Senthamil then mozhiyaal song | செந்தமிழ் தேன்மொழியாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @rajarajane4150
    @rajarajane4150 8 หลายเดือนก่อน +82

    சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே
    செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீளம் விழைத்தவளோ
    அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
    கண்களில் நீளம் விழைத்தவளோ
    அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
    மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
    மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

    • @manosolomon6916
      @manosolomon6916 3 หลายเดือนก่อน

    • @narayanansamy2043
      @narayanansamy2043 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @narayanansamy2043
      @narayanansamy2043 2 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👍👍👍

    • @balakrishnanroshanthan3375
      @balakrishnanroshanthan3375 2 หลายเดือนก่อน

      Z

    • @rajeshsubramani6001
      @rajeshsubramani6001 หลายเดือนก่อน

      சபரிமலை செல்லும் பயணிகள் வசதிக்காக இரயில்வே நிர்வாகம் 4 சிறப்பு இரயில் வண்டிகளை இயக்க உள்ளது. இதில் 3 வண்டிகளுக்கு திருவள்ளூர் நிறுத்தம் கொடுக்க பட்டுள்ளது. பயணிகள் திருவள்ளூர் நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள். மேலும் தாங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும்.

  • @hrithikaraju
    @hrithikaraju 11 หลายเดือนก่อน +339

    2024 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க? காலத்தை வென்ற காவியம் ❤️

    • @narayanansamy2043
      @narayanansamy2043 2 หลายเดือนก่อน

      🌹🌹🌹🌹♥️♥️♥️🌹♥️🌹🌹🌹🌹👍👍👍👍👍

    • @sunithasivaraman450
      @sunithasivaraman450 หลายเดือนก่อน

      ஆம்

    • @ZainabNisha-c6v
      @ZainabNisha-c6v 9 วันที่ผ่านมา

      🙋

  • @maruthuappu4955
    @maruthuappu4955 3 ปีที่แล้ว +1747

    2021 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க காலத்தை வென்ற காவியம் என்ன பாட்டு அருமை பாட்டு

  • @SubramanianVelmurugan-c8j
    @SubramanianVelmurugan-c8j ปีที่แล้ว +54

    இது மாதிரி ஒரு பாடலை இயற்ற கவியரசு கண்ணதாசன் தான் மீண்டும் பிறநது வரவேண்டும்.வாழ்க அவர் புகழ்.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 4 ปีที่แล้ว +2945

    இதோ வந்துட்டேன்... யார் இந்த பாடலை 2021ல் கேட்கிறீர்கள்?
    ஒரு லைக் போடலாமே....

  • @savithriritheesan2573
    @savithriritheesan2573 3 ปีที่แล้ว +194

    இந்த பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாவில்(2012) பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நடனம் கற்றுக் கொடுத்து ஆட வைத்தேன். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி தாளாளர் அவர்களால் பாராட்டப்பட்டேன். தமிழ் மொழியின் சிறப்பினால் அன்று தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்த நான் இன்று அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @indianbala2906
    @indianbala2906 5 ปีที่แล้ว +1755

    ஐந்தாம் தலைமுறையும் ரசிக்கும் காலத்தால் அழியாத காதல் பாடல்... 😍💖

  • @sukarthi9272
    @sukarthi9272 11 หลายเดือนก่อน +141

    இன்னும் எத்தனை ஆண்டுகள் மாறலாம் இந்த பாடல் மாறாது 2024 ல் கேட்பவர்கள் ஓர் லைக் போடலமே❤

  • @imagineclips8423
    @imagineclips8423 2 ปีที่แล้ว +76

    கன்ணதாசன் அவர்கள் தனது தமிழை பாடல்களில் சிறப்பிக்கவே அவரே தயாரித்த படம் தான் இந்த படம் மாலையிட்ட மங்கை...
    நன்றி கண்ணதாசன் அவர்களே🙏🏼

    • @gunakamal6725
      @gunakamal6725 ปีที่แล้ว +2

      Nalla thagaval

    • @gururajanbhimarao7619
      @gururajanbhimarao7619 7 หลายเดือนก่อน +2

      1945--53 களில் கொடிகட்டிப் பறந்த டி ஆர். மகாலிங்கம் அவர்களின் சினிமா வாழ்க்கை 1954 முதல் சறுக்க ஆரம்பித்தது
      1954 முதல் 1957 முடிய அவருக்கு படங்கள் இல்லை
      1958 ல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொந்த தயாரிப்பான மாலை இட்ட மங்கை படத்தில் மகாலிங்கம் அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தார்
      இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
      அதற்கு ஒரு முக்கிய காரணம் மகாலிங்கம் அவர்களின் பாடல்கள்.
      மகாலிங்கம் அவர்களுக்கு மீண்டும் சினிமா வில் புனர்வாழ்வு கிடைத்தது
      இந்த வெற்றி நாயகனுக்கு கவிஞர் கண்ணதாசன் கார் பரிசாக தந்தார்

