1983-ம் ஆண்டு K. ரங்கராஜ் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், ராதா ஆகியோர்கள் நடித்து வெளியான "நெஞ்சமெல்லாம் நீயே" திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. "புதிய வார்ப்புகள் " முதற் கொண்டு, " காதல் ஓவியம் " வரையிலான திரைப் படங்களுக்கு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய K.ரங்கராஜ் இயக்கிய முதல் திரைக்காவியம் தான் இந்தப் படம். தன்னுடைய முதல் படைப்பை தோல்வி அடையாமல் பார்த்துக் கொண்ட இயக்குனர், பாடல்களிலும் முத்திரை பதித்ததற்கான சான்றுதான் இப் பாடல்! " யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது தாளாத பெண்மை வாடுமே... வாடுமே" சங்கர் கணேஷின் மிகவும் அரிதான, அருமையான, மென்மையான இசைக்கோர்வைக்கு சிகரம் வைத்தாற் போல் கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகளுக்கு உண்மையிலேயே ஜீவன் கொடுத்தது கலைவாணி @ வாணி ஜெயராம் அவர்கள் தான்! மனதை நெகிழ வைத்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு அமைந்த அழகு தமிழ் தேன் வரிகளை தெள்ளத் தெளிவான குரல் வளத்தில் பாடி, பாடல் கேட்போரை காலா காலத்திற்கும் வசியம் செய்து மயக்கிவிட்டார் இந்த "தேசிய விருது" புகழ் பாடகி. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர்களைப் போன்று இப்பாடல் வெளிவந்து மனதை கொள்ளை கொண்டதை கணக்கிட முடியுமா? கதைப்படி, பாடகி ராதாவின் கணவராக, தாழ்வு மனப் பான்மையுள்ளவராக மோகன் நடித்திருப்பார். மனைவி என்பவர் எதை வேண்டுமானாலும் பங்கு போட சம்மதித்தாலும், உயிரினும் மேலான கணவனை பங்கு போட ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று காலங்காலமாக இருந்து வரும் அதீத நம்பிக்கையை, கலாச்சார பண்பாட்டினை தகர்த்து எறிந்து காதல் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ளும் கதை தான் இப் படம்! நிற்க... அதுவொரு மாலைப் பொழுது. வெயிலின் கோரப்பசி அடங்கி விட்ட போதிலும் உஷ்ணத்தின் . பிடியிலிருந்து தப்பிக்க நான் மொட்டை மாடியில் சரணடைந்தேன். வானத்தில் வெண் மேகக்கூட்டம் வரைந்த சித்திரங்களை தனிமையில் அமர்ந்து ரசித்து பார்க்கிறேன். என்னவொரு அழகு! காற்றில் தவழ்ந்து வந்த இந்தப் பாடல் என் செவிகளில் தேன் சொட்டுவது போன்றதொரு பிரமை! பாடலை கேட்கும் போது நெஞ்சின் ஓரம் தங்கியிருக்கும் பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக புனர் ஜென்மம் எடுத்து சீரோடு வரிசையில் நிற்கும் அழகே தனி தான்.... எதுவும் நம்ம கையில் இல்லையென்று எப்போது தோன்றுகிறது என்றால்.... கொண்டாட நினைத்த சந்தோஷங்களும், போட நினைத்த சண்டைகளும், பேச நினைத்த சமாதானங்களும் பெரும்பாலும் சில நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக ஏனோ மெளனித்து போவதை தவிர்த்திட முடியுமா? அது போலத் தான் நெஞ்சை ஒருவருக்கும் தெரியாமல் கவர்ந்து எடுத்துக் கொண்டதைச் சொல்லாமல் இருக்க முடியுமா? அன்று, மனசை பறிகொடுத்த போது உண்டான உச்ச கட்ட சந்தோஷத்தின் வெளிப்பாட்டினை என்னவென்று விவாதிப்பது? எண்ணங்கள் மாறலாம், சில நேரங்களில் செயல்பாடு கூட வேறுபடலாம் ; ஆனால் பசுமரத்தாணி போல் நெஞ்சில், ஆழத்தில் இறங்கி கூடுகட்ட இடம் பிடித்த ஆசாபாசத்தினை குறைத்து மதிப்பிட முடியுமா? காலமும் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு முன்னோக்கி ஓடும் போது பாவம், ஞாபகங்கள் ஏனோ எதையோ பறிகொடுத்தது போல் பின் தங்கி விடுகின்றன. எத்தனை முறை தான் இந்த இதயம் காயப்படுத்தப்படுகிறது! இருந்தாலும் ஒரு போதும் கலங்கவில்லை, ஆசாபாசங்களை வெறுக்கவில்லை, மறுக்கவில்லை, ஏன்... மறக்கவுமில்லை! ஏனெனில் இதயத்திற்கு துடிக்க மட்டும் தானே தெரியும். நடிப்புத் தெரியாத போது அதன் துடிப்பை நின்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! பாடல் முடிவுறும் போது ஏனோ கண்ட கனவுகள் முழுமை பெறாமல் போய்விடுகிறது.. யார் என்ன சொன்னாலும், நினைத்தாலும் இப்பாடல் வெளியாகி 36 வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் கூட இதன் தாக்கம் கத்திரி வெயில் முடிந்தும் வெப்பம் குறையாமல் இருப்பது போலத் தானே? வருடங்கள் சட்டென்று கடந்து போய் விட்ட போதிலும் பலரது நெஞ்சங்களை அள்ளிச் சென்ற இப்பாடலை எப்படி தவிர்க்க முடியும்? முடியாது... இப்பாடல் உருவாகக் காரணமானவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறேன். நன்றி! ப.சிவசங்கர்.
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே வாடுமேஏஏஏ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே வாடுமேஏஏஏ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது மார்கழி பூக்கள் என்னை தீண்டும்ம்ம் ஆஅஆஅஆஆஆ மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா தேன் தரும் மேகம் வந்து போகும் சிந்து பாடும் இன்பமே ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும்ம் யாரதுயாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே வாடுமேஏஏஏ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாமரை ஓடை இன்ப வாடை ஆஆஆஆஆஆஅஆஅஆ தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்ப சாறும் ஊறுதே ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை யாரதுயாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே வாடுமேஏஏஏ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
பாடல் முழுதும் வாணியின் குரல் அமுத மழை, அதில் ஒரு "யாரது..." வார்த்தை மழைதுளியில் அவர் அள்ளும் எத்தனை மென்மைகள், சிலிர்ப்புகள், அதிசயங்கள், ரகசியங்கள்... நிகரில்லா இந்திய பாடகி வாணி ஜெயராம்!
