இலங்கை வானொலி தென்றல் எப்.எம் சேவையில் மீண்டும் இன்று தொடக்கம் "பொங்கும் பூம்புனல்!"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • மீண்டும் "பொங்கும்பூம்புனல்!
    **********************************
    எனது சிறுபராயப் பாடசாலைக் காலம், அந்தக் காலத்தில் நேரத்தை காட்டுவதற்கு எங்கள் வீட்டில் கைக் கடிகாரமோ, அல்லது சுவர்க் கடிகாரமோ இருக்கவில்லை.ஆனால் பெரிய உருவத்திலான ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. அந்த வானொலிப் பெட்டி தான் எங்களுக்கு நேரத்தை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தது.
    நாங்கள் அதிகாலையில் நித்திரை விட்டு எழும் முன்னரே எங்கள் தந்தை, நேரத்துடன் வானொலியை முடுக்கிவிடுவார்.வானொலி தனது வேலையை செய்து கொண்டே இருக்கும் வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லா வேலைகளும் வீட்டில் நடக்கும்.
    காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பள்ளிக்கூடம் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் எமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை இரண்டிலே" பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சிக்கான குறியிசை ஒலிபரப்பாகும் .
    மறுகணமே அடுக்களையில் இருந்து எங்கள் தாயாரின் குரல் ஒலிக்கும்" ஏழு மணி ஆயிற்று சீக்கிரம் சீக்கிரம் பள்ளிக்கூடம் போக ரெடி ஆகுங்க " .மறுகணமே மின்சாரம் பாய்ந்தது போல், அந்த பொங்கும்பூம்புனல் ஆரம்ப இசை ஒலியைக் கேட்டு நாங்களும் சுறுசுறுப்பாகி விடுவோம். அப்போது நேரம் சரியாக காலை 7 மணியாகி இருக்கும் .
    அந்தக் காலத்தில் அந்த நாட்களில் இலங்கை நாட்டிலே எந்தத் தனியார் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இருக்கவில்லை .இருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி மட்டும்தான். எனவே இந்த வானொலிதான் எங்களுக்கெல்லாம் அன்று பெரும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் ,எங்களைப் போன்றவர்களுக்கு நேரம் கூறும் ஒரு கருவியாகவும், அவ்வப்போது ஒலிக்கும் தனது நிகழ்ச்சியின் குறியிசைகள் மூலம் எமக்கு உணர்வூட்டும் பேருதவியாளனாகவும்திகழ்ந்தது.
    அந்த அளவு தினசரி பாடசாலைக்குப் போகும் மாணவர்கள் உட்பட வேலைக்குப் போவார்கள் கூட இந்த பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி மூலம் அதிகாலையில் தங்கள் வேலைகளை துரிதப்படுத்தி செவ்வனே செய்து முடித்தார்கள்.
    எனது பாடசாலை பருவம் தொடர முன்னமே இந்த பெறுமதிவாய்ந்த பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை செவிமடுத்து வந்தவன் நான். இப்படியாகப் பயன் மிகக் கொண்ட இந்நிகழ்ச்சியைப் பலதசாப்தங்களாகச் செவியேற்று அனுகூலமடைந்த நான் மட்டுமல்ல நமது இலங்கை நேயர்கள், இந்திய நேயர்கள் நமது இளைஞர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி அண்மைக்காலத்தில் நிறுத்தப்பட்டதால் மிகவும் வேதனை அடைந்தோம் .
    ஆனால் இன்று அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விடிவு பிறந்ததை இட்டு நாம் அக மகிழ்வடைகின்றோம் .26/07/2021 திங்களாகிய இன்று இலங்கை வானொலி நேயர்கள் ஆகிய எங்களுக்கு இன்று ஓர் திருநாள். ஆம் இன்று எங்கள் அபிமான "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது .இன்று தொடக்கம் மீண்டும் எங்கள் வீடுகளில் காலை 7 மணிக்கு ஒலிக்கும் வேலைக்கு செல்வதற்கான பாடசாலைக்கு செல்வதற்கான "பொங்கும் பூம்புனல்" என்ற "அலாரம்" அடிக்க ஆரம்பித்துவிட்டது.
    இன்று காலை சரியாக ஏழு மணிக்கு எமது இலங்கை வானொலி தென்றலில் எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் கே ஜெயகிருஷ்ணா அவர்கள் ஆரம்பித்து வைக்க, எமது மூத்த அறிவிப்பாளர்கள், உலக அறிவிப்பாளர் ஜனாப் பி எச் அப்துல் ஹமீத் அவர்கள், மற்றும் சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு ஆர். சந்திரமோகன் அவர்கள் ,எங்கள் தென்றலின் முன்நாள் தயாரிப்பாளர் திரு.போல் ஜெயசீலன் மற்றும் எமது நமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள், எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி நாகபூசணி அவர்கள், மேலும் எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் தென்றல் கட்டுப்பாட்டாளர், திருமதி கலிஷ்ரா லூக்கஸ் அவர்கள், இன்னும் எமது அன்பு அறிவிப்பாளர் தயாளினி காயாம்பூ அவர்கள் ,ஒலிபரப்பு உதவியாளரும் தயாரிப்பாளருமான கவ்சல்யா கோவிந்தராஜன் ஆகியோரது பங்கு பற்றுதலோடும், அனைவரதும் மற்றும் நேயர்களதும் வாழ்த்துக்களோடும் நல்ஆசிகளோடும் இன்றைய பொங்கும் பூம்புனல் ஆரம்பம் செய்யப்பட்டது .
    இன்று ஆரம்பமான இந்தப் "பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி" என்றும் நிலைத்திருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கூறி பேரன்புடன் இந்த ஒலிப்பதிவை அன்பர்கள் அனைவருக்கும் வழங்கி விடைபெறுகிறேன் நன்றி!
    என்றென்றும் அன்பின் அபிமான நேயர்
    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    எம்.ஐ.உஸனார் ஸலீம்
    நிந்தவூர்-இலங்கை(கி.மா)
    26/07/2021
    """""""""'"""""''''''"