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +23

    நான் இந்த நவீன'காலத்தில் வாழும் 90k இளைஞன் ஏனோ எனக்கு இதுபோன்ற காவிய தத்துவ பாடல்களே மிகவும் பிடிக்கிறது இதை வெளியில் சொன்னால் boomer என்று கேலி செய்வார்கள் வாழ்வில் ஏமாற்றம் உண்மையான அன்பில் துரோகத்தை சந்தித்த என் போன்ற இதயங்களுக்கு மட்டுமே வாழ்வில் அனுபவம் தரும் இனிமையான
    💕தேன்👑தமிழ்👑💕சொற்கள் இதுபோன்ற காவிய பாடல்களில் மட்டுமே உள்ளது

  • @parthibanganesan5267
    @parthibanganesan5267 4 ปีที่แล้ว +781

    மொழிகளில் சிறந்த மொழி எம் தமிழ் மொழி..

    • @gnanasekar-xv1jb
      @gnanasekar-xv1jb 3 ปีที่แล้ว +3

      Correct

    • @innocentguy3944
      @innocentguy3944 3 ปีที่แล้ว +6

      Aanal indru tamilai azhithu vittu Tanglish ai payanpaduthugirom

    • @vishalwillbrite3048
      @vishalwillbrite3048 3 ปีที่แล้ว +9

      @@innocentguy3944 அதையும் தங்கிலிஷ் இல் தான் எழுதியுள்ளீர்....

    • @MuthuMuthu-yc2ij
      @MuthuMuthu-yc2ij 3 ปีที่แล้ว +1

      அருமையான பாடல்

    • @innocentguy3944
      @innocentguy3944 3 ปีที่แล้ว +1

      @@vishalwillbrite3048 😂😂😂

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 ปีที่แล้ว +619

    தெய்வீக மொழியாம் ௭ங்கள்தமிழ் மொழி தெய்வமும் இறங்கி வந்து கேட்டு ரசித்து ஆடும்

  • @மதன்அம்பலம்-ம9வ
    @மதன்அம்பலம்-ம9வ 5 ปีที่แล้ว +378

    இப்போது தெரிகிறதா. நம் தமிழ். இனிமை.

  • @BabuMersal
    @BabuMersal 11 หลายเดือนก่อน +539

    2024 ஆம் ஆண்டு நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா ஒரு லைக் பட்டனை போட்டு விட்டு😂

    • @honeyonairraja
      @honeyonairraja 5 หลายเดือนก่อน +6

      Year doesn't matter.. it's evergreen golden song.. ❤❤❤❤

    • @Bala-n2n
      @Bala-n2n 4 หลายเดือนก่อน +5

      Correct

    • @Benaffleck-r5z
      @Benaffleck-r5z หลายเดือนก่อน +2

      500 like naan

  • @sampathrangan9178
    @sampathrangan9178 2 ปีที่แล้ว +9

    என்ன அற்புதமான பாட்டு . கண்ணதாசனின் கற்பனை வளம் என்ன டி. ஆர் மகாலிங்கத்தின் குரல் இனிமை என்ன அடடா

  • @harikumaran1981
    @harikumaran1981 3 ปีที่แล้ว +47

    இந்த பாடலில் நாயகி கூட ஆடும் துணை நடிகைகள் கூட அற்புதமான அழகு.இன்றைய கதாநாயகிகள் இவர்கள் கால் தூசி பெற மாட்டார்கள்

  • @manisr1545
    @manisr1545 5 ปีที่แล้ว +427

    தமிழ் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி வாய்ந்தது என்பதை உணர்கிறேன் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்.

    • @waterfalls8363
      @waterfalls8363 3 ปีที่แล้ว +1

      Unmai 👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @nirmalaravikumar457
      @nirmalaravikumar457 3 ปีที่แล้ว +2

      சுப்பர்

    • @TamilChristianMedia.
      @TamilChristianMedia. 3 ปีที่แล้ว +3

      தமிழுக்கு இவ்வளவு பெருமையா..?
      மெய் சிலிர்க்கிறது.
      நெகிழ்கிறேன் நானும் ஒரு தமிழனாக..

    • @kayalvizhivijaykumar4045
      @kayalvizhivijaykumar4045 3 ปีที่แล้ว +2

      Excellent for ever for everyone 👏👍

  • @hardikhari1533
    @hardikhari1533 3 ปีที่แล้ว +121

    இந்த பாடலை ஆடு, மாடு, கோழி.. உடன் சேர்ந்து... ஒரு மரத்தடியில் கட்டில் மேல் படுத்து கேட்டால்.... அது தான் சொர்க்கம்..

    • @jayaprakashj7321
      @jayaprakashj7321 2 ปีที่แล้ว +6

      Ithu allavo rasanai.....

