கும்ப ராசி ஆகஸ்ட் 2024 மாத ராசிபலன் மற்றும் கிரக நிலைகள் | Kumbam Rasipalan August 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #கும்பராசிஆகஸ்ட்2024 #ராசிபலன் #கும்பராசி #ஆகஸ்ட்2024
    வணக்கம் கும்ப ராசி நண்பர்களே! கோவை ஆஸ்ட்ரோ சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த வீடியோவில், 2024 ஆகஸ்ட் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேளையில் முன்னேற்றம் மற்றும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். சூரியன் ஆறாவது வீடு முதல் ஏழாவது வீடு வரை செல்வதால், தொழிலில் சவால்களை எதிர்கொண்டு, அதனை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். வியாபாரிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். செவ்வாய் மற்றும் புதன் ஏழாவது வீட்டில் இருப்பதால், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் பார்ட்னெர்ஷிப் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். சனி பன்னிரெண்டாவது வீட்டில் இருப்பதால், வேளையில் சோர்வடையும் நிலை ஏற்படலாம். அதனை சமாளிக்க நிதானமாக செயல்பட வேண்டும். நிதி நிலைமையில் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சூரியன் ஏழாவது வீட்டில் இருப்பதால், வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். வியாழன் நான்காவது வீட்டில் இருப்பதால், நிதி நிலை மேம்படும். முதலீடுகளில் லாபம் அடையலாம். சனி பன்னிரெண்டாவது வீட்டில் இருப்பதால், செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்புகளை அதிகரிக்க வேண்டும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சந்திரன் முதலாவது வீடு முதல் பன்னிரெண்டாவது வீடு வரை செல்வதால், குடும்பத்தில் மனநிலையை சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுக்கிரன் ஆறாவது வீட்டில் இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். உறவுகளில் சுமுகம் இருக்கும். மாணவர்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில், மாணவர்கள் சரியாக கவனம் செலுத்தினால் விரும்ப தக்க வெற்றி கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் மற்றும் புதன் ஏழாவது வீட்டில் இருப்பதால், உடல் நலத்தில் சுமாரான நிலை இருக்கும். மனஅழுத்தம் அதிகரிக்கலாம். தீர்க்க கூடிய பிரச்னைகளை தீர்க்கலாம், சமாளிக்க கூடிய பிரச்னைகளை சமாளிக்கலாம், சமாளிக்க முடியாத பிரச்னைகளை சிறிது காலம் தள்ளி போடலாம். பயப்படுவதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு மேல் எதுவும் இல்லை. அதனால் பிரச்னைகளை அல்லது பிரச்சன்னை செய்பவர்களை புத்திசாலித்தனமாக சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் மண அழுத்தத்தை குறைக்கலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுங்கள். தியானம் மற்றும் யோகா மூலம் மன அமைதியை பெறுங்கள். சனி பகவானை சனிக்கிழமைகளில் வழிபடுங்கள், "ஓம் சைஞைச்சராய நம" மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உணவு, துணி மற்றும் பொருள் தானம் வழங்குங்கள். நவக்கிரஹ வழிபாடு மற்றும் தியானம் மூலம் மன அமைதியைப் பெறுங்கள். தியானம் மற்றும் யோகா மூலம் மன அமைதியைப் பெறுங்கள். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் பஜனைகள் மற்றும் புனித வழிபாடுகளை செய்யுங்கள். ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது நல்லது. முடிவுரையாக, ஆகஸ்ட் 2024, கும்ப ராசிக்காரர்களுக்கு சவால்கள் மற்றும் சந்தோஷங்கள் கலந்து இருக்கும் மாதமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பால், மனநிலையின் சமநிலையால் முன்னேற்றத்தை அடையலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழவும், நிதி நிலையை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும். நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையுடன் சந்தித்தால், இந்த மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வீடியோ பதிவு, வரப்போகும் பலன்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் சந்தோசமான நிகழ்வுகளை சந்தோசமாகவும் மற்றும் கடினமான நிகழ்வுகளை, துணிச்சல் மற்றும் புத்திசாலித்தனத்துடனும் எதிர்கொள்ள உதவும் என்ற நோக்கத்தில் பதிய பட்டதே தவிர உங்களை பயப்பட வைக்க அல்ல. உங்களின் குறிக்கோள்களை அடைய, சவால்களை வெற்றி பெற இந்த மாத ராசிபலன்களை பின்பற்றுங்கள். இவை பொதுவான பலன்களே. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து, உங்கள் கிரக நிலைகளை அறிந்து நிபுணர் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மூலம், நீங்கள் சந்திக்கும் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்கலாம். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையுங்கள்! உங்கள் ஆகஸ்ட் மாதம் வளமானதாக அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வீடியோவைப் பிடித்திருந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். லைக் செய்யவும், கமெண்ட் போடவும், சப்ஸ்கிரைப் செய்யவும், உங்கள் நண்பர்களுடன் பகிரவும். மேலும் அப்டேட்களுக்கு பெல் ஐகான் அழுத்தவும்! நன்றி!

ความคิดเห็น •