ความคิดเห็น • 114

  • @rexrex7471
    @rexrex7471 2 ปีที่แล้ว +51

    உலகத்திலேயே மிக சிறந்த வானொலி இலங்கை வானொலி தான் . போன உயிர் மீண்டும் வந்துவிட்டது எங்களுக்கு .. எங்கள் இலங்கை வானொலிக்கு வாழ்த்துக்கள் .

    • @gsamygsamy334
      @gsamygsamy334 2 ปีที่แล้ว

      நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான் ஏன் என்றால் ஒலி தரம் என்பது அது பற்றி தெரிந்தவர்களுக்கே புறியுமென நினைக்கிறேன்

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 2 หลายเดือนก่อน +1

      The music reminds me of my school days. We don’t look at the clock.The radio announcers constantly remind us the time.

  • @kumaresann3311
    @kumaresann3311 2 ปีที่แล้ว +28

    நான் சிறுவயதில் கேட்டு ரசித்தது இபுபோது கேட்பது பழைய நினைவுகளை ஞாபக படுத்திய இலங்கை வானொலிக்கு நன்றிகள்

  • @pulseindia1648
    @pulseindia1648 2 ปีที่แล้ว +52

    எத்தனை FM வந்தாலும், எத்தனை TV Channel வந்தாலும், "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சியை தாங்கிவந்த "தமிழ்ச்சேவை " தான் தமிழர்களின் "தாய் வானொலி" !! பள்ளிப் பருவம் ஞாபகத்திற்கு வருகிறது.

