ஆம் ஆத்மி கட்சி புகார்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- நாகர்கோவிலில்
ஆம்ஆத்மி கட்சி நிர்வாகியை தாக்கிய நபர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மாவட்ட எஸ்பி இடம் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியின் ஏராளமான நிர்வாகிகள் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கண்காணிப்பாளர் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் "
ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியிடம் ஒரு கும்பல் போலி சான்றிதழை திருத்தம் செய்து தருமாறு கோரியபோது அதற்கு அவர் உடன்படாததால் கும்பல் ஒன்று அவரை சரமாரியாக தாக்கியது இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் கட்சியினருடன் புகார் அளித்தபோது போலீசார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குண்டர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதாகவும், எனவே இதுகுறித்து மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சியினர் பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.