திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்| Gopura Darisanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.
    நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.
    ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப்பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம் மண்டபத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Enjoy & stay connected with us "Gopura Darisanam"!!!
    👉 Subscribe to : / @gopuradarisanam6506
    👉 Like us on Facebook : / gopuradarisanam
    👉 Follow us on Twitter : / gopuradarisanam
    👉 Follow us on Instagram : / gopuradarisanam
    *******************************************************************************************************
    In association with ALPHA DIGITECH : www.alphadigite...
    TH-cam Channel : bit.ly/2XfmHUt
    Face book: / alphadigitech
    Twitter : / alphadigitech_
    Instagram: / alphadigitechofficial
    LinkedIn: / alpha-digitech---india

ความคิดเห็น •