Muruga Muruga Muruga || Bharathiyar Songs || Gayathri Girish || Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Song : Muruga Muruga Muruga || Album : Bharathiyar Songs || Singer : Gayathri Girish || Music : K S Raghunathan || Lyrics : Mahakavi Subramaniya Bharathi || Video : Kathiravan Krishnan || Vijay Musicals || Tamil Literary Song || பாடல் : முருகா! முருகா! முருகா! || ஆல்பம் : பாரதியார் பாடல்கள் || பாடியவர் : காயத்ரி கிரிஷ் || இசை : K S ரகுநாதன் || இயற்றியவர் : மகாகவி சுப்ரமணிய பாரதி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் இலக்கிய பாடல்
    பாடல் வரிகள் | Lyrics :
    முருகா! முருகா! முருகா!
    வருவாய் மயில் மீதினிலே
    வடிவே லுடனே வருவாய்!
    தருவாய் நலமும் தகவும் புகழும்
    தவமும் திறமும் தனமும் கனமும்
    அடியார் பலரிங் குளரே,
    அவரை விடுவித் தருள்வாய்!
    முடியா மறையின் முடிவே! அசுரர்
    முடிவே கருதும் வடிவே லவனே!
    சுருதிப் பொருளே, வருக!
    துணிவே, கனலே, வருக!
    சுருதிக் கருதிக் கவலைப் படுவார்
    கவலைக் கடலைக் கடியும் வடிவேல்.
    அமரா வதிவாழ் வுறவே
    அருள்வாய்! சரணம்! சரணம்!
    குமரா பிணியா வையுமே சிதறக்
    குமுறும் சுடர்வே லவனே சரணம்!
    அறிவா கியகோ யிலிலே
    அருளா கியதாய் மடிமேல்
    பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
    புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்!
    குருவே! பரமன் மகனே!
    குகையில் வளருங் கனலே!
    தருவாய் தொழிலும் பயனும் அமரர்
    சமரா திபனே! சரணம்! சரணம்!

ความคิดเห็น • 24