திருக்குறள் - அதிகாரம் 53 சுற்றந்தழால்- குறள் 521-530 || Adhikaram 53 Sutrandhazhaal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #tamilliterature #thirukkural #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #பொருட்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamilwithmeaning #tamilthirukural #tamil #thirukkuralintamil #tamilthirukural #tamilnadu #tamilstatus @TamilArivu15
    திருக்குறள் - அதிகாரம் 53 சுற்றந்தழால்- குறள் 521-530 || Adhikaram 53 Sutrandhazhaal | Thirukkural For Beginners: Sutrandhazhaal
    குறள் பால்: பொருட்பால்.
    குறள் இயல்: அரசியல்.
    அதிகாரம்: சுற்றந்தழால்.
    குறள் வரிசை: 521 522 523 524 525 526 527 528 529 520
    அதிகார விளக்கம்:
    சுற்றம் என்பது சூழ்ந்திருத்தல் ஆகும். சுற்றந்தழாலாவது ஒருவர் தன் சுற்றத்தாரைப் பேணிக் கொண்டு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்கச் செய்தலைச் சொல்வது. பிறப்பு(உறவு)ச்சுற்றம், இனச்சுற்றம், நட்புச் சுற்றம், தொழில்முறை(வினை)ச் சுற்றம் எனப் பல சுற்றங்கள் உண்டு. இங்கு பேசப்படுவது, இவற்றோடு, பொதுவாழ்வில் தலைவன் பழகுகின்ற அரசியல் சுற்றம் பற்றியதுமாம். குளத்திற்குக் கரை எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல் ஒருவர்க்கு இச்சுற்றத்தார் மிகவும் தேவை; இவர்கள் பாதுகாவலாகவும் அளவளாவுதற்குத் துணையாகவும் அமைவர். தலைவன் சுற்றத்தை கொடை கொடுத்தும் இன்சொல்பேசியும் சினந்து கொள்ளாமலும் அணைத்துக் கொள்வான். அரசியல் சுற்றத்துள் வந்து போய்க்கொண்டிருக்கிறவர்களைப்பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் சொல்கிறது இவ்வதிகாரம். இத்தொகுப்பில் உள்ள பாடல் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பொருந்தும்.
    English Summary:
    hirukkural Adhikaram 53, titled "Sutram Thazhal" in Tamil, focuses on the importance of avoiding actions that could lead to slander or harm others.In essence, this Kural emphasizes the principle of treating others as one would like to be treated, advocating for compassion, empathy, and respect in all interactions. By avoiding actions that could lead to slander or harm, individuals can cultivate a sense of inner peace and earn the respect of others.
    குறள் எண் 521:
    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
    குறள் எண் 522:
    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
    குறள் எண் 523:
    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று.
    குறள் எண் 524:
    சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.
    குறள் எண் 525:
    கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தால் சுற்றப் படும்.
    குறள் எண் 526:
    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத்து இல்.
    குறள் எண் 527:
    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
    குறள் எண் 528:
    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.
    குறள் எண் 529:
    தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்.
    குறள் எண் 530:
    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
    ********************************************************************************************************************************************************
    தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார்.
    "அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே யுலகு...."
    என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
    "ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
    கூடி முயங்கப்பெறின்"
    என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ความคิดเห็น •