சிந்தையில் வழி உள்ளது - ஆசான் ம.செந்தமிழன் - திருநெறிப் பயணம் - ஊதியூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • மரபு வாழ்வியல் மற்றும் ஊர் திரும்புகைக்கான நெறி முறைகளை எடுத்துரைக்கும் ஆசான் ம.செந்தமிழனின் திருநெறிப் பயணம்...
    தலைப்பு: சிந்தையில் வழி உள்ளது
    இடம்:
    கொங்கண சித்தர் குகைக்கோவில்
    ஊதியூர் மலை
    தேதி: 11-09-2020
    ”என்னுடைய நிதி வரவு அல்லது பொருளாதாரம் வரையறுக்கப்படுகிறது. ஏன் வரையறுக்கப்படுகிறது? நிதி வரவு வரையறுக்கப்பட்டால் என்னுடைய சிந்தனை விரிவடைகிறது. இந்த நிதியில் நான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனையால் விரிவடைகிறேன்.” - உரையிலிருந்து ஆசான் ம.செந்தமிழன்

ความคิดเห็น • 42

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +7

    சிந்தையில் வழி உள்ளது
    முயற்சியின் மீது அவநம்பிக்கை கொள்ளுங்கள் அதுவே படைத்தவரிடம் உங்களை ஒப்படைக்க வைக்கும்.
    நீங்கள் முயற்சி செய்தால் விளைவுகளை எதிர்பார்க்கிறீர்கள்.
    போதிய பொருளாதாரமின்மை இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கையை கற்றுதருகிறது.
    பொருளாதார வளர்ச்சி இயற்கையிடமிருந்து உங்களை பிரிக்கிறது.
    பொருளாதாரமே இல்லை என்று நம்புங்கள்.
    பொருளாதாரம் இல்லை என்றால் சிந்தனை மேம்படும்.
    அது இருக்கிறது என்ற நம்பிக்கை, அதன் மீதான பிடிப்பு உங்கள் சிந்தனையை முடக்குகிறது.
    உடனடியாக நீங்கள் இணையதளங்களில் வல்லுநர்களை தேடுகிறீர்கள். யாரிடமாவது ஒப்படைக்க துடிக்கிறீர்கள்.
    உங்களிடம் ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் நீங்கள். உங்கள் உள்ளே இருக்கும் இறையிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கைமுறை வேண்டும்
    விதி
    பணம் இல்லை என்று நம்புங்கள்.
    இல்லை.
    1.பள்ளிக்கூடத்தில் படிக்க வைப்பதற்கு பணம் இல்லை. என்ன செய்வீர்கள்?
    சிந்தனை வளரும்.
    2.வீடு கட்டுவதற்கு பணம் இல்லை.
    சிந்தனை வளரும்.
    3.நிலத்தை வளப்படுத்துவதற்கு பணம் இல்லை.
    சிந்தனை வளரும்.
    4.உடல் நலம் பெறுவதற்கு பணம் இல்லை.
    உடல் வளம் பெறும்.
    பணத்தின் மீது பற்றுக்கொண்டோர், பெரிய மருத்துவர்களை அறிவார்கள்.
    பணத்திற்கும், உடல் நலத்திற்கும் தொடர்பில்லை என்று புரிந்து கொண்டோர், உடலை அறிந்து கொண்டார்கள்.
    5.பணத்திற்கும், நிலத்திற்கும் தொடர்பில்லை என்ற உண்மையை அறிந்துகொள்ளும் போது, நிலத்தை அறிந்துகொள்வீர்கள்.
    6.பணத்திற்கும் கட்டுமானத்திற்கும் அவ்வளவு நெருக்கமில்லை என்று அறிந்துகொள்ளும் போது, கட்டுமான நுட்பங்களை புரிந்து கொள்கிறீர்கள்.
    7.கல்வி பணத்தால் வாங்கப்படக்கூடாது என்ற
    உண்மையை புரிந்துகொள்ளும் போது, கல்வியில் ஆழமான சிந்தனையை பெறுவீர்கள்.
    இதுவே எளிமையான மரபு வழிப்பட்ட
    வாழ்க்கை முறையின் மந்திரம்.
    நிலம் வாங்கும் பொழுதும் பணத்தை அதிகமாக இறைக்காதீர்கள்.
    தொலைதூரம் என்றாலும் சாலை வசதி இல்லை என்றாலும்,மலை அடிவாரம் என்றாலும், மண் வளம் இல்லை என்றாலும், பரவாயில்லை, குறைந்த விலைக்கே நிலம் வாங்குங்கள்.
    உங்களுக்கு உரிமை உள்ள இடத்திற்கே செல்லுங்கள்.
    இவ்வாறு நீங்கள் ஊர் திரும்பி, ஊர் வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும்.
    இதுவே உங்களுக்கு தற்சார்பான நிலை தன்மையை வழங்கும்.
    இந்த விருப்பத்தில் ஏற்கெனவே
    இருப்போர் இவற்றையெல்லாம் நடைமுறை படுத்துவதில் சுணக்கம் காட்டாதீர்கள். உடனடியாக செயல்படுங்கள். அதிக காலம் இல்லை.
    உண்மைக்கு வாருங்கள்.
    காலம் மிக நெருக்கடியான சூழலோடு காத்து இருக்கிறது. ஒரு மூச்சு விடுவதற்கு ஒரு இடைவெளி கிடைத்திருக்கிறது.
    பொருளாதாரம் கண்ணெதிரே பஞ்சு போல பறப்பதை மிக விரைவில் காண்பீர்கள்.
    ஆகவே, நிலம் வாங்குதல் அல்லது வீடு கட்டுதல்
    அடிப்படையான வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுவதை எல்லாம் பதட்ட பட வேண்டாம் ஆனால் தாமதமில்லாமல் நிறைவேற்றிக்கொள்ளுங்கள். இது ஒரு இடைவெளி உங்களுக்கு வழங்கங்கப்பட்டு இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை இயல்பு நிலை திரும்பிவிட்டது. இயல்பு நிலை உண்மையிலேயே திரும்பாது.
    இனி புதிய இயல்புகள் தான் வெளிப்பட வேண்டும்.
    இந்த இடைவெளியில் உங்களை நீங்கள் மரபு வாழ்வியலிற்குள் வரவழைத்துக்கொள்ளுங்கள்,
    பதடமில்லாமல் அதே வேளை தாமதிக்காமல் இவற்றை எல்லாம் நிறைவேற்றுங்கள்.

