சரியா சொன்னீங்க. எருக்கு கரைசல் செய்ய கோமியமோ சக்கரையோ தேவையில்லை. வெறும் தண்ணில எருக்கம் செடிய போட்டாலே ஏழு நாளில் அழுகி தயாராகிடும். முப்பது நாளெல்லாம் தேவையில்லை. முதல் முதலாக தென்னை மரத்தில் இயற்கை முறையில் உரம் குடுக்க ஆரம்மிக்கிறீங்க னா மரத்திலிருந்து மூன்று அடி தள்ளி வட்ட பாத்தி எடுக்கனும். பாத்தி எடுக்கும் போது வரும் மண்ணை மரத்தில் வேர்கள் மேலே தெரிந்தால் வேர் மறையும் அளவுக்கு மண் அணைக்கனும். வட்ட பாத்தி 15 செமீ ஆழமும் 30 செமீ அகலமும் இருக்கனும். வாழை மர கழிவு கரும்பு சோகை கிளைரிசிடியா இலைகள் காய்ந்த தென்னை மட்டை மரவள்ளி கிழங்கு குச்சி துத்தி செடி சோளத்தட்டை உளுந்து கடலை கொடிகள் மாதிரி பொருட்கள் வட்டப்பாத்தில போட்டு அதுக்கு மேல பச்சை சாணம் முடிச்சா கரைச்சு ஊத்துங்க இல்லனா குவியலா போடாமா வட்டப்பாத்தி முழுக்க எறைச்சி விடுங்க. ஒரு மாடு ஒரு நாள் போடும் சாணம் ஒரு மரத்துக்கு ஒரு மாதத்துக்கு போதும். இதை போட்டு முதல் வருடம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் மட்டும் மரத்திற்கு 3-5 லிட்டர் மரத்தின் வீரியம் பொருத்து குடுத்து வந்தாலே போதுமானது. இது எல்லாம் என்னால முடியாது னா இதே மாதிரி வட்டப்பாத்தி எடுத்து மரத்துல இருந்து விழும் ஓலை பாளை பண்ணாடை அதுல போட்டு சாணிய போட்டு தண்ணிய மட்டும் விட்டு வந்தால் போதும்
ஏன் குறிப்பாக வாழை கழிவு கிளைரிசிடியா இலைகள் மரவள்ளி குச்சி கரும்பு சோகை சொன்னேன் னா வாழை மர கழிவு அதிக சத்து நிறைந்த குறிப்பாக சாம்பல் சத்து நிறைந்த பொருள். மரவள்ளி குச்சி யும் அதிக அளவில் சாம்பல் சத்து உடையது. கரும்பின் அனைத்து பாகமும் மணிச்சத்தும் சாம்பல் சத்தும் அதிகம் உள்ளது. மணிச்சத்து கிடைக்க தான் உளுந்து கொடி கடலை கொடி சோளத்தட்டை எல்லாம் விட எள் எடுத்து விட்டு தீ வைத்து கொளுத்தும் எள் தட்டை அதிக அளவில் மணிச்சத்து உடையது. கிளைரிசிடியா பச்சை சாணம் அதிக தழைச்சத்து உடையது. மேலும் இந்த பொருட்கள் நுண்ணூட்டச் சத்தும் கொண்டவை.இதெல்லாம் சேரும் போது இது வைத்து மூன்று ஆண்டுகள் கழித்து தென்னை மரமானது இரசாயன உரம் பயன்படுத்தி எடுக்கும் விளைச்சலை விட அதிகமாக குடுக்கும். நோய் தாக்கம் இருக்காது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் தென்னைக்கு மாதா மாதம் உரம் குடுக்க சிரமமாக இருந்தால் கூட தண்ணீரை அதுவும் முக்கியமாக கோடையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 50 லிட்டர் ஆவது குடுத்துகிட்டே இருக்கனும். தண்ணீரை நிறுத்தினால் எவ்வளவு சத்து இருந்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது பிஞ்சுகள் உதிர்ந்து விடும். பாளைகள் கரு கலைந்து வெளியே வராது. எனவே தண்ணீர் அளவாக எவ்வளவு தண்ணீர் உங்களிடம் இருந்தாலும் கூட 100 லிட்டர் அதாவது பத்து குடம் தண்ணீர் க்கு மேல் தர கூடாது. இப்படி பழக்கினால் ஒருவேளை ஓராண்டு காலம் வறட்சி வந்தாலும் மரம் காய்ப்பு குறையுமே தவிர பொள்ளாச்சி போல பட்டு போகவே போகாது
Super 👍
Superah sonninga anna...no comments
Well explained Mr. Ganesha. Your experience and knowledge is very valuable to others. Thanks
Thank you so much 🙂
Super Anna
Super
கடுகு புண்ணாக்கு எங்கே கிடைக்கும்?
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சாரும் தென்னையில் குருத்து அழுகல் கான்டாமிருக வண்டு கட்டுப்படும்
👍
மாதம் இருமுறை பயன்படுத்த செலவு அதிகமாக ஆகும். இதுபோக எல்லாம் சேகரிப்பது கடினமான காரியமாக இருக்கும்
நீங்கள் சொல்வதை பார்த்தால் இது எல்லாம் சேகரித்து வைத்துபயன்படுத்துவது சாத்தியமற்றதாக தோன்றுகிறதே