சமயதீக்கை(எ)சந்திவழிபாடுசெய்முறை விளக்கம் - குருநாதர் ஒளியரசு ஐயா, ஞானாசிரியர் பவானி தியாகராசன் ஐயா
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
- சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் 1993-ஆம் ஆண்டு வெளியிட்ட சமய தீக்கை(எ) சந்திவழிபாடுசெய்முறை வழிபாட்டு முறை என்னும் நூலில், ஆசிரியர் அருள்நெறித் தீக்கை அம்பலவாண தேசிகர் சிவத்திரு.ஓளியகம் ந.ரா.ஆடலரசு ஐயா அவர்கள் தமிழில் திருமுறை வழி சமயதீக்கை பெற்றுக்கொண்ட அன்பர்கள், அவ்வழிபாட்டு முறையைத் தெரிந்து கொண்டு நாள்தோறும் செய்து வருவதற்கு ஏற்ற வகையில் இந்த நூலை வடிவமைத்து கொடுத்தார்கள்.
குருநாதர் ஒளியரசு ஐயா விளக்கமாக விரிவுரை வழங்க, ஞானாசிரியர் பவானி தியாகராசன் ஐயா செய்முறை விளக்கம் வழங்க, மிகவும் எளிமையாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த காணொளி அமைந்திருக்கிறது.
அன்பர்கள் நாள்தோரும் சமய தீக்கை(எ) சந்தி வழிபாடுகளை செய்து அடுத்த படி நிலைக்கு செல்ல இறைவனை வேண்டி இந்தப்பதிவு.
வாழ்க சைவசமயம்!!! விளங்குக சைவநீதி உலகமெல்லாம்!!!