நான் நினைக்கிறேன் 80களில் வந்த மேலோடி காதல் பாட்டு.அந்த நாட்களில் மனதை பரிகொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.மனம் கணக்கிறது.ஒளிபரப்பியதற்கு கோடானகோடி நன்றி உலகநாயகன் ராதா அம்மா நீங்கா நினைவு.வாணி அம்மா தேனிசை குரலில் இப்போது கேட்கும்போது மிகவும் அப்போதைவிட ரம்மியமாக உள்ளது
சொல்லாமல் நெஞ்சள்ளிப்போன தேவதையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் அருமையான பாடல்... 35 வருடங்கள் ஆனாலும் வசந்தத்தை வாசித்துக்காட்டும் வானிஜெயராமின் குரல்...ம்ம்ம்.தொலைந்துபோன சந்தோஷத்தின் பிம்பம்...
I am 76 I first heard this song and cried in Saudi Arabia in my early thirties and hope to cry over this masterpiece God willing for another 15,20 years
நெஞ்சை வருடும் 80'கலின் வாணி ஜெயராமின் பாடல்..இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.மீண்டும் தூத்துக்குடி சாலைகளின் நினைவுகள்
இந்த பாடலின் முதல் வரியே என் நெஞ்சல்லி போனது..பாடலின் இசை இதயத்தை தாலாட்டும் என் மனதை தூங்க வைக்கும் அந்த குரலும் எப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
அன்று குறைவான செல்வங்கள் நம்முடன் இருந்தாலும் இது போன்ற மனதுக்கு நிறைவான மன மகிழ்வான இது போன்ற தாலாட்டும் அமுதகானங்கள் சொல்லாமல் நெஞ்சை அள்ளி சென்ற நாள்கள் தான் எத்தனை,, எத்தனை. அக்காலம் இன்று வருமா? என்பது சந்தேகமே
எல்லோருமே நம் ராதாவின் முக பாவனைகளில் அவர் சொல்லும் அழகான அளவான சங்கதிகளை கவனிக்கத் தவறி விட்டீர்கள்என்றே கருதுகிறேன். பாடலைத் தொடங்கும் போது ஒரு தயக்கம் அச்சம். முடிக்கும் போது ஒரு திருப்தி. மகிழ்ச்சி நிறைவு நன்றி உணர்வு. அற்புதமாக செய்துள்ளார்கள். பாத்திரமாகவே மாறி உயிர் கொடுத்துள்ளார்கள்.
சங்கர்-கணேஷ் இன்னிசை வேந்தர்களின் இந்த தேவகானங்களைக் கேட்டு ரசித்திருக்கிறீர்களா? 1."அழகே உன் பெயர் தானோ"(SPB&PS) படம்:இறைவன் கொடுத்த வரம் 2."சேலை கொடைபிடிக்க "(SPB-VJ) படம்:ஆயிரம் முத்தங்கள் 3."தங்கத் தேரோடும் அழகினிலே" (SPB-PS) 4."விடியும் மட்டும் பேசலாம்" படம்: நான் யார் தெரியுமா 5."ஆல மரத்துக் கிளி"(VJ) படம்: பாலாபிஷேகம் 6."பார்த்ததும்"((TMS&A.L.ராகவன்) படம்: நான் யார் தெரியுமா 7."நிலவுக்குப் போவோம்"(TMS-LRE) 8."எந்தன் தேவனின் பாடல்" 4:33 version(SPB-PS) படம்:பொன்மகள் வந்தாள் 9."கீதா ஒருநாள் பழகும் உறவல்ல" (SPB-PS)படம்:அவள் இந்த ஒவ்வொரு பாடலையும் குறைந்தது 3 முறை திரும்பதிரும்ப உன்னிப்பாகக் கேட்டு,ரசித்து ருசித்தீர்களானால்,கணேஷ் அவர்களின் அற்புதமான, விதவிதமான தாளக்கட்டு ஜாலங்களையும், சொக்கவைக்கும் தாளவாத்தியக் கோர்வைகளையும், அலாதியான இசை ஒருங்கிணைப்பையும், சங்கர் அவர்களின் இன்னிசை மெட்டமைப்புகளையும்,இன்னிசை வேந்தர்களின் வயலின் ராஜாங்கத்தையும் இதயத்தில் தரிசித்து இன்புறலாம்! வாழ்க்கை கூடுதல் ரசனைசுகம் பெறும்! உங்கள் நண்பர்களையும் கேட்டு இன்புறச்சொல்லுங்கள்! நன்றி!
அம்மா....உங்களை இழந்து தவிக்கிறோம்...! எங்கள் நெஞ்சை அள்ளி சென்று விட்டீர்கள். இயற்கை க்கு எப்படி மனம் வந்தது உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட....???? எல்லா பிரார்த்தனைகளும் உங்களின் ஆன்மா அமைதி பெற...! May your great blessed soul rest in peace ma...!
இந்த இனிமையான பாடலை நான் என் இளமை நாட்கள் அம்மா அப்பா உடன் பிறந்தவர்கலோடு கேட்ட வசந்த கால பாடல்கள். இன்று அந்த நாட்கள் வருமா? கடவுளே வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான குரல். நன்றி அம்மா
I’m 72 years old. Our 9 month old youngest grandson freezes still each time he hears this song from his grandma or on you tube. Mesmerizing voice! Thanks for your lovely voice, Vani Amma! You will live forever! ❤️
தனிமையில் இருக்கும் போது கண்களை இலேசாக மூடினேன்.அப்போது இந்த பாடல் என் காதில் ஒலித்து எனது நெஞ்சையும் அதில் இருந்த வலியையும் அள்ளிச் சென்றது. வாணி அம்மா ஒரு வரம்
வாணிஐெயராம் பாடிய இந்த பாடல் நல்ல பல்லவியை கொண்டுள்ளது. நல்ல சிநேகிதா்களை விட்டு பிாிந்தால் அந்த இழப்பை எவராலும் தாங்க முடியாது ஆனால் இந்த பாடலை கேட்கும்போது அந்த நினைவலைகளுக்கு சற்று ஆறுதலை தருகின்றது.
கண்ணை மூடி சற்று இந்த பாடலை கேட்டு பாருங்கள். பாடல் அப்படியே தேகத்தை வருடி இதயத்தில் நுழைந்து விடுகிறது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டவுடன் மனம் அமைதியாக மாறி விடுகிறது. வார்த்தைகள் அனைத்தும் மிகவும் இனிமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இந்த மாதிரி பாடல்கள்தான் நம்மை போன்ற கிழடு கட்டைகளை கட்டை ஏறாமல் பாது காக்கும் ஆகவே இது போன்ற நம்ம காலத்து பாடல்களை கேட்டு கொண்டே இருப்போம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
South Indians have been blessed to have had great singers like TMS, Susheela, Janaki, P.B. Sreenivas, SPB, Yesudas, Vani Jayaram, Chitra, Jensi, Swarnalatha, Mano, Malaysia Vasudevan, Unnikrishnan.....
