சீனா கொடுத்த ஆஃபர்.. இந்தியாவே முக்கியம் என்ற சுல்தான் | Who is Sultan Ahmed Ismail in Stalin Team

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2021
  • சீனா கொடுத்த ஆஃபர்.. இந்தியாவே முக்கியம் என்ற சுல்தான் | Who is Sultan Ahmed Ismail in Stalin Team
    #MKStalin #TamilNadu #ProfSultanAhmed
    மண்ணையும் மக்களையும் ஒருவரால் இத்துணை நேசிக்க முடியுமா? அப்படி நேசிக்க முடிந்த ஒருத்தரால் மற்றவர்களையும் அதற்கு பழக்கப்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியும் என காட்டும் நபர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் மண்புழு விஞ்ஞானி என பாசமாக அழைக்கப்படும் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னையில் உள்ள புதுக்கல்லூரி துறை தலைவராக பலருக்கும் அவரை தெரியும்.
    பூமியின் ,மீது அக்கறை கொண்டால் மட்டும் போதாது, அதனை அறிவியல் ரீதியாக அணுகவும் முடியும் என வியக்க வைப்பவர். 1959ல் அக்டோபர் மாதம் பாண்டிச்சேரியில் பிறந்தார் சுல்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அறிவே அற்றங் காக்கும் கருவி என மனதில் நிறுத்தி படித்தார். அப்போது ஜோசியம் பார்த்த ஒருவர் நீயெல்லாம் 8ம் கிளாசு தாண்ட மாட்ட என சொல்ல, இன்று 8 ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார் சுல்தான் அகமது.
    பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தார். சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியும் தந்தை இல்லா பிள்ளை என்ற பொறுப்பும் சேர 1968ல் புதுக்கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடங்கினார். அன்று கல்லூரிக்குள் நுழைந்தவர். அங்கிருந்து வெளியே வர 45 ஆண்டுகள் ஆனது. ஆம், மாணவனாக நுழைந்த கல்லூரி, அவருக்கு ஆசானாக மாறாக அடைக்கலம் கொடுத்தது. ஆசான், பேராசானாக மாறி, துறைத்தலைவனாக மாறி புதுக்கல்லூரியின் புதல்வனாக மாறி நின்றார் சுல்தான் அகமது.
    கல்லூரி காலத்தில் தனது ஆசிரியர் நந்தகுமாரின் கற்பித்தலும் அணுகுமுறையும் சுல்தானை கவந்தது. விலங்கியல் ஆசிரியராக இருந்த நந்தகுமாரின் ஈர்ப்பால் அதனையே துறையாக தேர்வு செய்தார். நன்றாக படித்து முடித்த அவர், மேற்படிப்புக்காக செல்ல நினைத்த போது, புதுக்கல்லூரியிலேயே, எம்.எஸ்.சி. ஆரம்பிக்க இங்கே படியேன் சுல்தான் என , கல்லூரி முதல்வர் சொல்ல அங்கேயே படித்தார்.
    படித்து முடித்தாலும் கூட சுல்தானுக்கு வேலை கிடைக்கவில்லை. கல்லூரிக்கு போய்விட்டு வரலாம் என சைக்கிளில் சென்றார். கல்லூரி முதல்வரை பார்த்ததும் கண் கலங்க, ரூமுக்கு வா என அழைத்தார் முதல்வர். ஒரு வேலை இருக்கு, ஆனா ஆறு மாசம், பரவாயில்லையா? என கேட்க, இதுதான் தனக்கான பாதையை வகுக்க போகிறது என உணர்ந்தார் இஸ்மாயில். கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் 6 மாதத்தில் வேலை முடிந்தது கிளம்புங்கள் என சொன்னார்கள். ஆனால் அப்போதுதான் இயற்கை தனக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்து கல்லூரியை விட்டு அனுப்ப மறுத்தது என்கிறார். ஏதோ சில காரணங்களால் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்ய அந்த பணி, இஸ்மாயிலுக்கு கிடைத்தது. அப்படியே ஆண்டுகள் ஓடின.
