பெண்ணாக ஏன் பிறந்தேன் | pengal kavithai | Ksd kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 719

  • @aavilashaliniv815
    @aavilashaliniv815 3 ปีที่แล้ว +334

    ஆணாக இருந்தும் பெண்கள் உணர்வை இவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர் .... சொல்ல வார்த்தைகளே இல்லை..

  • @karthikeyanmuthusamy7982
    @karthikeyanmuthusamy7982 3 ปีที่แล้ว +250

    மாதம்மூன்று நாட்கள்
    மட்டுமல்ல வேதனை...
    ஆளான பின்னாலே
    அத்தனைநாளும் சோதனை.... அருமையான வரிகள் ஒரு ஆணாக இருந்து எப்படித்தான் உங்களால் பெண்களின் நிலையை அப்பட்டமாக எழுதமுடிகிறதோ...... வாழ்த்துக்கள் தோழரே......

  • @meenaswamy4507
    @meenaswamy4507 ปีที่แล้ว +3

    பெண்ணாக உணர்ந்து எழுதிய கவிதை போல் உள்ளது. நச்சென்ற வரிகள். நச்சை சுமக்கும் எம் நினைவுகள்.

  • @தன்யாஜனகா
    @தன்யாஜனகா 3 ปีที่แล้ว +67

    மாதம் மூன்றுநாட்கள் மட்டுமல்ல வேதனை
    ஆளான பின்னாலே அத்தனைநாளும் சோதனை உண்மையான வரிகள் கவிஞரே🙏🙏

  • @MalarMakeover
    @MalarMakeover 3 ปีที่แล้ว +133

    இந்த கவிதையை படிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வருகிறது என்னோட வாழ்க்கையை கவிதையாக எழுதியது போல் இருந்தது

  • @Breathless8914
    @Breathless8914 3 ปีที่แล้ว +152

    "பிள்ளைப்பெற மட்டுமா பிறந்தோமுனு தோனிடுச்சே எழுத்தற்ற காகிதமாய் எங்கள்வாழ்க்கை ஆகிடுச்சே"
    அருமையான வரிகள் ... மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை எதிர்பாக்கின்றேன்...

  • @JuniorXavier4u
    @JuniorXavier4u 3 ปีที่แล้ว +122

    ஆணாக பிறந்திருக்கலாமே என்று ஏங்காத பெண்ணாய் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கான நாம் கொடுக்கும் உண்மையான சுதந்திரம்

    • @sreesree7328
      @sreesree7328 3 ปีที่แล้ว +3

      Nenga boy ah

    • @JuniorXavier4u
      @JuniorXavier4u 3 ปีที่แล้ว +4

      @@sreesree7328 ஏங்க இப்டி ஒரு சந்தேகம்...அக்மார்க்,ஹால்மார்க்...முத்திரை பெற்ற பையன்தாங்க...😉

    • @paavai.p6514
      @paavai.p6514 3 ปีที่แล้ว +2

      👌👌👌

    • @reeganjeni2309
      @reeganjeni2309 3 ปีที่แล้ว +2

      Super

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsyFRT90F0axg?feature=share

  • @anitharajan6464
    @anitharajan6464 3 ปีที่แล้ว +175

    எனக்கும் இந்த கவிதை பொருந்தும்......
    ஏக்கங்கள் மட்டும் தான் விவரம் தெரிந்த நாள் முதல்😞

  • @sujasunny2500
    @sujasunny2500 7 หลายเดือนก่อน +4

    Thank you, sir. I won many Tamil poem recitation competitions in Kerala. I chose your Kavitha for the competition and won first prize❤ I am from Kerala and I am following all your updates. I like all your Kavithaigal 😁✌️Nandri sir. Unga Ella kavithaikkum oru uyir irukkuthu endru thonnuthu 😊❤️

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 3 ปีที่แล้ว +9

    செந்தமிழ்தாசனாரே...பெண்ணின் மனதை ஆராய்ச்சி செய்தீரோ....எங்கள் வலியை....எப்படி ஐய்யா அறிந்தீரோ.....படைப்புகள் தொடரட்டும்.....வாழ்க...நீயும் உன் கவிதைகளும்....❤