    • @dn_edit_143
      @dn_edit_143 11 หลายเดือนก่อน

      மிகவும் தரமான தமிழ்மொழி உங்களிடம் கேட்க முடியும் அனைவருக்கும் நமஸ்காரம் நன்றி வாழ்த்துக்கள்

    • @user-os9jo5hx9f
      @user-os9jo5hx9f 6 หลายเดือนก่อน

      பூம்புனல்னா என்ன

  • @SrinivasanN-u5g
    @SrinivasanN-u5g หลายเดือนก่อน +2

    இலங்கை வானொலி நிலையத்தின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும் நான் ஆறாவது படிக்கும்போது 76 இல் இருந்து

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 28 วันที่ผ่านมา

    அருமை! ஐயா, தாங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும் தங்களை வாழ்த்தட்டும்

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna หลายเดือนก่อน +4

    இலங்கை வானொலிக்கு எத்தனை வயதானாலும் வயதை கணக்கிடவே முடியாது வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு இலங்கை வானொலியை யாராலும் அழிக்க முடியாது

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +18

    இலங்கை வானொலி அன்றும் இன்றும் என்றும் இனிமைத் தென்றல்.

  • @ssr3881
    @ssr3881 5 หลายเดือนก่อน +10

    இந்த அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்புக்கு ஈடான உச்சரிப்பு தமிழ்நாட்டில் யாருக்காவது இருக்கிறதா?

    • @jayveeor
      @jayveeor 2 หลายเดือนก่อน

      Can the sweetness of the pronounciation of these respected tamil announcers be matched by any tamil programme,announcer in tamil nadu ? The answer is: IMPOSSIBLE.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +15

    இலங்கை வானொலி ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு
    மீண்டும் வந்து விட்டதா?..
    இந்த இசை... மறக்க முடியாத காலங்கள்..
    நன்றி 🙏💐💐 வாழ்த்துக்கள் 😀😀👍👍

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 2 ปีที่แล้ว +20

    இலங்கை வானொலியின் மற்றுமொரு சிறப்பம்சம் அறிவிப்பாளர்கள், அழகு தமிழில் 'வணக்கம்' சொல்லி நிகழ்ச்சியைத் தொடங்குவதும் நிகழ்ச்சியின் நிறைவில் 'நன்றி' கூறி விடைபெற்று செல்வதுமாகும்.. தொடரட்டும் உங்கள் செம்பணி. நல்வாழ்த்துகள்

    • @8fshreenithim389
      @8fshreenithim389 ปีที่แล้ว

      இலங்கை வானொலிக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    • @jayaprakash1532
      @jayaprakash1532 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @loganravi906
    @loganravi906 ปีที่แล้ว +21

    சரியாக சொன்னீர்கள், 1980 காலகட்டத்தில் பாடசாலைக்கு போகும்போது இதை கேட்டு தான் நேரம் போய்விட்டது என்று அவசரமாக வெள்ளிக்கிடுவோம். இப்பொது நினைத்து பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள், வளரட்டும் இந்த நிகழ்ச்சி 🙏🏽

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 ปีที่แล้ว +9

    அந்த இசையை கேட்டதும் கண் கலங்குகிறது.
    வடிவமைப்பு தந்தவர்க்கு நன்றி!
    எனது 8 வயது முதல் கேட்ட மியூசிக் அது. 4 மணி என்றால் இசை கலஞ்சியம் அதற்கு ஒரு மியூசிக்
    5 மணி என்றால் அதற்கு ஒரு
    மியூசிக்
    இசையை கொண்டே தனி தன்மை கொண்டது
    சக அறிவிப்பாளர்கள் "பொங்கும் பூம்புனல் என்று சொல்லும் போது
    புதிய ரத்தம் பாய்கிறது உடம்பில்..
    ஏதோ இழந்தது கிடைத்து விட்ட சந்தோஷம்.