    • @sheikmohammed3235
      @sheikmohammed3235 2 ปีที่แล้ว +6

      நெஜமாவே இது தரமான ரசனை நண்பா👌🤝

  • @MohamedAli-hw4wz
    @MohamedAli-hw4wz 2 ปีที่แล้ว +54

    புதைந்து கிடக்கும் பழைய நினைவுகளை தோண்டி எடுத்த பாடல். நான் 96 ஆம் வருடம் இந்த பாடலை முதல் முறையாக படிக்கும் காலத்தில் கேட்டேன். இந்த பாடலை இயற்றியது பாடியது யார் என்று எனக்குத் தெரியாது. எனது நண்பரின் வீட்டில் இந்த பாடலைக் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்து அதே குலரில் பலமுறை நன்பர்கள் முன் பாடி நண்பர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @rogersam1254
      @rogersam1254 ปีที่แล้ว +3

      இப்பாடலை நான் 1958 ல் சிறுவனாக இருக்கும் போது கேட்டு இன்றளவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய பாடல்கள் தமிழ் பாடல்களா?

  • @ashokn7532
    @ashokn7532 2 ปีที่แล้ว +58

    தமிழன் என்ற இனம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும்.
    எந்த கொம்பனாலும் அழிக்க முடியாத பாடல்

  • @amalanamalan9025
    @amalanamalan9025 4 ปีที่แล้ว +401

    என்னதான் இருந்தாலும் பழைய பாடல் போல வராது எப்போ உள்ள பாடல் ❤❤❤

  • @kamalakannan7792
    @kamalakannan7792 4 ปีที่แล้ว +466

    தமிழ் அன்னையின் மடியில் பிறந்து
    பாலும்,தேணும்,பழரசமும் பருக பருக
    திராது,தேகட்டாது நம் அன்னை மொழி உலகில் வேற எந்த மொழிக்கும் தனி சிறப்பு அமையாது
    தமிழ்ழராய் பிறந்ததற்க்கு பெருமை அடைவோம் நம் மொழி காப்போம்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் செழிக்கட்டும் தமிழ் இனம்

    • @m.marimuthum.marimuthu9868
      @m.marimuthum.marimuthu9868 4 ปีที่แล้ว +12

      மிக்க நன்றி சகோதரி கரெக்டா சொன்னிங்க

    • @rajaprabhu7154
      @rajaprabhu7154 3 ปีที่แล้ว +3

      Ippadi kuriyatharku ungalai eppadi pugalvathenru enaku theriyavillai

    • @k.harishk.harish8241
      @k.harishk.harish8241 2 ปีที่แล้ว +2

      Ev சரோஜா அழகு

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +2

      அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯

    • @nayan35
      @nayan35 ปีที่แล้ว +2

      தேன், தேண் அல்ல

  • @sureshselvaraj238
    @sureshselvaraj238 5 ปีที่แล้ว +209

    இந்த பாட்டு ஒரு மணி நேரம் வராத என்ற எண்ணம் இருக்கும்

  • @dineshkannachinnadurai3360
    @dineshkannachinnadurai3360 ปีที่แล้ว +328

    யார் இந்த பாடலை 2024ல் கேட்கிறீர்கள்?
    ஒரு லைக் போடலாமே....😍😍😍😍😍😍😍😍

  • @SakthiVel-entertain
    @SakthiVel-entertain 7 หลายเดือนก่อน +14

    Tr. மகாலிங்கம் அய்யாவின் குரலுக்கு நான் சிறுவயதிலிருந்தே அடிமை.

  • @aravindhantamil6791
    @aravindhantamil6791 5 ปีที่แล้ว +338

    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ... 😍😍

    • @prof.dr.gk.1026
      @prof.dr.gk.1026 5 ปีที่แล้ว +2

      I also like this lyric ji😊🙋👌👍

    • @RanjithKumar-fe4bo
      @RanjithKumar-fe4bo 4 ปีที่แล้ว +4

      நானும் இந்த வரியை தான் ரசித்தேன் சகோதரர்

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 ปีที่แล้ว +7

      பெண்ணுக்கு பெண்ணே பேராசை கெள்ளும் பேர் அழகு என்னை பொறுத்த வரை அன்னை தெரசா அம்மா அவர்கள்

    • @chandrasekarann820
      @chandrasekarann820 4 ปีที่แล้ว

      Very fine.

    • @Navasaran
      @Navasaran 3 ปีที่แล้ว +1

      @@sureshsanjeevi3039 இந்த வரிகள் அன்னை தெரசாவிற்கு பொருந்தாது.😊
      அவருக்கு ஈடான வார்த்தை இந்த உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை ❤ ❤

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 ปีที่แล้ว +142

    தமிழைப் போற்றி பாடிய பாடல் வாழ்க தமிழ்

  • @h.7411
    @h.7411 3 ปีที่แล้ว +130

    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ
    புதிதாய் கற்பனை வடித்தவளோ
    ஆஆஅ..ஆஆஆஆஅ.ஆஅ.
    காற்றினில் பிறந்தவளோ
    புதிதாய் கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ.
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ..
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
    மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
    மூழ்கிட செய்யும் மோகினியோ
    மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
    மூழ்கிட செய்யும் மோகினியோ
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 19 วันที่ผ่านมา +2

    பெண்களை மிகவும் நாகரீகமாக வற்ணித்த சில பாடல்களில் இதுவும் ஒன்று! அதுவும் கவிஞரின் உவமை இன்பம் மிகவும் அருமை! தமிழ் மொழியில் மட்டுமே இப்படி மொழியின் இன்பத்தை அனுபவிக்க முடியும்!