  • @AnandhavalliAnandhavalli-s2z
    @AnandhavalliAnandhavalli-s2z 9 หลายเดือนก่อน +2

    Avvalavu alagaga irukku kavithai romba thanks solla mudiyatha varthaigalai sonnatharkku

  • @kavithamurugan3997
    @kavithamurugan3997 3 ปีที่แล้ว +31

    ஓடைபோல பூமியெங்கும் ஓடியாட ஆசையுண்டு
    நத்தைகண் மனிதராலே
    நோண்டிகூட ஆடலயின்று...... உண்மையான வரிகள்......

  • @srisai1416
    @srisai1416 3 ปีที่แล้ว +2

    சகோதரா சிறந்த புரிதல் வாழ்த்துக்கள்....பெண்களை புரிந்தால் அது போலே சொர்க்கம் ஒன்றுமில்லை அவளுக்கு. எந்த பெண்ணும் தீர்வை கூட நாடுவதில் லை... தனது கஷ்டத்தை உணர்ந்தாலே போதும் அவளே சூழ்நிலையை தன் சிரிப்பால் மாற்றி விடுவார்கள். அதை செய்ய ஏனே ஆண்கள் முன்வருவதில்லை

  • @ramanilakshmanan809
    @ramanilakshmanan809 3 ปีที่แล้ว +6

    அனைத்து வரிகளும் நச்சுன்னு இருக்கு... இந்த கவிதை பெண்களின் வலிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. நன்றி... தங்களது புரிதலுக்கு.... நெடுநாள் பாரம் இறக்கி வைத்த உணர்வு தந்ததற்கு.... நன்றி நன்றி நன்றி.....

  • @kavinganbellmani
    @kavinganbellmani 3 ปีที่แล้ว +34

    அருமையான வரிகள்
    நான் வியந்த கவிதை, பெண்களுக்கும் மனம் உண்டு புரிந்து கொள் மனமே சொல்லும் கவிதை

  • @hiphopmaliga8423
    @hiphopmaliga8423 3 ปีที่แล้ว +101

    பெண்ணாக பிறந்தது தவிர வேற என்ன பாவம் செய்தோம் இறைவா ,

  • @vbvibrant517
    @vbvibrant517 2 ปีที่แล้ว +2

    Super bro
    ஆணுக்கு தனி பாசம் பெண்ணுக்கு தனி பாசம் என்று பெற்ற தாய் கூட‌ சில நேரங்களில் திசை மாறி விடுகின்றாள்...

  • @dhivyadivi8751
    @dhivyadivi8751 3 ปีที่แล้ว +2

    துள்ளியாடும் கனவுகளை துறவறமா அனுப்புவது எவ்வளவு ஆழமான வரிகள் ஒவ்வொன்றும்

  • @MalarMakeover
    @MalarMakeover 3 ปีที่แล้ว +87

    என்னுடைய தனிமையை யார் வந்து நிரப்புவது
    என்னுடைய மௌனத்தை யார் வந்து உலுப்புவது

  • @shanthisoujanya8718
    @shanthisoujanya8718 2 ปีที่แล้ว +2

    பரம்பொருள் ஆன பராபரனே
    பெண்இனத்தின் அருமை இக்
    கவி படைத்த அரும்பொருளே
    பெண்மையை போற்றிய பேர் இன்பமே வாழ்க உங்கள் கவி
    வளர்க உங்கள் புகள்
    நன்றி🙏

  • @vimalakala5921
    @vimalakala5921 3 ปีที่แล้ว +14

    ஓடைபோல பூமியெங்கும்
    ஓடியாட ஆசையுண்டு
    நத்தைகண் மனிதராலே
    நொண்டீகூட ஆடலயின்று. .
    இந்த வரிகள் சூப்பர் இது உண்மை தான் நன்றி நண்பரே

  • @srikumaran8022
    @srikumaran8022 3 ปีที่แล้ว +11

    என் மதிப்புக்குரிய கவிஞரே அனைத்து வரிகளும் அற்புதமான வாிகள் இந்த கவிதைகளை படிக்க என் உள்ளம் என்ன பாக்கியம் செய்ததோ 🙏👌👌👌

