Tamilnadu's Third & Mass Tidel Park - Pattabiram | தமிழகத்தின் மூன்றாவது டைடல் பூங்கா - பட்டாபிராம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • தமிழகத்தின் மூன்றாவது டைடல் பூங்கா - பட்டாபிராம்
    Tamilnadu's Third Tidel park - Pattabiram
    தமிழகத்தின் மூன்றாவது டைடல் பூங்கா பற்றிய முந்தைய காணொளிக்கான லிங்க்
    • Pattabiram Tidel Park....
    பட்டாபிராம் மேம்பாலம் பற்றிய காணொளிக்கான லிங்க்
    • Pattabiram Flyover | R...
    இந்து கல்லூரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ஈ டிப்போ ரயில்வே பாதை பற்றிய காணொளிக்களுக்கான லிங்க்
    • Hindu College to Patta...
    • Pattabiram Military Si...
    Southern Structurals Limited பற்றிய தகவலுக்கான லிங்க்
    indiankanoon.o...
    www.zaubacorp....
    business.dinama...
    www.companyhou...
    தமிழகத்தின் மூன்றாவது டைடல் பூங்கா சென்னைக்கு மேற்கு புறமாக பட்டாபிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த டைடல் பூங்கா முதலாம் கட்டமாக 11.41 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அலுவலக கட்டிடம் 316 அடி உயரத்தில் 21 தளங்கள் கொண்டு ஒரு கட்டிடமும், பெரிய அளவிலான உணவக கட்டிடமும், மொத்த டைடல் பூங்காவிற்கும் மின்சாரம் வழங்குவதற்கான பயன்பாட்டு கட்டிடம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. இந்த டைடல் பூங்கா முதலில் நிலத்தின் மதிப்பை சேர்த்து ரூ.230 கோடியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கட்டிட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ரூ.278.84 கோடி மதிப்பில் நடைபெறுகிறது. இந்த டைடல் பூங்கா அடுத்தாண்டு மே மாதம் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைடல் பூங்கா அலுவலக கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சோலார் தகடுகள் பதிக்கப்பட்டு மின் உற்பத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா வருவதற்கு முன் இந்த இடத்தில் Southern Structurals Limited என்ற தமிழக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் இருந்தது. இதில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சாலை அமைப்பதற்கான இரும்பு சார்ந்த பொருட்கள், அணைகளுக்கான மதகுகள் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான பொருட்கள், பளூ தூக்கும் இயந்திரங்கள், நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் Bucket wheel excavator என்று சொல்லப்படும் நிலக்கரி அள்ளும் இயந்திரம் மற்றும் இந்தியாவின் ரயில்வேக்கு தேவையான சரக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிறுவனம் 17 அக்டோபர் 1956 ஆம் ஆண்டு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்டு இந்த நிறுவனத்தை சரிவர இயக்கப்பட முடியாததால் 1970 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை எடுத்து கொண்டு 1978 ஆம் ஆண்டு 99% பங்குகளை கைப்பற்றியது. 1983-84 நிதியாண்டு தவிர்த்து 1971- லிருந்து
    இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இறுதியாக இந்த நிறுவனம் 30 ஜூன் 2003 ஆம் ஆண்டு நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது. 2018-ல் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கையின் படி இந்த நிறுவனம் 114 கோடியில் நஷ்டத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கடுத்து இங்குள்ள மக்கள் 2013-ல் இந்த நிறுவனம் இருந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அல்லது கல்வி நிறுவனங்களை அமைக்க முதலமைச்சர் அலுவலகம் மற்றும் எல்காட் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து 2018-ல் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இந்த டைடல் பூங்கா அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, 2019-ல் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 2020 கொரோனா ஊரடங்கிற்கு பின் இந்த Southern Structurals Limited நிறுவனத்தின் தொழிற்சாலை இடிக்கப்பட்டு அதேயாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த டைடல் பூங்காவின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது.