  • @VINOTHKUMARSbalvin
    @VINOTHKUMARSbalvin 4 ปีที่แล้ว +8

    சிறிய இடைவெளிக்கு பிறகு என் அன்பு அண்ணாவின் இந்த உரை மிகப்பெரிய ஆன்ம (மன) பலத்தை அளிக்கிறது. தாங்கள் வாழ்க வளமுடன் அண்ணா. தங்களின் திருநெறிப் பயணம் வாழ்க வளமுடன் அண்ணா. செம்மை பயணத்தில் இதுபோன்ற பல மைல்களை கடக்க என் அன்பு அண்ணாவிற்கு அகமகிழ்ந்த நல்வாழ்த்துகள்.
    பேரன்பும் நன்றிகளும்,
    ச.வினோத்,
    திருநெல்வேலி.

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 7 หลายเดือนก่อน

    வாழ்வில் வழி ஒப்படைத்து வாழ வழி சிந்தனை நலம் ஐயா ஆசான் மா செந்தமிழன் 🙏🙏🙏வழி முறை ❤❤❤நல்ல வாழ்வு நன்றி ஐயா

  • @sumathikr3437
    @sumathikr3437 4 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா. நலமே விளைய விருப்பம். மிகவு‌ம் நெகிழ்வான, உருக்கமான உரை. “சிந்தனையின் வழி உள்ளது".
    மிக்க நன்றி அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும், வளர்க செழுமையான செம்மையின் பணிகள்.

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +6

    நன்றி. உரையின் சாரமான வரிகளை தந்ததற்கு. இது இனி வரும் உரைகளில் தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @marimuthu3665
    @marimuthu3665 4 ปีที่แล้ว +9

    இவ்வளவு எளிமையான ஒரு உரையை பொறுமையுடன் யமக்கு ஆற்றியதுக்கு நன்றி அண்ணா🙏

  • @naturelover9690
    @naturelover9690 4 ปีที่แล้ว +1

    என் வாழ்வின் சரியான தருணத்தில் தங்கள் பதிவை காண்பித்த
    அம்மை அப்பருக்கு நன்றி, தாங்கள் கொங்கு நாட்டிற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி, அனைவரும் ஒன்றிணைந்து நம் மரபிற்கு திரும்புவோம், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!!