  • @indirajithindirajith2004
    @indirajithindirajith2004 3 ปีที่แล้ว +9

    பெண்களின் வாழ்க்கை முறையை உங்கள் கவிதையில் அருமையாக கூறிவிட்டீர்கள் .👌👌👌👌👌👌👌

  • @thamilachilaw7145
    @thamilachilaw7145 3 ปีที่แล้ว +10

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிறேன்.மிக அருமை👍👍

  • @prabakaranprabhu9171
    @prabakaranprabhu9171 3 ปีที่แล้ว +48

    அருமையான வரிகள் கவிஞர் இந்த வரி தான் பிடித்து இருக்கு என்று சொல்ல முடியவில்லை அனைத்து வரிகளுக்கும் நான் இன்று அடிமையானேன்....😍😘😘😘😘

  • @aishukarthi9753
    @aishukarthi9753 3 ปีที่แล้ว +1

    அருமையான வார்த்தைகள், ஒவ்வொரு வரியும் உண்மைகள் ,,பெண்களின் வேதனையை அருமையாக பேசினர் தலைதாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் வரிகளுக்காக

  • @priyakamal2072
    @priyakamal2072 3 ปีที่แล้ว +10

    அத்தனை வரிகளும் உண்மை மிக அழுத்தமாக உள்ளது ஒவ்வொரு வரியும்.Super pa😍😍😍😍👏👏👏👏

  • @viji2252
    @viji2252 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்... சொல்லாமலே புரியுது சில ஆண்களுக்கு.. பெண்களின் வலி🤝🤝🤝

  • @kumarkansikalingesh538
    @kumarkansikalingesh538 3 ปีที่แล้ว +2

    பெண்ணின் வாழ்க்கையை அழகாக வார்த்தையில் அள்ளிப்போட்ட விதம் அழகோ அழகு. இக்கவிதை கண்முன் உயிரோட்டத்தை ஊட்டும் வாசிப்பவர் மனதிலே.. அருமை 💐

  • @AngelaMaryJ
    @AngelaMaryJ 3 ปีที่แล้ว +3

    Indru niraya pengalin nilai ithu thaan kaviye.. Romba alagana aalamana kavithai ithu.... Semmma..

  • @shivani4373
    @shivani4373 ปีที่แล้ว +2

    கவிஞரே மகனை இழந்து தவிக்கும் ஒருவருக்கு ஆறுதல் கவிதை தாருங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @keerthi5421
    @keerthi5421 3 ปีที่แล้ว +2

    பிள்ளைப் பெற மட்டுமா
    பிறந்தோமுனு தோனிடுச்சே
    எழத்தற்ற காகிதமாய்
    எங்கள் வாழ்க்கை ஆகிடுச்சே
    உண்மையான வரிகள்

  • @logasoundarya8821
    @logasoundarya8821 3 ปีที่แล้ว +4

    பெண்ணின்‌‌ வலிகளை‌‌ அப்படியே‌ பெண்ணின்‌ நிலையிலிருந்து அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். வரிகள்‌‌ ஒவ்வொன்றும்‌ அருமை.‌ அவ்வரிகளுக்கு‌ ஏற்ற‌ உங்கள் குரல்நடை மேலும்‌ கவிதையை‌‌ அழகூட்டுகிறது.

  • @seethalakshmi8746
    @seethalakshmi8746 3 ปีที่แล้ว +3

    பெண்ணை மதிக்கதா இந்த சமுதாயத்தில் எங்களை கவிதைகளால் வர்ணனிப்பது சிறப்பாக உள்ளது. கவி. கவிஞர் வாழ்க.

  • @இப்படிக்குதமிழி
    @இப்படிக்குதமிழி 3 ปีที่แล้ว +3

    எனக்கு தோன்றிய வரிகள்
    உன் நிழலில் வாழ்வதாக
    நித்தமும் சொல்கிறாயே
    உனக்காகவே வாழும் என்னை
    சத்தமின்றி கொல்கிறாயே

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +6

    அருமை ! இனிய கவி ! பெண் தெய்வமே தாயாகிரால் .. பெண்ணே பெருமை ! பெண்மை புனிதம் !