  • @rafeekayyas4972
    @rafeekayyas4972 11 หลายเดือนก่อน +189

    2024 yarellam intha paadalai keakureenge😍

  • @rpkrpk7914
    @rpkrpk7914 4 ปีที่แล้ว +91

    P.kathirvel செந்தமிழ் தேன் மொழியாய் என்று இந்த வரிகலை கேட்கும்போதே மனம் தேன் அமுதம் போல் இனிக்கும்

    • @jaganjagan1629
      @jaganjagan1629 2 ปีที่แล้ว

      Tamilan endru sollada talai nimirnthu nillda

  • @rjagadeeswaran4908
    @rjagadeeswaran4908 5 ปีที่แล้ว +413

    காலம் உள்ளவரை இந்த உலகம் உள்ளவரை அழியாத பாடல்

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 ปีที่แล้ว +407

    “பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்”
    ஒரு முத்தமும் அதற்குப்பிந்தைய வெட்கத்தையும் இப்டி இரண்டே வரியில் உருவகம் செய்யும் கண்ணதாசன்.🙂
    கண்ணதாசனும் வாலி போல வாழ்ந்துத் தீர்த்திருந்தால் தமிழ் பாட்டுலகம் இன்னும் அதிகம் செழித்திருக்கும்...!!! ❤

    • @TamilChristianMedia.
      @TamilChristianMedia. 3 ปีที่แล้ว +8

      அதை இவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க..!

    • @sivas3926
      @sivas3926 3 ปีที่แล้ว +4

      எதைப் பருகிட தலை குனிவாள்?

    • @Itxmeyokesh
      @Itxmeyokesh 3 ปีที่แล้ว +6

      எம்மொழி கவியில் காதல் உரைப்பது அலாதியான உணர்வுதான், இறக்கையில் விண்ணை தொடும் உணர்வு...

    • @SDivya-tl3tp
      @SDivya-tl3tp 3 ปีที่แล้ว +2

      Superbbb👏👏

    • @sivasathya8493
      @sivasathya8493 3 ปีที่แล้ว +6

      இதுக்கு அர்த்தம் தெரியாம இருதேன், பட் சூப்பர்,

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 2 ปีที่แล้ว +1

    என்ன பாட்டுடா இந்த பாட்டெல்லாம் கேட்பதற்காகவே இந்த ஜென்மம் எனக்கு போதும். 😍😍அவ்ளோ அழகு இந்தப்பாட்டு இன்னைக்கு ஃபுல்லா என் மைண்ட்ல ஓடிட்டு இருந்தது அவ்வளவு சூப்பரான சாங் ...

  • @svsnackssvsnacks8740
    @svsnackssvsnacks8740 2 ปีที่แล้ว +13

    எந்த காலத்திலும் அழியாத காதல் ரசணை கவிதை வரிகள்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 ปีที่แล้ว +124

    கவியரசு கண்ணதாசனின் சிறந்த பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் 🙏🙏

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 ปีที่แล้ว +389

    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே, நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ, நெஞ்சம், மணம் பெறுமோ வாழ்வே.., ஆ.., ஆ.., ஆஆஆ.., செந்தமிழ், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, ஓஓஓ..ஓ.., ஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.., காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, செவ்வந்திப் பூச்சரமோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, ஓஓஓ.., செவ்வந்திப் பூச்சரமோ, அவள், செந்தமிழ்த் தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, ஓஓ..ஓ.., மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், - Senthamizh Then Mozhiyal - MOVIE:- MAALAYITTA MANGAI - MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)

  • @DELHIVIBES10
    @DELHIVIBES10 5 ปีที่แล้ว +332

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் 2019 jun 30

    • @pandurangan8458
      @pandurangan8458 5 ปีที่แล้ว +1

      Marnrndhukondeda Erukkum padal.Manadhi vittu Neengadha padal.

    • @struggler1613
      @struggler1613 2 ปีที่แล้ว

      Soltareh

  • @sunkovai2007
    @sunkovai2007 ปีที่แล้ว +2

    ஒரே வரியில் ஏழுது அனைத்தும் மிக சிறப்பு!

  • @manir9091
    @manir9091 ปีที่แล้ว +3

    பெண்ணை வர்ணிக்கும் கண்ணதாசனின் அழகு வேறெந்த மொழியிலுமில்லை

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 3 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் குசிலியம்பாரை ஜெயா தட்டச்சு பயிலகம். விடைபெறும் விழாதான். நினைவுக்கு வருகிறது. காலங்கள் 30 வருடங்கள் ஆகிறது. இந்த பாடலுக்கு வயதே இல்லை. காலத்தால் மறக்க முடியாத பாடல். Ever green. 20.12.21.