  • @AzhaguVel
    @AzhaguVel 4 ปีที่แล้ว +9

    வேலி எடுத்தே வீணாய் போனவர்கள் உண்டு. இயற்கையை இழிவான போகபொருளாக பார்க்கும் டேட்டா பேர்வழிகள் அடிபடுவது இறையின் ஏற்புடைய செயலே.
    நாளை வாழ வேண்டும் என்ற "சிந்தனையில்" உழைப்பவன் ஏற்புடைய செயலை மேற்கொள்கிறான்.
    நாளை வாழ வேண்டுமே என்ற "பதட்டத்தில்" இயற்கையை அணுகுபவன் மீள இயலாத மனதுன்பத்திலேயே உழல்கிறான். அவனது சேமிப்பு, அர்த்தமற்று போவது இயல்பு.
    செந்தமிழன் உரைக்கின்ற நல் கருத்துக்களை மனனம் செய்யாதீர்கள். உங்களது எதுகை மோனை புகழ்ச்சி எல்லாம் அவருக்கு தேவையே இல்லை. அதெல்லாம் வட்டமலை தாயாரின் காலடி முன் உப்புக்கும் பயன்படாத விருதுக்கு சமம். உங்களது குடும்பத்தில் ஒரு நாளாவது, இறை நேர்மையை வலியுறுத்தும் பொருள் நோக்கமற்ற அன்பை முன்னெடுங்கள்.
    தவறாக இருந்தால் கமெண்டை நீக்க வேண்டுகிறேன்.

    • @thirupathy6910
      @thirupathy6910 3 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா!

  • @hasanchakravathi2322
    @hasanchakravathi2322 4 ปีที่แล้ว +14

    இறை தூதர் உந்தன் தமிழுக்கு யான் அடிமை.

  • @VEERAMANI-ce6tq
    @VEERAMANI-ce6tq 4 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா நானும் இவ்வழிநடக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 4 ปีที่แล้ว +2

    👍💪. உங்கள் தமிழே அம்மை அப்பரின் குழந்தை என்பதற்கு சான்று

  • @VKC_EDIT
    @VKC_EDIT 4 ปีที่แล้ว +7

    அன்பான வணக்கம்

  • @jeyapriyaayyanar8342
    @jeyapriyaayyanar8342 4 ปีที่แล้ว +8

    11-09-2020 (வெள்ளி கிழமை) - காலை 10 மணி - காங்கேயம்
    கொங்கண சித்தர் குகைக்கோவில், ஊதியூர் மலை
    (ஊதியூர், காங்கயத்திலிருந்து தாராபுரம் வழியில் உள்ளது)
    நிகழ்விடம் ஊதியூரிலிருந்து குண்டடம் செல்லும் வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ளது (Sony crusher அருகில்)
    தொடர்புக்கு:
    மணி, அருண் - 8825769397
    *************************** *********************************
    13-09-2020 ஞாயிற்று கிழமை - காலை 10 மணி - போடி
    பரமசிவன் கோவில், போடிநாயக்கனூர்.
    நிகழ்விடம் போடிநாயக்கனூர்-மூனார் தேசிய நெடுஞ்சாலையில் 5 வது கிலோமீட்டரில் (CPA கல்லூரிக்கு முன்பாக) இடது புறம் திரும்பினால் 1கிமீ தொலைவில் உள்ளது.
    தொடர்புக்கு:
    ரவி - 75581 55327
    *************************** *********************************
    சிவகாசியில் …
    15-09-2020, செவ்வாய் கிழமை - காலை 11 மணி
    ஆலடி ஈசன் கோவில், ஈஞ்சார் கிராமம்
    நிகழ்விடம் சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் சாமிநத்தம் அருகில் உள்ளது.
    தொடர்பு எண்: விக்னேஷ் - 9488038119
    *****************************************************
    கன்னியாகுமரியில் …
    17-09-2020, வியாழக்கிழமை - காலை 11 மணி
    மருந்துவாழ் மலைக்கோவில், பெத்தையடி.
    மருந்துவாழ் மலை நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 13 கிமீ தொலைவில் சாலைக்கு இடது புறமாக வரும் பிரிவினுள் உள்ளது.
    தொடர்பு எண்: இராமசாமி - 9344788172, இளவேனில் - 9962073174
    ******************************************************
    பாபநாசத்தில் …
    18-09-2020, வெள்ளிக்கிழமை - காலை 11 மணி
    வன்னியப்பர் (அக்னீஸ்வரர்) ஆலயம், ஆழ்வார்குறிச்சி.
    ஆலயம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் 500மீ தொலைவில் உள்ளது.
    தொடர்பு எண்: சரவணன் - 9880617183

