வறண்ட நிலத்தில் உணவு காடு உருவாக்கிய கரூர் பெண்மணி | Food forest in karur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • திருமதி சரோஜா அவர்கள் கரூர் மாவட்டத்தின் விவசாயிகளை ஒருங்கிணைத்து சத்தான முருங்கை இலை பவுடர் மற்றும் முருங்கை எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..மேலும் இரசாயனம் கலக்காமல் சோப்பு சாம்பு தாயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..
    அவருடைய பொருட்கள் வாங்க அவரை தொடர்பு கொள்ளவும் ...
    Phone number
    09493943495,
    08940882992.

ความคิดเห็น • 668

  • @மக்கள்கண்ணோட்டம்
    @மக்கள்கண்ணோட்டம் 4 ปีที่แล้ว +201

    ஒரு வாழைதாரை முழுவதும் பறவைகள் சாப்பிட்டு போனாலும் மகிழ்ச்சியே என்பதை நினைத்து மகிழ்கிறேன்

  • @corporate4639
    @corporate4639 4 ปีที่แล้ว +19

    மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது உங்களின் வார்த்தைகளை கேட்ட பின்பு. வெகு தூரம் சென்று விட்டோம் பணம் மட்டுமே வாழ்க்கை என்று..

  • @selvamvkok
    @selvamvkok 4 ปีที่แล้ว +159

    அனேகமாக பாரதி சொன்ன ஒரே ஒரு புதுமைப்பெண் நீங்களா தான் இருக்க முடியும்

  • @ulagappanpk2068
    @ulagappanpk2068 4 ปีที่แล้ว +130

    அருமை சகோதரி.
    பல் உயிர்களும் வாழவேண்டும் என்று நீங்கள் நினைப்பதால் இயற்க்கை உங்களுக்கு வாரி வழங்குகின்றது.அய்யா நம்மாழ்வாரின் அடியைப்பின்பற்றி விவசாயம் செய்யும் உண்மையான இயற்க்கை விவசாயி நீங்கள்.மானங்கெட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் இயற்க்கையை முழுமையாக நம்பினால் அன்னை நம்மை கைவிடமாட்டாள்.தொடருட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajakr950
    @rajakr950 4 ปีที่แล้ว +82

    சம்பளத்துக்காக வேலைக்குப் போகும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே இயற்கை சார்ந்த இன்புற்று வாழ்வதே வாழ்க்கை அருமை சகோதரி

  • @jamessanthan2447
    @jamessanthan2447 4 ปีที่แล้ว +128

    மானம்கெட்டவன் தான் மானியத்துக்கு போவான் என்ன ஒரு வார்த்தை .நம் தமிழ் மக்களுக்கு தேவையான அருமையான வார்த்தை .வாழ்த்துக்கள் அக்கா

  • @parambariyam359
    @parambariyam359 4 ปีที่แล้ว +50

    தாயே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்களின் இயற்கை, சமூக கண்ணோட்டங்கள் மேசிலிர்க்க வைக்கிறேது.

  • @venkatesana4002
    @venkatesana4002 4 ปีที่แล้ว +121

    வார்த்தைகளில் இயற்கை சார்ந்த நல்ல தெளிவு தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @dhanalakshmik9091
    @dhanalakshmik9091 4 ปีที่แล้ว +77

    யதார்த்தமான வார்த்தைகள்..சக உயிர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி பேச முடியும். நல்வாழ்த்துக்கள்.

  • @manobala9955
    @manobala9955 3 ปีที่แล้ว +6

    நிலம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டும் அல்ல உயிரினங்களும் வாழனும் ❤️❤️❤️ அருமை சகோதரி🙏🙏🙏🙏🙏

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 4 ปีที่แล้ว +37

    நம்மாழ்வார் ஐயா மறைந்தபோது "நீங்கள் புதைக்கப் படவில்லை
    விதைக்கப் பட்டுள்ளீர்கள்"
    என அடியேன் கவிதை அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தேன்.
    அது உண்மையென தாங்கள் நீரூபித்துள்ளீர்கள் சகோதரி!
    தாங்கள் ஒரு வாழும்
    பெண் நம்மாழ்வார்!

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha5041 4 ปีที่แล้ว +71

    இந்த அக்காவை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை. அக்கா உங்கள் வேலான் காடுகள் சீறும் சிறப்புடன் வளர வாழ நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டி வணங்குகிறேன் நன்றி வணக்கம்.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 4 ปีที่แล้ว +85

    எல்லா உயிர்களுக்காகவும் காடு வளர்க்கும் நீங்கள்தான் தெய்வம்...