    அடுத்து அவர் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் செய்கைகள். பல நாடுகளுக்கு பயணம், மண்புழு ஆராய்ச்சி, மண் வளம் காக்கு ஆராய்ச்சி, இயற்கையின் மீது ஈர்ப்பு அவர் வாழ்க்கையே முழுக்க முழுக்க மாறிப்போனது. பயங்கர பிசியாக மாறிப்போனார். அப்படி சென்று கொண்டிருக்கையில் இந்திய அரசோடு சேர்ந்து வேலை செய்யும் திட்டத்துக்கான ஆபர் வந்தது. ஆனால அவர் மீதான பொறாமையால் அதனை கிழித்து குப்பையில் போட்டார்கள் சிலர். அங்கு கிடந்த கிழிந்த பேப்பரில் தனது பெயர் இருப்பதை பார்த்த சுல்தானுக்கு அதிர்ச்சி. ஆம், அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை யாரோ சிலர் ஒன்றுமில்லாமல் ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் துவளவில்லை. 32 எம்.பில், 17 பி.எச்.டி என ஆராய்ச்சியில் அடுத்த கட்டம் தொட்டார். மண்புழுக்கள் மூலம் உரம் தயாரிப்பதை உலகுக்கு அறிமுகம் செய்தார். மண்புழுக்களை பற்றி கேட்டால், உயிரோடு இருக்கும் போது நான் அவைகளை தொடுகிறேன், இறந்தால் அவை என்னை தொட்டுக் கொள்ளும் என்கிறார் இந்த மண்புழு விஞ்ஞானி.
    ஒருமுறை கருத்தரங்குக்காக சீனா சென்றவரை அங்கேயே குடியேற எவ்வளோ வற்புறுத்தினார்கள். பணமா, வீடா, பொறுப்பா? என்ன வேண்டுமென கேட்டவர்களிடம் என் நாடு என பதில் சொல்லி, இந்தியாவுக்கு திரும்பினார். மண்புழு நகரம் அமைக்க சீனா அரசு இவரிடம் உதவி நாட, மீண்டும் சென்று உதவி வந்தார். இப்போதும் கூட தமிழ்நாட்டில் மாவட்டங்களில் மண்புழு நகரம் உருவாக்குங்கள் என்பார். மண்புழு இல்லா மண்ணை வைத்து என்னய்யா செய்ய போறீங்க, மண் மேல் உப்பக் கொட்டி, கொட்டி நாசாமாக்குறீங்களே என பிரச்னைகளை சொல்வதோடு நில்லாமல், அதற்கான தீர்வையும் முன்மொழியும் ஆராய்ச்சியாளர்.
    மாணவர்கள், மண்புழு, இயற்கை - இந்த மூன்றையும் எப்போதும் அன்பு செய்யும் மனிதராக இருக்கும் பேராசிரியர் சுல்தான், குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தகுதி உண்டு, அவர்களிடம் எதையும் திணிக்காதீர்கள் என பெற்றோருக்கு சொல்வார். மாணவர்களை சந்தித்தால் தோல்விகளை கண்டு துவளாதீர்கள், உங்கள் கண்ணாடியில் தெரிபவரே உங்களின் உச்சபட்ச ரோல் மாடல், இயற்கை சொல்வதை கவனியுங்கள், அதன் திட்டம் எப்போதும் சிறப்பாக இருக்கும் என்பார்.
    முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பிலேயே சிறு விவசாயிகள் பற்றி சிந்தியுங்கள், விவசாயம் சார்ந்த தொழில்களை உள்ளூர் இளைஞர்களுக்கு உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்துங்கள், இயற்கையோடு இணைந்த கல்வியை உருவாக்குங்கள் என பேசிவிட்டு வந்திருக்கிறார். வாழ்த்துகள் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில். மண்ணை காக்க திட்டம் தீட்டுங்கள்.
    #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
    CREDITS:
    Script: Manoj Prabhakar
    Editing: Reegan JNR & Vivekanandhan
    Voice Over: Raja Shanmuga Sundaram
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
  • บันเทิง

