துக்கத்தின் தேவதை… பாட்டுக்கார லட்சுமி | பவா செல்லதுரை | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • துக்கத்தின் தேவதை…
    பாட்டுக்கார லட்சுமியம்மாள்
    பற்றி பவா செல்லதுரை பேச்சு
    Bava Chelladurai speech
    Singer : Arunai MA Ravi
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 191

  • @veeranganait4087
    @veeranganait4087 4 ปีที่แล้ว +47

    வாயில்லா ஜீவன்களிடம் கருணை காட்டும் லட்சுமியம்மா வை காலம் எத்தனை கஷ்டப்படுத்தி இருக்கிறது. கடைசியாய் பாடியவர் மனதை கரைய வைத்துவிட்டார். எதற்கும் இனிமேல் அழக்கூடாது என்றிருந்தேன். வாழ்க பவா அண்ணா 💐🙏

    • @ShrutiTv1
      @ShrutiTv1  4 ปีที่แล้ว +1

      நன்றி

    • @jas9169
      @jas9169 4 ปีที่แล้ว +3

      Praise vadaloor vallalar for this song... Manumurai kanda vasagam by Ramalinga Adigal

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

    • @sathurthi1731
      @sathurthi1731 4 ปีที่แล้ว

      இந்தப்பதிவை நேரடியாய் கண்டுகளித்து மனமகிழ்ச்சி அடைந்தேன்.. அதனோடு வள்ளலார் பாடலை பாடிய தோழர் அருணைமா ரவி அவர்களின் இசைஅன்பு என்னை நெகிழவைத்துவிட்டது இதைவிட ஒரு மனிதனுக்கு என்ன சந்தோசம் வேண்டும் என்ற பெருமிதம்.. அன்பானவர்களின் அன்பை அவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (அருணைமா ரவி 94448 33325 ) இப்படிப்பட்ட பேரன்புக்குறிய அனுபவத்தையும் அன்பையும் தந்த பவா ஐயாவின் அன்பிற்கு என்றுமே நான் அடிமைதான் 🙏

    • @rajaganapathi9737
      @rajaganapathi9737 3 ปีที่แล้ว

      @@sathurthi1731 நன்றி ரவி அண்ணாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்...தோழர் பவா வுக்கு நன்றிகள்...

  • @rbalutps
    @rbalutps 4 ปีที่แล้ว +17

    பவா சார் கடைசியா பாடினது யாருன்னு சொல்லலையே!
    மிக அருமையா பாடி இருக்காரு!
    ஒரு இன்ட்ரோ கொடுத்திருக்கலாம்!

  • @vjeeva123
    @vjeeva123 4 ปีที่แล้ว +11

    மனம் வலிக்கிறது பவா...எல்லோரையும் பாரபட்சமின்றி நேசிக்கிற உங்கள் மனதிற்கு என் பேரன்புகள் பவாஅண்ணா..

  • @sathurthi1731
    @sathurthi1731 4 ปีที่แล้ว +4

    இந்தப்பதிவை நேரடியாய் கண்டுகளித்து மனமகிழ்ச்சி அடைந்தேன்.. அதனோடு வள்ளலார் பாடலை பாடிய தோழர் அருணைமா ரவி அவர்களின் இசைஅன்பு என்னை நெகிழவைத்துவிட்டது இதைவிட ஒரு மனிதனுக்கு என்ன சந்தோசம் வேண்டும் என்ற பெருமிதம்.. அன்பானவர்களின் அன்பை அவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (அருணைமா ரவி 94448 33325 ) இப்படிப்பட்ட பேரன்புக்குறிய அனுபவத்தையும் அன்பையும் தந்த பவா ஐயாவின் அன்பிற்கு என்றுமே நான் அடிமைதான் 🙏

  • @mrkmram
    @mrkmram 4 ปีที่แล้ว +7

    லட்சுமி அம்மா வாழ்க்கை மற்றும் பாடல் மனதை கனக்க செய்து விட்டது. கண்கள் குளாமாகின. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா. என்ன ஒரு குரல் வளம்.