  • @guruvk6988
    @guruvk6988 4 ปีที่แล้ว +45

    நமக்கு மட்டும் இந்த உலகம் படைக்க வில்லை என்பதை அழகாக சொன்னிர்கள் ,சாத்வீகம் பேச்சிலும் விவசாயத்திலும் இருப்பது அழகு

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 4 ปีที่แล้ว +324

    " நிலம் உணவிற்கான இடம் எல்லா உயிர்களும் இங்கே வாழனும் அதில் நானும் வாழனும் " - வார்த்தையில் மட்டும்மல்ல நிஜத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    " மானங்கெட்டவன்தான் மானியத்திற்க்கு போவான் " விரக்தியான வார்த்தைகள் விவசாயிகளின் யதார்த்த அனுபவங்கள்.
    உழவில்லா வேளாண்மை, குறைவான நுகர்வு, நெகிழி இல்லா வாழ்வு...
    அய்யா நம்மாழ்வாருக்கு தலை வணங்குவோம். அவரின் வியர்வை வீணாகவில்லை.

    • @உழவன்ஸ்ரீ
      @உழவன்ஸ்ரீ 4 ปีที่แล้ว +3

      Dei...venna
      " மானங்கெட்டவன் தான் மாணியதுக்குபோவான் னு " இந்த அம்மா நல்லா rhyming ah சொல்லும்டா...Reality la
      இந்த அம்மாக்கு என்ன நல்லா வட்டி கடைல இருந்து காசு வருது... ஒரு marriage hall வெச்சுருக்கு... இந்த மாதிரி youtube videos lam பாதுட்டு இயற்கை விவசாயம் ன இப்படி தான் பன்னனும் போக கூடாது..இயற்கை விவசாயம இருந்தாலும் profitable la இருகனும் ...இந்த அம்மா சும்மா கத விடுது.

    • @parameshmanicka9896
      @parameshmanicka9896 4 ปีที่แล้ว

      We ate dosa too

    • @selvarajRajSelvam
      @selvarajRajSelvam 4 ปีที่แล้ว +3

      நடைமுறை சாத்தியங்கள் குறைவு - இருப்பினும் சொன்ன விதம், பாங்காக ஆவலை தூன்டிய விதம் அருமை. வாழ்த்துகள்.

    • @sumathisugmar4043
      @sumathisugmar4043 4 ปีที่แล้ว

      Aa

  • @rajfarms3376
    @rajfarms3376 4 ปีที่แล้ว +88

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.....
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே......
    மானங்கெட்டவனுக்கு தான் மானியம்......
    சூப்பர்.....

  • @rstherrani3130
    @rstherrani3130 4 ปีที่แล้ว +59

    அருமை அம்மா உங்கள் அறிவு அரசாங்கத்துக்கு இல்லையே என்று தான் கவலை

  • @johnlinson123
    @johnlinson123 4 ปีที่แล้ว +22

    அம்மா!!! அழகு தமிழுக்கும் அசராத உழைப்புக்கும் ஆயிரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏!

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 4 ปีที่แล้ว +30

    அருமை.பணத்திற்காக இல்லாமல் வாழ்க்கையை உண்மையாகவே அனுபவத்தி வாழ்கிறார்.வாழ்க வளமுடன்.கோடை காலத்தில்தான் தெரியும் இந்த நிலத்தின் அருமை.

  • @princeprince1099
    @princeprince1099 4 ปีที่แล้ว +28

    மானியம் நமக்கானதல்ல, நிலம் நீர் நமக்கானது மட்டுமல்ல, எல்லா உயிர்களும் வாழனும் அதில் நானும் வாழனும், அது கொடுக்கிறத எடுத்துக்கனும். . . எல்லாம் சத்திய வார்த்தைகள், சகோதரியின் பேச்சு தெளிந்த நீரோடை, உண்மையில் மிக பாராட்டுக்குறிய அனுபவ பேச்சு வாழ்த்துக்கள்

    • @sselva6576
      @sselva6576 4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நம்மாழ்வார் நம்மிலும் வாழ்கிறார் உதாரணம் நீங்களே

  • @muralichinnasamy2407
    @muralichinnasamy2407 4 ปีที่แล้ว +22

    தாங்கள் நம்மாழ்வார் அய்யாவின் வாரிசுதான் என்பதை நடைமுறையில் நிரூபபணம் செய்து காட்டியுள்ளீர்கள்.தங்கள் செய்து கொண்டிருக்கும் உயிர்ச்சூழல் உலகெங்கும் பரவ வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா....

