வள்ளலார் அருளிய திருவருட்பா - கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2023
  • வள்ளலார் அருளிய திருவருட்பா
    சுத்த சிவநிலை
    முழு பாடல் வரிகளுக்கு
    www.thiruarutpa.org/thirumura...
    பாடல் :
    1. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
    எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
    கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
    கலந்தான் கருணை கலந்து.
    2. எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
    எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
    நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
    ஒன்றாகி நின்றான் உவந்து.
    3. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
    பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
    தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
    வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
    4. சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
    நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
    தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
    சந்தோட மாய்இருமின் சார்ந்து.
    5. அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
    அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
    செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
    6. அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
    சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
    உடையான் உளத்தே உவந்து.
    7. தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
    தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
    ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
    மேகத்திற் குண்டோ விளம்பு.
    8. பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
    கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
    தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
    நிலையும் கொடுத்தான் நிறைந்து.
    9. வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
    செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
    ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
    தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
    10. வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
    அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
    இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
    துன்பமெலாம் போன தொலைந்து.
    11. அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
    அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
    மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
    சாமா றிலைஎனக்குத் தான்.
    12. நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
    தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
    புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
    புகுந்தான் கருணை புரிந்து.
    13. ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
    நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
    சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
    பத்திஎலாம் பெற்ற பலன்.
    14. தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
    ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
    தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
    வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
    15. வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
    நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
    ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
    பாடுகநீ என்றான் பரன்.
    16. தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
    ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
    செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
    எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
    17. சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
    நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
    ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
    தானவிளை யாட்டியற்றத் தான்.
    18. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
    நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
    நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
    ஊன்நாடி நில்லா உழி.
    19. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
    காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
    கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
    துண்டேன் அமுதம் உவந்து.
    20. துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
    சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
    நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
    மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
    21. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
    சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
    தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
    கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
    22. சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
    பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
    23. சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
    வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
    நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
    தாயே அனையான் தனித்து.
    24. கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
    சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
    ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
    மாகா தலனா மகிழ்ந்து.
    25. நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
    ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
    பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
    நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
    26. சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
    சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
    றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
    நண்ணுமின்பத் தேன்என்று நான்.
    27. நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
    நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
    அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
    இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
    28. எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
    இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
    சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
    என்மார்க்கம் காண்பேன் இனி.
    29. சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
    நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
    சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
    உற்றிங் கறிந்தேன் உவந்து.
    30. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை.
    31. சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
    வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
    தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
    நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
    பாடியவர் :
    வடலூர் திரு கார்த்திக் அவர்கள்

ความคิดเห็น • 71

  • @anbesivan6499
    @anbesivan6499 8 หลายเดือนก่อน +10

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய 🙏🙏🙏
    இறைவா இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தோமோ?
    வள்ளலார் போற்றி
    வணங்குகிறேன்.
    ❤❤❤🎉🎉🎉🌿🌷🌿🌹🌿
    நன்றி கார்த்திக்
    சகோதரருக்கு வாழ்த்துக்கள்.✨️✨️✨️💫💫💫💫

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 8 หลายเดือนก่อน +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🙏🌺🌿🌹🪔💐🌷🦚🌝⭐️🌹🌿🌺🌺🙏🌺🌺🌿

  • @dinesh8865
    @dinesh8865 9 หลายเดือนก่อน +4

    ஊன் கலந்து உயிர் கலந்து தெள்ளமுதாய் இனிக்கின்றது கார்த்திக் ஐயா உங்கள் குரல் ... ஆன்மா உருகுகிறது 😇நீடுழி வாழ்க 🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔

  • @karthikeyankarthik6154
    @karthikeyankarthik6154 6 หลายเดือนก่อน +6

    ஆனந்த கண்ணீர் மல்க...நன்றி தமிழ் அருள் கடலில் நனைந்து மகிழ்ச்சி அளிக்கிறது
    ....வாழ்த்துக்கள் Arutperunjothi

  • @shanthia2684
    @shanthia2684 7 หลายเดือนก่อน +4

    சொல்ல வார்த்தைகள் இல்லைபா...அருமையிலும் அருமை...என்னை மறந்தேன்...❤

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 10 หลายเดือนก่อน +5

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @senthilvinayagar6788
    @senthilvinayagar6788 7 หลายเดือนก่อน +3

    அற்புதமான குரலால் அய்யாவின் பாடல்களை அலங்கரிக்கிறீர்கள் 🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
    🙏

  • @gnagaiyan6964
    @gnagaiyan6964 22 วันที่ผ่านมา

    ஊனும்,உயிரும் உருகும் அற்புதமான குரல் வாழ்க வளமுடன்.

