செட்டிகுளம் ஏகாம்பரநாதர் கோயில்| 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய 12 குபேரர்கள் அருளும் ஒரே தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • செட்டிகுளம் ஏகாம்பரநாதர் கோயில்
    #குபேர_ஸ்தலம்
    மூலவர் : ஏகாம்பரேஸ்வரர்
    உற்சவர் : சோமாஸ்கந்தர்
    அம்மன்/தாயார் : காமாட்சி அம்மன்
    தல விருட்சம் : வில்வம்
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
    ஆகமம்/பூஜை : காமீகம்
    பழமை : 900 வருடங்களுக்குள்
    புராண பெயர் : -
    ஊர் : செட்டிகுளம்
    மாவட்டம் : பெரம்பலூர்
    மாநிலம் : தமிழ்நாடு
    புரான வரலாறு ஐப்பசி பூரத்தில் காஞ்சி வந்த உமையாள். வாணிய வைசியர் குலத்தில் வளர்ந்து, கம்பையாற்றங் கரையில் சிவபூஜையாற்றி, இறையருளுக்குப் பாத்திரமானார். (இன்றும் அவர் தோன்றி, வளார்ந்த வம்சத்தை சேந்தவர்களில் ஒரு மூத்தப்பெருமகனார்) ஒவ்வோரு ஆண்டும் ஏலவார்குழலியின் திருமணத்தின்போது பெண்வீட்டுச் சீர்கள் செய்வதும், பெண்வீட்டார் என்ற முறையில் மரியாதை பெறுவதும் நடைமுறையில் உள்ளாது.
    கருவறையில் பின்சுவற்றிற்கு அருகில் சோமாஸ்கந்தராக ஏகாம்பரநாதர், காமாட்சி, ஸ்கந்தர், அதற்குமுன் திருவேகம்பு லிங்கம்.(அன்னை வழிபட்ட மணல் லிங்கம்).
    முன்னொறு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர்.
    அப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு அவ்விடத்தின் வழியாக வந்தவர் மாமன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென ஜோதி வடிவாக மறைந்தார். அந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி பார்த்தபோது அங்கு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தந்தான். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேசுவரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலைமீது ஓர் ஆலயம் கட்டினார்கள் என தல வரலாறு கூறுகிறது.
    இக்கோயில் அருகிலுள்ள குன்றில் முருகன், கையில் கரும்புடன் காட்சியளிக்கிறார். இவரது சன்னதி ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்தபடி மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவர், கன்னிமூலகணபதி, காசி விஸ்வநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்
    இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்குவோர்க்கு செல்வம் கொழிக்கும் வாழ்வு கிட்டும் என்பதால் பெருமளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
    இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு மன அமைதி கிட்டும் என்பது முக்கியமான அம்சம்.
    விசேஷ தீர்த்த பிரசாதம்: பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவன், சுயம்புவாக காட்சியளிக்கிறார். ஜோதியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவருக்கு "ஜோதி லிங்கம்' என்றும் பெயருண்டு. பங்குனி மாதத்தில் 19,20,21 ஆகிய நாட்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். இவ்வேளையில், சிவனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டும் பிரசாதமாகத் தருவர். இதைப்பருகிட குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நோயால் அவதிப்படுபவர்கள், தீய பழக்கங்களுக்கு ஆளானவர்கள் மற்ற நாட்களில் சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை பருகுகிறார்கள்.
    ராசி குபேரர்: சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்த கோயில் இது. கோயிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர். குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோஷ்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜ கோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோயிலில் 13 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது. தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை, அட்சய திரிதியையன்று 13 குபேரர்களுக்கும் விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
    "வேல்" முருகன்: தைப்பூசத்தை ஒட்டி இக்கோயிலில் 15 நாள் திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாள் தேரில் வலம் வருவர். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் இருக்கிறார். இவரது சிலை வேல் போன்று, கூர்மையாக வடிக்கப்பட்ட திருவாட்சியின் மத்தியில் இருக்கும் படி வடிக்கப்பட்டுள்ளது.
    ஏகாம்பரேசுவரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கதிரவனின் பொற் கதிர்கள் விழுகின்றன.
    ஸ்தபன மண்டபத்தை அடைந்து வடபுறம் குபேர மூலையில் தனிக்கோயிலாக காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிருந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன.
    செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோயில் தரிசனம்
    • செட்டிகுளம் பாலதண்டாயு...
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தரிசனம்
    • திருநெல்வேலி காந்திமதி...
    அமைவிடம்
    திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் உள்ள ஆலத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்
    9976842058
    கோயில் Google map link
    maps.app.goo.g...
    if you want to support us via UPI id
    9655896987@ibl
    Join this channel to get access to perks:
    / @mathina
    தமிழ்

ความคิดเห็น • 55