இப்பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகிறது....யதாரத்தமாக கேட்போம் என்ற கேட்டேன்......ஆக எ்ன ஒரு இனிமை.....இளையராஜாவையே தூக்கிசாப்பிட்டது போல ஒரு இசை......அதை கமாண்ட் ஒவ்வொருவரும் எவ்வுளவு ரசித்து எழுதியிருக்கிறார்கள்.............
A fantastic solo song sung by Vani Amma. A good example to prove how talented the musical duo Sankar and Ganesh was. A lullaby like song. Sweet melody intertwined with soul capturing preludes and interludes embellished with lilting humming. Unforgettable song for ages.
எங்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற வாணிஜெயராம் அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐🌹🌹🌹
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆக அழகான இசையில் இனிமை நிறைந்த, நெஞ்சை அள்ளி சென்ற அழகான குரலில் மெய் மறந்ததே . "தாமரை ஓடையில் இன்ப வாடை வீசுதே" என்ன சிந்தனை! சிறப்பான. பாடல் என் நெஞ்சை அள்ள சென்ற என்னவளுக்காக இப்பாடல் சமர்பணம்! 😍😍😍😍😍.
Unforgettable and evergreen song.Vaniamma's melodies voice is very very sweet. Lyrics, music and composing of this song are wonderful and beautiful. Hats off !!!
அட அட அட என்ன ஒரு இனிமையான மென்மையான பாடல் இந்த பாடலை நான் 3ம் வகுப்பு படிக்கும் போது ரேடியோவில் கேட்டேன் இப்போது இந்தப் பாடலை கண்னை மூடிக்கொண்டு கேட்டால் என் பழைய நினைவுகள் கண் முண்னே வந்து நிற்கிறது. அருமையான குரல் இனிமையான இசை..
வாய்மொழி,எழுத்துமொழி எதிலும் வெளிப்படுத்தாமல் கண்கள்வழியாக பேசி காதலை வெளிப்படுத்த முடியாமல் காதலை மட்டும் உணர்ந்த விழியில் இருந்த இதயம் நுழைந்த காதலை வெளிப்படுத்தாமலே பிரிந்த 70 'S களுக்கு இப்பாடல் ஒரு சமர்ப்பணம்.இப்போது கேட்டாலும் தன் முதல் காதலை நினைக்க வைக்கும் அற்புதமான மாடல்.இது போன்ற பாடல்கள் யாராலும் இப்போது இயற்றமுடியாது.எழுதி இசையமைத்து பாடலைப் பாடி எல்லோர் மனதிலும் இடம் பெற்ற இப்படத்தைஇயக்கிய இயக்குனர் அவர்களுக்குநன்றி.
உண்மைதான்...80...90.. கால கட்டங்களில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று நான் இப்போழுதும் கேட்டு கொண்டிருக்கின்றேன் அந்த நாட்களில் இப்பாடல் எல்லோர் வாழ்விலும் இனைந்து இருந்தது
என்னதான் கவிஞர்கள் இசையமைப்பாளர்கள் பாடகிகள் முழு ஈடுபாட்டுடன் ஒரு பாடலை படைத்தாலும் அந்தப் பாடலுக்கு அழகான முக பாவனை உடன் நடிக்கும் நடிப்பில் தான் பாடல் சிறக்கும் அந்தவகையில் இப்பாடலுக்கு இராதா அவர்கள் அருமையாக நடித்துள்ளார்
1990 களில் இலங்கை வானொலியில் கேட்டஞாபகம் வந்தவாசி அருகில் என்னுடைய ஊர் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை வானொலி மட்டும் தான் அந்த ஞாபகம் என்னால் இந்த பாடலை இன்று வறைமறக்க முடியவில்லை
வாணி ஜெயராமின் மிகச் சிறப்பான ஏற்ற இறக்கங்களுடன் உள்ள தந்தி ஒலிகுரலை ரசிப்பதா ? இசையை ரசிப்பதா ? பாடல் வரிகளை ரசிப்பதா ?? ஆஹா ..என்ன அருமையான இசைக் கலவை !! வாழ்த்துக்கள் நன்றி
Vani Amma's velvet voice is really adorable and unforgettable ... Love to listen to it again And again even if I don't understand a single word of Tamil ..
In spite of that, in spite of all that, this stands alone, unique and appealing to the end (of life, of course!) It has every thing: Tune (Raaga Sancharam), Gelling pre-,interludes, wavy no-end instrumentally, voice of a string instrument(!) and of a high class! Copy accepted, finding fault besmirches the achievement to touch the heart. Who doesn't copy, no music is invented, copied bits and pieces are skilfully moved around in the order of multiplicity?! By all.
Yesterday listened a old ghazal of ustad Amjad Ali Khan which has a similar tune, would not say either of this a copy. Because both are done with wonderful inspiration of soulful music
காதலை இனிக்க இனிக்க ஊட்டும் இந்த பாடலை கோடி முறை கேட்டாலும் போதவில்லை....முதலில் இசை இதயத்தை தட்டுகிறது..யாரது என்ற வார்த்தையிலேயே என் உயிர் பறி போகிறது...என் அனுமதி இல்லாமல்...
கடவுளே எங்களை மீண்டும் அந்த 70 களுக்கே கொண்டு போய் விட்டு விடு, சூது வாது இல்லாத அந்த உலகம், ஆண்டவா
True.
உண்மை
உண்மை
100000000 % உண்மை
Iraivan iraivangave irukirar athanal than indrum inimai irukirathu padalil
இது போன்ர பாடல்களைக் கேட்கும் பொழுது இன்னும் கொஞ்சம் கூட காலம் உலகில் வாழ நினைக்கிறது.
ஆசை!!?ok recommended to God
உண்மைஆகா என்ன ஒரு பாடல்
போன்ற
தமிழை தாய்மொழியாக பெற நான் மிகப்பெரிய நல்லது செய்து இருக்க வேண்டும்.. தேனிலும் இனிமை எம்மொழி...
உண்மையில் நெஞ்சள்ளி போவது வாணியின் குரல் தான்.excellent
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது !
வாணி அம்மா நீங்கள்தான் எங்கள் நெஞ்சங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு சொல்லாமல் சென்று விட்டீர்கள் 🙏🙏
Hi
அழாக சொன்னீங்க
1983-ம் ஆண்டு K. ரங்கராஜ் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், ராதா ஆகியோர்கள் நடித்து வெளியான "நெஞ்சமெல்லாம் நீயே" திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது.
"புதிய வார்ப்புகள் " முதற் கொண்டு, " காதல் ஓவியம் " வரையிலான திரைப் படங்களுக்கு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய K.ரங்கராஜ் இயக்கிய முதல் திரைக்காவியம் தான் இந்தப் படம்.
தன்னுடைய முதல் படைப்பை தோல்வி அடையாமல் பார்த்துக் கொண்ட இயக்குனர், பாடல்களிலும் முத்திரை பதித்ததற்கான சான்றுதான் இப் பாடல்!
" யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது
தாளாத பெண்மை வாடுமே... வாடுமே"
சங்கர் கணேஷின் மிகவும் அரிதான, அருமையான, மென்மையான இசைக்கோர்வைக்கு சிகரம் வைத்தாற் போல் கவிஞர் வைரமுத்துவின் காதல் வரிகளுக்கு உண்மையிலேயே ஜீவன் கொடுத்தது கலைவாணி @ வாணி ஜெயராம் அவர்கள் தான்!
மனதை நெகிழ வைத்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு அமைந்த அழகு தமிழ் தேன் வரிகளை தெள்ளத் தெளிவான குரல் வளத்தில் பாடி, பாடல் கேட்போரை காலா காலத்திற்கும் வசியம் செய்து மயக்கிவிட்டார் இந்த "தேசிய விருது" புகழ் பாடகி. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர்களைப் போன்று இப்பாடல் வெளிவந்து மனதை கொள்ளை கொண்டதை கணக்கிட முடியுமா?
கதைப்படி, பாடகி ராதாவின் கணவராக, தாழ்வு மனப் பான்மையுள்ளவராக மோகன் நடித்திருப்பார். மனைவி என்பவர் எதை வேண்டுமானாலும் பங்கு போட சம்மதித்தாலும், உயிரினும் மேலான கணவனை பங்கு போட ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று காலங்காலமாக இருந்து வரும் அதீத நம்பிக்கையை, கலாச்சார பண்பாட்டினை தகர்த்து எறிந்து காதல் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ளும் கதை தான் இப் படம்!
நிற்க...
அதுவொரு மாலைப் பொழுது.
வெயிலின் கோரப்பசி அடங்கி விட்ட போதிலும் உஷ்ணத்தின் . பிடியிலிருந்து தப்பிக்க நான் மொட்டை மாடியில் சரணடைந்தேன். வானத்தில் வெண் மேகக்கூட்டம் வரைந்த சித்திரங்களை தனிமையில் அமர்ந்து ரசித்து பார்க்கிறேன்.
என்னவொரு அழகு!
காற்றில் தவழ்ந்து வந்த இந்தப் பாடல் என் செவிகளில் தேன் சொட்டுவது போன்றதொரு பிரமை!
பாடலை கேட்கும் போது நெஞ்சின் ஓரம் தங்கியிருக்கும் பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக புனர் ஜென்மம் எடுத்து சீரோடு வரிசையில் நிற்கும் அழகே தனி தான்....
எதுவும் நம்ம கையில் இல்லையென்று எப்போது தோன்றுகிறது என்றால்....
கொண்டாட நினைத்த சந்தோஷங்களும், போட நினைத்த சண்டைகளும், பேச நினைத்த சமாதானங்களும் பெரும்பாலும் சில நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக ஏனோ மெளனித்து போவதை தவிர்த்திட முடியுமா?
அது போலத் தான் நெஞ்சை ஒருவருக்கும் தெரியாமல் கவர்ந்து எடுத்துக் கொண்டதைச் சொல்லாமல் இருக்க முடியுமா?
அன்று, மனசை பறிகொடுத்த போது உண்டான உச்ச கட்ட சந்தோஷத்தின் வெளிப்பாட்டினை என்னவென்று விவாதிப்பது?
எண்ணங்கள் மாறலாம், சில நேரங்களில் செயல்பாடு கூட வேறுபடலாம் ; ஆனால் பசுமரத்தாணி போல் நெஞ்சில், ஆழத்தில் இறங்கி கூடுகட்ட இடம் பிடித்த ஆசாபாசத்தினை குறைத்து மதிப்பிட முடியுமா?
காலமும் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு முன்னோக்கி ஓடும் போது பாவம், ஞாபகங்கள் ஏனோ எதையோ பறிகொடுத்தது போல் பின் தங்கி விடுகின்றன.
எத்தனை முறை தான் இந்த இதயம் காயப்படுத்தப்படுகிறது!
இருந்தாலும் ஒரு போதும் கலங்கவில்லை, ஆசாபாசங்களை வெறுக்கவில்லை, மறுக்கவில்லை, ஏன்... மறக்கவுமில்லை!
ஏனெனில் இதயத்திற்கு துடிக்க மட்டும் தானே தெரியும். நடிப்புத் தெரியாத போது அதன் துடிப்பை நின்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
பாடல் முடிவுறும் போது ஏனோ கண்ட கனவுகள் முழுமை பெறாமல் போய்விடுகிறது..
யார் என்ன சொன்னாலும், நினைத்தாலும் இப்பாடல் வெளியாகி 36 வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் கூட இதன் தாக்கம் கத்திரி வெயில் முடிந்தும் வெப்பம் குறையாமல் இருப்பது போலத் தானே?
வருடங்கள் சட்டென்று கடந்து போய் விட்ட போதிலும் பலரது நெஞ்சங்களை அள்ளிச் சென்ற இப்பாடலை எப்படி தவிர்க்க முடியும்?
முடியாது...
இப்பாடல் உருவாகக் காரணமானவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுகிறேன். நன்றி!
ப.சிவசங்கர்.
Enna or sindhanai... Eppadi Sir?
@@rskagro1128 thanks Sir
Beautiful version Sir
@@jafferhusian7759 thanks Sir
Arumaiyana karuthukkal super sir
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்ம்ம்
ஆஅஆஅஆஆஆ
மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்ம்
யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாமரை ஓடை இன்ப வாடை
ஆஆஆஆஆஆஅஆஅஆ
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊறுதே
ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை
யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
எத்தனை காலங்கள் ஆனால் நீங்கள் வாழ்வீர்கள்...உங்கள் தெய்வீக குரலால்.
நாற்பது ஆண்டுகளாக இன்னும் என் நெஞ்சை அள்ளிக் கொண்டு இருக்கிறது...
தலைக்கனம் இல்லாத கலைஞர்கள் சங்கர் கணேஷ் இசையில்.. வாணி ஜெயராம் குரலில்....
ஆமா அப்படித்தான் 'இசைஞானி' ஒரு 'இசைக்கடவுள்' அவர் தலைக்கனமாகத்தான் இருப்பார்.
@@rajmohan1749 இடையிசையை எப்படி சொதப்பி வச்சிருக்கான்னு பாருங்க...!😃😃😃
இந்தியிலருந்து சுட்ட பாட்டு.
@@jesurajanjesu8195திராவிடம் பன்னிகளுக்கு தெரியாதா???? இந்தி தெரியாது போடா 😂😂😂😂😂😂😂😂😂
நான் சிறுவனாக இருந்த போது இவரது பாடல்களை ரசித்த தருணம் மறக்க முடியாத அனுபவம் வாணி ஜெயராம் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
பாடல் முழுதும் வாணியின் குரல் அமுத மழை, அதில் ஒரு "யாரது..." வார்த்தை மழைதுளியில் அவர் அள்ளும் எத்தனை மென்மைகள், சிலிர்ப்புகள், அதிசயங்கள், ரகசியங்கள்...