  • @corneliusanthonippillai-wu5vm
    @corneliusanthonippillai-wu5vm ปีที่แล้ว +6

    அருமை தெளிவான ஒலிபரப்பு நாற்பது வருடங்களாக ஜேர்மனியில்
    வாழ்கின் றேன்
    கலை யகத்தில் இருக்கும்
    அனைவருக்கும் முதற் கண் வணக்கம் எனது ஊர் பாக்ஷையூர் எனக்கு பிடித்த பாடல் இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அது தான் எனக்கு திரு நாள்

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +6

    இலங்கையில் பொங்குகிறது பூம்புனல்.நம் மனம் மகிழ்வாய் பொங்குகிறது.பழைய அறிவிப்பாளர்களை நினைத்தும் புதியவர்களை வரவேற்றும் வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 2 หลายเดือนก่อน +1

    காலத்திற்கு ஏற்ப இதே நிகழ்ச்சிகளை ஒலியும் ஒளியுமாக பரப்பலாமே . ❤ நன்றி !🎉

  • @vijayanandanand645
    @vijayanandanand645 4 หลายเดือนก่อน +3

    1980 ல் நான் விரும்பி கேட்ட வானொலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +11

    நமக்கு மகிழ்ச்சி பொங்கத் தொடங்குகிறது .

  • @mahmoodsulaiman4640
    @mahmoodsulaiman4640 ปีที่แล้ว +5

    மீண்டும் பொங்கும்... இந்த நிகழ்ச்சி வந்தாலும் 1980.. S... ஜானகி, s, p, b... Songs போல் வரா து

  • @user-vw2lz4is3z
    @user-vw2lz4is3z 3 หลายเดือนก่อน +1

    நன்றி, என்னை பழைய நினைவுகளை, மீட்டெடுக்கவைத்துவிட்டீர்கள், அது ஒரு இளமை ஊஞ்சலாடுகின்ற “ வசந்தகாலம்”.

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +9

    மஜிக்கல் இசை தொடக்க இசை இதனை கேட்கும்போது பாடசாலை நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது இந்த நிகழ்ச்சியில் 7 மணிக்கு தொடங்கும் முடியும்போதும் இசைக்கும் அதனை கேட்டவுடன் வேகமாக போவோம் 8 மணியாகிவிட்டதே என்று நாங்கள் மணிக்கூடு பாவிக்காமல் இந்த நிகழ்ச்சி இந்தநேரம் என கண்டுபிடிப்போம் ஏனெனில் வீடடுக்குவீடு இருக்கும் கேட்டபடியே செல்வோம். தேவலோகத்தில் வாழ்ந்தோம் அது ஒரு பொற்காலம்.அதிலும் காலையில் விழிக்கும்போது கேட்ட பாடல்களுக்கு உயிரோட்டம் அதிகம் அதிலும் மலர்கள் நனைந்தன பனியாலே பாடல் நான் இவ்வுலகில் இருக்கும்வரை மறக்கமுடியாது . அப்துல் ஹமீத் கூறியதுபோல பாடகர்கள் பெயர் என்னதிரைப்படம் எல்லாம் சொன்னால் நல்லது
    முன்பு அப்படிகேட்டு இப்பவும் நினைவிருக்கிறது.

  • @rathinasamyrathinasamy458
    @rathinasamyrathinasamy458 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் மிக்க மகிழ்ச்சி என்றும் எங்கள் இதய வானொலி வரவேண்டும் வரவேண்டும் தடையில்லாமல் தொடர வேண்டும். என்றும் உங்கள் நினைவலையில்

  • @vasudevan9122
    @vasudevan9122 ปีที่แล้ว +3

    80 ல் சிறு தீப்பெட்டி ஆலை வைத்திருந்தோம் அப்போது இலங்கை வானொலி மட்டும் தான் தமிழ் பாடல் கேட்க்கமுடியும் அதுவே காலை முதல் இரவு வரை தென்னிந்திய சேவை இரவின் மடியில் நிகழ்ச்சி அருமை இலங்கை வானொலியில் தமிழ் மொழி உச்சரிப்பு கேட்க்க முடியும்

  • @user-jk9xd7wj5u
    @user-jk9xd7wj5u หลายเดือนก่อน

    ❤இனிமை இது புதுமை நன்றி
    நன்றி; நாற்பது ஜந்து வருடங்கள்
    பின்நோக்கிஇளமைக் கால பெண்ணாக நான் நிறயதரம் எழுதி
    இருக்கிறேன்; என்பள்ளிவாழ்க்கையில் ❤ நன்றி

