A beautiful vintage library🏫 in a Manalmedu village !!! kollidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • காலையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோழிகள் தன் சிறகுகளை அடித்து இறையை கொத்திக் கொண்டிருந்தது. தண்ணீர் தெளித்து கோலம் போட ஆரம்பிக்கும் பெண்கள். ஆட்டு மடியை முட்டி பால் குடித்துக் கொண்டிருந்த குட்டி ஆடுகள்.சோம்பல் முறித்த மெல்லிய ஆற்றலுடன் கிராமம் மெல்ல கண்விழித்து செயல்பட ஆரம்பித்தது .
    சாமி! சாமி! என்று பெட்டிக்கடைக்காரனை பலமாக கூப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுமி.குழாய் நிறுத்தப்படாதால் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்த குடம். நாய்கள் மெல்ல தூக்கத்திலிருந்து விழித்து தன் காவல் காக்கும் பணியை ஆரம்பித்தது. இளஞ்சூரிய கதிரொளி இந்த கிராம முழுக்க பரவ, பெரியவர்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.
    ஊருக்குள் நுழைந்தவுடனே ஈரமான ஓடுகள் போர்த்தி ,பச்சை வெல்வெட்டு போல் பாசி படர்ந்து களைச்செடிகள் சூழ,பல உலக இலக்கியங்களைக் கொண்டு தனக்கான வாசிப்பவர்களுக்காக காத்திருந்த அந்த நூலகம். மூச்சு விடுவதற்கு சிரமப்படுவது போல் புத்தகங்களின் இடைவெளி. அந்த அலமாரியில் இருந்த புத்தகங்கள் பல வருடம் பதப்படுத்தி வைத்திருந்த பழச்சாற்றை போல் சுவைமிகு சொற்களைக் கொண்டிருந்தது. அந்தக் காரை வைத்த திண்ணை வீட்டு நூலகம் பல வரலாற்று நூல்களை கொண்டிருந்தாலோ ,என்னவோ! சிதைவடைந்த வரலாற்றுச் சின்னம் போல கருநிற வெளிச்சத்தில் காணப்பட்டது. இந்த கிராமத்தை சுற்றி பச்சை பசேல் என்கிற மரங்கள் பவ்யமாய் இருப்பது போல,
    யார் என்னை கடந்து சென்றாலும் இவர் வெளியூர் காரணாக இருக்குமோ!! என்று அவர்களின் குழம்பிய பார்வை.
    அங்கு இருந்த வீடுகளின் தலைவாசல் ரோட்டை பார்த்தவாறு வாசலை‌ தாண்டி உள்ளே சென்றால் தூண்களை ஒட்டி இருந்த தாழ்வாரம்,கதவுகளில் பொருத்தி இருந்த பித்தளை சங்கு சக்கர கைப்பிடி .
    தண்ணீர் எப்படி இருக்கிறது என்று பார்க்க கொள்ளிடத்தை நோக்கி சென்று இருந்தேன். செல்லும் வழியில் மரங்கொத்தி சத்தம் போட்டு கொண்டே மரத்தை கொத்திக் கொண்டேயிருந்தது வயல்வெளிகளில் குருவிகளின் உரையாடல் ,கொள்ளிடத்திற்கு செல்லும் வழியை சொல்வது போல் இருந்தது . அங்கங்கே தொகுதிகளாக தண்ணீர்,. மழைக்காலத்திலும் கூட நதி வறண்டு பசியுடன் இருப்பது போன்ற தோற்றம்.

ความคิดเห็น •