திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2024
  • திருமலை திருப்பதி வரலாறு பகுதி 02:
    • திருமலை திருப்பதி வரலா...
    In this post we are learn about the thirumal thirupathi history.This temple is proudly described by Hindu scriptures as the earthly abode of Lord Vishnu during the Kali Yuga. Tirupati Balaji or Sri Venkateswara Swamy Temple is one of the most important landmarks of Hindu mythology a magnificent location in Chittoor district of Andhra Pradesh.
    Some interesting stories from the Puranas say that the Lord appeared on earth to bless the devotees during the Kali Yuga. Once, sage Bhrigu wanted to judge who was the greatest among the holy trinity. When he tested Brahma and Lord Shiva, he was not satisfied, so he went to Vaikunda and kicked Vishnu in the chest. Goddess Lakshmi resides in the bosom of Lord Vishnu, she felt insulted and left Vaikuntha and came to earth. Grieving the separation of Goddess Lakshmi, Vishnu came to earth in search of Lakshmi. The place where he came is revered as Tirupati Hill.
    He wandered in search of his wife Mahalakshmi and then plunged into penance. The Lord entered an anthill and began to meditate. Lord Shiva and Brahma came there in search of Lord in the form of cow and calf. Lord Shiva, who was in the form of a cow, secreted milk for Vishnu every day.
    One day, Ayan saw that the cow was milking itself and was wasting the milk, and threw an ax at the cow. Lord Vishnu intervened to stop the ax from hitting the cow and the ax hit the Lord on the forehead causing blood to flow out. Srihari went in search of herbs to heal his wounds and found an ashram. Vaguladevi waited a long time for Kannan's arrival. She was born as Yasoda as Kannan's mother in her previous birth.
    On seeing Sri Hari in the ashram, Ananda floated in the flood, her beloved Kannan in his form. Srihari also affectionately called Vaguladevi as Amma. Vaguladevi named her child Srinivasan and treated her with love. Akasharajan came to Chandragiri country near their ashram. Srinivasan once saved his daughter Padmavati from being chased by an elephant while she was playing with her friends in Kanakam. Srinivasan and Padmavati got married as per the divine plan of God.
    He received huge sums of money from Kubera, the god of wealth, to conduct the grandest wedding ever. Following the marriage, the Lord stayed at Tirumala Hill, where a magnificent temple arose. Since then, the Lord is said to be repaying the loan from Kubera in small pieces. It is believed that devotees give their dues to the Lord in due time.
    பகவான் விஷ்ணுவின் வாசஸ்தலமாக திருமலை திருப்பதி விளங்குகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இறைவன் பூமியில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை, பிருகு முனிவர் மும்மூர்த்திகளில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினார். பிரம்மாவையும் சிவபெருமானையும் சோதித்தபோது திருப்தியடையாததால் வைகுண்டத்திற்குச் சென்று விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். லட்சுமி தேவி விஷ்ணுவின் மார்பில் வசிக்கிறாள், அவள் அவமானப்பட்டு வைகுண்டத்தை விட்டு பூமிக்கு வந்தாள். லட்சுமி தேவியின் பிரிவால் வருந்திய மகாவிஷ்னு திருமகளை தேடி பூலோகம் வந்தார். அவர் வந்த இடமே திருப்பதி மலையாக போற்றப்படுகிறது.
    தன் மனைவி மகாலட்சுமியைத் தேடி அலைந்து பின்னர் தவத்தில் மூழ்கினார். அப்பொழுது இறைவனை சுற்றி புற்று மூடியது. சிவபெருமானும் பிரம்மாவும் பசு மற்றும் கன்று வடிவில் இறைவனைத் தேடி அங்கு வந்தனர். பசு வடிவில் இருந்த சிவபெருமான் தினமும் விஷ்னுவிக்கு உணவளிக்க புற்றில் தானாக பாலை சுரந்தார். ஒருநாள் பசு தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த ஆயன் பசுவின் மீது தன் கோடாலியை வீசியெறிந்தான். கோடாலி பசுவின் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு குறுக்கேத் தோன்ற, அவரது நெற்றியில் கோடாலி பட்டு ரத்தம் வெளியேறத்துவங்கியது.
    தன் காயம் தீர மூலிகைகளை தேடிச் சென்ற ஸ்ரீஹரி ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அங்கிருந்த வகுளாதேவி நெடுநாட்களாக கண்ணனின் வருகைக்காக காத்திருந்தாள். இவள் முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள். ஸ்ரீ ஹரியை ஆசிரமத்தில் கண்டவுடன் அவரது ரூபத்தில் தனது செல்ல கண்ணனை கண்டு ஆனந்தவெள்ளத்தில் மிதந்தாள். ஸ்ரீஹரியும் வகுளாதேவியை அன்புடன் அம்மா என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு சீனிவாசன் என்று பெயரிட்டு அன்புடன் உபசரித்தாள்.
    அவர்களின் ஆசிரமம் அருகே இருக்கும் சந்திரிகிரி நாட்டினை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மகளான பத்மாவதி ஒருசமயம் கானகத்தில் அவளது தோழிகளோடு விளையாடிக்கொண்டிருந்த போது யானை துரத்த அவளை ஸ்ரீனிவாசன் காப்பாற்றுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர இறைவனின் தெய்வீகத் திட்டத்தின்படி தேவர்கள் புடைசூழ ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமால் செல்வத்தின் கடவுளான குபேரனிடம் இருந்து பெரும் தொகையைப் பெற்று, மிகப்பெரிய திருமணத்தை நடத்தினார். திருமணத்தைத் தொடர்ந்து, இறைவன் திருமலை மலையில் தங்கினார், அங்கு ஒரு அற்புதமான கோயில் எழுந்தது. அன்றிலிருந்து குபேரனிடம் இருந்து சிறு சிறு துண்டுகளாகக் கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை உரிய நேரத்தில் இறைவனுக்கு வழங்குவதாக ஐதீகம்.
    • திருமலை திருப்பதி வரலா...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 2