ความคิดเห็น • 25

  • @theprocrastinator7230
    @theprocrastinator7230 ปีที่แล้ว +4

    Sir i can see your heavy hardwork from this video. You gathered the whole history of the upcoming Tidel park site (SSL), by this i can see your heavy hardwork. From your video i came to know the history of SSL. Salute you sir. Subscribed your Channel. Also i will recommend your video to my friends and family. Thank you 🙏🏻❤️

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail ปีที่แล้ว +1

    அருமை. எவ்வளவு விவரமாக தெளிவாக முழுக்க தமிழில் பொருத்தமான காட்சிகளுடன் அலசியிருக்கிறீர்கள். நன்றிகள்.

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 ปีที่แล้ว +2

    Arumai. Excellent task.

  • @balakrishnang3570
    @balakrishnang3570 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு. நன்றி

  • @prabubalaji9033
    @prabubalaji9033 ปีที่แล้ว +2

    Arumai, Good Work

  • @chelladuraik8638
    @chelladuraik8638 ปีที่แล้ว +2

    very good info. appreciated.

  • @surendarsuren8466
    @surendarsuren8466 ปีที่แล้ว +1

    Really amazing information.. no one will provide this much information.. can feel the work you've done to collect these information.

  • @baskaranpc6527
    @baskaranpc6527 ปีที่แล้ว +1

    Excellent and very useful information. Hats off!

  • @dheena0058
    @dheena0058 ปีที่แล้ว +1

    Super imperative scale message history

  • @tninfotech-71
    @tninfotech-71 ปีที่แล้ว +8

    Super Presentation bro 👌🏻. Just use Avadi Tidel Park instead of Pattabiram because Pattabiram is a small locality in Avadi and many doesnt know Pattabiram. So use Avadi Tidel Park as video title it may help you to deserve more views. Also add Chennai's 2nd Tidel Park or Tamilnadu's 3rd Tidel Park in title. Thank you 🙏.

    • @shanmugam6849
      @shanmugam6849 ปีที่แล้ว

      Excellent presentation 👏👏

    • @sathishsatss5951
      @sathishsatss5951 ปีที่แล้ว

      Once sholinganallur also not known by anyone ...after tidel park only They known that places ..
      Most people's not known avadi aslo.
      Yu should advertise as it's original location then only most people will know the place .
      Wrong information should not given.
      Pattabiram tidel park should be the correct one.

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 ปีที่แล้ว +1

    Excellent.

  • @malarkodi7807
    @malarkodi7807 ปีที่แล้ว +1

    Super 👌

  • @satheshkumar5218
    @satheshkumar5218 ปีที่แล้ว +1

    Nice

  • @piramathevanm5306
    @piramathevanm5306 ปีที่แล้ว +1

    அமைச்சர் நாசர் அவர்கள் சீக்கிரம் ஃபன்ட் வாங்கி முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ஏனென்றால் கார் மற்றும் பஸ்கள் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ORR ரோடு வழியாக சுற்றி வரவேன்டியுள்ளது

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 หลายเดือนก่อน

    Originally,southern,switchgear
    Ltd,enra,govt,undertaking
    Erunthathu,athu,moodapattathal,angu,entha,tifel,park,v
    Varugirathu,five,year,project,
    Eppo,complete,agumo,

    • @eyethousand
      @eyethousand  6 หลายเดือนก่อน

      அந்த தமிழக அரசின் நிறுவனத்தின் southern switchgear Ltd கிடையாது. Southern structurals Ltd என்று வரும்.

  • @Senthilkumar-is2oq
    @Senthilkumar-is2oq ปีที่แล้ว

    Bro vepambattu bridge any idea please

  • @dhayaorganicfarms5516
    @dhayaorganicfarms5516 ปีที่แล้ว

    sir .. food iku ena pandringa ..

  • @lakshmananarayanan640
    @lakshmananarayanan640 ปีที่แล้ว +1

    Broo title park plans closed broo athu oru government department offices bro

    • @eyethousand
      @eyethousand  ปีที่แล้ว +2

      அப்படி ஒன்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லையே?

    • @makeiteasy5545
      @makeiteasy5545 ปีที่แล้ว

      any proof