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் சார்

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 ปีที่แล้ว +30

    ஏன் யா பவா நீர் மட்டும் எப்படியா இப்படிப்பட்ட மனிதர்கள சந்திச்சிருக்க......??!💟

    • @rbalutps
      @rbalutps 4 ปีที่แล้ว +5

      சார் நாமலும் இதே மாதிரி ஆட்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனா நாம மனசுல நிறுத்தி வைக்க மறந்துட்டோம் அவரு மனசில நிறுத்தி எடுத்து சொல்கிறார்

    • @vsssekar1
      @vsssekar1 4 ปีที่แล้ว +5

      ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பவா சார் ரசிக்கிறார். அதை உணர்ந்து சொல்கிறார். இதை எல்லாரும் செய்ய முடியுமா? சந்தேகமே...

  • @karthickraja7984
    @karthickraja7984 4 ปีที่แล้ว +13

    பாமரன் முதல் கோடிஸ்வரன் வரை உம் கண்ணில் ஒன்றே

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว +10

    சாதாரண மனிதர்கள் தான் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். 😍
    பேரன்புகள் பவா. 😍 😘

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 4 ปีที่แล้ว +5

    இதுபோல கதைகள் மனிதனை பண்படவைக்கும் பண்பட்ட மனம் மனிதம் காக்கும்💐🙏

  • @surulimanipalanivel
    @surulimanipalanivel 4 ปีที่แล้ว +2

    என் தந்தைக்கு நிகரான அய்யா பவா செல்லத்துரை அவர்களின் கதையாடலில் என் மனதில் நிற்கும் அன்பு லட்சுமி அம்மாள்..

  • @yogasekar540
    @yogasekar540 4 ปีที่แล้ว +3

    என்னை அழ வைப்பது என்றே முடிவு செய்துவிட்டிருக்கின்ற பவா அண்ணாவிற்கு என் வணக்கங்கள். இந்த காலையில் ஏன் என்றே தெரியாமல் அழுகை....

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 ปีที่แล้ว +10

    சிலிர்த்துவிட்டது பவா.என்ன ஒரு கம்பீர நடை லட்சுமி அம்மாளுக்கு!!

  • @panneerselvamnamasivayam2315
    @panneerselvamnamasivayam2315 4 ปีที่แล้ว +21

    The recital of Vallalaar”s Arutpaa and the way it was sung was mesmeric.Thanks for the song.

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว +1

      வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் சார்

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 4 ปีที่แล้ว +1

    உடல் சிலிர்த்துப்போனது🥰. எனக்கு தெரியும், உங்கள் கதை கேட்ட பிறகு மனம் மிகவும் கடினப்பட்டு உறக்கம் இராமல் தவிக்கும். இருந்தும் இரவுகள் உம் கதைகேளாமல் விடு(டி)வதில்லை போலும்,ஆம் நேரம் அதிகாலை 2 மணி அபுதாபியில்.பவா என்ற எளிய மனிதன் சந்தித்த அசாத்திய மனிதர்களை பற்றி,அறிந்துகொள்வதில் அத்தனை பேரானந்தம்❤️

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 ปีที่แล้ว +1

    இன்ப நிலை நம்மை மெய் மறக்கச் செய்து விடுகிறது.ஆனால் துன்ப நிலைதான் நம்மை யார் என்ற நிலையில் இருக்கச் செய்து வாழ்வின் நிலையை சிந்திக்க வைக்கிறது.லட்சுமி அம்மாவுக்கு எனது கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்கி மௌனத்தை பரிசளிக்கிறேன்.நன்றி.

  • @varalakshmivikraman5409
    @varalakshmivikraman5409 2 ปีที่แล้ว

    பெண்கள் சுமத்த படும் தண்டனை பற்றி பேசியது நன்றி

  • @lokeshwarinatarajan4028
    @lokeshwarinatarajan4028 4 ปีที่แล้ว +6

    மனதை எதோ செய்கிறது ...இந்த பதிவை பார்க்கும் போது ...

  • @m2senthilkumar
    @m2senthilkumar 4 ปีที่แล้ว +1

    யாருங்க இந்த பாடகர்
    என்னே பாடல்
    என்னே ராகம்
    இந்த கலைஞனின் பாதத்தில் என் அன்பை சமர்ப்பிக்கிறேன்

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா இந்த பாடல் அமைந்த இராகம்: வகுளாபரணம் தாளம்: ஆதி இயற்றியவர் இராமலிங்கசுவாமிகள்

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 ปีที่แล้ว

    பாவா உங்கள் கதைகள் மூலம் நியாயம் தர்மம் அறம் வளரட்டும் துர்க்க தேவதை ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @prakashrao4002
    @prakashrao4002 3 ปีที่แล้ว