    • @shinyprasath5138
      @shinyprasath5138 3 ปีที่แล้ว

      சுண்ணாம்பு காட்டில் ஒரு சோலை வனம்..!
      வறண்ட நிலத்தில் உணவு காடுகளை கடந்த இரண்டு வருடமாக உருவாக்கி உள்ள பல நம்பிக்கை நட்சத்திரங்களின் நம்பிக்கை ஊட்டும் காணொளிகள்..
      எங்கோ ஒரு தரிசு நிலம் பல்லுயிர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு உணவுக்காடாக உருவெடுக்க வேண்டும் என்கிற ஆவலில்...!!
      உணவுக்காடு யூடியூப் சேனல்..!
      மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.
      th-cam.com/video/7zo2O8dpHLA/w-d-xo.html

  • @kathirvelm2171
    @kathirvelm2171 4 ปีที่แล้ว +51

    நாட்டு விதைகளை காப்பாற்றும் உங்களின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Kongumathesh
    @Kongumathesh 4 ปีที่แล้ว +49

    அருமைங்க சகோதரி. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதின் எடுத்துகாட்டு. வாழ்க வளமுடன்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 4 ปีที่แล้ว +11

    நல்ல சிந்தனையுள்ள பெண்மணி .இது போல் மனிதர் கள் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தால் வீடும் நாடும் நல்லாயிருக்கும்.பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว

    உங்களை மாதிரி எல்லா சகோதரிகளும் (சற்று வசதியானவர்கள்) இயற்கை விவசாயத்தில் இறங்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @த.செந்தில்குமார்-ர5ச

    இது படம் அல்ல மனிதர்களுக்கான சிறந்த பாடம்

  • @துபாய்ராஜா
    @துபாய்ராஜா 4 ปีที่แล้ว +17

    இயற்கை மீதான தங்கள் பாசத்திற்கும், நேசத்திற்கும் வாழ்த்துக்கள் அம்மா.

  • @mahesh20092011
    @mahesh20092011 4 ปีที่แล้ว +54

    அருமையான முன்னெடுப்பு அம்மா, இந்த வழி வேளாண்மை தான் வருங்காலத்தில் ஆரோக்கியமான உணவு இடும்..

  • @Srinivasan34349
    @Srinivasan34349 4 ปีที่แล้ว +6

    அருமை சகோதரி நிலம் நமக்கானது மட்டுமல்ல பல்லுயிர்க்கானது மானியம் மானங்கெட்டவனுக்கானது நம்மாழ்வரின் மாணவிக்கு வாழ்த்துகள்

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் தாயே. நீண்ட நாள் ஆசை எனக்கு இதை போல் இருக்க வேண்டும் என்று ⚘⚘⚘⚘⚘⚘

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 4 ปีที่แล้ว +5

    சகோதரியின் முயற்ச்சிக்க்கு பாராட்டுக்கள். நம்மாழ்வார் ஐயா தமிழருக்கும் விவசாயத்திற்கும் கிடைத்த வரப்பிரசாதம். நன்றி சகோதரி.

  • @Madraswala
    @Madraswala 4 ปีที่แล้ว +24

    Lovely!! First time, I come across a highly cultured person on the screen!!

  • @karunasivam3184
    @karunasivam3184 4 ปีที่แล้ว +31

    ஓம் சிவாயநம
    அம்மா வணக்கம் மிகவும் அருமை
    சுயநலம் சிறிதும் இல்லாமல் அடட
    புகழ்வதற்க்கு வார்த்தையே இல்லை வாழ்கவளமுடன்

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 ปีที่แล้ว

    படிப்பறிவின் நறுமணம் இந்த அம்மாவின் கருத்துகளிலும் பேச்சிலும் நன்றாக வீசுகிறது. வாழ்க பல்லாண்டு வழமுடன். படியுங்கள் பெண்களே! இதுவும் ஆசிரியர் பணிதானே! அருமை!

