விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு தகவல்… விவசாய கருவிகளுக்கு “மானியம்” என்று ஏமாற்றும் நிறுவனங்கள் !!! எந்த ஒரு விவசாய கருவிகளுக்கும் எந்த ஒரு மானியமும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனியார் அமைப்புகள் மூலம் எப்போதும் வழங்குவதில்லை.முற்றிலும் விவசாயிகளை ஏமாற்றும் வேலை. எல்லா விவசாய கருவிகளுக்கும் மாநில அரசும் மற்றும் மத்திய அரசும் இணைந்து வருடா வருடம் குறிப்பிட்ட அளவில் தனி நபர்களுக்கும் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் குறிப்பிட்ட சில விவசாய கருவிகளை அரசின் வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை பொறியியல் துறைகள் மூலம் மானியத்திட்டதில் வழங்கி வருகிறார்கள். விவசாயிகளுக்கு விவசாய கருவிகளை மானியத்தில் தருகிறோம் என்று ஏமாற்று விளம்பரங்கள் இப்போது அதிக அளவு யூடியூப் சேனல் களில் காண்பித்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். மானியம் என்பது அரசால் மட்டும் தான் வழங்க முடியுமே தவிர வேறு யாரும் கண்டிப்பாக தரமுடியாது. மானியம் என்ற மாய வலையில் விவசாயிகளை எளிதில் ஏமாற்றி தன்னுடைய தரமற்ற விவசாய கருவிகளை வாங்க வைப்பதுடன் மற்ற தரத்துடன் நீண்ட காலங்களாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை விலை அதிகமாக விற்பனை செய்கிறார்கள் என்று பொய்யான வார்த்தையை விவசாயிகளிடம் கூறுவது மட்டுமில்லாமல் அவர்கள் விற்பனை செய்யும் கருவிகள் எல்லாம் சரியில்லை என்னுடையது தான் தரமானது என்றும் பொய்யான தகவல்களை விவசாயிகள் மத்தியில் பரப்பி வருகின்றனர். நீண்ட காலங்களாக செயல்பட்டுவரும் எந்த ஒரு நிறுவனமும் அவரவர் விற்பனை செய்யும் கருவிகளை நல்ல முறையில் தரமான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை என்ற முழு நோக்கோடு நீண்ட காலங்களாக செயல்பட்டு வருகின்றன. நீண்ட காலங்களாக தரமான முறையில் செயல் பட்டு வரும் நிறுவனங்கள் எதுவும் விவசாயிகளுக்கு பொய்யான தகவல்களை அளித்து தங்களுடைய விவசாய கருவிகளை விற்பனை செய்வதில்லை. இந்த துறையில் நீண்ட காலமாக இருப்பதற்கு இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்த தரமான சேவை மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது. பொய்யான தகவல்களை முற்றிலும் இந்த நிறுவனங்கள் விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை என்பது மட்டும் 100% உண்மை. தரமான விவசாய கருவிகளை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் யாரும் தவறான விளம்பரம் செய்து விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுவதில்லை. சில ஏமாற்றும் நிறுவனங்களை தவிர இந்தியாவில் வேறு எந்த ஒரு நிறுவனமும்,அமைப்பும்,விவசாயிகளுக்கு விவசயகருவிகளுக்கு மானியம் வழங்குவதாக பொய்யான தகவல்களை இது வரை யூடியூப் சேனல் வழியாகவோ மற்ற விளம்பரங்களாலோ விவசாயிகளுக்கு வழங்கியது கிடையாது. மானியதிட்டத்தில் விவசாய கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசின் அங்கீகாரம் பெற்று தங்களுடைய தயாரிப்பின் கருவிகளை வருடா வருடம் தங்களுடைய கருவிகளின் உரிமத்தை புதுப்பித்து கொண்டு வருடாவருடம் அரசு வழங்கும் மானியத்தில் விவசாய கருவிகளை வழங்குவார்கள்.அப்படி மானியத்தில் வழங்க விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய கருவிகளை அரசின் வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை பொறியியல் துறைகள் மூலம் முன்பதிவு செய்து அரசு வழங்கும்...வருடத்தில் ஒருமுறை விவசாயிகள் மொத்த தொகையை செலுத்தி கருவிகளை வாங்கியபின் மானியத்தொகை விவசாயியின் வங்கி கணக்கிற்கு அரசு மூலம் பண பரிமாற்றம் செய்யப்படும்.இதுதான் இந்தியாவில் இருக்கும் மானியம் வழங்கும் திட்டம். வெறும் ஆதார் கார்டு நகல் மட்டும் வாங்கிகொண்டு எந்த மானியதிட்டமும் இதுவரை அரசு வழங்கவில்லை.இது முழுக்க விவசாயிகளை ஏமாற்றும் வேலையை தவிர வேறொன்றும் இல்லை. விவசாய கருவிகளை மானியத்தில் பெறுவதற்கு அரசின் www.agrimachinery.nic என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுடைய முழு சுய விபரங்களையும்,தங்களுடைய முகவரி,சொத்து சார்ந்த ஆவணங்கல் விபரங்களையும் பதிவு செய்து அது சார்ந்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்தும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அரசு மானியம் ஒதுக்கீடு செய்யும் வரை காத்திருந்து மானியம் பெறும் முறை மட்டும் தான் நடைமுறையில் இருக்கும் அரசின் திட்டம் தான் உண்மையான மானியம் வழங்கும் திட்டம் ஆகும். விழித்திடுங்கள் விவசாயிகளே.....
விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு தகவல்…
விவசாய கருவிகளுக்கு “மானியம்”
என்று ஏமாற்றும் நிறுவனங்கள் !!!
எந்த ஒரு விவசாய கருவிகளுக்கும் எந்த ஒரு மானியமும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனியார் அமைப்புகள் மூலம் எப்போதும் வழங்குவதில்லை.முற்றிலும் விவசாயிகளை ஏமாற்றும் வேலை.
எல்லா விவசாய கருவிகளுக்கும் மாநில அரசும் மற்றும் மத்திய அரசும் இணைந்து வருடா வருடம் குறிப்பிட்ட அளவில் தனி நபர்களுக்கும் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் குறிப்பிட்ட சில விவசாய கருவிகளை அரசின் வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை பொறியியல் துறைகள் மூலம் மானியத்திட்டதில் வழங்கி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு விவசாய கருவிகளை மானியத்தில் தருகிறோம் என்று ஏமாற்று விளம்பரங்கள் இப்போது அதிக அளவு யூடியூப் சேனல் களில் காண்பித்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள்.
மானியம் என்பது அரசால் மட்டும் தான் வழங்க முடியுமே தவிர வேறு யாரும் கண்டிப்பாக தரமுடியாது.
மானியம் என்ற மாய வலையில் விவசாயிகளை எளிதில் ஏமாற்றி தன்னுடைய தரமற்ற விவசாய கருவிகளை வாங்க வைப்பதுடன் மற்ற தரத்துடன் நீண்ட காலங்களாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை விலை அதிகமாக விற்பனை செய்கிறார்கள் என்று பொய்யான வார்த்தையை விவசாயிகளிடம் கூறுவது மட்டுமில்லாமல் அவர்கள் விற்பனை செய்யும் கருவிகள் எல்லாம் சரியில்லை என்னுடையது தான் தரமானது என்றும் பொய்யான தகவல்களை விவசாயிகள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
நீண்ட காலங்களாக செயல்பட்டுவரும் எந்த ஒரு நிறுவனமும் அவரவர் விற்பனை செய்யும் கருவிகளை நல்ல முறையில் தரமான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை என்ற முழு நோக்கோடு நீண்ட காலங்களாக செயல்பட்டு வருகின்றன.
நீண்ட காலங்களாக தரமான முறையில் செயல் பட்டு வரும் நிறுவனங்கள் எதுவும் விவசாயிகளுக்கு பொய்யான தகவல்களை அளித்து தங்களுடைய விவசாய கருவிகளை விற்பனை செய்வதில்லை.
இந்த துறையில் நீண்ட காலமாக இருப்பதற்கு இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்த தரமான சேவை மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது.
பொய்யான தகவல்களை முற்றிலும் இந்த நிறுவனங்கள் விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை என்பது மட்டும் 100% உண்மை.
தரமான விவசாய கருவிகளை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் யாரும் தவறான விளம்பரம் செய்து விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுவதில்லை.
சில ஏமாற்றும் நிறுவனங்களை தவிர இந்தியாவில் வேறு எந்த ஒரு நிறுவனமும்,அமைப்பும்,விவசாயிகளுக்கு விவசயகருவிகளுக்கு மானியம் வழங்குவதாக பொய்யான தகவல்களை இது வரை யூடியூப் சேனல் வழியாகவோ மற்ற விளம்பரங்களாலோ விவசாயிகளுக்கு வழங்கியது கிடையாது.
மானியதிட்டத்தில் விவசாய கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசின் அங்கீகாரம் பெற்று தங்களுடைய தயாரிப்பின் கருவிகளை வருடா வருடம் தங்களுடைய கருவிகளின் உரிமத்தை புதுப்பித்து கொண்டு வருடாவருடம் அரசு வழங்கும் மானியத்தில் விவசாய கருவிகளை வழங்குவார்கள்.அப்படி மானியத்தில் வழங்க விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய கருவிகளை அரசின் வேளாண்மை துறை,தோட்டக்கலை துறை,வேளாண்மை பொறியியல் துறைகள் மூலம் முன்பதிவு செய்து அரசு வழங்கும்...வருடத்தில் ஒருமுறை விவசாயிகள் மொத்த தொகையை செலுத்தி கருவிகளை வாங்கியபின் மானியத்தொகை விவசாயியின் வங்கி கணக்கிற்கு அரசு மூலம் பண பரிமாற்றம் செய்யப்படும்.இதுதான் இந்தியாவில் இருக்கும் மானியம் வழங்கும் திட்டம்.
வெறும் ஆதார் கார்டு நகல் மட்டும் வாங்கிகொண்டு எந்த மானியதிட்டமும் இதுவரை அரசு வழங்கவில்லை.இது முழுக்க விவசாயிகளை ஏமாற்றும் வேலையை தவிர வேறொன்றும் இல்லை.
விவசாய கருவிகளை மானியத்தில் பெறுவதற்கு அரசின் www.agrimachinery.nic என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுடைய முழு சுய விபரங்களையும்,தங்களுடைய முகவரி,சொத்து சார்ந்த ஆவணங்கல் விபரங்களையும் பதிவு செய்து அது சார்ந்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்தும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அரசு மானியம் ஒதுக்கீடு செய்யும் வரை காத்திருந்து மானியம் பெறும் முறை மட்டும் தான் நடைமுறையில் இருக்கும் அரசின் திட்டம் தான் உண்மையான மானியம் வழங்கும் திட்டம் ஆகும்.
விழித்திடுங்கள் விவசாயிகளே.....
How much this