/ Part 2 - புரிந்து கொள்ளுங்கள் / அப்படி என்றால் *ஆகாம்ய கர்மா* (இந்த நடக்கும் நிகழ்கால ஜன்மாவில் நாம் செய்யும் காரியங்கள்) நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது. நாம் செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நாம் ஒருவர் மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தால், நாம் என்ன செய்தால் நல்லது என்று விளங்கிவிடும். நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது நமக்கு புலப்பட்டுவிடும். இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"* பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் தனித் தனியாகத்தான் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். ஒரு புண்ய செயல் மற்றொரு பாவ செயலை சமன் படுத்தாது. உதாரணமாக, நாம் நம் பெற்றோர்களுக்கு வாழும் காலத்தில் துரோகம் செய்துவிட்டு (இது பாவ கணக்கில் சேரும்) அவர்கள் மறைந்த பிறகு அன்னதானம் செய்வது (இது புண்யம்). இந்த இரண்டிற்கும், தனித்தனியாக, பாவத்திற்கு தண்டனையும், புண்ணியத்திற்கு நல்லவையும் அனுபவித்தாக வேண்டும். ஒன்றையொன்று கேன்சல் அல்லது சமன் செய்யாது. பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் பலருக்கு உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'. நமக்கு விதிக்கப்பட்டது என்பது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை பரமேஸ்வரரான, பரப்பிரும்மம் ஆன ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டியதுதான். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம். எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும் *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *உனது கர்மாவை* தவிர உனக்கு யாராலும் *தீமையையும்* கொடுக்க முடியாது. ஏனென்றால் நாம்தான் அவைகளுக்கு கர்த்தா. நாம் நன்மை செய்தால் நன்மை. தீமை செய்தால் தீமை. அவ்வளவுதான் கணக்கு. பிறவிகளில் தீமையையே அதிகம் செய்துவிட்டு பின்னர் வரும் பிறப்பில் நல்லது நடக்கவில்லையே என ஏங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே நல்லவைகளை, அவைகள் கஷ்டமாக இருந்தாலும், செய்யத் தொடங்குங்கள். ---சுவாமி .... வி.விஆ ......Part 3 தொடரும் .....will continue .... ..
Wonderful expression a deep aspect with out any telescope, microscope etc Matter aligned with radio active and higher waves Microcosm compared with microcosm Vedas and agsnic science wonderfully linked
வித்தியாசமான தலைப்பு.விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
அருமையான பதிவு
Excellent explanation. Thanks. Please Keep it up
Live happily now don't worry about others straight forward
/ Part 2 - புரிந்து கொள்ளுங்கள் /
அப்படி என்றால் *ஆகாம்ய கர்மா* (இந்த நடக்கும் நிகழ்கால ஜன்மாவில் நாம் செய்யும் காரியங்கள்) நம்முடைய கையிலேயே இருக்கிறது.
இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நாம் ஒருவர் மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தால், நாம் என்ன செய்தால் நல்லது என்று விளங்கிவிடும்.
நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
நமக்கு புலப்பட்டுவிடும்.
இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் தனித் தனியாகத்தான் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். ஒரு புண்ய செயல் மற்றொரு பாவ செயலை சமன் படுத்தாது. உதாரணமாக, நாம் நம் பெற்றோர்களுக்கு வாழும் காலத்தில் துரோகம் செய்துவிட்டு (இது பாவ கணக்கில் சேரும்) அவர்கள் மறைந்த பிறகு அன்னதானம் செய்வது (இது புண்யம்). இந்த இரண்டிற்கும், தனித்தனியாக, பாவத்திற்கு தண்டனையும், புண்ணியத்திற்கு நல்லவையும் அனுபவித்தாக வேண்டும். ஒன்றையொன்று கேன்சல் அல்லது சமன் செய்யாது.
பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் பலருக்கு உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'.
நமக்கு விதிக்கப்பட்டது என்பது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை பரமேஸ்வரரான, பரப்பிரும்மம் ஆன ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டியதுதான். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம். எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும் *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *உனது கர்மாவை* தவிர உனக்கு யாராலும் *தீமையையும்* கொடுக்க முடியாது. ஏனென்றால் நாம்தான் அவைகளுக்கு கர்த்தா. நாம் நன்மை செய்தால் நன்மை. தீமை செய்தால் தீமை. அவ்வளவுதான் கணக்கு. பிறவிகளில் தீமையையே அதிகம் செய்துவிட்டு பின்னர் வரும் பிறப்பில் நல்லது நடக்கவில்லையே என ஏங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே நல்லவைகளை, அவைகள் கஷ்டமாக இருந்தாலும், செய்யத் தொடங்குங்கள்.
---சுவாமி .... வி.விஆ
......Part 3 தொடரும் .....will continue ....
..
Wonderful expression a deep aspect with out any telescope, microscope etc
Matter aligned with radio active and higher waves
Microcosm compared with microcosm
Vedas and agsnic science wonderfully linked
Thank you sir😊
வாழ்விற்குப் பின் என்ன நடந்தால் என்ன....
குழப்புகிறார். வரிசைக்கிரமமாக சொல்லத் தெரியல. இவர் சொல்வது அவருக்கே புரிகிறதா என்று கூடத் தெரியல.
😂