ஆதியும் நீயே அந்தமுத் நீயே
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
- drive.google.c...
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா
நீதியின் குரலே நித்திய அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றிடும் ஐயப்பா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா
காலையின் கதிரே மாலையின் மதியே
கற்பூர ஜோதியே ஐயப்பா
ஆலய அரசே அன்பெனும் பரிசே
அபிஷேகப் பிரியனே ஐயப்பா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா
குழந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத மூா்த்தியே ஐயப்பா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா
பந்தள ராஜா பம்பையின் வாசா
சரணம் சரணம் மணிகண்டா
அம்பிகை பாலா அன்பா்கள் நேசா
சரணம் சரணம் ஐயப்பா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஹரி ஹரி சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சுவாமியே ஐயப்பா