  • @ananthikarunamarisha4747
    @ananthikarunamarisha4747 5 ปีที่แล้ว +130

    காலத்தை வென்ற பாடல் இன்றய தலைமுறையும் ரசிக்கும் பாடல்

  • @subishajero183
    @subishajero183 4 ปีที่แล้ว +162

    கண்ணதாசனின் அள்ள அள்ள குறையாத செந்தமிழ் வரிகள.

    • @peaceofgod1809
      @peaceofgod1809 2 ปีที่แล้ว +3

      இப்பாடலை
      பாடிய T.R.மகாலிங்கம்
      குரல் வெண்கலமும்
      தேனும் கலந்த
      குயிலின் குரலய்யா

  • @KESHORTALWAR
    @KESHORTALWAR 2 ปีที่แล้ว +17

    Kaviarasar Kannadasan wanted to write good Thamizh songs. Those days the Music Directors used to make the tune and ask him to write according to their tunes. He felt restricted. He told MSV that he would produce a movie and will write songs and MSV must set the tune to his lyrics. This is how this pokkisham of a song was made. Happy to share with you all. I love and cherish this song. I guess this was made in 1958 or so

  • @catsanddogscutepetsyt
    @catsanddogscutepetsyt 2 ปีที่แล้ว +13

    2022 i am from malayalam കേരള എനിക്ക് ഈ ഗാനം ഇഷ്ടമാണ് 🎵 ഈ ഗാനം യാരളം കേക്കുറിഗാ

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 4 ปีที่แล้ว +141

    அரை நூற்றாண்டு கடந்தபின்னும் அள்ளுகிறது உள்ளத்தை

  • @சுன்னிசப்பி
    @சுன்னிசப்பி 3 ปีที่แล้ว +75

    இந்த படத்தின் பைனான்ஸ் உதவி எங்க கொள்ளு தாத்தா தான் ரொம்ப பெருமையா irgu

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 2 หลายเดือนก่อน

      தங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @krishmurthy945
    @krishmurthy945 3 ปีที่แล้ว +43

    தமிழ் மொழியில் உள்ள இனிமை வேறு எந்த மொழியிலும் இல்லை காலத்தால் அழியாத பாடல்.

  • @v.mahendiran8630
    @v.mahendiran8630 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக சொல்கிறேன் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நம் தமிழ் தாயின் மகிமையை

  • @SureshSuresh-td8lc
    @SureshSuresh-td8lc 11 หลายเดือนก่อน +36

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

  • @Mr.G2118
    @Mr.G2118 5 ปีที่แล้ว +409

    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
    கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ…
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

  • @hariharanshanmugasundaram1148
    @hariharanshanmugasundaram1148 3 ปีที่แล้ว +33

    மகாலிங்கம் ஐயாவின் கொஞ்சும் தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு நிகரில்லை.

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 3 ปีที่แล้ว +27

    அன்றும் இன்றும் என்றும் இனிமைதான்.ஏனென்றால் இது தேன் தமிழால் புனையப் பட்டது .இது.காலத்தால் அழியாத காவியம்.

  • @Pengu-v6p
    @Pengu-v6p 11 หลายเดือนก่อน +9

    ஆயிரம் வைரமுத்துக்கள்
    வந்தாலும் இதை போன்ற வரிகளை தரமுடியுமா?🎉😊

  • @arivarasanm6708
    @arivarasanm6708 หลายเดือนก่อน

    எப்போது கேட்டாலும் உள்ளத்தில் ஒரு குதூகலிப்பை உண்டு பண்ணும் விதமாக அமைந்துள்ள பாடல். T.R. மகாலிங்கம் அவர்களின் காந்த குரலுக்கு ஈடு இணை ஏதுமில்லை

  • @jagadeshthulasiraman2775
    @jagadeshthulasiraman2775 5 ปีที่แล้ว +111

    இந்த பழய பாடல்கள் நடிகர்கள் கவிஞர்கள் அத்துனைபேர்களும்
    இன்றும்மனதில் நீங்காது பசுமையாக மனபாரத்தை குரைக்கும் தெய்வங்களாக இருக்கிறார்கள் வாழ்க

  • @mahadevannagasubramanian3261
    @mahadevannagasubramanian3261 3 ปีที่แล้ว +139

    My grandfather is T R Mahalingam. Great musician

    • @indramickey8916
      @indramickey8916 2 ปีที่แล้ว +4

      Oh....nice 👏🙏

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +4

      🙏🏻🙏🏻 i love his songs... இசை தமிழ் நீ செய்த is my fav 💐💐

    • @bandasinghdevotee558
      @bandasinghdevotee558 2 ปีที่แล้ว +6

      My uncle is Nehru and grandpa Gandhi pa

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +2

      @@bandasinghdevotee558 👊👊

    • @venkatesana.d1506
      @venkatesana.d1506 2 ปีที่แล้ว +8

      T R.mahalingamis the only singer who can't be imitated by any singer in the world.