  • @shivanibhavani7172
    @shivanibhavani7172 3 ปีที่แล้ว +1

    பாரதியாரின் மருபிறவி நீங்கள். அருமையான வரிகள் sir

  • @kannanbrindha170
    @kannanbrindha170 3 ปีที่แล้ว +1

    Vera level kavidhai sir oru anaga penin mana aluthathathai purundhu eludhiya adha panavuku salute

  • @nithyanithya1760
    @nithyanithya1760 3 ปีที่แล้ว +56

    😭 உண்மையாக என் வாழ்க்கையில் வரிகள் இந்த வரிகளை கேட்கும் போது கண்ணீர் கொட்டுகிறது 😭

  • @mydiary5282
    @mydiary5282 3 ปีที่แล้ว +24

    மிக ஆழமான வரிகள், இந்த சமூகம் யோசிக்க வேண்டிய வார்த்தைகளை கவிதையாக எழுதியதற்கு மிக்க நன்றி 🙏🙏

  • @tamilthangaraj183
    @tamilthangaraj183 3 ปีที่แล้ว

    அருமை
    அன்புக் கவிஞனே
    வாழ்த்து மலர்த் தூவல்களுடன்
    கவிஞர்.தா.தமிழ்த் தங்கராஜ்

  • @umairaumar9993
    @umairaumar9993 3 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள்.... என் வாழ்க்கையின் சுவடுகள்..... நன்றி சகோ மிக அருமை...

  • @jayanthijayapani9533
    @jayanthijayapani9533 3 ปีที่แล้ว +1

    Pengalin unarvugalai kavithaiyaai udhirthu vitergal nandri...

  • @logilogi4665
    @logilogi4665 3 ปีที่แล้ว +1

    அத்தனை வரிகளும் அவ்வளவு அற்புதம்

  • @PattusGalattakitchen
    @PattusGalattakitchen 3 ปีที่แล้ว +5

    No words to describe ❤️ dramatic ❤️மாதம் மூன்று நாட்கள் மட்டும் அல்ல வேதனை🥺 ஆளான பின்பு அத்தனை நாளும் சோதனை🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @muthubala9151
    @muthubala9151 3 ปีที่แล้ว +5

    கவிதை அருமை அண்ணா. பெண்ணாக பிறந்து பாவத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேதனை. இனி எப்பிறவியிலும் பெண்ணாக மட்டும் படைக்காதே இறைவா

  • @RajiLakshmi-to3so
    @RajiLakshmi-to3so 3 ปีที่แล้ว +1

    இந்தக் கவிதையை எழுதியதற்கு மிக்க நன்றி

  • @hameehamee6327
    @hameehamee6327 2 ปีที่แล้ว +1

    நன்றி என் மனமாற்த நன்றி கவிஞ்சரே

  • @tamilthai1987
    @tamilthai1987 3 ปีที่แล้ว +19

    துள்ளயாடும் நினைவுகளை துறவறமா அனுப்புவது ? வரிகள் அருமை

  • @mtboominathan
    @mtboominathan 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான கவிதை...ஒவ்வொரு வரிகளிலும் உண்மை வழிகிறது.... வணங்குகிறேன் கவிஞரே...

  • @pnivi9093
    @pnivi9093 3 ปีที่แล้ว +8

    ஒரு பெண்ணின் மனதை அப்படியே சொன்னீர்கள் அருமை 😍😍😍

  • @kasthupiraba6795
    @kasthupiraba6795 3 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா.. பெண்ணின் வலிகளை அப்பிடியே அழகாக கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  • @oswinoswin4541
    @oswinoswin4541 3 ปีที่แล้ว

    அருமையான கவிதை ஒவ்வொரு பெண்களுக்கு உள்ள வேதனை உணர்ந்து வடித்த வரிகள் நன்றி நன்றி கவிஞரே

  • @thenmozhithenmozhi761
    @thenmozhithenmozhi761 3 ปีที่แล้ว +3

    பெண்ணின் உணர்வுகள் உணர்ந்த கவிஞன்🤝👌👏👏👏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா பெண்களை புரிந்ததற்கு நன்றி அன்பு வணக்கம் நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi7895
    @subbulakshmi7895 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கவிதை !கவிஞரே!மனமார்ந்த நன்றிகள் பல !!