  • @sithifathima9450
    @sithifathima9450 5 หลายเดือนก่อน +1

    உங்கள் முயர்ச்சி தொடர வாழ்த்துக்கள் அந்த பொற்காலம் நினைவுகள் வருகிறது

  • @VimalaDevi-ef1jz
    @VimalaDevi-ef1jz ปีที่แล้ว +1

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தீவிர ரசிகை .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sadhasadha828
    @sadhasadha828 23 วันที่ผ่านมา

    Super super ceylon radio

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்
    இந்த பொங்கும் பூம் புணல் நிகழ்ச்சியை நான் பள்ளி காலங்களில் அதாவது சுமாா் 50 வருடதத்திற்க்கு முன்னால் கேட்டது இன்றும் என் கண்முன் நிற்கிறது அய்யா.
    ஏப்போது இந்த நிகழ்ச்சியை கடல் கடந்துவரும் காணங்களை கேட்போம் என்று இருந்தது .
    இதில் பங்கோ்க்கும் அனைத்து இலங்கை வானொலி ஊழியா்களுக்கும் எனது மனமா்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    நான் உங்கள் வானொலியைத்தவிற வேறு ஒன்றும் கேட்பதில்லை.
    எனக்கு வாய்ப்பிருந்தால் அங்கு உங்களை கான வருவேன் அய்யா.
    பழைய அறிவிப்பாளா்களை அவரது குரல்களை இன்றும் என் நெஞ்சில் நிறுத்தி இருக்கிறேன்.
    அப்போது நிறைய தபால் அனுப்புவேன் என்னை நிறைய அறிவிப்பாளா்களுக்கு தெரியும் அய்யா.
    இந்த வானொலி ஆரம்பித்ததிற்க்கு எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    இன்னமும் நிறைய சொல்லலாம்.
    அப்துல்ஹமீது அய்யா குரல் நான் சிறிய வயதில் கேட்டபோது உள்ளது போல் அப்படி இருக்கிறது(எல்லோருடைய)குரலும் தான் அய்யா.
    இப்போது எனக்கு வயது.65 .அய்யா.

  • @mahas955
    @mahas955 2 ปีที่แล้ว +10

    பள்ளி நாட்களில் பண்பான இசை மற்றும் நிகழ்ச்சி சேவைகள் அளித்த இலங்கை வானொலி இன்றும் இணிமைக்கு சொந்தம் என்று சொன்னால் அது மிகையாகாது

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +1

    இருவரின் குரல் வளம் மிகவும் சிறப்பு👍
    பாடல்கள் தலை சுத்துகிறது
    நேற்று போல் இன்று இல்லை
    இன்று போல் நாளை இல்லை

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 ปีที่แล้ว +1

    இலங்கை வானோலி நிகழ்ச்சி சிறப்பு செய்தற்கு மிகவும் தமிழ் நன்றி வணக்கம்

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +1

    பொங்கும் பூம் புணல் புதிய தோற்றத்துடன் என் உள்ளத்தை கொள்ளை கொண்டு போக மென் மேலும் வளர நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர்

  • @pandaramm4340
    @pandaramm4340 3 หลายเดือนก่อน

    Very very happy to hear this PongumPoombunal programme thanks our announcers

  • @christopherravindran2904
    @christopherravindran2904 ปีที่แล้ว +5

    When I heard this music I returned to 12 yrs, now I am 54 yrs old,

  • @chandrankgf
    @chandrankgf ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

  • @bulletv8781
    @bulletv8781 ปีที่แล้ว +1

    கடவுளின் அதிசயம் 🎉🎉🎉 ஆனந்த கண்ணீர் வருகிறது.மீண்டும் கேட்டது🎉🎉 பதிவுக்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉😂😂😂

  • @mthennarasu3584
    @mthennarasu3584 6 หลายเดือนก่อน

    அருமை. அருமை. அருமை வாழ்த்துக்கள்

  • @nandhiniraghukumar8376
    @nandhiniraghukumar8376 3 หลายเดือนก่อน

    நன்றி மீண்டும் ஆரம்பித்ததற்கு

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 10 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-bt6nv7dd1d
    @user-bt6nv7dd1d 2 หลายเดือนก่อน

