மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்|காசிக்கு நிகரான தலம் |ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது | குதம்பைச் சித்தர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2023
  • தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
    மாயூரநாதர் கோயில்
    காசிக்கு நிகரான கோயில்
    மயிலாடுதுறை (102/274)
    சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற நூற்று இருபத்து எட்டுத் தலங்களுள், முப்பத்து ஒன்பதாவதாக இத்தலம் போற்றப் பெறுகின்றது.
    மூலவர்: மாயூரநாதர்
    அம்பாள்: அபயாம்பிகை,அஞ்சேல்நாயகி
    தலமரம்: மரங்கள்
    தீர்த்தம்: பிரம்ம , காவிரி , ரிஷப , அகத்திய தீர்த்தம்
    புராண பெயர்: மாயூரம், திருமயிலாடுதுறை
    ஊர்: மயிலாடுதுறை
    மாவட்டம்: மயிலாடுதுறை
    பெயர்க்காரணம்
    அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் கெளரி தாண்டவம் எனப்படும்.
    இத்தலம் கெளரி மாயூரம் என்றும் பெயர் பெறும். மயில்கள் ஆடும் துறையாக விளங்கியதால் மயிலாடுதுறை எனப் பெயர் பெற்றது.
    தலச்சிறப்பு
    காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவை திருமயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு ஆகும்.
    மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.
    தலவரலாறு
    பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.
    இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, "அபயப்பிரதாம் பிகை"*, *அஞ்சல் நாயகி*, *அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.
    சிவபெருமான் பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.
    மனம் இளகிய ஈசன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி தாண்டவத்தை, *"மயூரதாண்டவம்”*என்றுகூறுகிறார்கள். சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார். சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர்.
    அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர். ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன.
    தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
    துலா நீராடலில் முப்பது நாட்களும் மாயூரநாதர் காவிரிக்கு வந்து காட்சிதருவது சிறப்பம்சமாகும். துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான்.
    *(ஐப்பசி மாதம் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச்சிறப்பு. இம்மாதத்தில் முதல் இருபத்து ஒன்பது நாட்களில் நீராட முடியாவிட்டால், கடைசி நாளான முப்பதாம் நாள் இக்காவிரியில் நீராடி மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை
    தன் இயலாமையால் அவன் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டிருந்தது.
    முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒரு நாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. இதுவே "முடவன் முழுக்கு" என அழைக்கப்படுகிறது. செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு காவிரியில் நீராடி சிவபெருமானை வழிப்பட்டு அருள் பெற்றுக் கொள்ளலாம்.
    ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா
    வழிபட்டோர்
    அம்பாள், திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள், கங்கை, யமுனை.
    திருவிழாக்கள்
    ஐப்பசி பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும், வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்புடன் நடைபெறுகிறது.
    ஐப்பசி இறுதி நாளான கடைமுழக்கு, கார்த்திகை முதல் தேதி முடவன் முழக்கு விசேஷங்கள் கொண்டாடப்படுகின்றன.
    நடைதிறப்பு
    காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை,
    மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,
    வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணி வரை.
    பொதுதகவல்
    இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் "ஜுவாலை சனி'யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம்.
    ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
    +91 9964995666 & +91 9790543479
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    அமைவிடம்
    கும்பகோணத்தில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் மயிலாடுதுறை அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 37 கிமீ தொலைவிலும் , சீர்காழியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
    கோயில் Google Map Link
    maps.app.goo.gl/r6iSQqDz1vspu...
    திருச்சுழி பூமிநாதர் கோயில் தரிசனம்
    • 21 தலைமுறை பாவங்களை போ...
    if you want to support us via Google pay phone pay paytm
    9655896987
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 14

  • @user-tt5xr5uh8z
    @user-tt5xr5uh8z 3 หลายเดือนก่อน +1

    Well explained

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 7 หลายเดือนก่อน +2

    Super sir

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @d.thumilan3985
    @d.thumilan3985 7 หลายเดือนก่อน +2

    Hi sir
    Super sir😊

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @muthukumarmuthu8393
    @muthukumarmuthu8393 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா

  • @muthupandi4028
    @muthupandi4028 4 หลายเดือนก่อน

    ஐயா மாயுரநாதர் கோவில் உள்ளே குளத்தில் குளிக்க அனுமதி இருக்கா ஐயா

  • @rathinavelut2865
    @rathinavelut2865 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 4 หลายเดือนก่อน

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் போக வேண்டிய அவசியம் இல்லையா?????

  • @user-qb8ju5mi2i
    @user-qb8ju5mi2i 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.
    ஓம் நமசிவாய

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 6 หลายเดือนก่อน

    இது எங்க ஊர் பெரிய கோயில் மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி😍😍😍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน +1

    🙏🔥🌷சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 7 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 7 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