  • @padmeshspinningpen7617
    @padmeshspinningpen7617 3 ปีที่แล้ว +35

    எங்கள் தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்கும் மொழி. இப்பாடலில் எவ்வளவு அழகாக இருக்கிறது என் மொழி.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 ปีที่แล้ว

      உண்மையில் இந்த பாடல் 1954 ல் வந்த ஆன் என்ற இந்திபடபாடலின் தழுவல் என்றால் நம்பமுடிகிறதா .அது எம் எஸ் வியின் குருநாதரான நவுசாத்தின் பாடல் ஆனால் இந்திபாடல் நம்மதமிழ் பாடலின் பக்கத்தில் கூட வரமுடியாது .மஹாலிங்கமும் எம் எஸ்வியும் கண்ணதாசனும் என்றும் அழியாபாடலாக்கி விட்டனர்.

  • @soundarakailash8804
    @soundarakailash8804 2 ปีที่แล้ว +1

    செந்தமிழ் போலவே இந்த பாலும் நிலைத்திருக்கிறது

  • @sheelaiyer6637
    @sheelaiyer6637 2 ปีที่แล้ว +3

    சில்லென்று பூத்த
    சிறு நெருஞ்சி காட்டினிலே.
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே
    நின்றது போல் நின்றால்
    நெடுந்தூரம் பறந்ததேன்
    நிற்குமோ ஆவி
    நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே
    ஆஅ..ஆஆஆஅஆ.ஆஆ.ஆ..செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    1செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ
    புதிதாய் கற்பனை வடித்தவளோ
    ஆஆஅ..ஆஆஆஆஅ.ஆஅ.
    காற்றினில் பிறந்தவளோ
    புதிதாய் கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    கண்களில் நீலம் விளைத்தவளோ
    அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ.
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ..
    அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண் மீன்களை மலராய் அணிந்தவளோ
    மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
    மூழ்கிட செய்யும் மோகினியோ
    மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும்
    மூழ்கிட செய்யும் மோகினியோ
    1அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென சிரிக்கும்
    மலர்க்
    கொடியாள்
    1பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

  • @arunmozhichandran8285
    @arunmozhichandran8285 5 ปีที่แล้ว +209

    பள்ளிபருவத்தில் திருச்சிராப்பள்ளி பண்பலை வானொலியில் கேட்ட ஞாபகம்

  • @ajithvelu2244
    @ajithvelu2244 3 ปีที่แล้ว +15

    தேன் தமிழ்.. கேட்கும் பொழுது காதுகளில் தேன் வந்து பாய்கிறது...

  • @aisprinters7925
    @aisprinters7925 5 ปีที่แล้ว +816

    பிடிக்க வில்லையெனில் பார்க்காதீர் அன்லைக் கொடுத்து மனதை காயப்படுத்த வேண்டாம்

  • @jayasrimohan1348
    @jayasrimohan1348 2 ปีที่แล้ว +2

    இன்றும் என் குழந்தைகள் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கிறார்கள்.

  • @RESPECT-qw7yq
    @RESPECT-qw7yq 2 ปีที่แล้ว +3

    2022 இப்ப இப்ப யாரெல்லாம் இப்போ இந்தப் பாட்ட இருக்கிறீங்க அருமையான பாட்டு கேட்டு மகிழுங்கள்

  • @manikandan-rz4hf
    @manikandan-rz4hf 3 ปีที่แล้ว +291

    2021 ல் யார் வந்திருக்கிறீர்கள் ....லைக் போடுங்கள் .....

  • @deepakaladeepakala1574
    @deepakaladeepakala1574 3 ปีที่แล้ว +21

    தோண்ட தோண்ட புதையல் வரும் ,எங்கள் ஐயா கவிஞர் கண்ணதாசன் மனதிலும், கைகளிலும் ,தமிழ் தேன் பாட்டு வரும்.

  • @kannanmahesh1893
    @kannanmahesh1893 4 ปีที่แล้ว +903

    தமிழன் என்றால் ஒரு👍போடு நண்பா

    • @winvictorywin5612
      @winvictorywin5612 3 ปีที่แล้ว +5

      pls focus on fourth industrial revolution era guys

    • @amudhan1001
      @amudhan1001 3 ปีที่แล้ว +3

      @@winvictorywin5612 sari sunni...

    • @winvictorywin5612
      @winvictorywin5612 3 ปีที่แล้ว +2

      @@amudhan1001
      pls listen healer Basker speech man.

    • @innocentguy3944
      @innocentguy3944 3 ปีที่แล้ว +2

      @@winvictorywin5612 what healer basker does ?

    • @innocentguy3944
      @innocentguy3944 3 ปีที่แล้ว +5

      En da Pichai edukura ? Athuvum tamilan pera solli ...

