திருக்குறள்- அதிகாரம் 87 பகைமாட்சி- குறள் 861-870 || Thirukkural - Adhikaram 87 Pakaimaatchi
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #tamilliterature #tamilliteraturetamil #thirukkural #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #பொருட்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamilwithmeaning #tamilthirukural #tamil #tamilthirukural #tamilthirukural #tamilnadu #tamilstatus #tamilearnings #tamilexam #thirukkuralintamil #srilankantamilvlog #indianeducation #indianeducationsystem @TamilArivu15
திருக்குறள்- அதிகாரம் 87 பகைமாட்சி- குறள் 861-870 || Thirukkural - Adhikaram 87 Pakaimaatchi (The Might of Hatred)
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பகைமாட்சி.
குறள் வரிசை: 861 862 863 864 865 866 867 868 869 870
அதிகார விளக்கம்:
English Summary:
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
குறள் 867:
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
********************************************************************************************************************************************************
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார்.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.