துன்பங்களை துடைத்தெறியும் திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் | திருமண தடை நீக்கும் வாராஹி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2023
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    ஸ்ரீநெடுங்களநாதர் கோயில்
    காசிக்கு நிகரான தலம்
    திருநெடுங்குளம் (71/274)
    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 71 வது தேவாரத்தலம் ஆகும்.
    திருநெடுங்களம் என்றால் "சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பெயர்.
    காசி நகரை போல் கோவில் உள்ளதால்
    இத் தலத்தை
    தட்சிண கைலாயம் எனவும் அழைக்கின்றனர்.
    மூலவர்:திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.அம்மன்/தாயார்:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.தல விருட்சம்:வில்வம்,. கஸ்தூரி,அரளி,தீர்த்தம்:அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்புராண பெயர்:திருநெடுங்களம்
    மாவட்டம்: திருச்சி
    தல வரலாறு
    சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகேதிருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன்இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.திருநெடுங்களம் என்றால்"சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.
    மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும்
    சிற்ப உரல் ஒன்று கோயிலின் உள்ளே உள்ளது. இந்த உரலை பார்வதி தேவி பயன்படுத்தினாராம்.
    இத்தலத்தில் சிவ தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்த உரலில் மஞ்சள் இடித்து, மாவாக்கி அதனைப் பூசிக்கொண்டு குளித்தார் என்கிறது புராணம்.
    பிராத்தனை
    திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள், விரைவில் திருமணம் நடைபெறவும், சிறந்த வாழ்க்கைத் துணை அமையவும் வேண்டிக்கொண்டு சிற்ப உரலில் விரலி மஞ்சளை இடிக்கிறார்கள்.
    சப்த கன்னிகளில் நடுவில் அமர்ந்துள்ள வாராகிக்கு, இடித்த மஞ்சள் தூளைக் கரைத்த நீரால் அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது பலருடைய அனுபவம். இந்த வேண்டுதலை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் செய்தால் பலன் விரைவில் கிடைக்கும்.
    இடர்கள் நீங்கி இன்பம் பெற
    திருஞானசம்பந்தரின் பதிகம்
    மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்று உதைத்த
    பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்ர் பால்மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
    நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
    மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமான் அணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    குன்றினுச்சி மேல்விளங்கும் கொடிமதிற் சூழ் இலங்கை
    அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
    என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
    நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
    சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
    நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
    தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
    நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
    நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
    பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
    அமைவிடம்
    திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள துவாக்குடி சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம்.
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழமாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் திருநெடுக்குளம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
    துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.
    வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் தரிசனம்
    • செய்வினையிலிருந்து நம்...
    செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தரிசனம்
    • செந்தலை மீனாட்சி சுந்த...
    கோயில் Google map link
    maps.app.goo.gl/JHzZCdnd34N7J...
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +91 6380983566
    +91 9578894382
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    if you want to support us via UPI id
    9655896987@ibl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 31

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 18 วันที่ผ่านมา

    0m Shri Thiu Nedungulanathar namaha.

  • @saichannel7109
    @saichannel7109 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப ஆவலாக உள்ளேன் இந்த கோயிலை தரிசனம் செய்ய ❤

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப அற்புதமான பதிவு அருமையா காட்சிப்படுத்தியுள்ளீர்கள் நவநீதன் சார் ❤️ இந்த தலத்தில் அருள்பாலிக்கும் நெடுங்களநாதர் நவநீதன் சார் வாழ்வில் ஏற்படும் அனைத்து இடர்களையும் நீக்கி நவநீதன் சாருக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் நானே நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு இது போன்ற அற்புதமான ஆலயங்களை நவநீதன் சார் மூலம் தரிசனம் செய்ய ஆவலாக உள்ளேன் வாழ்க வளமுடன் நவநீதன் சார் ❤️🙏👌👌👌

  • @aprakash7599
    @aprakash7599 11 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தூர்க்கை அம்மாபோற்றி

  • @santhoshk7978
    @santhoshk7978 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு மங்களாம்பிகை உடனமர்
    நித்யகல்யாண சுந்தரேசுவரரே போற்றி ஓம்