  • @kasinathan7268
    @kasinathan7268 4 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா

  • @venkatesanvenkatesan5608
    @venkatesanvenkatesan5608 4 ปีที่แล้ว +2

    ஆசானே உங்கள் கருத்துக்கள் மனதின் ஆழமாக பதிவு.வணங்குகிறேன்

  • @gunasekaranks5808
    @gunasekaranks5808 4 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தில் மகிழ்சி ஐயா

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 3 ปีที่แล้ว

    நன்றி தமிழின் எளிமையான பேச்சுநடை மகிழ்ச்சி நண்பரே

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 4 ปีที่แล้ว +7

    நன்றி 🙏🙏🙏🙏

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 4 ปีที่แล้ว +7

    அறிவு அறியாமை இரண்டையும்
    அறியும் வாலறிவு

  • @harichandra1141
    @harichandra1141 2 ปีที่แล้ว

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    ஆசான் செந்தமிழன் அண்ணா
    வாழ்க வளமுடன்...
    தாய் வாழ்க தந்தை வாழ்க
    இறையருள் பெருமையில் வாழவே வேண்டுகிறோம் விரும்புகிறோம்

  • @YRSINFO
    @YRSINFO 4 ปีที่แล้ว +6

    நெஞ்சம் நெகுளும் பயணம்....சென்னை வரும்போது தயவு செய்து தெரியப்படுத்தவும்...

  • @pothi
    @pothi 4 ปีที่แล้ว +14

    6:38 ஒரு நாத்திகரின் அனுபவம்.
    18:31 உணர்வு மெய்ப்பாடு அடைதல் பற்றி.
    27:26 ஊர் திரும்புதல் பற்றி.
    37:20 வரண்ட நிலங்களை வனமாக்கியோர் பற்றி.
    1:02:27 மரபு கல்வி பற்றி.

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari ปีที่แล้ว

    🙏

  • @amuthavallisaravanan6204
    @amuthavallisaravanan6204 4 ปีที่แล้ว +8

    திருவெண்ணொய்நல்லூர் பகுதிக்கு எப்போது வருவீர்கள்? ஐயா. வந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

  • @user-lc6es4sg8c
    @user-lc6es4sg8c 2 ปีที่แล้ว

    அற்புதமான உரை.

  • @easvavijay7448
    @easvavijay7448 4 ปีที่แล้ว +6

    இறை வா நன்றி

  • @elan800
    @elan800 4 ปีที่แล้ว +9

    பணம் இல்லை என்று நம்புங்கள் சிந்தனை உங்களை அழைத்து செல்லும் . - உண்மை :-)

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    Aiya blessings you are god

  • @easvavijay7448
    @easvavijay7448 4 ปีที่แล้ว +4

    தகவல் தெறியவில்லை நானும் கலந்து கொண்டிருப்பேன். நான் அப்பகுதியில் தான் வசிக்கிறேன்

    • @Sundar...
      @Sundar... 4 ปีที่แล้ว

      th-cam.com/video/7kHK_YqJniQ/w-d-xo.html

    • @easvavijay7448
      @easvavijay7448 4 ปีที่แล้ว +2

      ஆசான் செந்தமிழன் அவர்கள் ஊதியூர் வரும் தகவல் தெறியவில்லை. ஆசானை எப்போ சந்திப்பேன் என்ற ஆவலாக இருந்தேன். மீண்டும் சிந்திக்க விருப்பம்.

  • @SarathKumar-mk1mi
    @SarathKumar-mk1mi 4 ปีที่แล้ว

    th-cam.com/channels/nf37lIp8m4ljc8ZArVHDOw.html

  • @ragavantamil8918
    @ragavantamil8918 4 ปีที่แล้ว +5

    நிலம் இல்லாத ஒருவன் இவற்றையெல்லாம் நிறைவேற்ற பொருளாதாரத்தை நாடிதானே ஓடவேண்டி இருக்கிறது. உங்கள் உரை பொருளாதாரத்தில் நிறைவடைந்த அல்லது ஓரளவேனும் பணம் படைத்த நடித்தர நகர்வாழ் மக்களுக்கானதாக இருக்கிறது.

  • @ramantamizhvazhka.2969
    @ramantamizhvazhka.2969 4 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா

  • @trutubelistthanikachalam1825
    @trutubelistthanikachalam1825 4 ปีที่แล้ว +4

    நன்றி.

  • @shreelekha2647
    @shreelekha2647 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