காதலை தியாகம் செய்யும் அன்பு.? சன் டிவி
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- #singappenney #singapennae #singapenne
சிங்கப்பெண்ணே: காதலுக்காக மகேஷ் செய்யும் செயல்… காதலை தியாகம் செய்யும் முடிவில் அன்பு?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில் மகேஷ் தனது காதலுக்காக பல தியாகங்களை செய்கிறார். இதனைப் பார்த்த அன்பு அவருக்காக தனது காதலையே விட்டுக்கொடுக்கப்போவதுபோல் பேசுகிறார்.
சீரியலின் முக்கியமான கதைக்களமே முக்கோண காதல் கதைதான். அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்குத் தெரிய வந்தது.
அதுமுதல் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் காதலித்து வருகிறார்கள். முதலில் அன்பு அம்மாவுக்கு ஆனந்தியை கண்டாலே பிடிக்காது. ஆனால், இப்போது அவரும் ஆனந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார். இதற்கிடையே வார்டன் மூலம் மகேஷ் அழகப்பனை திருமணத்திற்கே சம்மதிக்க வைத்து விட்டான். மறுபக்கம் ஆனந்தியிடம் அன்பு அம்மா பேசுகிறார். அவரும் அன்பு உடனான திருமணம் குறித்துப் பேசுகிறார். இதனால் ஆனந்தியும் அன்புவும் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால், அதற்குள் வேறு ஒரு சம்பவம் நடக்கிறது. மகேஷின் நடவடிக்கைகளை அறிந்துக்கொண்ட மகேஷ் அம்மா, அவரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறிவிட்டார். இதனால் கோபமாக வெளியே சென்ற மகேஷ் மிகவும் கஷ்டப்படுகிறார். ஒரு சின்ன வீட்டில் தங்க முடிவெடுக்கிறார். காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று மகேஷ் கூறினாலும், அந்த குட்டி வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை. மொட்டை மாடியில் மகேஷ் வெயிலில் படுத்திருக்கிறார்.
இவரின் இந்த கஷ்டங்களைப் பார்த்த அன்பு, மிகவும் வருத்தப்படுகிறார். உடனே ஆனந்திக்கு போன் பண்ணி இது பற்றி பேசுகிறான். மேலும் நம்முடைய காதலால் தான் மகேஷ் இவ்வளவு கஷ்டப்படுகிறார், நீ ஏன் வாழ்க்கையில வந்த?” என்பதுபோல் பேசுகிறார்.
இது ஆனந்திக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததால் கதறி அழுகிறாள்.
அன்பு எடுக்கும் முடிவை ஆனந்தி ஏற்றுக்கொள்கிறாளா இல்லை மகேஷிடம் உண்மையை சொல்கிறாளா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த முக்கோண காதல் கதையில் யார் யாருடன் சேரப் போகிறார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. ஒருவேளை அதுமட்டும் காட்டிவிட்டால், சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.