    உண்மையாகவா மகிழ்ச்சி மீண்டும் பொங்கும் பூம்புணல் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதில் அன்புடன் மெறினா சித்திக் பரிதா தலைமன்னார்பியர்

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 6 หลายเดือนก่อน

    POONKUM BUMPNAL PROGRAM IS THE VERY GREAT PROGRAM. I LIKE THE PROGRAM SONGS. MY YOUNG AGE I'M READY Go To The SCHOOL. BUT AT THE WARTIME I'm MISS THE PROGRAM. SO I'm VERY SAD. NOW I'M HAPPY THAT PROGRAM STARTS. Thanks Very Much for All PEOPLE. ❤

  • @kumaresankumaresan8868
    @kumaresankumaresan8868 2 ปีที่แล้ว +8

    எனக்கு பிடித்த என் வயதில் அனுபவித்த வானொலி நான் 57

  • @nandhiniraghukumar8376
    @nandhiniraghukumar8376 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 ปีที่แล้ว +1

    Great service Back. Feeling very good

  • @palanivelsami2443
    @palanivelsami2443 หลายเดือนก่อน

    AllmyLikepalani

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 ปีที่แล้ว +1

    தன்னை அறியாமல் முகம் மலர்கிறது நன்றி

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +4

    இதோ புதுமைப் பொங்கும் தென்றல்

  • @kamaraj9892
    @kamaraj9892 2 ปีที่แล้ว +10

    மீண்டும் இலங்கை வானொலி வந்துவிட்டதா? மகிழ்சி.

  • @kamaraj9892
    @kamaraj9892 ปีที่แล้ว +4

    பழைய பாடல்கள் அதவது 1995 க்கும் முன் உள்ள பாடல்களை ஒலிபரப்புங்கள் .

  • @vijayanandanand645
    @vijayanandanand645 4 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த வானொலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Dhaya928
    @Dhaya928 2 ปีที่แล้ว +2

    1980 ilkalil ketta kural mendum kekka vasithukku rompa thanks sir

    • @Dhaya928
      @Dhaya928 2 ปีที่แล้ว

      A.mariappan Ayothiyappattanam.salem.T.n

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 6 หลายเดือนก่อน

    M.I.Usanar SALEEM You Will Sent The PROGRAM Message. THANKS VERY MUCH ❤

  • @tsmuthu200
    @tsmuthu200 2 หลายเดือนก่อน +1

    இந்த அறிவிப்புக்கு பிறகு 70 80 60 பாடல்களை ஒலி பரப்பலாம்.. . மனது அங்கேயே சுற்றி வருகிறது

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว +2

    ஆம் நன்றி சொல்லும்

  • @arnark1166
    @arnark1166 ปีที่แล้ว +1

    இன்றுதான் கேட்க நேர்ந்தது சிறப்பு

  • @elangovanelango6496
    @elangovanelango6496 2 ปีที่แล้ว +15

    Ks ராஜாவின் குரலை இனி கேட்கமுடியாது எனினும் தங்கள் தமிழ் அதன்உச்சரிப்பு தினமும்கேட்போம் என்பதில் திருப்தி அடைவோம் பழையபாடல்களுக்கும் நேரம் ஒதுக்கி ஒலிபரப்பினால் சிறப்பாக இருக்கும்

  • @lalithasundar62
    @lalithasundar62 ปีที่แล้ว +1

    Wow super

  • @sundarsuseela869
    @sundarsuseela869 11 หลายเดือนก่อน

    Good morning 🙏 thanks 🙏

  • @user-info1
    @user-info1 ปีที่แล้ว +5

    உங்கள் பெயரை(உஸனார் ஸலீம்) வானொலியில் கேட்பதுண்டு

  • @VimalaDevi-ef1jz
    @VimalaDevi-ef1jz ปีที่แล้ว +1

    நானும் நிகழ்ச்சி கேட்டுட்டு இருக்கேன் . ஒலிபரப்பாகும் பாடலை என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்

