நம் ஆலயஓம் சேனலில் சென்னையில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கான ஆலயத்தை பற்றி இனிவரும் பதிவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.
    அந்த வரிசையில் முதலில் நாம் தரிசிக்க இருப்பது சூரிய பகவானுக்கு உரிய பரிகார தலமான அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சென்னை கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள இத்திருத்தலம், ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்டு, பிறகு வந்த மன்னர்களால் நன்றாக பராமரிக்கட்டு வந்துள்ளளது. அகத்தியர், சூரியன், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்ட தலமாக திகழ்கிறது.
    முதலில் ஆலய தல வரலாறு பற்றி காண்போம்! சூரிய பகவான் விஸ்வகரமாவின் மகளான உஷாதேவியை மணந்தார். சூரிய வெப்பத்தை தாங்க முடியாத காரணத்தினால், அவரது பத்தினி தன்னை போலவே ஒரு நிழல் உருவத்தை சாயாதேவி என்ற பெயரில் உருவாக்கினாள். அவளிடம் தனது பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய கிளம்பி விட்டாள். சில காலம் கழித்து இதை அறிந்த சூரியன், விஸ்வகரமாவின் ஆலோசனைப்படி, பூலோகத்தில் உள்ள சில தலங்களுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தனது மனைவிக்கு சூரிய வெப்பத்தை தாங்கும் சக்தியை வரமாக பெற்றார். இத்தலங்களில் சூரிய பகவான் வழிபட்ட காரணத்தினால் இவை சூரிய பரிகார தலங்களாக கருதப்படுகின்றன. இன்று நாம் தரிசிக்கும் இத்திருத்தலம், அவைகளில் ஒன்றாகும். சூரிய பரிகார தலமான இங்கு, சூரிய பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு அவர் மூலவரை தரிசித்த வண்ணம் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
    பிரார்த்தனைச் சிறப்பு:
    சூரிய தசை மற்றும் சூரிய புத்தி நடைபெறுபவர்கள், ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் மூலவர் அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட்டு, அதன்பிறகு சூரியனுக்கு உரிய பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் நெய் தீபம் ஏற்றி சூரியனை வழிபடுவதோடு, சூரியனுக்கு சிகப்பு துணி, சிகப்பு மலர், மற்றும் எருக்க இலையில் கோதுமை தானியம் ஆகியவற்றை கொண்டு வழிப்பட்டால் சூரிய தோஷங்கள் நிவர்த்தியாவதுடன் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது ஐதீகம். கண் தொடர்பான நோய்கள் தீரும். மேலும், ஆலயத்தில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கு பெறுவது நல்ல பலன்களை அளிக்கும்.
    இத்திருத்தலத்தில் வருடத்திற்கு ஒரு முறை வரும் ரதசப்தமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தந்தையை போன்று கருதப்படுகிறார். ரதசப்தமி அன்று, மூன்று ஆண் முதியவர்களுக்கு சிகப்பு நிற வேட்டி மற்றும் துண்டு, காய்கறிகளுடன் சமைத்த உணவு பொட்டலம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயத்தை தானம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும். இதை செய்வதால் எந்தவித சூரிய தோஷமும் விலகி, தந்தை ஸ்தானத்தில் இருந்து சூரிய பகவான் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை.
    இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு காலபைரவர். இங்கு காலபைரவருக்கு பல சிறப்பு பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்யப்படுகிறது. ஞாயிற்று கிழமை ராகு காலத்தில், சஹஸ்ர நாம அர்ச்சனை மற்றும் விபூதி அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்குவதாக நம்புகிறார்கள். மேலும் குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்புகள் கிடைக்க, வறுமைகள் நீங்க, மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க மாதமொரு முறை வரும் தேய்பிறை அஷ்டமி, வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
    ஆலய நடை திறப்பு நேரம்: காலை 7.30 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரை.

ความคิดเห็น • 6

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 ปีที่แล้ว +2

    மிக அற்புதமான சூர்ய பரிகார ஸ்தலம்.. மிக அற்புதமான கடன் பரிகார ஸ்தலம் 🙏🙏🙏

    • @AalayaOm
      @AalayaOm  2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @BALAGURUDurai
    @BALAGURUDurai 2 หลายเดือนก่อน +1

    My before chief gurukkal Bala guru before Sunday temple morning open 6 clock

    • @AalayaOm
      @AalayaOm  2 หลายเดือนก่อน

      Thanks for the information sir

  • @BALAGURUDurai
    @BALAGURUDurai 2 หลายเดือนก่อน +1

    Eppo Ella

    • @AalayaOm
      @AalayaOm  2 หลายเดือนก่อน

      Thanks for the information sir