  • @kaleestamilan2777
    @kaleestamilan2777 ปีที่แล้ว +3

    என் உயிர் மொழி தமிழ் என் உயிருக்கும் மேலான மொழிதமிழ்

  • @sundarc875
    @sundarc875 หลายเดือนก่อน +8

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்திருப்பீர்கள்

  • @wadood730
    @wadood730 3 ปีที่แล้ว +94

    அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்... இந்த பாடலில் தந்துவிட்டான்... அந்த கவிஞனுக்கு எனது நன்றிகள் 🙏🙏♥️♥️

  • @dineshdj7775
    @dineshdj7775 4 ปีที่แล้ว +45

    After 6 decades Its uniqueness is a song still makes me want to watch it over and over again. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொல்லும் பேரழகு (அல்டிமேட்) 17-12-2020 இன்னும் நூறு வருடம் கடந்தாலும் என்றும் நிலைத்திருக்கும் 👍

    • @reader1672
      @reader1672 ปีที่แล้ว

      கொள்ளும் *

    • @dineshdj7775
      @dineshdj7775 ปีที่แล้ว

      @@reader1672 🤭🙏

  • @sunderelectric8692
    @sunderelectric8692 5 ปีที่แล้ว +41

    இது பாடல் அல்ல மனிதனின் உள் உணர்வு இதை அழிக்க எவராலும் முடியாது

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +28

    விண்ணும், மண்ணும் அழிந்தாலும், இந்த பாடல் அழியாது! ❤️👌

  • @nsvasan
    @nsvasan ปีที่แล้ว +4

    2023 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க காலத்தை வென்ற காவியம் என்ன பாட்டு அருமை பாட்டு

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 ปีที่แล้ว +809

    இந்தா நான் போடுறேன் first
    Who is in 2020??

    • @RavindranMurugavelUKTamilan
      @RavindranMurugavelUKTamilan 4 ปีที่แล้ว +22

      Even in 2050, will give THUMBS UP

    • @DivakarKasinathanDiva
      @DivakarKasinathanDiva 4 ปีที่แล้ว +6

      @@RavindranMurugavelUKTamilan yes

    • @MohamedaliALI-eb1cr
      @MohamedaliALI-eb1cr 4 ปีที่แล้ว +8

      நான் கேட்டுகீறேன் நண்பா.🙋. அருமை.அருமை. 24.04.2020.🙋

    • @PETER56515
      @PETER56515 4 ปีที่แล้ว +7

      Me

    • @cssiva007
      @cssiva007 4 ปีที่แล้ว +5

      🙏💐👍

  • @sabaricargo5275
    @sabaricargo5275 3 ปีที่แล้ว +104

    500 வருடம் ஆனாலும் அழியாத பாடல்

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 3 ปีที่แล้ว +18

    1950,60களில் கொடிகட்டிப்பறந்த மகா கலைஞன் டி.ஆர் மகாலிங்கம்.சமூகம் மற்றும் புராணப்படங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.20ம்நூற்றாண்டின் இணையற்ற நடிகர்களில் ஒருவர்.காலங்கள் மாறினாலும் இவரது குரல் இன்றளவும் காதில் ரீங்காரம் செயது கொண்டுதான் வருகிறது.

  • @govindarajanseenivasanpill2580
    @govindarajanseenivasanpill2580 ปีที่แล้ว

    அருமை எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம்.டி.ஆர்.மகாலிங்கத்தின்முத்திரைகளில் ஒன்று.

  • @kalaisamy8620
    @kalaisamy8620 ปีที่แล้ว +4

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்கலாம் இந்த பாடலை

  • @l.fastinaani4270
    @l.fastinaani4270 4 ปีที่แล้ว +33

    கவிஞரின் பாடல் வரிகள் அருமை👌

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 ปีที่แล้ว +68

    அழகான வரிகளில் அமைந்த மிக இனிமையான காலத்தை வென்ற பாடல்.

  • @muthuraman5536
    @muthuraman5536 4 ปีที่แล้ว +4

    எத்தனை வருடங்கள் ஆனாலும் பழைமையான பாடல்களில் உள்ள இனிமை இனிமை தான். இந்த பாடலை நான் சில சமயம் தனிமையில் பாடிப் பார்திருக்கின்றேன். (கூட்டத்தில் பாடினால் டின்கட்டிருவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்) முதலில் வரும் பாடல் வரிளுக்கு பின்பு நிற்குமோ ஆவி நிலைக்கு மோ என்ற பாடல் வரிக ளுக்குபின்பு TRM அவர்கள் இழுக்கும் அந்த ராகத்தை பாட முடியவில்லை. அடடா T.R.M அவர்களுக்கு தான் என்ன ஒரு குரல் வளம்.அதை கேட்பதே பேரானந்தம்.

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 ปีที่แล้ว +15

    TR. மகாலிங்கம் ஒப்பற்ற நடிகர், பாடகர், தமிழிக்கு
    பெருமை சேர்த்தவர். 🙏🙏🙏

  • @santonathan2654
    @santonathan2654 ปีที่แล้ว +1

    Indrum 96 il pirantha Nan rasikkum padalgalin pattiyalil..❣️

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +33

    என்னேகுரல் வலம்
    என்னேஇசை
    என்னேநடனம்
    இதுதமிழில்தான்
    இருக்கும்

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 ปีที่แล้ว +13

    அருமை, அருமை, பாடல், வரிகள் சூப்பர்,டி, ஆர்,மகாலிங்கம்,நடிப்பு,சூப்பர்💯

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 4 ปีที่แล้ว +12

    கவியரசர் கண்ணதாசன் உச்சம் தொட்ட பாடல் ...