    பாவா ஐய்யா அவர்களுக்கு அன்பு வணக்கம் நீங்கள் சொல்லும் அனைத்து கதை களும்
    நன்றாக இருக்கிறது . இந்த கதை கேட்டபின் கணீர் வந்துவிட்டது.
    எந்த ஒரு கதையும் மிகவும் சுவாரசியமாக சொள்கிரீகள். உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும். நிர்ய எழுத்தாளர்களை. பற்றி சொள்கிரீர்கள். அனைவரையும் அறிமுகம் செய்கிறீர்கள் . சேவை தொடர வாழ்த்துகள் . நன்றி

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 4 ปีที่แล้ว +7

    நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ பாடலை அருமையாக பாடுகிறார். குரலும் நன்கு ஒத்துழைக்கிறது

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள்

  • @ramkumarramadoss3349
    @ramkumarramadoss3349 4 ปีที่แล้ว

    துக்கத்தின் தேவதை, அறம் கதைதனை கோட்டை கிணறை படித்துறை இன்னும் எத்தனை எத்தனை படைப்பாளிகளையும் உங்களின் கதைகளின் வாயிலாக கேட்டுணர்ந்த மனிதர்களை மனிதர்களின் வாழ்க்கை நினைவுக்குள் சலங்கையில்லா சத்தமாடி வந்துபோகச்செய்துவிட்டது.
    சொன்ன, சொல்லும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் வாழ்வியலை வாழ்க்கையை கடக்க இயல்புகடந்து இயங்க இயற்க்கை எதோ ஒரு அற்புதத்தை அவர்களுக்குள் நிகழ்த்தி இயக்குகிறது.
    அந்த அற்புதம் கண்டுணர்ந்த ஆன்மாக்களால் மட்டுமே எந்த சூழலிலும் அறம் மீரா இயங்க இயலுகிறது. என்னுடைய புரிதலில் இயற்க்கையின் இயல்பின் ஆதியந்தத்தின் எச்சத்தின் படிமமாகத்தான் இவர்களெல்லாம் பரிணமிக்கிறார்கள் உடல்களை களைத்து எல்லா காலகட்டத்திலும்.
    வாழ்வில் அறம் கடக்கா அவர்கள் நடந்திருப்பதுதான் நீங்களும் உங்களின் வாயிலாக நானும் இன்றொரு தேவதையை கண்டுணர நேர்ந்திருக்கு, மறைந்தாலென்ன உணரும்வண்ணம் வாழ்ந்திருக்கயில்.
    சொன்ன இடங்களெல்லாம் நன்கு எனக்கு பரிச்சயமானவைதானெனினும் அடுத்தமுறை மீண்டுமொருமுறை வழித்தடத்தில் கடக்க நேர்கையில் இனி லெட்சுமி அம்மாவின் தடத்தையும் சாதுக்களோடு கொப்புசலங்கை கொஞ்சமும் குறைவில்லா கொட்டித் தீர்க்குமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.
    ப்ரியங்கள் ! பவா

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 4 ปีที่แล้ว

    Shruti tv க்கு என் வாழ்த்துக்கள்..... பவா சார் எவ்வளவு அருமையா அந்த பெருமைப்படுத்திருக்கிறீர்.... மிக சிறப்பான படைப்பு இது.

  • @ajayanbala
    @ajayanbala 4 ปีที่แล้ว +2

    லட்சுமி அம்மாவை நேரில் சந்தித்து ஒரு சிலமுறை பேசியிருக்கிறேன் . உண்மையில் தேவதைதான் பவா வின் கண்டுபிடிப்பில் நான் என்றென்றும் வியக்கும் தேவதை மகத்தான கலைஞி அவரது பேச்சு அருவி தோற்கும் . அவரது இழப்பு பேரிழப்பு

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +5

    Bava sir very inspiring Laxmi ammal entire life. Thank you so much sir.

  • @vtamil9918
    @vtamil9918 4 ปีที่แล้ว

    பவா ஐயா கதை சொல்லி என் கண்களில் ரத்த கண்ணீர் வடிக்கிறார்

  • @kadampavam-7896
    @kadampavam-7896 4 ปีที่แล้ว +1

    பாடல் மற்றும் குரல் அருமை தோழரே

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +1

    பவா ..உலகில் எவ்வளவோ இலட்சுமிஅம்மாள் போன்றோா் இருக்கத்தான் செய்கிறாா்கள்...கலங்கிவிட்டேன் பவா

  • @dhanalakshmidhanalakshmi2820
    @dhanalakshmidhanalakshmi2820 4 ปีที่แล้ว +1

    பாவா நீங்கள் மனிதர்களை படிக்கிறீர்கள்....
    அருமை,..

