அனைத்து நோய்களும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் பதிகம் | வெள்ளெருக்கரவம் 🙏 சிவன் பக்தி பாடல் | தேவாரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva
அனைத்து நோய்களும் தீர்க்கும் வைத்தீஸ்வரன் பதிகம் 🙏 வெள்ளெருக்கரவம்| சிவன் பக்தி பாடல் | தேவாரம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம்-திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு :சோழநாடு காவிரி வடகரை
தலம் : புள்ளிருக்குவேளூர்
வெள்ளெ ருக்கர
வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே
ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு
முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர்
நரகக் குழியிலே. 1
மாற்ற மொன்றறி
யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக்
கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற்
புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின
தேய்ந்தறுங் காண்மினே. 2
அரும றையனை
ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக
வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப்
புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர்
உள்ளங் குளிருமே. 3
தன்னு ருவை
யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை
மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப்
புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க்
கில்லை யிடர்களே. 4
செங்கண் மால்பிர
மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு
வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை
வாழ்த்த வருமின்பே. 5
குற்ற மில்லியைக்
கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ்
செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப்
புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர்
பாவம் பறையுமே. 6
கையி னோடுகால்
கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன்
என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன்
புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய
கண்டனை வாழ்த்துமே. 7
உள்ளம் உள்கி
உகந்து சிவனென்று
மெள்ள வுள்க
வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி
புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம்
வணங்கித் தொழுமினே. 8
இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை. 9
அரக்க னார்தலை
பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப்
பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை
புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு
வார்வினை வீடுமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி : வைத்தியநாதர்;
அம்பாள் : தையல்நாயகி
திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
• குழந்தை வரம் செல்வம் அ...
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
• திருமயிலை கற்பகாம்பாள்...
ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
• ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
• நோய் நீங்கும் மந்திரம...
Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
/ @shivaarpanam
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
ஓம் நமச்சிவாய 🙏
பேராயிரம் பரவி வானோர்கள் ஏத்தும் பெம்மான்தன்னைப்
பிரியாத அன்பர்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி
தீராத நோயெல்லாம் தீர்க்க வவ்லானைதிரிபுரங்கள் தீயெழ திண்சிலை கொண்ட
போரானைபுள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள்போக்கினேனே🎉🎉🎉🎉🎉🎉 இது அப்பரின் திருத்தாண்டகம்
🙏🙏🙏அபிராமி அந்தாதி100 பாடல்களும் பதிவிடுவிங்களா
சீர்காழி கோவிந்தராஜன் 100 பாடல்களையும் திரு யேசுதாஸ் அவர்கள் 100 பாடல்களையும் பாடியுள்ளார் பாம்பே சகோதரிகளும் பாடி இருப்பதிக நினைவு