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 4 ปีที่แล้ว +24

    எனக்கும் இப்படி ஒரு ஆசை இருக்கிறது உங்கள் காட்டை நானும் ஒருநாள் பார்வையிட வேண்டும் உங்கள் எண்ணம் மிகவும் உயர்வானது உங்களை நான் மிகவும் மதிக்கிறேன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @binudeborah7997
    @binudeborah7997 3 ปีที่แล้ว

    அக்காவுக்கு அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்.வாழ்க என் அக்கா.
    "காக்கை குருவி எங்கள் சாதி "என்ற பாரதியின் வரிகளை, bio diversity, eco system மூலமாக நீங்கள் மெய்ப்பித்து விட்டீர்கள்.
    "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றில் எல்லாம் தலை "
    பறவைகளுடன் நாமும் உண்ணுவோம். ஒன்றே குலமாய் வாழ்வோம்.
    இதுதான் வாழ்க்கை, இப்படிதான் வாழவேண்டும்.

  • @rameshkrisnamurthi4790
    @rameshkrisnamurthi4790 4 ปีที่แล้ว +68

    நம்மாழ்வார் தமிழர்களின் குலசாமி

    • @RajNgl
      @RajNgl 4 ปีที่แล้ว +2

      👌

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +1

      Yes

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 4 ปีที่แล้ว +1

      He is son off soil. He reformed soil from chemicals in same way that what Periyar did for social reforms.

    • @RajNgl
      @RajNgl 4 ปีที่แล้ว

      @@arulrajsesuraj1986 👌

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 4 ปีที่แล้ว +6

    விவசாயம் சம்மந்தமான இயற்கை சார்ந்த தெளிவான புரிதல் கொண்ட பெண்மணி.நம்மாழ்வரின் மகளாக இருப்பாளோ என்று பெருமை படுகிறேன்.வியக்கிறேன்.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 ปีที่แล้ว +7

    எல்லா உயிர்களுக்கும் உணவால் உயிர் கொடுக்கும் தங்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் செய்கிறேன் சகோதரி மகிழ்ச்சியுடன் . உயிர்களை நேசிக்கும் தங்கள் அன்பில் இறைவனைக் காண்கிறேன்.

  • @kanakadeepa1577
    @kanakadeepa1577 4 ปีที่แล้ว +18

    அர்த்தமுள்ள பதிவு‌ . அருமையான பெண்மணி.🙏

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 2 ปีที่แล้ว

    ஆத்தா...
    இதுவரை நான் பார்த்த கேட்ட விவசாயிகளின் வார்த்தைகளில்
    வணங்கத்தக்க.. மனிதனுக்கு, மனதிற்கு ஊக்கமூட்டும் வார்த்தைகளை, உணர்வுகளை நுகர்ந்தேன்.. மிக்க மகிழ்ச்சி!

  • @shanmugam3775
    @shanmugam3775 4 ปีที่แล้ว +29

    உங்கள் எண்ணம் செயல் தெளிவு அருமை .காடுகள் உருவாவது சந்தோஷம்

  • @ayubkhan4317
    @ayubkhan4317 4 ปีที่แล้ว +12

    மானியம் விவசாயிக்கானது இல்லை Super

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 ปีที่แล้ว +8

    இது தான் இயற்கை உயிரியல் சூழல் வேளாண்மை 👌 வாழ்க 🙂

  • @subathevarajah5680
    @subathevarajah5680 4 ปีที่แล้ว +30

    அக்கா உங்களுக்கு பெரிய மனசு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @alagudurai3840
    @alagudurai3840 4 ปีที่แล้ว +27

    அருமை சகோதரி உங்களின் பேச்சு அறிவுபூர்வக உள்ளது

  • @renganayaki4447
    @renganayaki4447 4 ปีที่แล้ว +8

    உள்ளத்தில் நல்ல உள்ளம் , உயர்வானது தங்கள் உள்ளம் அன்பு சகோதரி.

  • @ramakrishnansrinivasan2247
    @ramakrishnansrinivasan2247 4 ปีที่แล้ว +2

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை. தன் நம்பிக்கை தான் முழுமையான கல்வி. நிச்சயம் நம் சமுதாயத்தில் பாரதிகண்ட ஒரு புதுமை பெண்.இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த வீடியோவை மொழி பெயர்த்து அனைத்து மாநில மக்களும் பார்த்து பயனடைய செய்ய மத்திய அரசு செய்ய வேண்டும். ஒரு பெண்ணை படிக்க வைத்தால் ஒரு பல்கலைக்கழகம் உருவாகும் என்பது கண் கூடான உண்மை.பள்ளிக்கூட மாணவ/மாணவிக்ளுக்கு காணொளி பாடமாக வைக்க வேண்டும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள்.

