திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில் / valaputhur siva temple
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில்
மூலவர் - மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
உற்சவர் - சோமாஸ்கந்தர்
அம்மன் - வண்டமர்பூங்குழலி, பிரமகுந்தளாம்பிகை,
தல விருட்சம் - வாகை
தீர்த்தம் - பிரம்மதீர்த்தம்
புராணப் பெயர் - திருவாழ்கொளிபுத்தூர்
ஊர் - திருவாளப்புத்தூர்
மாவட்டம்: மயிலாடுதுறை
திருமால் மாணிக்க லிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்ட தலம். மாணிக்க கல் வைத்து பூசிக்கப்பட்டவர் என்பதால் இவருக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர் வந்தது
இத்தலத்தில் சிவபூஜை செய்ய வாகை மரத்தடியில் வாசுகி நாகம் ஒரு புற்றில் குடி கொண்டாள். அந்த நாகம் இத்தலத்தில் ஒரு புற்றில் வாழ்ந்திருந்த காரணத்தால் இத்தலம் புற்றூர் என்று அழைக்கப்பட்டது
கருவரை வெளிப்புறக்கோட்டத்தில் உள்ள ஆலமர்செல்வர் ( தென்முகக்கடவுள்) சிம்மவாகன மண்டபத்தில் காட்சி தருகிறார்.
இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது.
இவரது சன்னதிக்கு நேர் எதிரே அரிய சைவத் தத்துவ நூலான சிவஞானபோதத்தை அருளிய மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அஷ்டபுஜதுர்க்கையை (8+8 = 16 கரங்கள் கொண்ட) விசேடமாக வழிபடுகின்றனர். இங்கேயுள்ள துர்க்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரன் வதம் முடிந்ததும் இத்தலத்தில் தான் சாந்தமாக உருக்கொண்டாள் என்று தலபுராணாம் சொல்கிறது.வாகை மரம் இத்தலத்தின் தலமரமாக விளங்குகிறது. துர்க்கை மகிஷாசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தலமரமான "வாகை" போற்றி வணங்கப்படுகிறது. .இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரகாரத்தில் அட்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேட பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு தாண்டி மேலும் சென்றால் திருவாளப்புத்தூர் ஊர் வரும். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று கோடியிலுள்ள கோயிலை அடையலாம். காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 - 11.30 ;மாலை 05.30 - 08.30
தொடர்புக்கு : 9842538954
#sivan
#alayam24
#alayam
#padalpetratemple
#alayadarisanam
#alayangalarputhangal
#alaya
#sivan
#sivatemple
#devara
#sivan
#thevaram
#padalpetratemple
#devaram
#devara
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐
🙏🕉சகல உயிர்களுக்கும் தாயும், தந்தையுமான ஈசன் திருமேனியை காணும் போதெல்லாம் இனம்புரியாத எல்லையற்ற ஆனந்தம் ஏற்படுகிறது🙏🕉நமசிவாய🕉 வாழ்க நீவிர், வாழ்க உங்கள் சிவத்தொண்டு🙏
@@Little_flower_94
திருச்சிற்றம்பலம்🙏🙏 எல்லாம் சிவன் அருள்🙏 அவனின்றி ஓர் அணுவும் அசையாது அடியார்களின் ஆசி சிவபெருமானின் ஆசி போல 🙌
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
Om namaha shivaya
@@chandranb4433 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ஐயா வணக்கம் எனக்கு ருத்ராட்ச மாலை வேணும் கிடைக்குமா சொல்லுங்க வில்வ ஓடு வச்சு வேணும் நான் ஒரு பெண் அதை நான் போடலாமா
@@Kumaranfamil542
திருச்சிற்றம்பலம்🙏
சிவபெருமான் ஆணானவன் பெண்ணானவள் அலியானவன் அப்படி என்றால் எல்லா உயிர்க்கும் பொதுவானவன் என்று பொருள் உருத்ராட்சம் (அக்கமணி) அணிய ஆண் பெண் பேதமில்லை
அனைவரும் அக்கமணி மாலையை அணியலாம். காதி வஸ்திராலயம், கிரி டிரேடர்ஸ், நாட்டு மருந்து பூசை சாமான்கடைகள் போன்றவற்றில் அக்கமணி மாலைகள் கிடைக்கும். வில்வ ஓடு வைத்தே கிடைக்கும்.
இறைத்திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும் 💐💐
மேலும் விவரங்களுக்கு --> th-cam.com/video/mi2NYOBwM_8/w-d-xo.htmlsi=aTu4fR7jh1fEdC2S