நாட்டு மாட்டு சந்தை | ரூ.5000 முதல் 1,00,000 வரை | Hello Madurai | Tv | Fm | Web

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கால்நடைகள் விற்பனை சந்தைகள் குறித்து தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்கப்போவது மூன்றாவது சந்தையாகும். முதலில் ஆட்டுதோல் சந்தை குறித்தும், இரண்டாவதாக திருமங்கலம் ஆட்டு சந்தை குறித்தும் பார்த்தோம்.
    இப்பொழுது மதுரை வாடிப்பட்டி மாட்டு சந்தை குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். மாடு வளர்ப்பவர்கள் பலருக்கும் இது தெரிந்த சந்தை என்றபோதும், தெரியாதவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. சரி, நாம் வாடிப்பட்டி மாட்டு சந்தைக்குள் நுழைவோம்.
    ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை தோறும் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மிகப் பெரிய அளவில் மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கலப்பின பால் மாடுகள், ஜெர்சி பசுமாடுகள், கன்றுகள் என அனைத்தும் விற்பனைக்கு வருகிறது.
    புகழ்பெற்ற இந்த கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாகவும், அவற்றை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் செல்வதாகவும் அங்கு வியாபாரத்திற்கு வந்திருந்தவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
    இங்கு மாடுகள் மட்டுமின்றி ஆடுகள், நாட்டு கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நுழைவாயிலில் நுழைவதற்கு முன்பாகவே, லாரிகளில் மாடுகள் ஏற்றிக் கொண்டு வரிசையில் நிற்பதை எங்களால் காண முடிந்தது. செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணிக்கு எல்லாம் சந்தை களை கட்டத்துவங்கிவிடுகிறது. ஆனால் வெளியூரிலிருந்து இங்கு வருபவர்கள் ஒரு நாள் முன்பு இரவே இங்கு வந்துவிடுகின்றனர். அதாவது திங்கள் கிழைமை இரவிலே இங்கு மாடுகள் கொண்டு வரப்படப்படுகிறது.
    ________________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓Online Web Tv : hellomaduraitv...
    💓 Facebook : / hellomaduraitv
    💓 Hello Madurai News website : hellomadurai.in/
    💓 Agri News website : tamilvivasayam...
    💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #நாட்டுமாடு #நாட்டுமாடுசந்தை #வாரச்சந்தை

ความคิดเห็น • 21

  • @vengatindia2577
    @vengatindia2577 3 ปีที่แล้ว +7

    நண்பா உங்கள் குரலில் ஒரு உண்மை உள்ளது இதிலும் மாடு வளர்ப்பவர்கள் அதை விட்டுப் பிரியும் போது அதன் மனவலி அவர்கள் மட்டுமே

  • @dogslover4720
    @dogslover4720 3 ปีที่แล้ว +6

    First view sago

  • @gopiramachandransmk9673
    @gopiramachandransmk9673 3 ปีที่แล้ว +1

    Very super speech brother

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 3 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிகள்

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว

    Thank you for information sir

  • @mommu8
    @mommu8 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ.... வாடிப்பட்டி சந்தையில் கச்சகட்டி இன நாட்டு ஆடுகள் விற்பனையும் விசேஷம் சகோ.... அத பத்தியும் ஒரு பதிவு போடுங்க சகோ... வாழ்க தமிழ்....

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa 3 ปีที่แล้ว

      கச்சகட்டி ஆடு இப்ப கர்நாடகவுல இருந்து கொண்டு வந்துதான் விற்பனை பன்றாங்க.. கர்நாடக வுல தான் இன்னும் அழியாம் நிறைய இருக்கு .

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 3 ปีที่แล้ว +2

    Band tractor..... this is the only way to save our oxen.

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 3 ปีที่แล้ว +2

    Avunga kitta Neega peatti eduga avungala peasa solli video poduga 🌷🌷🌷🌷

    • @kuttyphotography1411
      @kuttyphotography1411 3 ปีที่แล้ว

      கூட்டம் பெரிதளவில் உள்ளதால் நேர்காணல் பதிவு எடுக்க இயலாது சகோ.. அப்படி நேர்காணல் செய்தால் தெளிவான பதிவை உங்களால் கேட்க முடியாது பின் உள்ளவர்களுடைய வார்த்தைகளும் பதிவில் கேட்கும் ஆதலால் தான் இந்த மாதிரி பதிவு செய்கிறோம்

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா
    விலை விபரங்கள் பதிவு செய்யுங்கள்

  • @benadictnova2963
    @benadictnova2963 3 ปีที่แล้ว +1

    Bro மணப்பாறை மாட்டு சந்தை வீடியோ podungu bro plz

  • @rahulaseel7353
    @rahulaseel7353 3 ปีที่แล้ว +2

    Anna vellore maavattam poigai mattu santhai evry tusday nadakuthu mrg 6 maniku la varalam mudinthal cover pannungal nandri 🙏

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 ปีที่แล้ว +1

    Enga ooru arugamayil than vadipatti santhai kudukerathu seavvaai kelamai kudum enga ooru kutladampatti

  • @aakash9333
    @aakash9333 3 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻

  • @hari_17
    @hari_17 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @kavinkumara8144
    @kavinkumara8144 3 ปีที่แล้ว

    epdi vioce over kudakathiga bro nalla ila☹️

  • @sivasenthil1313
    @sivasenthil1313 3 ปีที่แล้ว

    கிடேரி இருந்தால் நாட்டு மாடு பெறிய வகையாக

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 3 ปีที่แล้ว +1

    You people's are feel about cow and oxen. Why not for goat and sheep? Oh my god, RIP 10 lakh goat & sheep are die every day, this goat & sheep are endangering species please save them.

  • @Fish_worl
    @Fish_worl 3 ปีที่แล้ว

    Add kammi pannu ya