நிகரில்லா இந்திய பாடகி வாணி ஜெயராம்!
Yes sir.True words
Nanpa kavithaikkul kavithai. Arumai.
@@jeevanatham6810 🙏
@@drdkannan8398 🙏
வாணி அம்மாவின் குரலைக் கேட்டால் மெய் சிலிர்க்கிறது.
வாணி ஜெயராம் அவர்களின் காந்தக் குரலில் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள், சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் மனதை வருடும் பாடல்
முற்றிலும் உண்மை பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
வயது73
வாணி அம்மாவும், ஜானகி அம்மாவும், சுசீலாம்மாவும் அடக்கி ஆண்ட என்பதுகள்...!
இன்னும் 1000 வருடம் ரசிகர்கள் மனதில் வாழும்...!👌👌👍
Unmai sir 🙏 manasu rombha kashtamaeruku endha pattu ketkumbhodhu pazhaya nenaivughal.
Unmai
Oh my God
Intha yarathu padalai 1000 murai kettalum aasai adangathu. Suuuuper 🎉🎉🎉
மறுக்க முடியாத உண்மை
நான் நினைக்கிறேன் 80களில் வந்த மேலோடி காதல் பாட்டு.அந்த நாட்களில் மனதை பரிகொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.மனம் கணக்கிறது.ஒளிபரப்பியதற்கு கோடானகோடி நன்றி உலகநாயகன் ராதா அம்மா நீங்கா நினைவு.வாணி அம்மா தேனிசை குரலில் இப்போது கேட்கும்போது மிகவும் அப்போதைவிட ரம்மியமாக உள்ளது
தெளிந்த நீரோடை போன்ற வாணியின் தேனிசை பாடல் கேட்க கேட்க தெவிட்டாத இசை கவிதை.
பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.முக்கியமாக காற்றில் கலந்து போய்விட்ட அந்த இசை தேவதையின் குரலை...♥♥♥
சொல்லாமல் நெஞ்சள்ளிப்போன தேவதையை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் அருமையான பாடல்... 35 வருடங்கள் ஆனாலும் வசந்தத்தை வாசித்துக்காட்டும் வானிஜெயராமின் குரல்...ம்ம்ம்.தொலைந்துபோன சந்தோஷத்தின் பிம்பம்...
சரி
@@premkumarm2672❤
@@premkumarm2672❤❤❤
தேன் இனிதா, வாணி அவர்களின் குரல் இனியதா......சந்தேகம் என்ன.....வாணியின் குரலே.....பிசிறில்லா தேன்மழை அவர் குரல்.....
I am 76 I first heard this song and cried in Saudi Arabia in my early thirties and hope to cry over this masterpiece God willing for another 15,20 years
வாணி அம்மா ! மார்கழி பூக்கள்.......என்ன அருமையான உச்சரிப்பு ! இன்று எங்களை துயரத்தில் ஆழ்த்தி இறைவனடி சேர்ந்துவிட்டீர்களே!
சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் திருமதி. வாணி ஜெயராமன் பாடி பாடல்களில் சிறந்த பாடல் ஒன்று
வாணி ஜெயராம் அம்மாவின் குரலில் தான் எத்தனை இனிமை எந்த காலத்திலும் கேட்கலாம். அருமையான இசை.
இவரது குரலில் 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது' என்ற வரிகள் பலரது மனதை இனிமையாக்கியது!
இன்று அந்த வரிகள்
அவருக்கே என,
இயற்கை ஆக்கிவிட்டது!
எத்தணையோ பாடல்களின் மத்தியில் சொல்லாமல் நம்நெஞ்சையள்ளி செல்லும் பாடல்!!...
பாடல் வந்த புதிதில் கேட்டதை விட இப்போது இனிமை கூடிவிட்டது போன்ற உணர்வு. அப்போது ரசிக்க தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
கண்டிப்பா! அப்போ நமக்குத் தெரியாத அருமை, புரியாத வரிகள்!! இப்போது புரிவது, தெரிவதனால், அந்த சுகம்
உண்மை
வாணிஜெயராம் அம்மா பாடிய பாடல்
உண்மை
th-cam.com/video/t8BWLOVO7xA/w-d-xo.html
இசைச் சோலை " TH-cam Channel ஐ SUBSCRIBE செய்யுங்கள் SHARE செய்யுங்கள். உஙகள் இதயத்தை தாலாட்டும் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் உங்களை தினநதினம் பரவசமூட்டும். நன்றி!
நெஞ்சை வருடும் 80'கலின் வாணி ஜெயராமின் பாடல்..இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.மீண்டும் தூத்துக்குடி சாலைகளின் நினைவுகள்
மனசே இல்லீங்க என்ன வரிகள்
என்ன இசை பிரமாதமான குரல்
வாழ்க
இந்த பாடலின் முதல் வரியே என் நெஞ்சல்லி போனது..பாடலின் இசை இதயத்தை தாலாட்டும் என் மனதை தூங்க வைக்கும் அந்த குரலும் எப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
அன்று குறைவான செல்வங்கள் நம்முடன் இருந்தாலும் இது போன்ற மனதுக்கு நிறைவான மன மகிழ்வான இது போன்ற தாலாட்டும் அமுதகானங்கள் சொல்லாமல் நெஞ்சை அள்ளி சென்ற நாள்கள் தான் எத்தனை,, எத்தனை. அக்காலம் இன்று வருமா? என்பது சந்தேகமே
அன்றைய உண்மை நிலையை மிகவும் அருமையாக கூறினீர்கள் நண்பரே நன்றி 😊
இன்று ஆழ்ந்த அமைதியில்
ஆத்மா சாந்தி பெறட்டும்
முற்றிலும் உண்மை 🤝🤝👍💞❤️
இழந்து விட்டோம்
எல்லோருமே நம் ராதாவின் முக பாவனைகளில் அவர் சொல்லும் அழகான அளவான சங்கதிகளை கவனிக்கத் தவறி விட்டீர்கள்என்றே கருதுகிறேன். பாடலைத் தொடங்கும் போது ஒரு தயக்கம் அச்சம். முடிக்கும் போது ஒரு திருப்தி. மகிழ்ச்சி நிறைவு நன்றி உணர்வு. அற்புதமாக செய்துள்ளார்கள். பாத்திரமாகவே மாறி உயிர் கொடுத்துள்ளார்கள்.
இசை அமைப்பாளர் அவர்களே என்னுடைய பல கோடி வணக்கம் தபேலா சூப்பர்
Best
ISAI. ,, SHANKAR GANESH , AVARGAL
@@s.karthikeyans.karthikeyan6132 நன்றி வயலின்ல எப்படி எல்லாம் விளையாட்டு காட்டி இருக்கார் கடைசியாக
சங்கர்-கணேஷ் இன்னிசை வேந்தர்களின் இந்த தேவகானங்களைக் கேட்டு ரசித்திருக்கிறீர்களா?
