இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்து சாதித்து வரும் பல்லடம் விவசாயி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #OrganicPapayaFarm #Palladam #Papaya
    #UzhavanMurasu #OrganicFarm
    இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்து சாதித்துக் காட்டும் பல்லடம் விவசாயி குறித்த செய்தி தொகுப்பு
    தமிழகத்தில் பப்பாளி பொதுவாக செம்மண்,சரளை மணல் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான நோய் தாக்குதலும் வைரஸ் தொல்லைகளாலும் பப்பாளியில் முழுமையாகவே விளைச்சல் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். ஆனால் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் இளம் தென்னை பயிரில் ஊடுபயிராக பப்பாளி சாகுபடி செய்து பல லட்சங்களை ஈட்டி சாதித்து காட்டியுள்ளார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ்.
    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செட்டிப்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் கனகராஜ். இவருக்கு பனிக்கம்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. எஃகு வணிகம் (steel business) செய்துவரும் கனகராஜ் இயற்கை விவசாயத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு 30 ஆண்டுகளாக விவசாயம் செய்யாத தனது நிலத்தினை பதப்படுத்தி முழுக்க முழுக்க இயற்கை முறையில் பப்பாளி பயிரிட திட்டமிட்டுள்ளார்.இளம் நாட்டு தென்னங்கன்றுகளை நடவு செய்து அதன் ஊடுபயிராக "Redlady" என்னும் 2500 பப்பாளி செடிகளை நடவு செய்துள்ளார். மூன்று ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த பப்பாளி மரங்களை முழுக்க முழுக்க நம்மாழ்வார் அவர்களின் ஆலோசனைப்படி இயற்கை முறையில் விலைவித்து வருகிறார். நடவு செய்த 10 மாதங்களில் காய்க்க ஆரம்பித்து மரம் ஒன்றுக்கு 70 முதல் 130 கிலோ வரை மகசூல் தருவதாகவும் ஒரு மாதத்திற்கு 15 முதல் 16 டன் வரை பப்பாளி சாகுபடி செய்வதாகவும் கூறுகிறார்.
    நாளொன்றுக்கு 400 கிலோ வரை உழவர் சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 15 பழமுதிர் நிலையங்கள் பழ அங்காடிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்து வருகிறார். மேலும் பணிக்கம்பட்டியில் உள்ள இயற்கை விவசாயி கனகராஜ் அவர்களின் இமயம் இயற்கை தோட்டத்திற்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்கின்றனர். விவசாயி கனகராஜ் சாகுபடி செய்யும் பப்பாளிக்கு வேளாண்துறை சார்பில் இயற்கை சாகுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பப்பாளியின் ருசி அறிந்த சென்னை வாசிகளுக்கும் கோவை வாசிகளுக்கும் கனகராஜ் அவர்களின் பப்பாளி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    நாட்டு தென்னங்கன்றுகள் பப்பாளி மரங்களுடன், கூடுதலாக மாதுளை, மா, சீத்தா போன்ற அனைத்து விதமான செடிகளையும் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றியுள்ளார். பஞ்சகாவியம், மீன் கரைசல், போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி ரசாயனம் அல்லாத இயற்கை வேளாண்மையால் தனது நிலத்தில் விளையும் பப்பாளியின் சுவையும் தரமும் நல்ல லாபத்தை தருவதாகவும் கூறுகிறார்.
    மக்கள் எப்படி பசுமை புரட்சியின் போது ரசாயனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு மாறினார்களோ அதேபோல இன்று விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்....மண்ணை மலடாக்காமல் உயிர்புதன்மையோடு இயற்கை விவசாயத்தில் சாதிக்க முடியும் என்பதற்கு விவசாயி கனகராஜ் ஓர் எடுத்துக்காட்டு....
    Palladam l Palladam news l Organic Farming l Organic Papaya farm l nammalvar l red lady papaya l imayam iyarkai thottam l இயற்கை விவசாயம் l நம்மாழ்வார் l பப்பாளி சாகுபடி l உழவன் முரசு l விவசாய செய்திகள்

ความคิดเห็น • 10