ஆயுள் முழுவதும் காக்கும் ஆயுர் தேவி அருளும் சுரைக்காயூர் புஜபதீஸ்வரர் கோயில் நோய் தீர்க்கும் அம்பாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • நோய் தீர்க்கும் 5 சிவாலயங்கள்
    அகத்தியர் விஜயத்தில் அகத்தியர் அருளிய படி ஒரே நாளில் பின் வரும் 5 சிவாலயங்களை தரிசனம் செய்ய தீராத நோய் தீரும். அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்ய பலன் இரு மடங்காக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை 11.06.2024 ஆயில்யம் நட்சத்திர நாளில் உலக மக்கள் அனைவரும் நோயின்றி நீடூழி வாழ பிராத்தனை செய்யப்பட்டது.
    ஔஷதமங்களாம்பிகை உடனுறை புஜபதீஸ்வர் கோயில் சுரைக்காயூர்
    மூலவர்: புஜபதீஸ்வர்
    அம்மன்: ஔஷதமங்களாம்பிகை
    ஊர்: சுரைக்காயூர்
    அமைவிடம்
    தஞ்சாவூர் - திருக்கருக்காவூர் சாலையில் உள்ள மெலட்டூர் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மெலட்டூரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கோயில் செல்லும் முதல் நாள் ஆலய அர்ச்சகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுவாமியை வழிபட செல்லவும். மாத்தூரில் இருந்து அய்யம்பேட்டை வந்து அகரமாங்குடி வழியாக சுரைக்காயூர் அடையலாம். பேருந்து வசதி இல்லை. ஆட்டோ மூலம் செல்வது சிறந்தது.
    தலசிறப்பு:
    ஆயுர் தேவி அருளும் தலம். அருட்பெருஞ் சித்தர்களும் மஹரிஷிகளும், மக்கள் சேவையே மகேசன் சேவையென மனித குலத்திற்காக பல தியாகங்கள் புரிந்தவர்கள். அவர்களைத் தன்னுடைய
    எட்டுத்திருக்கரங்களில் ஏந்தி தம் ஒன்பதாவது கரத்தை அபயஹஸ்தமாகக் கொண்டு, அருள்பாலிப்பவள் ஆயுர்தேவி.
    தேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! அவர்களின் திருவுருவைக் கோயில் தூண்களில் காணலாம். சில திருக்கோயில்களில், அவர்களுக்கென்று தனிச் சந்நதி அமைந்துள்ளது. ஆனால், சித்த புருஷர்களைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பவள் ஆயுர்தேவி மட்டுமே. ஸ்ரீஆயுர் தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரகத் தத்துவங்களை விளக்குகின்றன.
    ஸ்ரீஆயுர் தேவியை வழிபட, ஸ்ரீபராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரித்து அவர்களின் அருளும் சேர்ந்து கிட்டுகிறது. தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீஆயுர் தேவி, என்றும், எங்கும், எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம், பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள்புரிவதில் பேரின்பம்கொள்கிறாள். எனவே, ஸ்ரீஆயுர் தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.
    கோயில் அமைப்பு
    இறைவன் புஜபதீஸ்வரர் என்றும், இறைவி ஔஷத மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். பெயருக்குஏற்றார்போல், அம்பிகை தன்னை நம்பி வந்தவர்களின் நோய்நொடிகளை நீக்கும் ஔஷதமாக விளங்குகிறாள். இந்த இறைவியை பூஜிப்பதன் மூலம், மக்கள் நோய்நொடியில்லா வாழ்வினைப் பெறுவர் என்பது உறுதி. இக்கோயிலில் விநாயகர், முருகன், விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆயுர் தேவி, காலபைரவர் போன்ற உபசந்நதிகளும் உள்ளன.
    இத்திருக்கோயிலின் தென்புறம் வடக்கு நோக்கிய சிற்றாலயத்தில் ஆயுர்தேவி அம்பிகை காட்சி தருகிறாள். அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன. சிவாம்சம் கொண்ட ஆதிபராசக்தியான ஆயுர் தேவி, அன்ன வாகனத்தில் ஒன்பது திருக்கரங்களை உடையவள். வல, இடப்புறங்களில் நான்கு கரங்களும், ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகவும் விளங்குகிறது.
    ஒன்பதாவது கரமான அபயஹஸ்தத்தில், சாட்சாத் பரமசிவனே குடிகொண்டு அம்பிகையின் தோற்றத்தையும், அவளுடைய எண் திருக்கரங்களில் அமரும் பேறு பெற்ற கோடானு கோடி சித்த புருஷர்களின் தவப்பெரு நிலைகளையும் எடுத்துரைக்கும்படி, தேவியின் சந்நதி உள்ளது.
    ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்தத் தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் கயாசுர மகரிஷி. அவளுடைய திருக்கரங்களில் மற்ற எந்தெந்த மகரிஷிகள் விளங்குகிறார்கள் என்று பார்ப்போமா!
    அவளுடைய வலதுகரத்தில் மேலிருந்து கீழாக; 1. கயாஸூர மஹரிஷி, 2. ஆணி மாண்டவ்யர், 3. அத்ரி மஹரிஷி, 4. குண்டலினி மஹரிஷி ஆகியோரும், இடது கரத்தில் மேலிருந்து கீழாக 1. அஹிர்புத்ன்ய மஹரிஷி, 2. சாரமா முனிவர், 3. அஸ்தீக சித்தர், 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி ஆகியோரும் அமர்ந்திருக்கின்றனர். எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி, ஸ்ரீஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள்புரிபவள்.
    இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இவர் தனது ஒன்பது கரங்களில், ஏழில் முனிவர்களை ஏந்தியகோலமும், ஒரு கரத்தில் அமுதகலசம் கொண்டும் விளங்குகிறார். பிற தலங்களில் காண்பதற்கு அரிய தேவியாவார். உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் எல்லாவிதமான சுக, துக்கங்களும் இந்த ஒன்பதில் அடங்கிவிடுகின்றன.
    இறைவனிடம் நாம் வேண்டிக் கொள்வதெல்லாம், நம் துன்பங்களும், துக்கங்களும் நீங்க வேண்டுமென்பதுதான். இதுவே, இன்று எல்லோருடைய பிரார்த்தனையுமாகும். நம் கர்ம வினைகளாலேயே நமக்குத் துன்பங்கள் வருகின்றன. நம் வினைகளுக்கேற்ப நல்லவையும், மற்றவையும் நமக்கு மாறிமாறி வருகின்றன. இதற்கு அதிபதியாக இருப்பது நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் தலைவியாக அம்பிகை விளங்குகிறாள்.
    ஒன்பதாவதாக உள்ள கரமே அபய ஹஸ்தம். இதன் உட்கரத்தில் சக்கரத்திற்கு ஒப்பான ‘‘தீபிகா பிம்ப சக்கரம்’’ அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் பிந்து ஸ்தானத்திலிருந்து நறுமண தூபப் புகை எப்போதும் படர்ந்து பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் ஊடுருவிச் செல்கிறது. இந்தத் தூபக் கதிரே உலகின் அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி, கர்ம பரிபாலனங்களை நிர்ணயிக்கின்றது.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +919444701282
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    சுரைக்காயூர் விக்ரமசோழீஸ்வரர் கோயில் தரிசனம்
    • சுரைக்காயூர் விக்ரமசோழ...
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join Our Channel WhatsApp Group
    chat.whatsapp....
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 7

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 2 หลายเดือนก่อน +1

    Super sir 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 หลายเดือนก่อน +1

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி ஆயுர்தேவி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VidhyaN2
    @VidhyaN2 2 หลายเดือนก่อน +1

    ஆயுர் தேவியின் மகிமையை அற்புதமாக கூறினீர்கள் அற்புதமான தலம் வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய தலம் உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது. நன்றி

  • @KudavasalNandhini
    @KudavasalNandhini 2 หลายเดือนก่อน

    அற்புதமான தகவல்கள் நவநீதன் சார் ஆயுர் தேவி பற்றிய தகவல்கள் அனைத்தும் அற்புதமாக கூறினீர்கள் நவநீதன் சார் என்றும் நலமுடன் வாழ சித்தர்களை கையில் ஏந்திய ஆயுர் தேவி அருளட்டும் வாழ்க வளமுடன் நவநீதன் சார்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 2 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @d.thumilan3985
    @d.thumilan3985 2 หลายเดือนก่อน

    Super sir 😊😊😊