  • @palanimurugan-mu5gs
    @palanimurugan-mu5gs 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலில் உள்ள மெய் விளக்க தத்துவத்தைதான் மனவளக்கலை மூலமாக ஆசான் மகரிஷி பல்லாயிரம் அன்பர்களுக்கு விளக்கினார் அதில் நானும் ஒருவன் குருவே சரணம்

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 11 หลายเดือนก่อน +7

    தனிப்பெருங்கருணை ,,,,,,
    அருட்பெருஞ்ஜோதி,
    அருட்பெருஞ்ஜோதி.
    தனிப்பெருங்கருணை,
    அருட்பெருஞ்ஜோதி.....
    "அங்கயர் (கன்னி) கண்ணி ,
    அன்பு மீனாட்சி,,,
    அங்காளபரமேஸ்வரி" தாயே போற்றி போற்றி போற்றி,,,,
    நால்வர் பாதம் போற்றி போற்றி போற்றி...
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி,,,,
    தனிப்பெருங்கருணையினாலே,,,,,,
    அனைத்துலகும்இன்பமுற,,,,,,,

  • @tamilvanans9547
    @tamilvanans9547 8 หลายเดือนก่อน +2

    Thank you. S.Tamilvanan SRINIVASAPURAM Mayiladuthurai .

  • @MRaghavan
    @MRaghavan 10 หลายเดือนก่อน +11

    இறைவன் ஏற்றுக்கொள்வார் ஒரு உருவம் மனம் இதுவே உலகின் மிகப் பெரும் ஜோதி

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 7 หลายเดือนก่อน +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👋👋😇

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9ho 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤ கோடான கோடி நன்றி ஐயா

    • @Nagamaanikkam
      @Nagamaanikkam 8 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @SkvBoopathi
    @SkvBoopathi 3 หลายเดือนก่อน +2

    குரல் வளம்மிக்க குரல் கேட்க வேண்டிய தருணம்

  • @chakaravarthy2797
    @chakaravarthy2797 หลายเดือนก่อน +1

    Daily listening this song, everyday comes tears on eyes 😢

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 9 หลายเดือนก่อน +2

    Aum..... Nama Shivaya...🙏🙏🙏🙏🙏😌😌😌

  • @PraveenKumar-sr1uf
    @PraveenKumar-sr1uf 3 หลายเดือนก่อน +2

    அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை❤

  • @radhikaraguraman8344
    @radhikaraguraman8344 10 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 9 หลายเดือนก่อน +2

    Arumai magilnthen ❤

  • @sivaraman6809
    @sivaraman6809 9 หลายเดือนก่อน +2

    Vallal malaradi vazhga

  • @shakthikalai595
    @shakthikalai595 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை . நன்றி இறைவா.. கண்ணீரில் மனம் கரைந்தது....

  • @user-re5wj3uz9m
    @user-re5wj3uz9m 10 หลายเดือนก่อน +3

    Sathiyam

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s หลายเดือนก่อน

    அருமைஐயா

  • @vimalas2284
    @vimalas2284 7 หลายเดือนก่อน +1

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏

  • @user-ol1xh4bs9o
    @user-ol1xh4bs9o 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤.அற்புதம் ஐயா❤❤❤❤❤❤

  • @tamilarasantamilarasan5256
    @tamilarasantamilarasan5256 10 หลายเดือนก่อน +1

    உற்ற றிதல் செய்தமைக்கு நன்றி

  • @satheshp4763
    @satheshp4763 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 8 หลายเดือนก่อน +2

    Allam valla ereevaa sarvathum saparmanam 🙏 Guruve thunye

  • @rameshk9183
    @rameshk9183 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 9 หลายเดือนก่อน +2

    அருமையான அறம் வளர்த்த பாடல்கள் இராமலிங்க வள்ளலார் அய்யாவின் படம் மட்டும் நெற்றியில் விபூதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.....
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி போற்றி ❤...

    • @kunjithapathamcbe
      @kunjithapathamcbe  9 หลายเดือนก่อน +3

      ஒளி தேகம் பெற்றதனால் அவர் புகைபடத்தில் விழ வில்லை என்றும், அவர் புவியில் நிழல் விழாத தேகம் பெற்றவர் என்றும், திருநீறு புசினாலும் அவர் நெற்றியில் ஒட்டாது போன்ற பல நிலைகளை அடைந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் கலந்தார் என நான் நம்புகிறேன்.