  • @aprakash7599
    @aprakash7599 11 หลายเดือนก่อน +1

    நமசிவாய வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 หลายเดือนก่อน +2

    🙏🌹திருச்சிற்றம்பலம்🔥📿🙏🔥

  • @aprakash7599
    @aprakash7599 11 หลายเดือนก่อน +1

    ஓம் மஹா கால பைரவர் போற்றி போற்றி போற்றி

  • @venkatesannr9806
    @venkatesannr9806 11 หลายเดือนก่อน +1

    Sivaya Namaha

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky 11 หลายเดือนก่อน +2

    Namaskaram Anna மிகவும் அருமை அருமை யாக உள்ளது கோவில் வராஹி அம்மன் அபிஷேகம் அலங்காரம் அடுக்கு திபாரதனை பார்க்க அருமை யாக உள்ளது எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் ஓம் வராஹி போற்றி

    • @mathina
      @mathina  11 หลายเดือนก่อน

      நன்றி அம்மா

  • @user-zl4ws3qj1f
    @user-zl4ws3qj1f 11 หลายเดือนก่อน +1

    Om Sivaya Namaha Sri Padme Charanam

  • @ganeshram863
    @ganeshram863 5 หลายเดือนก่อน

    Me and my spouse visited this Thevaram Padal petra sthalam on 10 Dec2023.
    Awesome temple 🕉️ Nama Shivaya

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 11 หลายเดือนก่อน +1

    நேடுங்களம் தேவாரம் மறையுடையாய் தோலுடையாய் மிக மிக ஆற்றல் உடையது இடர் களையும் பதிகம் என்ற பெயர் இநத் தேவாரத்திற்கு இருகிறது . இது போல் வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எந்த தேவாரம் என்று தேடி அநத தேவாரத்தை ஓதி அல்லது கேட்டு வாழ்கையில் வெற்றி பெறுங்கள். ஓம் நம சிவாய

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 11 หลายเดือนก่อน

    Hara Hara Shankara Jaya Jaya. 0mnamo SHIVAYA SHIVAYA namaha. Tiruchitrambalam.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 11 หลายเดือนก่อน +1

    ஓம் சிவசிவ ஹரிஹர ஓம்

  • @VidhyaR1987
    @VidhyaR1987 5 หลายเดือนก่อน

    அற்புதமான தரிசனம்

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @kesavannatarajan235
    @kesavannatarajan235 7 หลายเดือนก่อน

    நன்றி பல தேவையான தகவல்கள் தந்ததற்கு.

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 11 หลายเดือนก่อน

    0mnamo SHIVAYA SHIVAYA namaha. Amma varai thaye Potri Potri. En mahgalukku Kalyana Varam arulavum.

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 11 หลายเดือนก่อน

    Super sir

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @VaishnaviRajendran-ex2of
    @VaishnaviRajendran-ex2of 11 หลายเดือนก่อน

    Super Anna

  • @pithapiraisoodibusdriver3338
    @pithapiraisoodibusdriver3338 11 หลายเดือนก่อน

    Thanks sir bus driver pitha pirai soodi chennai bus

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 11 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @d.thumilan3985
    @d.thumilan3985 11 หลายเดือนก่อน

    Hi sir
    Super sir😊

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 5 หลายเดือนก่อน

    0m Shri Namasivsya namaha

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 11 หลายเดือนก่อน +3

    ஊரின் பெயரை பலரும் திருநெடுங்குளம் என்று தவறாக உச்சரிக்கிறார்கள்.திருநெடுங்களம் என்பதே சரியானது.

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 11 หลายเดือนก่อน

    செத்துபோன சமஸ்கிர்த மந்திரத்திற்க்கு ஆற்றல் இல்லை சமஸ்கிர்த மந்திரத்தால் எந்த பயனும் இல்லை ஆனால் நம் தமிழ் மொழி மிக மிக ஆற்றுடையது அதிலும் நம் நால்வர் கொடுத்த தேவாரம் மந்திர சொற்கள் தமிழ் மொழியில் நம் வாழ்கையில் ஏற்படும் எல்லாவித பிரச்னைகளுக்கும் தேவாரத்தில் தீர்வு இருக்கிறது முடிந்தால் பாடுங்கள் இல்லை கேலுங்கல் நிச்சையம் நம் பிரச்னைக்கு தீர்வு தேவாரம் மூலமாக கிடைக்கும் இது நம் தமிழ் கடவுள் சிவன் மீது சத்தியம்.