ความคิดเห็น • 84

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 3 ปีที่แล้ว +10

    37 Mphil 17 Phd மண்புழு விஞ்ஞானி இஸ்மாயில் இவர்களை போன்று மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற பல அறிவுஜீவிகள் உருவாக்க வேண்டும்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 3 ปีที่แล้ว +20

    எங்கே கண்டுபிடிக்கிறார் நமது முதலமைச்சர் இவ்வாறான உயர் நோக்கம் கொண்ட மனிதர்களை!!??
    ஒன்று தெரிகிறது!!
    தம்மைச் சுற்றி,படித்த,ஒழுக்கம் நிறைந்த அதிகாரிகளை சூழ வைத்து வட்டமடித்துக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர்! !
    தொடரட்டும்

  • @balaguru541
    @balaguru541 3 ปีที่แล้ว +36

    முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு சாமானியானின் உளமார்ந்த நன்றி பாலகுரு அய்த்தேர்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +8

    அவரின் மாணவி என்பதில எனக்கு பெருமை.

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 3 ปีที่แล้ว +32

    பேராசான் ஐயா.சுல்தான் அவர்களின் வாழ்க்கை பயணம் மிகவும் பிரம்மிக்க வைக்கிறது... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன் ஐயா....
    மகத்தான பேராசானை சரியான பாணியில் அமர்த்திய எங்கள் மக்களின் முதல்வரின் சேவைக்கு தலைவணங்குகிறேன்...
    நன்றி ஊடகக் குழுமத்தாரே...

  • @narayanannirmala1
    @narayanannirmala1 3 ปีที่แล้ว +12

    Phenomenal Professor....He is a living legend....Living Abdul Kalam

  • @shanmugam3991
    @shanmugam3991 3 ปีที่แล้ว +18

    உங்களை போன்றவர்களை இவ்வளவு நாட்களாக தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக வருந்துகிறேன்.
    தமிழ்நாட்டிற்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..

    • @ramyavenkat2406
      @ramyavenkat2406 3 ปีที่แล้ว

      நானும் வாழுதுகிறேன்

  • @babulhudha
    @babulhudha 3 ปีที่แล้ว +13

    நான் புதுக் கல்லூரியில் படித்தபோது உங்கள் அருமை எனக்கு தெரியாமல் போனதைப் பற்றி வருத்தம் கொள்கிறேன்

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 3 ปีที่แล้ว +26

    Sultan Sir is an heavenly man for our country farmers and students

  • @mohamednazar9437
    @mohamednazar9437 3 ปีที่แล้ว +5

    வரலாற்று சிறப்பு 🔥🔥🔥

  • @raghunathanloganathan1098
    @raghunathanloganathan1098 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @seranmurugan109
    @seranmurugan109 3 ปีที่แล้ว +7

    அருமையான மனிதர். மண்ணின் மைந்தர். தமிழ் நாட்டை வளமாக்க அவரது ஆற்றல் பயன்படட்டும்.

  • @gratitude1450
    @gratitude1450 3 ปีที่แล้ว +21

    இனிமேல் விவசாயம் தினம் தினம் தினம் விழா காணும்.

  • @balamurugans9734
    @balamurugans9734 3 ปีที่แล้ว +3

    வணக்கம். வாழ்த்துக்கள்

  • @dineashram2962
    @dineashram2962 3 ปีที่แล้ว +23

    நன்றி அய்யா...🙏🙏
    முதல்வருக்கும் நன்றி❤️

  • @ShahulHameed-dt1zb
    @ShahulHameed-dt1zb 3 ปีที่แล้ว +17

    அல்லாஹ்வின் ஆசீர்வாதம் பெற்றவர் அவரின் பொருமையும் விடாமுயற்சி அவரின் வெற்றிக்கு காரணம் அதுவே நம் நாட்டின் ஆம் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் அவர்களால் நம் நாடே ஆசீர்வதிக்க படுகிறது நம் முதல்வருக்கு தான் அனைத்து நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் நன்றி நன்றி

  • @esharagav3237
    @esharagav3237 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 🙏😁👌

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 ปีที่แล้ว +20

    மாஷா அல்லா

  • @ch66traveller
    @ch66traveller 3 ปีที่แล้ว +5

    Abdul Kalam version 2.0

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 3 ปีที่แล้ว +3

    Thanks our CM. Stalin

  • @RameshKumar-rt7xg
    @RameshKumar-rt7xg 3 ปีที่แล้ว +5

    இந்த செய்தி வாசிக்கும் நபரின் குரல் உச்சரிப்பு நன்றாக உள்ளது

  • @SamuelThangarajan
    @SamuelThangarajan 3 ปีที่แล้ว +9

    Great sir.

