சந்திராஷ்டமம் - எளிய விளக்கமும் பரிகாரங்களும் | Chandrashtama in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Chandrashtama Meaning in Tamil - 17th Natchathiram from your Jenma Natchathiram is Chandrashtamam Natchathiram.
    From your Jenma Natchathiram, 17th Natchathiram occurs on a particular day, that day is your Chandrashtamam Day, That's peak Chandrashtamam Time
    Example Shown for 17th November 2018 & 18th November 2018:-
    From 17th Nov - 1.40 PM to 18th Nov 3.36 PM - Ayilyam Jenma Natchatiram's 17th Natchathiram is Poorataathi Natchatiram. Hence this time is Chandrashtamam Time for Ayilyam Jenma Natchatiram
    During Pooratdathi Natchatiram it is Chandrastamam for Ayilyam Jenma Natchatiram during this period
    சந்திராஷ்டமம் என்றால் என்ன:-
    உங்கள் ஜென்ம நட்சதிரத்தில் இருந்து எண்ணி 17 ஆவது நட்சத்திரம் வரும் நாள் தான் உங்களுக்கு சந்திராஷட்டம தினம் ஆகும். இதுவே சந்திராஷ்டம உச்சகாலமாகும்.
    Example Shown for 17th November 2018 & 18th November 2018:-
    17ம் தேதி 1.39 PM சதயம் நட்சத்திரம் முடிந்து 1.40 PM முதல் பூரட்டாதி நட்சத்திரம் தொடங்கி 18ம் தேதி 3.36 PM வரை உள்ளது.
    17th Nov - 1.40 PM to 18th Nov 3.36 PM - ஆயில்யம் நட்சத்திரத்திற்கு 17ம் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறுவதால், ஆயில்யம் நட்சத்திரத்திற்கு இது சந்திராஷ்டம நேரம் ஆகும்.
    சந்திரன் பூமியை ஒருமுறை வலம் வர 27.322 நாட்கள் ஆகும். சந்திரன் அப்படி வலம் வரும் காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் ஒரு முறை கடக்கும், அப்படி கடக்கும் போது சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கும்.
    உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில்(எட்டாம் இடம் மறைவு ஸ்தானம்) உள்ள ராசிக்கு சந்திரன் சஞ்சரிக்கும் அந்த இரண்டே கால் நாட்களே சந்திராஷ்டமம் ஆகும்(ராசிக்கு எட்டாம் இடம் அஷ்டமஸ்தானம் எனப்படும் சந்தரன் அங்கே வரும் காலமே சந்தராஷ்டமம் எனப்படும் ...சந்திரன் + அஷ்டமம்). இந்த முறைதான் தினசரி நாள்காட்டியில் இடம் பெற்றுள்ளது.
    இது புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருந்தால், ஒரு எளிய முறை உள்ளது.
    உங்கள் ஜென்ம நட்சதிரத்தில் இருந்து எண்ணி 17 ஆவது நட்சத்திரம் வரும் நாள் தான் உங்களுக்கு சந்திராஷட்டம தினம் ஆகும். இதுவே சந்திராஷ்டம உச்சகாலமாகும். இது ஒரு துல்லியமான கணக்கீட்டு முறை என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு ஜென்ம நட்சத்திரத்திற்கும் 17 ஆவது நட்சத்திரம் என்ன என்பதை அட்டவணையாக கொடுத்துள்ளோம்.
    சந்திராஷ்டமம் - ஏன் பார்க்கப்பட வேண்டும்?
    சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் மற்றும் பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திராஷ்டம காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த நிகழ்வுகள் நடக்கும். அன்றைய தினம் மறதி காரணமாக அலைச்சல், காரிய தோல்வி, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.
    நம் மனம் தான் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டும். எது நல்லது என்று கூறுகின்றது. அந்த மனத்திற்கு காரகன் தான் சந்திரன். அவர் நல்ல நிலையில் இருக்கும் போது நல்ல யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் தோன்றும். அதே சந்திரன் 8ல் மறைந்துவிட்டால் யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் எல்லாம் நன்மைபயக்குமாறு அமையாது எனவே தான் அன்றைய தினம் மிக முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது என்று ஜோதிடம் கூறுகின்றது. மனம் தான் செயல் வடிவமாக, பேச்சு வடிவமாக உணர்ச்சி வடிவமாக செயல்படுகிறது அப்பொழுது அந்த மனம் நல்ல முறையில் சிந்தித்தால் தான் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கே நன்மை பயக்குமாறு அமையும்.
    சந்திராஷ்டமம் தீர்வுகள்:
    இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். யாரிடமும் தேவையில்லாத சொற்களை கூறவேண்டாம். முடிந்தவரை முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுங்கள்.
    சுபமான நிகழ்வுகளை சந்திராஷ்டம காலங்களில் நடத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. இக்காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் ஒத்தி வைக்கலாம். கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம். பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் தரும்.
    மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று. மனதை ஒருமுகப்படுத்தும் யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிற்கலாம்.
    சில எளிய பரிகாரங்களை :
    ஒரு நெல்மணியை இடது கை புஜத்தில் பிளாஸ்திரி மூலம் ஒட்டிக் காெள்வது ... அரிசி மாவை பூசி சிறிது நேரம் கழித்து குளிப்பது ... திரிந்த பாலில் தயாரான ரச குல்லா சாப்பிடுவது போன்றவைகளை செய்து தாக்கத்தை குறைத்துக் கொள்ளாலாம் ..சந்திர காயத்ரி ஜபிக்க நல்ல பலனை தரும் ..!
    தானம்:
    சந்திராஷ்டம காலத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யவது சிறப்பு.
    சந்திராஷ்டமம் - வழக்கமான பொது ராசிபலன் போல சிலருக்கு அனுபவத்தில் ஒத்து வருவதில்லை. காரணம் ஒருவர் பிறக்கும்போதே சந்திரன் லக்கினத்திற்கு 6, 8 அல்லது 12ல் அமையப் பெற்றவர்களுக்கு சந்திராஷ்டமம் குறிப்பிடத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
    ஆயினும் சுப காரியங்களை சந்திராஷ்டம தினத்தில் நடத்துவது வழக்கமல்ல, நல்லதல்ல. வழக்கமான காரியங்களையும், முன் கூட்டியே முடிவு நிச்சயிக்கப்பட்ட செயல்களையும் தாராளமாக செய்யலாம்.
    #aalayamselveer #chandrashtama

ความคิดเห็น • 250