  • @srssekar6523
    @srssekar6523 5 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி பாடல் எல்லாம் காலம் கடந்து நிற்கும் தெவிட்டாத தேன்

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 3 หลายเดือนก่อน +1

    என்றும் மறக்க முடியாத தமிழ் பாடல் வாழ்க தமிழ் உலகம் எங்கும்

  • @trucetruly
    @trucetruly 3 ปีที่แล้ว +4

    🌹 🌹செந்தமிழ் தேன்மொழியாள் 🌹🌹
    1958 -ல் வந்த படம் மாலையிட்ட மங்கை...
    இந்த படத்தில் இடம் பெற்றது தான், அனைவரது உள்ளங்களையும் கவர்ந்திழுக்கும் அழகான பாடல் "செந்தமிழ் தேன் மொழியாள்..!"
    டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மிக இனிமையாக பாடி எல்லோர் மனிதிலும் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல் இந்த 'செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்...' பாடல்.
    இந்த பாடலுக்கு இசைசக்கரவர்த்திகளான எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல, இன்றும், ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்..!
    இப்பாடலை எழுதியதோடு இல்லாமல், இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசர் கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.
    எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்காக கண்ணதாசன் அவர்கள் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்.
    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே
    நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்து போனீரே' என்பது தமிழ்நாட்டில், கண்ணதாசன் அவர்களுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வந்த ஒப்பாரி பாடலாகும். கவியரசு அதை தன் பாட்டில் இணைத்தது எப்படி...
    இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எஸ்.விசுவநாதனிடமிருந்து போன் வந்தது. "அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்கு... இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மனநிறைவா இல்லை. நேர்ல வாங்க... பாட்டை கேட்டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்...'' என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலை
    கேட்டார்.
    பிரமாதமாக பாடியிருந்தார் டி.ஆர்.மகாலிங்கம்.
    இருந்தாலும், ஒரு, 'பெப்' இல்லை, என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.
    "விசு... கொஞ்சம் பொறு!'' என்றபடி வெளியே வந்து, மரத்தடியில் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார். அப்போது அவர் காலில் ஒரு நெருஞ்சி முள் குத்திவிட்டது; குனிந்து முள்ளை பிடுங்கி எறிந்து விட்டு நிமிர்ந்தவர், "விசு... விசு...'' என, கூவியபடி ஒலிப்பதிவு அறைக்கு வந்து, எழுத சொன்னார்...
    "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே...'' என்று விருத்தம் பாடி, "அவள் செந்தமிழ் தேன் மொழியாள் என, பாடலை துவங்கச் சொல்!'' என்றார்.
    ஒப்பாரிப் பாடலை...அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா..!
    பாடல் முழுக்க குட்டி குட்டி அழகியல்கள். பெண்ணை இயற்கையோடு இணைத்து வர்ணனை செய்யும் உவமைகளோடு ஒவ்வொரு வரியும் இனிமையாக இருக்கும்.

  • @TamilChristianMedia.
    @TamilChristianMedia. 3 ปีที่แล้ว +4

    தமிழுக்கு இவ்வளவு பெருமையா..?
    மெய் சிலிர்க்கிறது.
    நெகிழ்கிறேன் நானும் ஒரு தமிழனாக..

  • @karthikmanju8782
    @karthikmanju8782 3 ปีที่แล้ว +4

    அழகு, இனிமை, இதம் எம் தமிழ் என்று சங்கே முழங்கு.

  • @billasri798
    @billasri798 2 ปีที่แล้ว +2

    2022 intha patta night 11.00 maniku headset la potu kettukitu irukken arumai......intha kalathula poranthu irukkalam

  • @shruthicuisinebar
    @shruthicuisinebar 2 ปีที่แล้ว +1

    TH-cam க்கு சிரம் தாழ்த்தி
    நன்றிகள் கோடி

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 ปีที่แล้ว +86

    மிகவும் இனிய பாடல் கவிஞரின் வரிகள்👌👌👌

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 ปีที่แล้ว

      இப்ப வர்ற படத்துக்கு புதுசா பாட்டு எழுதறவனுகளுக்கு சுத்தமான தமிழே வருவதில்லை. ஒரு எழவும் புரிவதில்லை.

  • @baskarc48
    @baskarc48 5 ปีที่แล้ว +27

    Explaning the beauty of the girl :
    Pennirku Penney perasai kollum per Azhagu ellam padaithaloh...
    Perfection at its peak.

  • @maniameister8060
    @maniameister8060 5 ปีที่แล้ว +63

    What an excellent voice of T.R Mahalingam

  • @svithyasamrajlavanya404
    @svithyasamrajlavanya404 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @maheshsr9459
    @maheshsr9459 2 ปีที่แล้ว +3

    2022 ல் யாரெல்லாம் இந்த காலத்தை வென்ற காவியத்தை கேட்கிறீர்கள்.