  • @sathyakasthuri6905
    @sathyakasthuri6905 4 ปีที่แล้ว +1

    பச்சையம் போன்று தங்கள் பாசம்கூட உயிர்ப்பாய்...
    மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்... தங்கள் மனம்போல்
    மழைபொழிந்து
    மண்பரவி
    அடர்ந்தகாடாகி
    தங்கள் கனவு நிஜமாக வாழ்த்துக்கள்

  • @PrabuKuppuswamy
    @PrabuKuppuswamy 3 ปีที่แล้ว

    எல்லா உயிர்கையிலும் வாழவைக்கும் உங்கள் எண்ணம் செயல், கடவுள் உங்களை சத்தியமா உங்களை நல்லா வழவைப்பார்

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 4 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை கேட்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அறம், தர்மத்துடன் கூடிய விவசாயம்

  • @velumahesh2434
    @velumahesh2434 4 ปีที่แล้ว +2

    உண்மையிலே இந்த பூமி பந்தில் வாழும் மனிதமாய் உதாரனமாய் வாழ்கிறீர்கள் வாழ்த்தி வணங்குகிறேன்

  • @sbssivaguru
    @sbssivaguru 4 ปีที่แล้ว +8

    இவ்வுலகம் சிறந்த உலகமாக வாழும் இவர்களை போல் நல்ல உள்ளம் இருப்பவர்களுக்கு புயலும் ஓடிவிடும்.

  • @rahimakousar6927
    @rahimakousar6927 4 ปีที่แล้ว +4

    உங்கள் தெளிவான விளக்கம் எண்ணங்கள் அருமை

  • @vinoomartin
    @vinoomartin 4 ปีที่แล้ว +1

    So unselfish . . . meaningful and admirable utterances . .. . God bless her and her efforts
    மானங்கெட்டவனுக்கு தான் மானியம்......
    நிலம் உணவிற்கான இடம் எல்லா உயிர்களும் இங்கே வாழனும் அதில் நானும் வாழனும் . . . ..
    ஒரு வாழைதாரை முழுவதும் பறவைகள் சாப்பிட்டு போனாலும் மகிழ்ச்சியே .. .

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว

    இன்று தான் பொறுமையாக பார்த்து முடித்தேன். அற்புதம்
    பல்லுயிர் சூழ் உலகு

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 4 ปีที่แล้ว +10

    வாழும் சித்தர் வாழ்க இவர் எண்ணம் வாழ்க வாழ்க..

  • @TKAJ27
    @TKAJ27 3 ปีที่แล้ว

    என்னோட ஆசை நீங்கள் செய்யிறிங்௧ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @contactlogu
    @contactlogu 4 ปีที่แล้ว +13

    மிக அருமையா செயல் வாழ்த்துக்கள் .. Keep the good work :) we will follow you.

  • @rajendranc240
    @rajendranc240 4 ปีที่แล้ว +8

    அருமை அற்புதம் சகோதரிக்கு வாழ்த்து சொல்ல வா நன்றி சொல்ல வா !!!

  • @tamizholi9520
    @tamizholi9520 4 ปีที่แล้ว +5

    தம்பி நுனா பழம் மலேசியாவை சார்ந்தது இங்கு மலேசியாவில் அதிகம் நுனா பழம் சகோதரி வாழ்துக்கள் எனக்கு ம் காடு இயற்கை செடிகள் எல்லாம் ரொம்பவும் பிடிக்கும்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว +4

    👍👍👌👌👌நம்மாழ்வார் விதைத்த மனித மேம்பாட்டிற்கான சிறப்பான பதிவு. இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்கள். பெண்களும் விவசாயத்திற்கு வர வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பதிவு.சிலை வைக்க பல உயிர்களின் ஆதாரத்தை அழித்த சித்தாந்தம் சிறப்பா? பல்லுயிர் ஓம்புதல் சிறப்பா? Corporate சாமியார்களுக்கான சரியான சவுக்கடி.😍😍😍🙏🙏

  • @athiroobasingamathavan3744
    @athiroobasingamathavan3744 2 ปีที่แล้ว

    சிறந்த ஒரு காணொளி. வாழ்த்துக்கள்.

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 4 ปีที่แล้ว +1

    உங்கள் மனதிற்கு இறைவன் தந்த வாழ்த்துக்கள் அக்கா இந்த உணவுக் காடு! பறவைகளுக்கு உணவளிக்கும் உங்கள் மனதிற்கு வார்த்தைகள் தெரியவில்லை எப்படி வாழ்த்துவது என்று! உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அக்கா. இறைவன் உங்களுக்கு தீர்காயுசுடன் வாழ அருள் தரவேண்டி நாங்களும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் அக்கா. வாழ்க என்றென்றும் வளமுடன் நீங்களும் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும்.