    • @user-oi6zu4bc4l
      @user-oi6zu4bc4l 9 หลายเดือนก่อน

      அப்படி என்றால் ஜோதி படம் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்....
      ஓம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி
      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ❤❤❤

    • @yugendransyugu8925
      @yugendransyugu8925 8 หลายเดือนก่อน

      ஒளி தெய்வமானதால் விபூதி இல்லை ஆனால் அவர் ஆடையும் அணியாமல் இருந்திருப்பாரோ

    • @kunjithapathamcbe
      @kunjithapathamcbe  8 หลายเดือนก่อน +2

      @@yugendransyugu8925 உங்கள் கேள்வியே தவறு. அவர் ஒளி தெய்வம் என்று சொல்லவில்லை. ஒளி தேகம் அடைந்தவர் என்றே உரைத்தோம். உங்கள் விதண்டா வாதங்களுக்கு அவரே பதில் தருவார். ஆடை அணிவது, காலில் செருப்பு அணிவது பற்றி வாழ்வியல் நெறிமுறை கற்று கொடுத்து இருக்கிறார். காலை எழுந்து இரவு வரை ஒரு மனிதன் ஆன்ம லாபம் அடைய, எல்லாம் போதித்தவர் எங்கள் வழிகாட்டி வள்ளலார் அவர்கள்.
      இது போன்ற பேச்சை முதலில் தவிருங்கள். உங்கள் ஆராய்ச்சிகள் ஆன்மிகத்தில் தொடரட்டும். எளிய ஆன்மீகத்தில் வள்ளலார் காட்டிய வழி உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

    • @karthikeyans4880
      @karthikeyans4880 7 หลายเดือนก่อน

      Peruman Netriyil Vibuthi Kidaiyathu!!! Entha Adaiyalathaiyum Vaikkakudathu Enrar !!! Vallalae Saranam !!!

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 4 หลายเดือนก่อน +1

    Miga arumai ayya

  • @devanathan8785
    @devanathan8785 7 หลายเดือนก่อน +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை தனி பெருங்கருணை தனி பெருங்கருணை

  • @TNMEDIA099
    @TNMEDIA099 10 หลายเดือนก่อน +1

  • @sivakumarpld2689
    @sivakumarpld2689 8 หลายเดือนก่อน +2

    🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @peace1170
    @peace1170 10 หลายเดือนก่อน +1

    👏👏🙏

  • @meerastudio3982
    @meerastudio3982 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganamutha8003
    @muruganamutha8003 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathasadhguru5021
    @lathasadhguru5021 2 หลายเดือนก่อน

    Namaskaram

  • @s.sugandisugandi6375
    @s.sugandisugandi6375 10 หลายเดือนก่อน

    Arutperunjjodhiye un anbai unarndhen.

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 9 หลายเดือนก่อน +1

    🙏🌼🙏🌼🙏🌼

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9ho 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @njs2121211
    @njs2121211 9 หลายเดือนก่อน +1

    12:30 to 12:55. sirsabai secret.

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 10 หลายเดือนก่อน +1

    Dear Mr Karthik
    Pl provide the respective lyrics in description for us to take your singing into us

    • @kunjithapathamcbe
      @kunjithapathamcbe  10 หลายเดือนก่อน

      Sir we unable to copy the lyric due to space consumption, max I added in description. Same lyrical link given in description. Pls check on it. Will try to post this video with lyrical soon..

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9ho 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 11 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை நன்றி frm Penang Malaysia 🇲🇾

    • @kuttinari
      @kuttinari หลายเดือนก่อน

      3:31 3:58 🎉 4:00 4:00 4:01

  • @srrajeniran
    @srrajeniran 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @PandiPandi-cq6yr
    @PandiPandi-cq6yr 9 หลายเดือนก่อน +1

    அருமைஅய்யனைமனதில்யிருன்துகண்ணிர்கரைகிறது

  • @Nirgunam
    @Nirgunam 10 หลายเดือนก่อน +1

    ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrphoenixgaming227
    @mrphoenixgaming227 16 วันที่ผ่านมา

    🙏🤍💛🤍🙏

  • @vimalas2284
    @vimalas2284 6 หลายเดือนก่อน +1

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏

  • @ramesh9493
    @ramesh9493 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 หลายเดือนก่อน

    மிகவும் அருமை ஐயா

  • @UshaKrishnaV
    @UshaKrishnaV หลายเดือนก่อน

    🙏

  • @parameshshyam8595
    @parameshshyam8595 5 หลายเดือนก่อน +1

  • @sanjeevkumarj7046
    @sanjeevkumarj7046 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @rajalakshmibaskar1213
    @rajalakshmibaskar1213 3 หลายเดือนก่อน +1