  • @maharajanm9953
    @maharajanm9953 ปีที่แล้ว +1

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது நிகழ்ச்சி ஆரம்பமானது மிக்க மகிழ்ச்சி தென்னிந்தியா தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ம மகாராஜன்

  • @francisdavid6978
    @francisdavid6978 3 หลายเดือนก่อน

    Naan 1963 irunthu Ceylon Radio Tamil Sevai kettuvarugiren. Thiru Mayilvahanan enakku piditha arivippalar. Ceylon Radiovai iruthivarai கேட்டு rasithen. Rajeswari Shanmugam, Abdul Hameed Vivian Namachivayam ellorum super announcers.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 2 ปีที่แล้ว +1

    Super program

  • @Sendhil00-hd8qj
    @Sendhil00-hd8qj ปีที่แล้ว

    I like international radio colombo fantastic programs

  • @abdulraheem201
    @abdulraheem201 2 ปีที่แล้ว +5

    நான் என் சிறு வயதில் விரும்பி கேட்கும் ஒலி பரப்பு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว

    Yes unmai cylon redio. My life partner hats off I love cylon varthaha oliparrappu oooo. My lover 💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍😍💕💕

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq ปีที่แล้ว +3

    உண்மை

  • @AbdulRehman-us9gp
    @AbdulRehman-us9gp ปีที่แล้ว

    Super is best 👌

  • @hifsurrahman6730
    @hifsurrahman6730 8 หลายเดือนก่อน

    காலை வேளை உற்சாக நிகழ்ச்சி,

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 27 วันที่ผ่านมา

    கொஞ்சம் கண்ணீர்.......
    அந்த வசந்த கால......
    நினைவுகள்??????

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 ปีที่แล้ว +3

    எந்த அலைவரிசைகளில் எந்த நேரங்களில் இலங்கை வானொலியைக் கேட்கலாம் என்ற விபரம் தந்தால் நலம்

    • @user-info1
      @user-info1 ปีที่แล้ว

      104.7 MHz, 104.9 MHz only in sri lanka,

    • @ilavarasisivaprakasam7462
      @ilavarasisivaprakasam7462 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் எந்த அலைவரிசையில் கேட்கும்

  • @mathuravats
    @mathuravats ปีที่แล้ว +1

    😢என்றும் இனினமயானது இலங்கை வானொலி சேவை. மீண்டும் கேட்க எந்த அலைஓசையில் வருகிறது. தெரிவிக்கவும்.

  • @sahulhameed1014
    @sahulhameed1014 ปีที่แล้ว

    உண்மை. உண்மை. உண்மையை. தவிரவெறுன்றும். இல்லை. உலகில். இதுவரை. மாண்டவர். மீண்டது. இல்லை. ஆனால். நான். மீண்டும். வந்ததாக. உணர் கின்றேன். என். கண்களில். கண்ணீர். ஆராகவருகிண்றது. எனது. இளமையான. நினைவுகள். எனது. வயது. 60.பொங்கும்.பூம்.பனல்.வாழ்க.வாழ்க.ஷாகுல்.அமீது.. 21.7.2023

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 ปีที่แล้ว +7

    இறந்து போயிருந்த இலங்கை வானொலி மீண்டும் வந்தது சற்றே மகிழ்ச்சி.ஆனால் அதில் எங்கள் உலக வானொலி அதிவேக அறிவிப்பாளர் K.S.ராஜாவின் நேரிடை அறிவிப்பு மீண்டும் வருமா? வராது .அப்படியென்றால் ஆரம்பித்தது வெற்று வானொலி ஒலிபரப்பு.பொறாமையுடன் கூடிய ஆச்சர்யமாக உள்ளதா.உலக புகழ் இலங்கை வானொலியின் தீவிர பைத்தியங்களில் நானும் ஒன்று.அதிலும் K.S.ராஜாவின் அதிதீவிர ரசிகன்.நான்T.R.சேகர்(64) செய்யாறு.தமிழ்நாடு.இந்தியா.