  • @rengarajuamsu1517
    @rengarajuamsu1517 4 ปีที่แล้ว +3

    அம்மா நீங்களும் உங்க இயற்கை விவசாயம் சார்ந்தநல்லறிவும் இந்த தேசத்தி ற்கும் மக்களுக்கும் நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளீர்கள். உங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் தாயே.

  • @vasantgoal
    @vasantgoal 4 ปีที่แล้ว +1

    நம்மாழ்வார் விதைத்த விதை, அருமை

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว +47

    உங்களுக்கு பெரிய மனசு.. பூச்சிகள் பற்றி: எல்லாம் இருக்கணும் அங்க நானும் இருக்கணும்னு சொன்னது..
    அருமை.. நானும் முயற்சி செய்கிறேன்.

  • @prasanthr6820
    @prasanthr6820 4 ปีที่แล้ว +6

    முற்றிலும் உண்மை.. அருமையான நேர்காணல்👌👌

  • @Earthplanet246
    @Earthplanet246 4 ปีที่แล้ว +2

    Romba நன்றாக இருக்கு தன்மானமுள்ள விவசாயி பாற்கும் போது

  • @vasansvg139
    @vasansvg139 4 ปีที่แล้ว +8

    உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கு குறைவில்லாத வருமானமும் கிடைக்க வேண்டும் என்ற அவா... நீங்கள் ஒரு சிறந்த முன்னோடி...... வாழ்த்துகள்

  • @lalithaarun7406
    @lalithaarun7406 4 ปีที่แล้ว +6

    மிக அருமை நீங்கள் வாழ்க

  • @mohideenpitchai6717
    @mohideenpitchai6717 4 ปีที่แล้ว

    தன்னையும் பாா்த்துக் கொண்டு என்னையும் பாா்துக்கொள்ளும்! நீரும் நிலமும் எனக்கானது மட்டுமல்ல பல்லுயிா்கானது! என்ன ஒரு வரிகள்.பொன்எழுத்துகளால் பொறிக்கப் படவேண்டியவை சிறக்கட்டும் உங்கள் பணி .

  • @kirubashankar9200
    @kirubashankar9200 4 ปีที่แล้ว +14

    This is easily one of the best videos I have seen on no-dig farming. I'm so touched by the genuineness and passion with which this remarkable lady is pursuing her farming passion. Hats off to her.

    • @mars-cs4uk
      @mars-cs4uk ปีที่แล้ว

      She is a Nammalvar student.

  • @karthickumarm5840
    @karthickumarm5840 4 ปีที่แล้ว +21

    மிக்க நன்றி நண்பா... இதை போன்ற காணொளிகள் பல பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @marundino
    @marundino 4 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோ பார்த்ததில், அந்த அம்மாவின் நோக்கம் கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், ஒரு உதாரணமாக கொண்டு காடு உருவாக்க ஆர்வத்தை உண்டாக்கியுள்ளார்கள். மிக்க நன்றி அந்த அம்மாவின் நோக்கம் நிறைவேற வேண்டுகிறேன்

  • @sms5248
    @sms5248 4 ปีที่แล้ว

    இம்மாதிரியான புதுமையான உழவில்லா விவசாயம் முறையில், இயற்கை சார்ந்த, நிலைத்தன்மையுடன், அனைத்துயிரும் இன்புற்று வாழ்வதற்கான ஒரு உலகை ஏற்படுத்தி திரு.நம்மாழ்வார் அவர்களின் வழியில் இயற்கை ஒத்த வாழ்க்கை வாழும் தங்களின் முயற்சிகளுக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...

  • @narayanasamyarumugaraj2488
    @narayanasamyarumugaraj2488 4 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன்.
    உயிர் சூழல் நடுவம் அருமை.

  • @yuvaraj6140
    @yuvaraj6140 3 ปีที่แล้ว +2

    அருமை அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய எளிமையான பேச்சு தேனிக்களை கூட சிறை படுத்தாத உயர்ந்த உள்ளம் இக் காணொளி எனக்கும் நல்ல படிப்பினை யை கற்று கொடுத்துள்ளீர்கள் நன்றி

  • @aselvam56789
    @aselvam56789 4 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு மிகப்பெரிய நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.

  • @Jegathesan-xd9gm
    @Jegathesan-xd9gm 4 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை... நம்மாழ்வார் ஐயாவின் வழியில் தொடர்வோம் நம் பணியை...