1."அழகே உன் பெயர் தானோ"(SPB&PS) படம்:இறைவன் கொடுத்த வரம்
2."சேலை கொடைபிடிக்க "(SPB-VJ)
படம்:ஆயிரம் முத்தங்கள்
3."தங்கத் தேரோடும் அழகினிலே"
(SPB-PS)
4."விடியும் மட்டும் பேசலாம்"
படம்: நான் யார் தெரியுமா
5."ஆல மரத்துக் கிளி"(VJ)
படம்: பாலாபிஷேகம்
6."பார்த்ததும்"((TMS&A.L.ராகவன்)
படம்: நான் யார் தெரியுமா
7."நிலவுக்குப் போவோம்"(TMS-LRE)
8."எந்தன் தேவனின் பாடல்"
4:33 version(SPB-PS)
படம்:பொன்மகள் வந்தாள்
9."கீதா ஒருநாள் பழகும் உறவல்ல"
(SPB-PS)படம்:அவள்
இந்த ஒவ்வொரு பாடலையும் குறைந்தது 3 முறை திரும்பதிரும்ப உன்னிப்பாகக் கேட்டு,ரசித்து ருசித்தீர்களானால்,கணேஷ் அவர்களின் அற்புதமான, விதவிதமான
தாளக்கட்டு ஜாலங்களையும், சொக்கவைக்கும் தாளவாத்தியக் கோர்வைகளையும், அலாதியான இசை ஒருங்கிணைப்பையும், சங்கர் அவர்களின் இன்னிசை மெட்டமைப்புகளையும்,இன்னிசை வேந்தர்களின் வயலின்
ராஜாங்கத்தையும் இதயத்தில் தரிசித்து இன்புறலாம்! வாழ்க்கை கூடுதல் ரசனைசுகம் பெறும்!
உங்கள் நண்பர்களையும் கேட்டு இன்புறச்சொல்லுங்கள்! நன்றி!
அம்மா....உங்களை இழந்து தவிக்கிறோம்...!
எங்கள் நெஞ்சை அள்ளி சென்று விட்டீர்கள்.
இயற்கை க்கு எப்படி மனம் வந்தது உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட....????
எல்லா பிரார்த்தனைகளும் உங்களின் ஆன்மா அமைதி பெற...!
May your great blessed soul rest in peace ma...!
இந்த இனிமையான பாடலை நான் என் இளமை நாட்கள் அம்மா அப்பா உடன் பிறந்தவர்கலோடு கேட்ட வசந்த கால பாடல்கள். இன்று அந்த நாட்கள் வருமா? கடவுளே
வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான குரல். நன்றி அம்மா
என்ன ஒரு அற்புதமான பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதை வசீகரம் செய்கிறது. வானி ஜெயராமின் குரல் அழகு
வருடங்கள் கூட கூட இனிமை கூடிக் கொண்டே போகிறது இப்பாடலுக்கு
அம்மா உங்கள் இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வாழ்க என்றும் உங்கள் பாடல்கள்.
இது போன்ற பாடல்கள் இன்று இல்லை என்பது கவலையாக உள்ளது .nice song
K
வராது
Really we missed lot
Unmythan
Exuberant voice of Vani Jayaram resonate a kind of gentle breeze
இது போன்ற தனி பாடல்களால் வாணி அவர்கள் சொல்லாமலேயே நமது நெஞ்சை அள்ளிப்போய் விடுவார். அபூர்வமான குரலினிமை. சன்கர் கனேஸ் சபாஸ்.
Verynice
Manathai varudum padal
இனி கேட்க முடியுமா இந்த குரலை.
Seema song illayaraja music and spider
Old song illayaraja music super hit
I’m 72 years old. Our 9 month old youngest grandson freezes still each time he hears this song from his grandma or on you tube. Mesmerizing voice! Thanks for your lovely voice, Vani Amma! You will live forever! ❤️
தனிமையில் இருக்கும் போது கண்களை இலேசாக மூடினேன்.அப்போது இந்த பாடல் என் காதில் ஒலித்து எனது நெஞ்சையும் அதில் இருந்த வலியையும் அள்ளிச் சென்றது. வாணி அம்மா ஒரு வரம்
நான் என்னத்த சொல்ல மனதை வருடிய பாடல் அதுவும் வாணி அம்மா குரலில் old is gold gold தான்
வாணியின் பாடலில் இது Fantastic
வாணிஐெயராம் பாடிய இந்த பாடல் நல்ல பல்லவியை கொண்டுள்ளது. நல்ல சிநேகிதா்களை விட்டு பிாிந்தால் அந்த இழப்பை எவராலும் தாங்க முடியாது ஆனால் இந்த பாடலை கேட்கும்போது அந்த நினைவலைகளுக்கு சற்று ஆறுதலை தருகின்றது.
Yes, sir! Andha Ninaivugalae Poadhum!
Rasanayagam Vasanthakumar
Yes👍👍🏻
கண்ணை மூடி சற்று இந்த பாடலை கேட்டு பாருங்கள். பாடல் அப்படியே தேகத்தை வருடி இதயத்தில் நுழைந்து விடுகிறது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டவுடன் மனம் அமைதியாக மாறி விடுகிறது. வார்த்தைகள் அனைத்தும் மிகவும் இனிமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
True
Dan Periasamy கடைகண்பாவை பாடள்கள்
Dan Periasamy ஆம் நிச்சயமாக ❤️ இதயம் வருடும் ஒரு ராகம் .
ஆமாம். கண்களை மூடிக்கொண்டு கேட்டால் மனதில் ஒரு இனிமை.
super song very nice voice vani amma
என் இதயத்தை உருக்கியப் பாடல். இனிய குரல், இனிய இசை, கவிதை லயம். இவை மூன்றும் அற்புதம்.
இந்த படத்தை எனது ஐந்து வயதில் பார்த்தேன் இந்த பாடல் அப்படியே மனதில் உள்ளது தற்போது எனக்கு 45வயது
Arumaiyana padal, Vairamuthu varigal ,vani jayaram voice super,
Sankar ganesh music superb.
சங்கர் கனேஷ் அற்புதமான இசை அமைப்பாளர்
மார்கழியின் இளங்காலை பனிபோல் இதமான மென்மையான இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அடுத்த நொடியே திரும்பவும் கேட்கத் தூண்டும் மந்திரப் பாடல்.
அக்காவின் நெஞ்சத்தையும்
அள்ளிக்கொண்டு போய்விட்டார்களா...
இந்த இசைவாணி அம்மா...
karanthamalaiyan
நெஞ்சை வருடும் .. மெலோடி . ...20 ஆண்டிற்கு பின் கேட்கும் பாக்கியம் அளித்தமைக்கு ...நன்றி
காலத்தால் அழியாத காவியம்
என்னை கவர்ந்த பாடல்
மிக்க நன்றி🙏🏼
இந்த மாதிரி பாடல்கள்தான் நம்மை போன்ற கிழடு கட்டைகளை கட்டை ஏறாமல் பாது காக்கும் ஆகவே இது போன்ற நம்ம காலத்து பாடல்களை கேட்டு கொண்டே இருப்போம்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
மனம் நிறைந்த சந்தோஷம். கண்களில் கண்ணீர் விடவேண்டும் போல் உள்ளது
Yes it's true. i love this songs .