  • @SrinivasanN-u5g
    @SrinivasanN-u5g หลายเดือนก่อน

    ஹலோ நான் ஆறாவது படிக்கும் போது

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் (கோவை) இந்த ஒலிபரப்பு கேட்குமா சகோதரர் அவர்களே..

  • @natarajanragavan-wr1gk
    @natarajanragavan-wr1gk 2 หลายเดือนก่อน

    பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் காதுகளில் தேன் வந்து பாய்ந்து கொண்டிருக்கிறது நடராசன் பெண்ணாடம்

  • @natarajanragavan-wr1gk
    @natarajanragavan-wr1gk 2 หลายเดือนก่อน

    கடிதம் அனுப்ப வேண்டிய முகவரியை குறிப்பிடுங்கள் ஐயா

  • @thevakumararumugam655
    @thevakumararumugam655 ปีที่แล้ว

    வணக்கம் எண்பதுகளில் யா கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி கற்க நடந்து தான் செல்வோம் அப்போது ஒரு பாடல் என் மனதுக்கு இனிய து சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே என்ற. பாடல் முடிந்தவுடன் பொங்கும் பூம்புனல் முடிவுக்கு வரும் அப்பொழுது நாம் இன்னும் வேகமாக நடந்து செல்வோம் என்றுமே மமறக்க முடியாதவை அப்போது தமிழ் சேவை பணிப்பாளர்களாக சிவஞானம் அல்லது திருஞானசுந்தரம் இருந்திருக்க வேண்டும்

  • @devi9202
    @devi9202 11 หลายเดือนก่อน

    Can i hear this programme in chennai, pls tell the band and frequency?

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 ปีที่แล้ว

    Hiok
    ❤❤❤

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 ปีที่แล้ว

    பொங்கும் பூம்புனல் மறக்கமுடியாத மனத்தை கொள்ளை கொண்ட Channel.

  • @naseer7757
    @naseer7757 ปีที่แล้ว +1

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவை நிகழ்ச்சிகளில் நிந்தவூர் உசனார் சலீம் என்ற பெயர் அடிக்கடி இடம்பெறும். அதற்கு பிறகு இன்றுதான் கண்டேன்.

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 หลายเดือนก่อน

    இதன் அலைவரிசைகள், வானொலி தவிர்த்து இணையம் வழியாகக் கேட்கும் வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களை யாராவது தரமுடியுமா?

  • @nksamycbe7251
    @nksamycbe7251 ปีที่แล้ว +2

    மிக் மழிச்சி

  • @user-wv7fp8rq2b
    @user-wv7fp8rq2b 3 ปีที่แล้ว +2

    What about 2nday programme!?

  • @user-ix6su3if6g
    @user-ix6su3if6g ปีที่แล้ว

    Edai kadala mhana sumhai kuraiyudu nalladu

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 ปีที่แล้ว

    Feathers on to Cap

  • @mohommednazar944
    @mohommednazar944 ปีที่แล้ว

    Pongumpomkulele unwarewu emurawu

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq ปีที่แล้ว

    Anna FM

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical ปีที่แล้ว

    Can anybody give the frequency number of radioceylon?

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 2 ปีที่แล้ว +1

    Hiok

    • @niyassamoon2415
      @niyassamoon2415 ปีที่แล้ว

      Usanar saleem suhama nan uggal fan

  • @VijayaKumar-sy9jo
    @VijayaKumar-sy9jo ปีที่แล้ว +1

    Munnarvijay

  • @VijayaKumar-sy9jo
    @VijayaKumar-sy9jo ปีที่แล้ว +1

    Chinavayasulayanmansuilangavanloykattabadalapadyolathu

  • @alagarsamy636
    @alagarsamy636 2 ปีที่แล้ว

    Iya apdul hamidu kuriyadu pol katantha 1970_1980 kalakattam napakam varukirathu

  • @bhagalavans7079
    @bhagalavans7079 หลายเดือนก่อน

    Fruuency number