  • @BalaBala-vf4wn
    @BalaBala-vf4wn 2 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் பெண்கள் மனதில் இருக்கும்ஏக்கத்தை அழகான வரிகளில் வர்ணிக்கிறீர்...கவிஞரே...சொல்ல வார்த்தைகளே..இந்த கவிதை மிகவும் எனக்கு பிடித்து இருக்கிறது...

  • @rahamathnisha6803
    @rahamathnisha6803 3 ปีที่แล้ว

    அருமையான வார்த்தைகள் நீங்கலாவது பெண்ணினத்தை புரிந்ததுக்கு நன்றி

  • @pavithrajeevarani4758
    @pavithrajeevarani4758 3 ปีที่แล้ว +2

    அருமையான கவிதை . ஐயா உங்கள் கவிக்கு நான் அடிமை

  • @animoniya2951
    @animoniya2951 3 ปีที่แล้ว

    நா யாரிடமும் சொல்ல முடியாம மனசுல புலுங்குன வார்தைகளை உங்கள் கவிதையில் கேக்கையில் கண்ணீர் வருகிரது நண்பரே உங்களை போல் எல்லா ஆண்களும் இருந்தாள் பெண் அடிமைபட்டு கிடக்க மாட்டால் வருடம் 2021 ஆனதர்க்கு அப்பரமும் நன்றி நண்பரே

  • @suganthis7328
    @suganthis7328 3 ปีที่แล้ว +1

    Senthamizlthasan Ungaluku 🙏. En ulla pulambal intha kavithai

  • @g.vijayalakshmi7114
    @g.vijayalakshmi7114 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான ஆழமான கருத்துடைய கவிதை........உங்கள் கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்...

  • @sabeesabeetha9177
    @sabeesabeetha9177 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள் அண்ணா. சிறகில்லா பறவையாக பெண் இனத்தை ஏன் படைச்ச. ....
    உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா

  • @vasahg2081
    @vasahg2081 ปีที่แล้ว +1

    அண்ணா பெண்களின் உணர்வுகளை புரிந்து கவிதையை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அண்ணா துயரத்தில் இருக்கும் பெண்கள் இன்னும் நிறைய உண்டு நாங்கள் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாது 😢😢😢😢😢 பெண்கள் முடிந்தவரை போராடி போராடி எங்களுக்கு தோல்வியைத்தான் கண்டோம் கடைசியாக மரணம் என்ற முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம் இதுதான் முடிவு 😢😢😢😢😢

  • @ashwamithra6085
    @ashwamithra6085 3 ปีที่แล้ว +1

    அற்புதம்....பெண்மையின் மென்மையை உணர்ந்த கவி🤍✍👌

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +5

    உண்மையான வரிகள் எங்கள் பெண் இனத்திர்க்கே👏👏👏👌👌

  • @kalaiarasi7482
    @kalaiarasi7482 3 ปีที่แล้ว +1

    உண்மையான வரிகள்.... இது வெறும் கவிதை அல்ல பல பெண்களின் மனதில் உள்ள உணர்வே..... அதில் நானும் ஒருவர்...

  • @manjaricreations9100
    @manjaricreations9100 3 ปีที่แล้ว +1

    அருமை கவிஞரே! வாழ்க! வாழ்க!! தொடரட்டும் உம் தமிழ்ப் பணி!