அப்படி என்றால் நீங்கள் நல்ல மனம் படைத்தவர்
Ungal manam megavum menmiyanthu
இதுபோன்றபாடல்கள் இனிமேல் வாழ்க்கையில்கேட்கமுடியாது
உண்மையில் கண்ணீர் வருகிறது
@@imrulkayes974 இனிமை கண் ஓரங்களில் கண்ணீர், ஆணந்தக் கண்ணீர்.
South Indians have been blessed to have had great singers like TMS, Susheela, Janaki, P.B. Sreenivas, SPB, Yesudas, Vani Jayaram, Chitra, Jensi, Swarnalatha, Mano, Malaysia Vasudevan, Unnikrishnan.....
நீண்டகாலமா நான் ரசித்த பாடலுக்கு இவ்வளவு லைக் மனசு சந்தோஷப்படுகிறது
❤❤❤
loyalty கேட்கும் பல்வாய தேவனுக்கு முன் சங்கர் கணேஷ் இமயமாய் பாகுபலியாய் உயர்ந்தது நிற்கிறார்
இப்பூ உலகில் சரஸ்வதி தேவி யின் முழுமையான. அருள் பெற்றவர் எங்கள் வாணி அம்மா அவர்கள் மட்டுமே. நீடூழி வாழ்க.
இப்பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகிறது....யதாரத்தமாக கேட்போம் என்ற கேட்டேன்......ஆக எ்ன ஒரு இனிமை.....இளையராஜாவையே தூக்கிசாப்பிட்டது போல ஒரு இசை......அதை கமாண்ட் ஒவ்வொருவரும் எவ்வுளவு ரசித்து எழுதியிருக்கிறார்கள்.............
MUSIC DIRECTOR , SHANKAR GANESH. AVRGAL
ஓவ்வொரு இசை கலைஞனுக்கும் திறமை உள்ளது
இப்பாடலுக்கு என்னவெல்லாம் சொல்லலாம் வார்த்தை இல்லை அவ்வளவு அருமையான பாடல்
Sankar ganesh nalla music koduppar.msv_ilayavukku naduvil avarkalum oru sagaptham.
@@karudevi1526 nandri....peppathan parkkurean....
A fantastic solo song sung by Vani Amma. A good example to prove how talented the musical duo Sankar and Ganesh was. A lullaby like song. Sweet melody intertwined with soul capturing preludes and interludes embellished with lilting humming. Unforgettable song for ages.
Sure, Sahaya Raju, it's indeed everlasting, as long as we live (and more)!
So mellifluent
"காற்றுள்ள காலம் வரை ,காற்றினில் கலந்துள்ள இந்த கான ராகங்கள் " நம் காதினில் ஒலிக்கட்டும்...
உயிரை பறித்த காலன் ....எங்கள் உணர்வுகளையும் சேர்த்து பறித்து விட்டான்.
அம்மா ஆன்மா அமைதி பெற எங்கள் பிரார்த்தனைகள்.
12 ஆண்டுகளுக்கு முன்பே You Tubeல் இப்பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அருமை!!
வாணி ஜெயராம் அம்மாவின் காந்த குரல் எவ்வளவு இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம்
எங்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற வாணிஜெயராம் அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐🌹🌹🌹
ஆழமான வரிகள்
தெழிவான குரல்
மனதை நெகிழவைக்கும் இசை
உன்னதமான படைப்பு...
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆக அழகான இசையில் இனிமை நிறைந்த, நெஞ்சை அள்ளி சென்ற அழகான குரலில் மெய் மறந்ததே . "தாமரை ஓடையில் இன்ப வாடை வீசுதே" என்ன சிந்தனை! சிறப்பான. பாடல் என் நெஞ்சை அள்ள சென்ற என்னவளுக்காக இப்பாடல் சமர்பணம்! 😍😍😍😍😍.
இரைச்சலில்லாத இதமான இசையுடன்கூடிய குரலும் பாடலும் .
அப்பாடி மறக்க முடியாத அனுபவம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி இந்த படம் பார்க்கும் போது எனக்குவயது14சுசிலாஅம்மாபாடியது🎉🎉🎉🎉🎉🎉
Idhu Vani amma
Very melodius and uplifting song. Mesmerising voice of Vani Amma.
எல்லா பாடல்களும் இதயத்தை இதமாக்குவதில்ல ஆனால் இந்த பாடல் உயிர் என்ற உணர்வில் சத்தமின்றி நுழைந்து அதில் உருகி அதனை சொட்டு சொட்டாக மனதிற்கு தருகிறது
love Sir
Vani amma that humming and expressions given in each word. Goosebumps. Getting tears when I hear this song
இது போன்ற பாடல்கள் இசை குரல் இப்பொழுது இல்லை
என்ன ஒரு வசீகரமான குரல்! மனதை இப்படி அமைதிப்படுத்தி ஆனந்தபடுத்துகிறதே!! குட் சாங்.
பள்ளி பருவத்தில் ரேடியோ வில் கேட்ட பாடல்கள். இன்று இப்பாடலை கேட்கும்போது மனசுக்கு இதமாகவும் இருக்கு.அந்த நாள் மீண்டும் வருமோ.. கண் கலங்குகிறது.
💯
இனம் புரியாத சோகம் இந்த பாடலைக் கேட்கும் போது மனது கணக்கிறது
கேட்க கேட்க இனிமை வைர வரிகள்...தேனினும் இனிமையான வாணி அம்மா குரல்......
மனம் அழுத்தம் ஏற்பட்டால் இந்த பாடலை கேட்கவும்
Unforgettable and evergreen song.Vaniamma's melodies voice is very very sweet. Lyrics, music and composing of this song are wonderful and beautiful. Hats off !!!
எத்தனை நெஞ்சங்களை அள்ளிப்போய் இருக்கிறது பாருங்கள். INCLUDING MY HEART. WHEN I HEAR THE SONG MY IDAYAM VALLIEDUKERATHU........ IDAYAM
அட அட அட என்ன ஒரு இனிமையான மென்மையான பாடல் இந்த பாடலை நான் 3ம் வகுப்பு படிக்கும் போது ரேடியோவில் கேட்டேன் இப்போது இந்தப் பாடலை கண்னை மூடிக்கொண்டு கேட்டால் என் பழைய நினைவுகள் கண் முண்னே வந்து நிற்கிறது. அருமையான குரல் இனிமையான இசை..
