நேசனல் மாடல் பள்ளியில் கோவை மேற்கு ரோட்டரிகிளப் சார்பில் அறிவியல் கண்காட்சி பிக்பாங்க் 24 நடைபெற்றது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • கோவை மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் அறிவியல் கண்காட்சி பிக்பாங்க் 24
    முதல் முதலாக கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம், புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் குறித்து இளம் மாணவர்களிடையே கண்டுபிடிப்பு போட்டியை நடத்துகிறது. குறிப்பாக, 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள், உலகில் உள்ள தற்போதைய பிரச்னைகளை படைப்பாற்றல் மூலம் தீர்வுகளை தர இது வாய்ப்பாக அமைகிறது.
    புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வரும் ஐ எக்ஸ்ப்ளோரர் பவுண்டேஷன், மெட்டாசாஜ் போன்ற கௌரவிமிக்க நிறுவனங்களுடன் இணைந்து போட்டி நடத்தப்படுகிறது.
    தமிழ்நாடு, கேரளா, கர்நடகா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 54 பள்ளி மாணவர்கள், இந்த போட்டிக்கான புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 166 திட்டங்கள் வரப்பெற்றுள்ளன.
    "பிக்பாங்க் 24" என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் ரோட்டரி புதுமை கண்டுபிடிப்பில், 3 மாநிலங்களை சேர்ந்த 35 பள்ளிகள் பங்கேற்று, 92 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 21-ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தி, அதற்கான மனநிலையை மாணவர்களிடையே உருவாக்க உதவுவது தான் இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். கோவையில் நடக்கும் நிகழ்வில், கோவை மேற்கு ரோட்டரி கிளப், வெற்றியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குகிறது. இந்த திட்டங்கள், "ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்கு" என்ற கருத்தில் நடத்தப்படுகிறது.
    போட்டியில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்கள், போட்டியாளர்கள் தங்களது திட்டத்தை மேம்படுத்தி வணிக ரீதியாக விரிவுபடுத்த உதவிகள் செய்யப்படும். புதிய கண்டுபிடிப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வரும் பங்களிப்பு நிறுவனங்கள் உதவும். மாணவர்கள், திட்டத்திற்கான முன் உருவாக்கம், உருவாக்கத்திற்கு பின்னான ஆதரவுகளையும் கம்பெனிகளிடமிருந்து பெறும். அதோடு, ஆலோசனைகளயும் தொழில்நுட்ப, அறிவியல் நிபுணர்களிடமிருந்து பெறலாம்.
    கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி கிளப்பின் சிறப்பு வாய்ந்த நிகழ்வான இந்த "பிக்பாங்க் 24" திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக திட்டத்தின் தலைவராக துரை நாராயணசாமி, பி.பி லட்சுமணன் ஆகியோரும், இணை தலைவராக ஆர்.நவநீத கிருஷ்ணன், செயலாளராக சி.வி., தேவதாஸ் செயல்படுகின்றனர்.
    நிகழ்ச்சியை ரோட்டரி மாவட்ட கவர்னர் (தேர்வு) பிரதிநிதி ஆர்ஐடி 3206, செல்ல ராகவேந்திரா துவக்கி வைத்தார். மாவட்ட பயிற்சியாளர் மற்றும் மாவட்ட கற்பித்தல் ஏற்பாட்டாளர் டாக்டர் ஏ.வி பதி கவுரவ விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஐஎக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் ராமலதா மாரிமுத்து, ஸ்ட்ரேடஜிக் பிளானிங் மெடாசாஜ் அலையன்ஸ் இயக்குனர் ரோஹன் ஜெய்க்குமார் பங்கேற்றனர்.
    கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் சிபிஎஸ்இ பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு போட்டி துவங்கியது. மாலை 3.00 மணிக்கு நிறைவு விழா நடந்தது. ரோட்டரி வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வில் தலைவர் வரவேற்புரையாற்றினார். தலைமை விருந்தினர்களாக விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாநகராட்சி கமிஷனர் எம். சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்களித்தவர்கள், தன்னார்வ பணியாளர்கள் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
    #coimbatore
    #lionsclubinternational
    #inventions
    #scienceexperiment
    #scienceproject

ความคิดเห็น •