  • @inthayan82
    @inthayan82 4 ปีที่แล้ว +16

    She has abundance of knowledge about agriculture. her entire speech full of philosophy. She must be genius can write book about agriculture and life.

  • @BalaMurugan-406
    @BalaMurugan-406 4 ปีที่แล้ว +1

    மானியம் மானம் கெட்டவன்தான் போவான்.. அருமை...

  • @மக்கள்கண்ணோட்டம்
    @மக்கள்கண்ணோட்டம் 4 ปีที่แล้ว +13

    சகோதரி மனிதர்களில் மனிதர்

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +23

    பல்லுயிர்ச்சூழல் அருமை

    • @panzerkomander3832
      @panzerkomander3832 4 ปีที่แล้ว

      அருமை சகோதரரே
      .உங்கள் போன்றவர் பாராட்டுக்களே அந்த சகோதரிக்கு ஊக்கமளிக்கும்.🙏🙏🙏🌹

  • @vetrikanakalam
    @vetrikanakalam 4 ปีที่แล้ว +12

    உங்கள் உழைப்புக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா

  • @pugalshankar5797
    @pugalshankar5797 4 ปีที่แล้ว +10

    அறிவுப்பூர்வமான பதில்

  • @nizamshaitshait4765
    @nizamshaitshait4765 4 ปีที่แล้ว +1

    இது போன்ற காடுகளை பார்க்கும்போது அண்ணன் சீமானின் ஞாபகம்தான் வருகிறது.வாழ்த்துக்கள் அம்மா...

  • @sellachiananth4803
    @sellachiananth4803 4 ปีที่แล้ว +33

    வணக்கம் சகோதரி
    நீங்கள் ஈழத்தில் பிறக்கவேண்டிய எங்கள் சொத்து தவறி இந்த இந்தியாவில் பிறந்துவிடீர்கள் உங்கள் தமிழ் எங்கள் தமிழ் வாழ்க வளமுடன்

  • @vadivels7366
    @vadivels7366 4 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +1

    நன்றி
    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது
    இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @MmMm-kd5tu
    @MmMm-kd5tu 4 ปีที่แล้ว +1

    தாங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @malaranjan6103
    @malaranjan6103 4 ปีที่แล้ว +6

    மிக்க மிக்க நன்றி அம்மா
    எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு
    உங்களை போல அனைவரும்
    நினைத்தால்
    பூமி சொர்க்கம் ஆகிவிடும்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    மிக்க மகிழ்ச்சி
    🌹🌹🌹🌹🌹

  • @manik.v3966
    @manik.v3966 4 ปีที่แล้ว +15

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது இதுதான். மிகச்சிறந்த காணொளி, அனைவருக்கும் பகிருங்கள்.

  • @tirupathitirupathi3534
    @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +4

    உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் தங்கச்சி!

  • @kaniyurmathialagankaniyurm6220
    @kaniyurmathialagankaniyurm6220 4 ปีที่แล้ว +8

    இயற்கை விவசாயத்தை தன் உயிராக கருதும் ஓர் உயிர்!

