முட்டைகோஸ் உற்பத்தி | Cabbage Cultivation in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #முட்டைக்கோஸ்சாகுபடி
    ,,...................................................‌.‌‌......................
    For Paid Promotion:
    விளம்பர தொடர்புக்கு :
    இது கடை எண் அல்ல
    Contact number : 9865437506
    (what's app only Don't call)
    ............................................................................
    முட்டைக்கோஸ் பயிரை வளமான எல்லா மண்ணிலும் பயிரிடலாம். இதற்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை ph 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் மிகவும் ஏற்றவை. பொதுவாக இதுபோன்ற பனி மூட்டம் மலைப் பகுதியிலும் கிடைக்கும். தமிழகத்தின் மலையிலும் சமவெளிப் பகுதியிலும் குளிர் மாதங்களில் முட்டைக்கோசுவை பயிர் செய்யலாம். அடுக்கடுக்காக பெரிய இலைகளைக் கொண்டு முட்டை வடிவ அல்லது மனிதத் தலை போன்று இருக்கும் இந்தத் தாவரத்தின் பிரெஞ்சுப் பெயர் Caboche. அதற்கு ’தலை போன்ற’ என்பது பொருள். இதிலிருந்து தான் ஆங்கில வார்த்தையான cabbage எனும் வார்த்தை உருவாகியிருக்கின்றது. முட்டை வடிவத்திலிருந்ததால் தமிழில் இதற்கு முட்டைக்கோசு எனவும் இதைப் போலவே பூக்களாய் இருப்பதால் காலிப்ளவருக்கு பூக்கோசு எனவும் நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
    இந்த முட்டைக்கோஸை எப்படி சாகுபடி செய்வது என்பதை தெரிந்து கொள்ளும் முன்னர் முட்டைக்கோஸில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன
    முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சிறிதளவு முட்டைக்கோசு சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ யில் பாதியளவிற்கு கிடைத்துவிடுகின்றது. முட்டைக்கோஸ் கலோரி குறைந்த உணவு. அதனால் ‘டயட்டிங்’ இருப்பவர்களுக்கு முட்டைக்கோஸ் ஒரு நல்ல உணவு. அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். முட்டைக்கோஸ் அதிக நார்ச்சத்து உள்ள காய் என்பதால் மலச்சிக்கலை நீக்கி மூல நோயின் பாதிப்பைக் குறைக்கின்றது. முட்டைக்கோஸில் ‘குளுட்டோமைல்’ அதிக அளவில் இருப்பதால் அல்சரை குணப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியை நீக்க பயன்படுகின்றது. மேலும் உடலில் உள்ள பித்த நீரை சமநிலைப்படுத்துகிறது. பெண்கள் ‘மெனோபாஸ்’ காலத்தில் குறையும் சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சக்தியின் குறைபாட்டை முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்வதனால் சரி செய்யலாம்.
    செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட் ஓ.எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான ரகங்கள்.
    சமவெளி பகுதி ரகங்கள்
    ஏர்லி ஆட்டம்ன் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம் ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் ‘சமவெளியில்’ பயிரிட ஏற்றவை.
    மலைப்பகுதி 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள்
    சமவெளிப்பகுதி: 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள்

ความคิดเห็น • 15