வாய்மொழி,எழுத்துமொழி எதிலும் வெளிப்படுத்தாமல் கண்கள்வழியாக பேசி காதலை வெளிப்படுத்த முடியாமல் காதலை மட்டும் உணர்ந்த விழியில் இருந்த இதயம் நுழைந்த காதலை வெளிப்படுத்தாமலே பிரிந்த 70 'S களுக்கு இப்பாடல் ஒரு சமர்ப்பணம்.இப்போது கேட்டாலும் தன் முதல் காதலை நினைக்க வைக்கும் அற்புதமான மாடல்.இது போன்ற பாடல்கள் யாராலும் இப்போது இயற்றமுடியாது.எழுதி இசையமைத்து பாடலைப் பாடி எல்லோர் மனதிலும் இடம் பெற்ற இப்படத்தைஇயக்கிய இயக்குனர் அவர்களுக்குநன்றி.
வாணி அம்மாவின் குரல் அப்படியே அஸலாக உள்ளது. பாராட்டுகள்
என்னவோ தெரியவில்லை. சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மட்டுமே வாணி அம்மாவின் முழுத் திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் கள்.. எத்தனை பாடல்கள்..ஓம் சாந்தி
திறமை!!?? அது கஸல் பாடர்களுடையது....மேகமே மேகமே உட்பட.
மூல கசல் பாடல் இங்கே....
th-cam.com/video/z_WuM5zPJac/w-d-xo.html
பாடல் முதலில் வரும் இசை சூப்பர்.மனதை ஏதோ செய்யும் பாடல் வரிகள்.
உண்மைதான்...80...90.. கால கட்டங்களில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று நான் இப்போழுதும் கேட்டு கொண்டிருக்கின்றேன் அந்த நாட்களில் இப்பாடல் எல்லோர் வாழ்விலும் இனைந்து இருந்தது
என்னதான் கவிஞர்கள் இசையமைப்பாளர்கள் பாடகிகள் முழு ஈடுபாட்டுடன் ஒரு பாடலை படைத்தாலும் அந்தப் பாடலுக்கு அழகான முக பாவனை உடன் நடிக்கும் நடிப்பில் தான் பாடல் சிறக்கும் அந்தவகையில் இப்பாடலுக்கு இராதா அவர்கள் அருமையாக நடித்துள்ளார்
Thank you sivasankar sir. 🙏🙏🙏👌👍
Yaarathu? One and only Vani jeyaram. Mesmerizing voice
Intha padal en manathai.......
1990 களில் இலங்கை வானொலியில் கேட்டஞாபகம் வந்தவாசி அருகில் என்னுடைய ஊர் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை வானொலி மட்டும் தான் அந்த ஞாபகம் என்னால் இந்த பாடலை இன்று வறைமறக்க முடியவில்லை
இப்பாடலை கேட்கும் போது என்னையே நான் மறந்து விடுகிறேன்....... இனிமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்! என்ன ஒரு இனிமையான குரல் , இனிமையான இசை அருமை
மறக்க முடியாத அருமையான பாடல், இசை சொல்லவே வேண்டாம், அருமையோ அருமை.
குரல் இனிது யாழ் இனிது என்பர் அன்னை வாணி யின் குரல் கேளாதோர்......
வாணி ஜெயராமின் மிகச் சிறப்பான ஏற்ற இறக்கங்களுடன் உள்ள தந்தி ஒலிகுரலை ரசிப்பதா ? இசையை ரசிப்பதா ? பாடல் வரிகளை ரசிப்பதா ?? ஆஹா ..என்ன அருமையான இசைக் கலவை !! வாழ்த்துக்கள் நன்றி
Shan Shanmugam this seems to be a lift from a gazal
nanda end nila
Shan Shanmugam எத்தனை தடவைகள் என்றாலும் கேட்க கேட்க வேண்டும் போல் இருக்கிறது
Yes, beautifully described!
Such a lovely songs
வயல் வெளிகளில் என்னை தீண்டும் தென்றல் தான் அது........
அருமையான ராகம் தான் அது.......
இந்த பாடல் தான் அது.......
இதுதானே ராகம் இதுதானே பாடல் இதுதானே இசை இதுதானே குரல் இதுதானே கருத்து இந்தக் காட்சியமைப்பே இன்னிசை இயக்கம் ஆனால் இன்று ??
Vani Amma's velvet voice is really adorable and unforgettable ... Love to listen to it again And again even if I don't understand a single word of Tamil ..
"பொக்கிஷங்கள் நிறைந்த, பொற்கால சினிமா துறை அன்று".
Yen sheikh
Ippo varra song, movies edhuvume enaku pidikkala
சங்கர் கணேஷ் அவர்கள், திரு. குலாம் அலிகான் பாடிய ”ச்சமக்தே ச்சாண்டு கோ.... ” என்ற Gazal பாடலை உள்வாங்கி உருவாக்வாக்கிய பாடல்.
மை ஹவா ஹூ என்ற கசலின் தழுவல்.
Gulam Ali khan's song was released after this song came out. This cannot be a copy of that.
In spite of that, in spite of all that, this stands alone, unique and appealing to the end (of life, of course!) It has every thing: Tune (Raaga Sancharam), Gelling pre-,interludes, wavy no-end instrumentally, voice of a string instrument(!) and of a high class! Copy accepted, finding fault besmirches the achievement to touch the heart. Who doesn't copy, no music is invented, copied bits and pieces are skilfully moved around in the order of multiplicity?! By all.
KANDASAMY T S
Yesterday listened a old ghazal of ustad Amjad Ali Khan which has a similar tune, would not say either of this a copy. Because both are done with wonderful inspiration of soulful music
வாணி ஜெயராம் அம்மா such a wonderful singer. But அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லையோ என்று தோன்றும். நல்ல குரல் வளம். ❤❤❤
எனக்கு இப்பொழுது வயது 77 ஆகிறது காலன்எனக்கு வாய்ப்பு கொடுத்தால்இன்னும்20வருடம்கழித்துஇதே ஆவலுடன்இந்த பாடலை ரசித்து கேட்பேன்.
இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும் ஐயா... தாங்கள்... இப்பாடல் அப்போதும் வருமே....
தாங்கள் நூறாண்டு காலம் வாழ்வீர்கள்........இறைவன் நிச்சயம் தங்களுக்கு நல்லதொரு நீண்ட ஆயுளை கொடுப்பார்
Lovely sir...
நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏
God +20 blessed🌻🙏🌻
காதலை இனிக்க இனிக்க ஊட்டும் இந்த பாடலை கோடி முறை கேட்டாலும் போதவில்லை....முதலில் இசை இதயத்தை தட்டுகிறது..யாரது என்ற வார்த்தையிலேயே என் உயிர் பறி போகிறது...என் அனுமதி இல்லாமல்...
ஆமாம்.
எனது பள்ளி பருவத்தில் படம் பார்த்து வந்த போது ஒரு மாதம் இந்த பாடலை கேட்டு கேட்டு இன்பமுற்றேன்.