ஓசூரில் கல்வி மாவட்டஅளவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • ஓசூரில் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை : பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு*
    ஓசூரில் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியின் சார்பில் மாணவிக்கு கல்வி உதவி தொகையாக 20 லட்சம் ரூபாயை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
    ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் #அத்வைத் என்ற தனியார் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி தாளாளர் கல்வி உதவித்தொகை திட்டம் என்ற பெயரில் சிபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு 51 லட்சம், 45 லட்சம் மற்றும் 40 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைகளையும், மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு 35 லட்சம், 30 லட்சம் மற்றும் 25 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைகளையும், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
    இந்த நிலையில் இந்த பள்ளியில் பிளஸ் டூ படித்த கலுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள், மாணவி துர்காஸ்ரீ என்பவர் சிபிஎஸ்சி தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண்கள் பெற்று ஓசூர் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து இன்று பள்ளியின் தாளாளர் அஸ்வத் நாராயணன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், முதலிடம் பிடித்த மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டினர். தொடர்ந்து அவருக்கு இனிப்புகளும் ஊட்டி மகிழ்ந்தனர். கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி துர்காஸ்ரீக்கு பள்ளி தாளாளர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 20 லட்சம் ரூபாயை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
    மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், நன்கு படிக்க வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பள்ளி தாளாளர் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் எங்கள் பள்ளி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகளை நாங்கள் வழங்கி வருகிறோம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ความคิดเห็น •