பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி | Pressure Cooker Mutton Biryani | சிக்கன் ப்ரை | Chicken Fry |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி | Pressure Cooker Mutton Biryani In Tamil | ஸ்பெஷல் சிக்கன் ப்ரை | Special Chicken Fry In Tamil | Lunch Combo Recipes | Lunch Recipes | ‪@HomeCookingTamil‬
    #pressurecookermuttonbiryani #muttonbiryani #specialchickenfry #chickenfry #lunchcombo #lunchrecipes #nonveglunchcombo #nonvegrecipes #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mutton Biryani: • Mutton Biryani | Press...
    Special Chicken Fry: • Special Chicken Fry | ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு
    மசாலா விழுதுக்காக
    சிறிய வெங்காயம் - 6
    பூண்டு - 10 பற்கள்
    பச்சை மிளகாய் - 2
    சிவப்பு மிளகாய் - 6
    தேங்காய் - 2 தேக்கரண்டி (துருவியது )
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    புதினா இலைகள்
    கொத்தமல்லி இலைகள்
    இஞ்சி
    தண்ணீர்
    சமையலுக்காக
    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது )
    தக்காளி - 3 (நறுக்கியது )
    பாஸ்மதி அரிசி - 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
    நீர்த்த தேங்காய் பால் - 3 கப்
    கொத்தமல்லி இலைகள்
    புதினா இலைகள்
    பட்டை
    ஏலக்காய்
    கிராம்பு
    பிரியாணி இலை
    உப்பு
    செய்முறை:
    1. மட்டன் பிரியாணி சமைக்க பெரிய மட்டன் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
    2. அடுத்து மசாலா அரைக்க சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா இலை, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்க வேண்டும்.
    3. குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
    4. வெங்காயம் சிவந்த பிறகு நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.
    5. ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கலக்கவும்.
    6. இந்த கலவையில் உப்பு, நீர்த்த தேங்காய் பால், கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
    7. வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்த பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
    8. அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.
    9. சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்.
    ஸ்பெஷல் சிக்கன் ப்ரை
    தேவையான பொருட்கள்
    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 7
    ஏலக்காய் - 4
    பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    கறிவேப்பில்லை
    தக்காளி - 3 நறுக்கியது
    கல்லுப்பு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 2 தேக்கரண்டி
    சிக்கன் - 1 கிலோ
    தேங்காய் பால் - 1 கப்
    கொத்தமல்லி இலை
    செய்முறை:
    1. அகல கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
    2. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு கிளறவும்.
    3. அடுத்த இதில் கறிவேப்பில்லை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. இதில் கல்லுப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
    5. தக்காளி நன்கு மசிந்ததும், இதில் தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
    6. அடுத்து சிக்கன் துண்டுகளை போட்டு, 5 நிமிடம் கிளறவும்.
    7. சிக்கன்'னுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி, 20 நிமிடம் கொதிக்கவிடவும். .
    8. அடுத்து இதில் தேங்காய் பால் ஊற்றி, ஈரம் வற்றும் வரை கிளறவும்.
    9.ஸ்பெஷல் சிக்கன் ப்ரை தயார்.
    Hello Viewers,
    Today we are going to see making of Mutton Biryani recipe in Tamil. This Mutton biryani making in pressure cooker recipe is so delicious and best taste guaranteed with the tips and measures mentioned in this video. This mutton biryani recipe is so yummy and special dish for all Non-Veg Lovers. This Mutton biryani is spicy, hot and extra flavorful with added masala. Hope you try this tasty home made mutton biryani in pressure cooker recipe at your home and enjoy.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 93