திருவாரூர் ஆழித்தேர் 2023 |4k |THIRUVARUR THEROTTAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • திருவாரூர், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இவ்வூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
    திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கின்றது. இந்தத் தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும், அகலம் 67 அடியாகவும் உள்ளது. இதன் மொத்த எடை 400 டன் ஆகும்
    தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காண முடியாது.
    ஏழு அடுக்குகளைக் இந்த தேரில் 64 தூண்களும், நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த 64 தூண்களும் 64 கலைகளையும், நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன.
    அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெறுவதற்கு முசுகுந்த மன்னன் உதவினார். அவருக்கு பரிசாக ஏழு விதமான அதிவிசேஷமான மூர்த்தங்களை வழங்கினான் இந்திரன். இந்த மூர்த்தங்களைக் கொண்டு செல்வதற்காக தேவலோகத்தை சேர்ந்த ஸ்பதியான மயன் என்பவனால் உருவாக்கப்பட்டது தான் ஆழித்தேர்.
    பாற்கடலில் உருவான தேவதாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் இதற்கு ஆழித் தேர் என பெயர் உருவாகிற்று.
    திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண ண் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
    Copyright Disclaimer under section 107 of the copyright Act 1976. allowance is made for "fair use" for purposes such as criticism. Comment. News. reporting. Teaching. Scholarship . and research. Fair use is a use permitted by copy status that might otherwise be infringing Non-profit. Educational or per Sonal use tips the balance in favour of fair use

ความคิดเห็น • 24