  • @MadhanMadhan-cx7ce
    @MadhanMadhan-cx7ce 4 ปีที่แล้ว +1

    வள்ளலாரின் வரிகள் பாடலாக கேட்ட போது மிகவும் ஆறுதலாக உள்ளது

  • @rajir8796
    @rajir8796 3 ปีที่แล้ว

    பவாஐயா நீங்கள் சொல்லுகின்ற கதையைக் கேட்டுக் கட்டுரைகளைப் கேட்கும் பொழுது எல்லாம் கண்ணீர் வுடன் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் அதிலும் இந்த லட்சுமி அம்மா வின் வாழ்க்கைகை கேட்டுக் என்ன எழுதுவது என்று தேரியவில்லை இப்படி பட்ட மனிதர்கள் வுடன் நீங்கள் இருந்த இருக்கிறீர்கள் இருந்தது பெரிதல்ல அவர்களின் உணர்வுகளை மதித்து நீங்கள் புரிந்து இருக்கிறார்உங்களை போல் ஓரு தோழன் கிடைத்தது லட்சுமி அம்மாவின் அதிர்ஷ்டம் தான்..R.ராஜி நன்றி 🙏

  • @user-um2iw1no5w
    @user-um2iw1no5w 4 ปีที่แล้ว +8

    "தேவதைகள்" ஆவணப்படம் எங்கு பார்க்க முடியும்...

    • @dharshinibhuvana2438
      @dharshinibhuvana2438 4 ปีที่แล้ว +2

      சாமானிய மனிதர்களையும் சபையில் எடுத்து சொல்ல ஓர் மனம் வேண்டும் லஷ்மி அம்மாள் மட்டுமல்ல தங்கள் கதைகளை நான் தற்போது தான் கேட்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு இடத்திலும் சாமானிய மனிதர்களையும் எடுத்துரைக்க தவறவில்லை களைகூத்தாடி ஆகட்டும் யாரிடமும் பேதம் இல்லை தங்களின் கதைகளை கேட்கும் போது ஒரு நல்ல புத்தகம் வாசிப்பது போல் நிறைவு உண்டு

    • @manoharinavaneethakrishnan6933
      @manoharinavaneethakrishnan6933 2 ปีที่แล้ว

      பவா தம்பி நீங்கள் மனிதர்களின் உள்ளத்தை பார்ப்பதால்தான் எல்லாவகை மனிதர்களின் மனங்களை படிக்கிறீர்கள். இவ்வுலகில் வசதியைபார்த்துதான் பழகுகிறான். நீங்கள் ஒரு சூரியன்.

  • @thulasipri6168
    @thulasipri6168 4 ปีที่แล้ว +2

    உம் பாட்டிற்கு என் கண்கள் கண்ணீரால் நன்றி செலுத்துகிறேன் ஐயா 🙏

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள்

  • @jayachanderganesan4340
    @jayachanderganesan4340 4 ปีที่แล้ว

    நையான்டி தர்பார் யூகி சேது நிகழ்ச்சி யில் இவர்களின் நிகழ்ச்சி யை பார்த்து இருக்கிறேன்
    நல்ல பதிவு மகிழ்ச்சி

  • @lingeswari1873
    @lingeswari1873 4 ปีที่แล้ว

    லட்சுமி அம்மாவின் வசீகரமான முகத்தையும் கம்பீரமான அந்த குரலையும் நடையையும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.தன் காலத்திற்குப்பிறகு இன்று இவ்வளவு பேரை சென்றடைந்திருக்கிறார்.காலம் விசித்திரமானது.கவனிக்க மறந்த இவர் போன்றோரை கவனிக்க வைத்த பவா சாருக்கு நன்றி.