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சுல்தான் ஐயா என் வாழ்நாட்களில் உங்களுடன் வாழ்வது அதுவும் தமிழனாக வாழ்வது எமக்கும் தமிழகத்திற்கும் பெறுமை

  • @mohammedyasar2192
    @mohammedyasar2192 3 ปีที่แล้ว +9

    My Teacher.

  • @amirsafia300
    @amirsafia300 3 ปีที่แล้ว +10

    Great sir.....

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +7

    அருமை👍🙏

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +10

    Super information..
    Vallalar Family

  • @kanchanaekam5171
    @kanchanaekam5171 3 ปีที่แล้ว +8

    அருமை 👌💐

  • @burhandeen2077
    @burhandeen2077 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்💐👌👍

  • @jaishaf6411
    @jaishaf6411 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @bigbazzar1736
    @bigbazzar1736 3 ปีที่แล้ว +7

    Masha allah rahmath seyvanaga

  • @alfazi749
    @alfazi749 3 ปีที่แล้ว +1

    First time see but very impressed

  • @vencyjohn8989
    @vencyjohn8989 2 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @Mohamedilyas1189
    @Mohamedilyas1189 3 ปีที่แล้ว +3

    Good work ABP

  • @inayath8277
    @inayath8277 3 ปีที่แล้ว +3

    Our indian govt should use his experience and superiority for nation's wealth before it's too late (always indian govt refuse talented indian people's) because they're trust only foreign policy and technology.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @tamilnadu4845
    @tamilnadu4845 3 ปีที่แล้ว +1

    Mashaallah

  • @sampathnirmala6066
    @sampathnirmala6066 3 ปีที่แล้ว

    விவசாயிகளின் நண்பன் சுல்தான் வாழ்க தமிழ்!

  • @ffrowdygamer6816
    @ffrowdygamer6816 3 ปีที่แล้ว +2

    👍

  • @susilaraghuram5041
    @susilaraghuram5041 3 ปีที่แล้ว +4

    Nice man good gentle man

  • @madrasnarayan
    @madrasnarayan 3 ปีที่แล้ว +5

    Superb. 👍

  • @ajsmannai9568
    @ajsmannai9568 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். ஜயா

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 3 ปีที่แล้ว +4

    Hats Off Sir.. Neenga than sir Enga pokisham.

  • @crediblescienceshyamalavij3814
    @crediblescienceshyamalavij3814 3 ปีที่แล้ว +6

    U are always a great inspiration sir...its blessing to have u in our soil sir.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 ปีที่แล้ว +1

    Sultan sir 🙏🙏🙏🙏🙏

  • @anithaeldana229
    @anithaeldana229 3 ปีที่แล้ว +2

    Super appa neegga eppavum nalla erukka vendum aandavar uggalukku ennum ayusai kuutty tharavendum neegga namma nattukkum ugga veettukkum vendum ugga thalai muraiel uggalai pola pillaigal elumba vendum appa GOD bless you appa and your family also.

    • @jassihabi1407
      @jassihabi1407 3 ปีที่แล้ว

      SAGOTHARI , Thangalin PRARTHANAIKUM . . . , VENDUKOLUKKUM . . , MEKKA NANDREE . . . .

  • @rasickrahman5318
    @rasickrahman5318 3 ปีที่แล้ว +3

    Efficient Person👍👍👍

  • @anajaleel
    @anajaleel 3 ปีที่แล้ว +1

    32 M. Phil : 17 PhD: vow 👏👏👏Love with Mother land 🙏. Sir you are our 2nd Andul Kalam🤝👍👍👍

  • @nandinisrinivasan777
    @nandinisrinivasan777 3 ปีที่แล้ว +3

    Super.

