திருக்குறள் - அதிகாரம் 54 பொச்சாவாமை- குறள் 531-540 || Adhikaram 54 Pochchaavaamai
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #tamilliterature #thirukkural #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #பொருட்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamilwithmeaning #tamilthirukural #tamil #thirukkuralintamil #tamilthirukural #tamilnadu #tamilstatus @tamilArivu15
திருக்குறள் - அதிகாரம் 54 பொச்சாவாமை- குறள் 531-540 || Adhikaram 54 Pochchaavaamai | Thirukkural For Beginners: Pochchaavaamai
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம்: பொச்சாவாமை.
குறள் வரிசை: 531 532 533 534 535 536 537 538 539 540
அதிகார விளக்கம்:
பொச்சாப்பு என்பது கடமைகளைச் செய்வதில் ஆர்வமற்றும் ஈடுபாடற்றும் இருந்து அவற்றைப் பொருட்டாக மதியாமல் இருப்பதைக் குறிப்பது. அச்சொல் மறதி அதாவது நினைவாற்றல் இல்லாமையைக் குறிப்பது அல்ல. பெருகிவரும் செல்வம், தொடர்ந்துவரும் வெற்றி போன்றவற்றால் எழுகின்ற மகிழ்ச்சியால் பலருக்குக் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. அதன் விளைவாக தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைக்கூட எண்ணிக்கொள்ளாமல் ஒதுக்கிவைப்பர். இதுவே பொச்சாப்பு எனப்படுவது. எதிர்மறையில், பொச்சாவாமை என்பது மகிழ்ச்சிச் செருக்கால் சோர்வடையாமல் இருப்பதைச் சொல்வது. இன்றைய வழக்குநடையில் பொச்சாவாமையை மிதப்பின்மை எனச் சொல்லலாம்.
English Summary:
Thirukkural, also known as the Kural, is a classic Tamil text composed by the ancient Tamil poet Thiruvalluvar. It consists of 1330 couplets, or "Kurals," divided into 133 chapters, or "Adhikarams." Adhikaram 54 is titled "Pochavamai," which can be translated to "Love of Falsehood" or "Deceptive Ways".This chapter of Thirukkural emphasizes the importance of truthfulness and warns against the allure of deceptive ways. It highlights the transient nature of falsehood and the enduring value of truth. Through vivid imagery and concise verses, Thiruvalluvar underscores the virtues of honesty and integrity, urging readers to choose the path of truth over the temptations of deceit.
குறள் எண் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
குறள் எண் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
குறள் எண் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
குறள் எண் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
குறள் எண் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
குறள் எண் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
குறள் எண் 537:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
குறள் எண் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
குறள் எண் 539:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
குறள் எண் 540:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
********************************************************************************************************************************************************
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார்.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.