  • @newwing8015
    @newwing8015 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 ปีที่แล้ว

    என்னை மீறி அழுகிறேன்..பவா..விரைவில் உங்களை காண காலம் எனக்கு வாய்ப்பு அளிக்கும் என நம்புகிறேன்.🙏

  • @radhabharathidhandapani6906
    @radhabharathidhandapani6906 4 ปีที่แล้ว +1

    The story on lakshmi amma was touching and loved the beautiful thiruarutpa rendition by Ravi anna at the end🙏

  • @vinothraja6076
    @vinothraja6076 4 ปีที่แล้ว

    நம் அருகில் எவ்வளவு புனிதங்களும் புனிதா்களும் இருந்தாா்கள்,இருக்கிறாா்கள் என்பதை உணர வைக்கிறீா்கள் பாவா ஐயா காலடி பணிகிறேன் ஐயா

  • @rockers36
    @rockers36 3 ปีที่แล้ว

    துக்கத்தின் தேவதை wow what a title my hair stands up when i says these words. As bava tells we have so many suprises in our life never get to meet people who are in different walks of life. when you become confident in embracing the death then you become a full human being and i see this lakshmi amma story she completed her full life. Kudos to the singer in this video a shake of concience

  • @mapillaiselvathaniyamfoods294
    @mapillaiselvathaniyamfoods294 4 ปีที่แล้ว

    அருமை அப்பா வணங்கிறேன் லட்சுமியம்மா💐💐

  • @muthurangan1443
    @muthurangan1443 4 ปีที่แล้ว +1

    Great women! Well said Bava challadurai sir..

  • @1965siva
    @1965siva 4 ปีที่แล้ว +1

    Most thrilling speech bava, am another follower from Chennai.

  • @narayananj3975
    @narayananj3975 4 ปีที่แล้ว

    பாடுவது மிகவும் நன்றாக உள்ளது. குரல் அருமை.

  • @subramanianv2395
    @subramanianv2395 4 ปีที่แล้ว

    ஒரு திறமையான கதைசொல்லியாக திகழ்கிறீர்கள்

  • @muhammadfarid827
    @muhammadfarid827 4 ปีที่แล้ว +1

    எப்போதும் மனிதனின் ஒரு பக்கம் அல்லது ஒரு சிறு கட்டுரையில் ஒரு பத்தியில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தையை வைத்து அர்த்தம் தெரியாமலே வாழ்க்கை நடத்தும் எனக்கு முக்கிய குறிப்பை மேற்கோள்கள் காட்டி , கொட்டி எனக்கு சொன்ன கதை. நன்றி ஐயா

  • @prasathneelakrishnan6880
    @prasathneelakrishnan6880 4 ปีที่แล้ว +1

    She is awesome and adorable beautiful. I have seen Recent movie- sethum aaiyram pon!! It’s remembered her!!

  • @revathi2457
    @revathi2457 3 ปีที่แล้ว

    Pawa sir No words........ I Love you sir..... God....... No words......sir

  • @kumarsarathy485
    @kumarsarathy485 4 ปีที่แล้ว

    கலங்கிய கண்கலுடன், அருமை பவா சார்.

  • @chandiragu4455
    @chandiragu4455 4 ปีที่แล้ว

    Really Great Women with full of sorrow with great heart of life journey.
    Mr. Pava. Chelladurai narration and memories Superb.
    Dr. R. Chandirasekhar
    Sydney

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 4 ปีที่แล้ว

    Bava ungaloda pathivum intha padalum lakshmi ammavum ennai meetueduthuvitargal

  • @sukumarv4723
    @sukumarv4723 4 ปีที่แล้ว

    பவா வாழ்க வாழ்க.. சிலிர்த்துவிட்டது...

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 ปีที่แล้ว +5

    வணக்கம் பவா
    *துக்கத்தின் தேவதை* யின் கதையைச் சொல்லி எங்கள் *தூக்கத்தை* எடுத்துக் கொண்டீர்களே பவா. நன்றி.
    லீனா மணிமேகலைக்கு
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @francismoto
    @francismoto 4 ปีที่แล้ว

    அருமையான நிறைவு பாடல். நெஞ்சு குழியில் துக்கம் கரைந்தது போல. பாவ மன்னிப்பு கேட்பது போல. பலர் துக்கத்தில் பங்கு போட்டு கொண்ட அவள் வாழ்வில் எத்துனை துக்கம். துக்கத்தின் தேவதை என்றும் நினைவில். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว

    துக்கத்தின் தேவதை… பாட்டுக்கார லட்சுமி | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை

  • @vickyezham3357
    @vickyezham3357 4 ปีที่แล้ว +2

    என்ன ஒரு குரல் வளம்...👍👍

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 ปีที่แล้ว

    பவா எனும் ராட்சசன்
    நம்மை எதிலும் நாட்டம் கொள்ள வைத்தது இல்லை எளிய மனிதர்களின் வாழ்வியலை நமக்கு சொல்லும் போது தலைப்பை பார்த்தவுடன் அழக்கூடாது என்று முடிவுசெய்து பவா வின் குரலை மட்டுமே கேட்டேன் ஆனால் லட்சுமி அம்மாள் குரல் காணொளி யில் கண்டவுடன் என்னையறியாமல் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியவில்லை... தேவதைகள் DVD வாங்கி பார்த்து அழுது தீர்க்க வேண்டும்... பவா வுடன்...

  • @bharatetios3450
    @bharatetios3450 4 ปีที่แล้ว +1

    அய்யா நன்றி. 👏👍அருமை.

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว

    What a self confidence ...Wonderful lady Lakshmima...May her soul rest in peace ... As always ur gifted appa so much people in ur life giving u unconditional love... Will share this with my kids...
    Vachitrikurathu nu solluvanga... Nice narration appa with out even a bit of vulgarity.... Ur so so perfect in conducting... What u want us to get is perfectly given by u... Hats off to the wonderful lady Lakshmi MA..

  • @lakshmis9179
    @lakshmis9179 4 ปีที่แล้ว +1

    Very nicely narrated...good attitude...I didn't know such Rudali's were in Thiruvannamalai..

  • @rudhiramoorthyvaradan3190
    @rudhiramoorthyvaradan3190 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரிதான். நான் அவர்களை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். அவர்கள் இறந்த செய்தி உண்மையில் எனக்கு மிகுந்த வருத்தம்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    மனதை வருடிய பதிவு

  • @ramarramesh4888
    @ramarramesh4888 4 ปีที่แล้ว +2

    Heart Breaking song, Lakshmi Amma 's Life hard journey touches my soul.

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 ปีที่แล้ว +1

    இன்றும் பல லட்சுமி அம்மாக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
    ஆனால் இந்த லட்சுமி அம்மா ஏனோ பாரதி கண்ட புதுமைப்பெண் என நான் உணர்கிறேன்
    கடைசியாக பாடியவரின் பாடல் மனதே கனமாக வைத்துவிட்டது
    இதைப் போன்ற பல மனிதர்களை உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்க விரும்புகிறோம்

  • @arapathiarapathi
    @arapathiarapathi ปีที่แล้ว

    Ayya ungala vananguran ayya ungala pakanum

  • @Mictest123
    @Mictest123 3 ปีที่แล้ว

    En manadhil perum baarathodu kadandhu sendren indha kadaiyai

  • @vijayvichu1835
    @vijayvichu1835 4 ปีที่แล้ว

    மீண்டும் உங்கள் பேச்சை கேட்டே உறங்க செல்கிறேன் ...

  • @vasudevan-gt2xg
    @vasudevan-gt2xg 4 ปีที่แล้ว

    ஐயா நான் லட்சுமி அம்மாவுக்கு என் கண்ணீர் பூக்களை உதிர்கிறேன்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว

    மிகவும் நெகிழ்ந்து விட்டேன் சார்

  • @manokaran5823
    @manokaran5823 3 ปีที่แล้ว

    நெஞ்சு கனக்கிறது🙏🏾

  • @vsssekar1
    @vsssekar1 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பவா சார் ரசிக்கிறார். அதை உணர்ந்து சொல்கிறார். இதை எல்லாரும் செய்ய முடியுமா? சந்தேகமே...

  • @gprakasamm
    @gprakasamm 4 ปีที่แล้ว +2

    Great sir

  • @s.veerasamy3250
    @s.veerasamy3250 ปีที่แล้ว +1

    பவா அண்ணா அழுதிட்டேண்ணா
    😢

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 ปีที่แล้ว

    Heart touching. என்ன எழுதுவது என்று தெரியவில்லை

  • @anuradhalatha8215
    @anuradhalatha8215 3 ปีที่แล้ว

    லட்சுமி கிரேட்..நீங்க சொல்லிய‌விதம் சூப்பர்

  • @ramachandranramu4191
    @ramachandranramu4191 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @thilakakumar6670
    @thilakakumar6670 4 ปีที่แล้ว

    Bava i'm thankful to you. good story real 1.