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 ปีที่แล้ว +5

    *அருமையான பதிவு அம்மா... உங்கள் விளக்கம் மிகவும் அருமை..! உழவில்லா விவசாயம்.... தண்ணீர் இல்லா விவசாயம் மகிழ்ச்சி..!!!.* 😊😊
    *இத்தனை ஏக்கரை வைத்துக் கொண்டு எத்தனை லட்சங்கள் சம்பாதிக்கலாம் என்று பார்ப்பார்கள்....!!!*
    *ஆனால் நீங்கள் பல்லுயிர் கொண்டு பகுத்துண்டு வாழ்கிறீர்கள்....பெருமையாக உள்ளது...!*
    *ஆனாலும் ஒரு சிறு வேண்டுகோள் அம்மா.. எந்த வேலையும் செய்யாமல் இயற்கையாகவே கிடைக்கவேண்டும் என்றால் சற்று கடினம். கிடைத்த நேரத்தில் அவ்வப்போது கலை எடுத்து பராமரித்து, அதையும் மண்ணுக்கே உரமாக்கி செய்தீர்களேயானால் இன்னும் கூடுதலாக ஈல்டு எடுக்க முடியும்..!*
    *அதேபோல் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற வற்றைக் செய்தீர்களேயானால் அதன் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற முடியும். மழை பெய்யும் நேரங்களில் மகசூலும் அதிகரிக்கும்.. !*
    *நீங்கள் சொல்வது போல கால்நடைகளை நிலத்தில் விட்டால் மண் இருகாது அதற்கு பதிலாக மண்வளத்தை பெருக்கும்...!!*
    அது தவறான கண்ணோட்டம்..!
    *இந்த மகசூல் உங்கள் ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கனிகளை மட்டும் கொடுக்கும். ஆனால் அதனால் வருமானம் எதுவும் ஈட்ட முடியாது..!*
    *உங்கள் வழியிலே நான் சொல்வது போல சற்று மாற்றி யோசித்து செய்து பாருங்கள் அதன் மகசூல் பன்மடங்கு பெருகும்....!*
    *மா, பலா உங்கள் காட்டில் வரவில்லை என்றீர்கள்.. நான் சொல்வது போல் செய்து பாருங்கள்மா...! அதுவும் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும்..!*
    *முதலில் மா, பலா மரங்களுக்கு தண்ணீரே தேவை இல்லை...! கன்று வேர் பிடித்து பெரியதாக வளரும் வரை நீர் தேவைப்படும் பின்னர் தேவைப் படாது...*
    *மரக் கன்றுகளை வாங்கி வந்து ஆழ குழி இட்டு அதில் மணல், மாட்டு சாணம் அல்லது எருகு போட்டு பின்பு மரக் கன்றுகளை வைத்து மண்ணைப் போட்டு அதன் மேற்பகுதியில் கன்றைச்சுற்றி தேங்காய் நார்உமி இட்டு பிறகு தண்ணீர் ஊற்றினால் ஈரப்பதம் ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்கும்*
    *தண்ணீர் அடிக்கடி கொண்டு வந்து ஊற்ற முடியவில்லை என்றால்...! பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு அதில் இரண்டு லிட்டர் கொள்ளளவு உள்ள கூல்ரிங்ஸ் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அடி பாகத்தில் கண்மயிறு அளவு துளையிட்டு கட்டிவிட்டு விட வேண்டும். பின்னர் சொட்டு சொட்டாக அந்த செடியின் மீது பட்டுக்கோண்டே இருக்கும் ஈரப்பதம் இருந்துக் கொண்டே இருக்கும் பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் பாட்டலில் தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும். இந்த முறையை பயன்படுத்தும் போது தண்ணீர் சேமிக்கப்படும்*
    *அது மட்டும் அல்லாமல் ஒரே நேரத்தில் தண்ணீர் ஊற்றும் போது தண்ணீர் வீணாகிவிடும். இந்த முறையை முயற்சித்து பாருங்கள் மிகுந்த பயன் அளிக்கும்.....!!!*
    இவன் என்றும் அன்புடன் நிகில் சூர்யா. நன்றி அம்மா....!.🙏🙏 🙏

  • @vimalchennai
    @vimalchennai 4 ปีที่แล้ว +20

    namalwar never died he just planted himself in every human being he met .. there is no death for him.. he worked for farmer and nature .. he became a part of nature itself .. every person trained by him and every plant and tree grown by his trained .. tells his name...

  • @shiva.9650
    @shiva.9650 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் ..அம்மா
    வாழ்க வளத்துடன்.

  • @mutharasimuthuraj6768
    @mutharasimuthuraj6768 4 ปีที่แล้ว

    சரோஜா அக்கா அவர்களுக்கு
    வாழ்த்துகள் 🎊,
    பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..
    அக்கா, நீங்க பயிற்சி மன்றம் உருவாக்கி அதன் மூலம் மக்கள் பயன் பெற வேண்டும் என்று வாழ்த்து குரல் கொடுக்கிறேன்,
    சொல்ல வார்த்தை இல்லை ,
    மிகவும் இயற்கையை நேசிக்கும் அன்பு தங்கை, முயற்சி செய்கிறேன் உங்களை பார்ப்பதற்கு, நான் மும்பையில் வசிக்கிறேன்..

  • @sankarlalkottaiveedu913
    @sankarlalkottaiveedu913 4 ปีที่แล้ว

    விவசாயி என்பவன் மட்டுமே தனக்கும் ஏனைய உயிர்களுக்கும். மனிதர்களுக்கும் உணவைத் தருவதால் மற்ற தொழில்களில் சென்றாலும் மீண்டும் மீண்டும் "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" என்பதை நீங்கள் மெய்ப்பிக்கிறீர்கள். வாழ்க உங்கள் பணி. வளர்க இயற்கை விவசாயம்.நம்மாழ்வர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்போம்.