வீரப்பூர் மாசி திருவிழா|Ponnar Shankar Temple masi thiruvila 2024|veerapur periyakandi amman temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #veerapur
    #ponnarshankar
    #manaparai
    திருச்சி: 16-03-2024
    பிரசித்தி பெற்ற பொன்னர் சங்கர் கோவில் மாசி திருவிழா...!
    மணப்பாறை அருகே புகழ்பெற்ற
    குளக்கரை கருப்பசாமி கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி....! நள்ளிரவில் மெய்சிலிக்க வைத்த தத்ரூப நிகழ்வு..!
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் அருள்மிகு கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. பொன்னர் - சங்கர் தங்காள், பெரியகாண்டியம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை கொண்ட புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும்.
    இதே போல் இந்த கடந்த 9 ம் தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் எனும் தத்ரூப நிகழ்ச்சி படுகளத்தில் உள்ள குளக்கரை கருப்பசாமி கோவிலில் நடைபெற்றது.
    இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.
    நள்ளிரவில் பலரும் திடீர் திடீரென மயங்கி விழவே உடனே அங்கு கோவில் தொண்டாற்றும் ஊழியர்கள் மயங்கியவர்களை தூக்கி வந்து ஆலயம் முன்பு வரிசையாக படுக்க வைத்து மஞ்சள் துணியை போர்த்தி வைத்தனர்.
    இதையடுத்து அதிகாலை அம்மன் பூ பல்லக்கில் பவனி வந்த பின் சிறுமி ஒருவர் சாமி வந்து ஆடிய படி அம்மனை நோக்கி செல்லவே பின்னர் வழிபாடுகளுக்கு பின் சிறுமி தீர்த்தக்குடத்தை எடுத்துக் கொண்டு மயங்கிய நிலையில் வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருந்தவர்களை சுற்றி வந்த பின் தீர்த்தம் தெளிக்கவே, தங்கள் மீது தீர்த்தம் பட்டதும் படுத்திருந்தவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு எழுந்து சென்றனர்.
    இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நள்ளிரவில் மயங்கிய பக்தர்கள் அதிகாலை வரை சில மணி நேரம் அசைவற்ற நிலையில் கிடந்தது காண்போரை மெய்சிலிக்க வைத்தது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்...
    #தமிழ்செய்திகள்
    #opentalktamil
    #tamilnews
    #tamilnadu
    #தமிழ்நாடு
    #opentalk
    #anmeegam
    #anmeegamtamil
    #trichy
    #veerapurtemple
    Veerapur Ponnar Shankar Temple| masi thiruvila 2024|வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில் |

ความคิดเห็น • 1

  • @Murali-ze4di
    @Murali-ze4di 5 หลายเดือนก่อน +1

    Bro koovagam festival update poduga bro