  • @Fathimamehnaz-s8d
    @Fathimamehnaz-s8d 2 หลายเดือนก่อน

    Wooooooow 😭 அருமையான வரிகள் 😭 வலிகள் அத்தனையும் 😭

  • @BalaBala-vf4wn
    @BalaBala-vf4wn 3 ปีที่แล้ว +1

    அருமையான ஒரு பதிவுமிக்க நன்றி

  • @Ms.K31
    @Ms.K31 3 ปีที่แล้ว +2

    Kekumpothu kannu kalagituchi. Thanks enagaloda maunathai varthaiayala vivarichathuku

  • @aravindhanakash8466
    @aravindhanakash8466 3 ปีที่แล้ว

    உங்கள் எழுத்துகளில் என் எண்ணங்களை கொட்டிவிடாய்
    பல நாட்களுக்கு பிறகு நான் கேட்ட அருமையான கவிதை
    நன்றி சகோ.....

  • @kokilayuvaraja2022
    @kokilayuvaraja2022 3 ปีที่แล้ว +1

    நிதர்சனக் கவிதை!
    நெஞ்சைத் தொடும் கவிதை!
    ஓரிரு நிமிடமாயினும்
    இதயத்தை வருடிய கவிதை!
    ஆழ்மன அழுத்தத்தை
    கூறியதோர் கவிதை!
    வாழ்வெனும் நரகத்தை
    விவரித்ததோர் கவிதை!

  • @prashanthininilu4051
    @prashanthininilu4051 3 ปีที่แล้ว

    மிக அருமை
    பெண்னாக ஏண் பிறக்க
    வைத்தாய் என்று கடவுளிடம் மட்டுமே கேள்வி கேட்டக முடியும் ஆனால் பதில் கிடைக்காது.......
    பெண் என்பவள் மற்றவர் விருப்பங்களுக்காக வாழும் பிறவி.....
    ஆனால் விதியை மாற்ற முடியாது......

  • @janathiru2059
    @janathiru2059 2 ปีที่แล้ว

    வார்த்தை மில்லை உம்மை பாராட்ட அருமை அருமை அருமை

  • @Devi-xu4hd
    @Devi-xu4hd 3 ปีที่แล้ว +2

    எதையும் சொல்லி அடைக்காதே... சிறப்பான வரிகள் அண்ணா.

  • @keerthanajayakumar20
    @keerthanajayakumar20 2 ปีที่แล้ว +1

    Iniya um Kaviku keerthanaiyin nandrigal...

  • @tharadevi7105
    @tharadevi7105 2 ปีที่แล้ว +1

    இது போல் கவிதைகளை கேட்க, இன்னுமிரண்டு செவிதன்னை கேட்பேனோ!.....,

  • @dr.christyshealthcare6439
    @dr.christyshealthcare6439 3 ปีที่แล้ว +1

    உங்கள் கவிதை பார்த்து கவிதை எழுத ஆரம்பித்தேன் நன்றி

  • @senthilk3653
    @senthilk3653 3 ปีที่แล้ว

    அருமை கவிதைகளின் வார்த்தைகளும் அதை வாசித்த அவரின் குரலும் மிக அருமை

  • @madhuselvam1402
    @madhuselvam1402 3 ปีที่แล้ว +1

    Nandri 🙏 sir oru ponna padura kazhtatha ivlo azhaga eduthu soldringa

  • @eswarisundar6303
    @eswarisundar6303 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான வரிகள் அண்ணா... இக்காலத்திற்கு உகந்த கவிதை...

  • @muthuvadivanvadiven6170
    @muthuvadivanvadiven6170 2 ปีที่แล้ว

    அருமையான கவிதை வரிகள் கவிஞர் அண்ணா.நன்றிகள்.

  • @sandhiyaraja6753
    @sandhiyaraja6753 3 ปีที่แล้ว +1

    அறுபுதம் மநா வரிகள் சோள வார்த்தைகள் இல்லை 🙏

  • @aswinivenkatesan8308
    @aswinivenkatesan8308 3 ปีที่แล้ว +1

    உங்கள் கவிதை வரிகள் எந்தன் வாழ்க்கையின் வலியை எழுத்து வடிவில் நான் காண்கிறேன். அய்யா😭😭😭😭😭

  • @priyadharshinipriyadharshi2902
    @priyadharshinipriyadharshi2902 3 ปีที่แล้ว +1

    கவிதை கேட்டு சிரிக்கிறேன்... என் வாழ்க்கையும் இதுவே என்று ... இப்போதெல்லாம் கவலையில் சிரித்து பழகிவிட்டேன் ☺️

