எழுத்தாளர் பாமாவின் மொளகாப்பொடி சிறுகதை - கதைசொல்லி - மந்திரமூர்த்தி அழகு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • எழுத்தாளர் பாமா தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். 1992-ல் முதல் நாவலான 'கருக்கு' வெளியானது. 1994-ல் சங்கதி வெளியானது. இவரது கருக்கு நாவலை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மேக்மிலன் வெளியீடாக மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்புக்காக லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் 2000-ல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான க்ராஸ்வேர்ட் விருதைப் பெற்றார். 'கருக்கு' நாவல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. பாமாவின் 'சங்கதி' நாவல் ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியா டுடே இதழில் வெளியான 'அண்ணாச்சி’ சிறுகதை பதினாறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
    இலக்கிய இடம்
    "பாமாவின் கருக்கு நாவல் தலித் இலக்கியத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று" என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.
    "செவ்வியல் பண்புகளைக் கொண்ட 'கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். மனத்தைக் குத்துபவற்றை அவை இல்லாதவைபோல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டிமுட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிடக் கருக்கு தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்." என கருக்கு நாவலை அம்பை மதிப்பிடுகிறார்.
    ஆவணப்படம்
    2024-ல் பாமாவிற்கு வழங்கப்பட்ட வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதையொட்டி விஜயின் இயக்கத்தில், நீலம் இயக்கத்தின் தயாரிப்பில் ‘தமிழ் இலக்கியத்தின் திசை வழி’ என்ற ஆவணப்படம் வெளியானது.
    விருது
    குரல் விருது
    தலித் முரசு விருது
    தமிழக அரசின் ஒளவையார் விருது 2024
    வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2024
    நூல்கள் பட்டியல்
    நாவல்
    கருக்கு (1992)
    சங்கதி (1994)
    வன்மம் (2002)
    மனுசி
    சிறுகதைகள் தொகுப்பு
    கிசும்புக்காரன் ( (1996)
    கொண்டாட்டம்
    ஒரு தாத்தாவும் எருமையும்
    தவுட்டுக் குருவி
    நன்றி: தமிழ் விக்கி

ความคิดเห็น • 4

  • @NithyaKumar83
    @NithyaKumar83 วันที่ผ่านมา

    Good one

  • @athipagavan5608
    @athipagavan5608 วันที่ผ่านมา

    மொளகாப்பொடி சிறு கதையில் நாட்டுப்புற சொல்லாண்மை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. நண்பர் அழகு மந்திரமூர்த்தி கதையை மிக நேர்த்தியாக நமக்கு படம் பிடித்துக் காட்டி விட்டார்🎉

    • @vaasippom-tamil
      @vaasippom-tamil วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும் மக்கா!

  • @srikrishna9019
    @srikrishna9019 วันที่ผ่านมา

    Good one. Hope it will be more intresting while reading with Kayathar, Kazugumali slang. Some stories dont have much content and twist. But the characterization will be good. Will meet in Coimbatore Vishnupuram function.

    • @vaasippom-tamil
      @vaasippom-tamil วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சியும், அன்பும்.