  • @DineshKumar-zv1uw
    @DineshKumar-zv1uw 3 ปีที่แล้ว +1

    Really super sir

  • @BarsathAli
    @BarsathAli 3 ปีที่แล้ว +2

    Super

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 3 ปีที่แล้ว

    Thank you bro

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 ปีที่แล้ว +1

    இவர் ஏற்காடு மாண்ட்போட் கான்வெட்ல மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் ,, மெய்மறந்தேன் ,, அவ்ளோ காதல் இயற்கையின் மீது ஐயா இஸ்மாயில் அவர்கள் ...!!!

  • @thenmozhi9589
    @thenmozhi9589 หลายเดือนก่อน

    Today only i saw him

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 3 ปีที่แล้ว

    1969இல் புதுக்கல்லூரியில் விலங்கியல் பேராசிரியர் முஹம்மது முஹைதீன் பிரின்ஸிபல் ஆனார்!
    உதவி பேராசிரியர்கள்
    1. நந்தகுமார்
    2. ஷியாமல்நாத்
    3. அப்துர்ரஹ்மான்
    4. குன்னஹமது குட்டி
    அருமையான கற்பிப்பாளர்கள்!!

  • @peaces4013
    @peaces4013 3 ปีที่แล้ว

    Nice info n he dressed v neatly.

  • @rishahisham3520
    @rishahisham3520 3 ปีที่แล้ว +1

    Super man..

  • @mohamedimran4225
    @mohamedimran4225 3 ปีที่แล้ว +2

    disliked seithavargal kandippaga manushene illai.

  • @alllaalla7034
    @alllaalla7034 3 ปีที่แล้ว +3

    ஐயா இன்னொரு அப்துல்கலாம் நீங்கள்

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 ปีที่แล้ว +1

    Ayyasuper

  • @faisals43
    @faisals43 3 ปีที่แล้ว +1

    Super.ஆனால் 1959இல் பிறந்தவர் 1968இல் எப்படி கல்லூரி போகமுடியும்.? விளக்கவும்

    • @faisals43
      @faisals43 3 ปีที่แล้ว +1

      காணொளியில் கோப்பில் திருத்தம் செய்யவும்...

    • @faisals43
      @faisals43 3 ปีที่แล้ว +2

      ஐயா பிறந்தது 09.10.1951.

  • @annasmmm8850
    @annasmmm8850 3 ปีที่แล้ว +1

    அடுத்த அப்துல் கலாம் !

  • @hamdhoonrefaideen5418
    @hamdhoonrefaideen5418 3 ปีที่แล้ว +5

    கள்ளூரி அறிவியள். சுள்தான். முடித்தாளும்.... என்னடா பேசறே ????

  • @Mohamedilyas1189
    @Mohamedilyas1189 3 ปีที่แล้ว

    What is ABP?

  • @fathimanuzha2953
    @fathimanuzha2953 3 ปีที่แล้ว +1

    Abp naadu.not nodu

  • @annaseeha2034
    @annaseeha2034 3 ปีที่แล้ว +4

    If CM father, is alive he will kiss his son 😭👍 this type of work may give a place to sleep later near by your father,,,, EX CM

  • @kishorekumarrajaseaker8564
    @kishorekumarrajaseaker8564 3 ปีที่แล้ว +2

    stalin ah enamo ninacgen

    • @kishorekumarrajaseaker8564
      @kishorekumarrajaseaker8564 3 ปีที่แล้ว

      Okay cr8...,
      Amma nu j solurom
      thataha nu kalainara solurom
      apo mr stalin ah enna nu solunim

  • @selvam.a
    @selvam.a 3 ปีที่แล้ว +1

    Dislike pottavan nathaari.

  • @Samugavirumbi
    @Samugavirumbi 3 ปีที่แล้ว +2

    பிரம்மிப்பு

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 3 ปีที่แล้ว

    China + Muslims + dmk

    • @latentheat4076
      @latentheat4076 3 ปีที่แล้ว +1

      Vanthutan sangi 🌼nda🤣

    • @nawasmohammad5270
      @nawasmohammad5270 3 ปีที่แล้ว

      Poy 2,pack maatu moothiram kudi sariyayedum

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @husenji7161
    @husenji7161 3 ปีที่แล้ว +1

    Super

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +1

    Super