  • @tarasusgaming6050
    @tarasusgaming6050 3 ปีที่แล้ว +20

    என் வாழ்க்கை உங்கள் வரிகளில்...😭😭😭😭😭

  • @asrafbanuasra2251
    @asrafbanuasra2251 3 ปีที่แล้ว +2

    அன்பு பாசம் காதலை யாரிடத்தில் கெஞ்சுவேன்... எத்தனை நாள் சமூகத்தின் பார்வைகாக அஞ்சுவேன்😓💔😖🥺💯

  • @aarthi7117
    @aarthi7117 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. உங்கள் கவிதை விடியலில் பெண்களின் வாழ்வியல் சில அடங்கும்.... ஆனாலும் சில உள்ளடாங்க பக்கங்களும் உண்டு...💥

  • @thanalakshmi9302
    @thanalakshmi9302 3 ปีที่แล้ว +1

    அத்தனையும் அருமையான வரிகள்

  • @rajeswarik9
    @rajeswarik9 3 ปีที่แล้ว

    உங்கள் கவிதையின் வர்ணனைகளை நான் மிகவும் ரசிக்கிறேன் ஒரு ரசிகராக
    உங்கள் ரசனைக்கு எனது வாழ்த்துக்கள்.
    நீங்கள் மென்மேலும் வளர விரும்பும் ஒரு ரசிகையின் ஏக்கங்களும் கூட

  • @prkaliappankaliappan8339
    @prkaliappankaliappan8339 3 ปีที่แล้ว

    அட்டகாசமான, அற்புதமான கவிதை வரிகள். பாராட்டுகள்.

  • @7200463106
    @7200463106 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் கூறும் அத்தனை வார்தைகளும் சத்தியம் 😔😔😔ஆனால் இந்த சமூகத்தில் ஒரு சில நல்ல ஆண்களும் உண்டு எல்லோருக்கும் இது பொருந்தாது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @v.k7919
    @v.k7919 3 ปีที่แล้ว +3

    அருமையான கவிதை வரிகள் அண்ணா... பெண்ணின் வலிகளை வரிகளாக வடித்துள்ளீர்கள்

  • @kalidosssk9534
    @kalidosssk9534 3 ปีที่แล้ว +2

    உங்கள் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது நன்றி கவிஞரே

  • @vmsvms5335
    @vmsvms5335 3 ปีที่แล้ว +2

    உண்மை வரிகள்
    உங்கள் கவிதை பயணம் தொடரட்டும்... 👍

  • @renugadevi9865
    @renugadevi9865 3 ปีที่แล้ว

    கடைசி நான்கு வரிகள்
    கடவுளுக்கு கேட்க வேண்டும்
    கருணை என்று ஒன்றிருந்தால்
    பெண்ணிணத்தை காக்க வேண்டும்....
    கவிதை அற்புதம்....

  • @arulmozhim201
    @arulmozhim201 3 ปีที่แล้ว

    ஒரு பெண்னாக நான் ரசித்த கவிதை அருமை உண்மை உள்ள கவிதை சூப்பர்

  • @saraswathishankaran3947
    @saraswathishankaran3947 3 ปีที่แล้ว

    கணவன் இன்றி குழந்தைகளுக்காக வாழும் பெண்களுக்காக இந்த பதிவு சமர்பணம் என்றும் சிங்கபெண்ணாக உழைக்கும் பெண்களுகாக👍👍💪💪💪👩‍👧👩‍👦

  • @tamilbeauty5662
    @tamilbeauty5662 3 ปีที่แล้ว +2

    ஒரு பெண் கவிஞரால் கூட இவ்வாறு எழுதிட இயலாது அண்ணா .....பெண் உள்ளம் போல் தங்கள் வார்த்தைகளும் அதற்க்குள்‌ அடங்கிய அர்த்தம் அவ்வளவு எளிதில் புரியாது.... இரண்டையும் புரிந்து கொள்ள இனி எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை.... விரைவில் மாற்றத்தை- காண காத்திருக்கிறேன்..... தமிழழகன் 👑