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว

    Bava .. you are a unique soul ... God bless you brother !!

  • @saravanansaran783
    @saravanansaran783 4 ปีที่แล้ว +1

    "எளிமை "தான் ஒருவருடைய "சுயமாக" இருக்குமே என்று தோன்றுகிறது
    சுயம் என்றால் என்னவென்று அரிய நினைக்கிறேன்
    அதையும் அடைந்து விட வேண்டும்

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மாளின் சலங்கை ஒலி இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்

  • @logusundarp813
    @logusundarp813 4 ปีที่แล้ว

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘..........

  • @rajus360degree.3
    @rajus360degree.3 4 ปีที่แล้ว +1

    Sir, first time I'm hearing to you....Lakshmi ammal recalled many of the iron ladies by fortune I met in my life...I cried...I remembered my mother, sister and many more...pls. let me know if anyone like Lakshmi ammal needs any help...we can do within our boundary.

  • @sivabalk7556
    @sivabalk7556 ปีที่แล้ว

    நெஞ்சை தொட்ட பதிவு ஐயா.

  • @mahalakshmi-ed1cv
    @mahalakshmi-ed1cv 4 ปีที่แล้ว +1

    வெற்றியாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்கள் தான். ஆனால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் (personal life sufferings) அனைவரும் வெற்றியாளர்கள் அல்ல.....

  • @kesavarajanpaluchamy6974
    @kesavarajanpaluchamy6974 4 ปีที่แล้ว

    வாழ்க்கை....vip, VVIP..... சந்தோஷம் வாழ்க்கை வளவதினல். பெயர் பலகை இல்லை. அருமை பவா செல்லத்துரை ஐய்யா....

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว +1

    Final song excellent

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் மேடம்

    • @balakumaranlingamn6014
      @balakumaranlingamn6014 4 ปีที่แล้ว

      Arunai ma ravi blissful voice nanba

    • @arunaimaravi4881
      @arunaimaravi4881 4 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் சார்

  • @ramaraju1833
    @ramaraju1833 4 ปีที่แล้ว

    தம்பி பவா .,,,நான் ஒரு வர்த்தக வழி வந்தவன் இந்தநாட்டின் அன்பு கொண்டு கலைவாழ்வில் ஏகப்பட்ட உணர்வு களை பெரிய எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் ஆற்றல் மிக்க வர்களாக வாழ்ந்த இனிய எளிய மானுட தோன்றல்கள் வேறு என்ன கற

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 ปีที่แล้ว

    Arumai appa, thanks

  • @saimega1657
    @saimega1657 ปีที่แล้ว

    கண்கள் கலங்கிவிட்டது.....

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 4 ปีที่แล้ว

    பவா எல்லாரையும் அனபோடு அறவனைக்கும் ஆண் வடிவில் ஒரு அம்மா ( ஆண் தேவதை ) நீங்க . .
    அனபோடு உங்கள் மகன் ஆனந்தன் நான்.

  • @dineshbaskaran8500
    @dineshbaskaran8500 4 ปีที่แล้ว

    அருமை பவா னா

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว

    அற்புதம்

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Nice bava sir

  • @vikramannattarpandian1161
    @vikramannattarpandian1161 4 ปีที่แล้ว

    பவா சார். கலங்கடித்து விட்டீர்கள்.🙏

  • @sreekumarantraders8793
    @sreekumarantraders8793 4 ปีที่แล้ว

    அருமை..

  • @riderobservations2911
    @riderobservations2911 4 ปีที่แล้ว +7

    Sir yugi Sethu and 3devithikal link iruntha share pannunga sir.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கக்காட்சி

  • @ARM-xk6dp
    @ARM-xk6dp 4 ปีที่แล้ว

    அருமை

  • @rajaganapathi9737
    @rajaganapathi9737 3 ปีที่แล้ว

    என்னப்பா கடைசில அழ விட்டீர்களே...

  • @sathiyanand1
    @sathiyanand1 4 ปีที่แล้ว +2

    நல்லோர் மனதை நடுங்க செய்தேனோ .... வாழ்வின் கடந்து போன தருணங்களில் எஞ்சி நிற்கும் கரையாத கசடுகளை மீண்டும் மீள்பார்வை க்கு உட்படுதியது. Lachimiamma life meaningfully end.