ஏன் இராமர் பாலம் செல்லத் தடை| Eagle Nithu | VLOG | Mannar | Ramar Setu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • இணையற்ற பக்திக் காவியம் ராமாயணம். பல மொழிகளில் பலவகை ராமாயணங்கள் வழக்கத்திலிருந்து வந்தாலும், எல்லா ராமாயணங்களுக்கும் மூலமாக இருப்பது வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணமே. வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம் 22-ல் சேது பந்தனம் என்னும் பிரிவில் ஸ்ரீராமபிரானின் வானர சேனைகள் கூடி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலத்தைக் கட்டிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. வானர சேனைகளின் உதவியுடன் 34 கி. மீ. தூரமுள்ள பாலத்தை, 103 சிறிய குன்றுகளை இணைத்து 5 நாள்களில் கட்டிமுடித்தார் ராமபிரான் என்று கூறப்படுகிறது. கடலின் மீது எப்படி பாலம் கட்டப்பட்டது ? அங்கு மட்டும் கற்கள் எப்படி மிதக்கின்றன என்பதற்கான விளக்கத்தையும் வீலமீகி கூறியுள்ளார். அதை பற்றி பார்ப்போம் வாருங்கள். சீதை, ராவணனால் இலங்கைக்கு கடத்திச்செல்ல பட்டதால் அவரை மீட்க கடலின் மீது ஒரு பாலம் அமைத்தாலன்றி, இலங்கையை அடையமுடியாது என்பதால், கடலில் ஒரு பாலம் அமைக்க விரும்பினார் ஸ்ரீ ராமர். ஆனால், பொங்கி வரும் அலைகளின்மீது பாலம் கட்டமுடியாது என்பதால், கடல் அரசனை வணங்கி, அலைகளை ஓய்ந்திருக்கச் செய்யும்படி வேண்டினார். வருணம் சற்று தாமதிக்கவே, கோபம் கொண்ட ராமபிரான் வில்லினை எடுத்து வருணனுடன் போர் செய்ய ஆயத்தமானார். உடனே, வருணபகவான் நேரில் தோன்றி ராமபிரானிடம் தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கடல் அலைகளை ஓய்ந்திருக்கும்படிச் செய்தார். அலைகள் இல்லாத கடலின் மீது வானர சேனைகள் பாறைகளைக் கொண்டு வந்து போட்டு பாலம் கட்டத் தொடங்கின. இந்தப் பணிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஹனுமான். கடலில் போடும் பாறைகள் யாவும் நீரில் மூழ்கி மறைந்தன. இதனால் கடல் பாலம் கட்டும் பணி தாமதமானது. அப்போது ஸ்ரீராமரின் ஆணைப்படி வானரங்கள் கொண்டு வரும் பாறைகள் இறுதியாக நளன் என்ற வானரத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. நளன் கடலில் வீசிய பாறைகள் மிதந்து அப்படியே நின்றன. இதனால் பாலம் கட்டும் பணி விரைவாகி வானர சேனைகள் உற்சாகமாகின. ஹனுமான் வலக் கையில் கொண்டு வந்த பாறைகளை நளன் இடக் கையால் வாங்கி வீசுவதைக் கண்டு ஹனுமான் சினம் கொண்டார். இதனால் பாறைகளைத் தானே போடத் தொடங்கினார். ஆனால், அந்தப் பாறைகள் நீரில் மூழ்கின. ஹனுமனை நெருங்கிய ஸ்ரீராமர், ‘நல்ல காரியத்தில் ஈடுபடும்போது பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு கூடாது’ என்று அறிவுறுத்தி நளனிடமே பாறைகளைக் கொடுக்கச் சொன்னார். நளனோடு அதனுடைய நண்பரான நீலனும் இந்தப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டது. இவ்விதம் பணிகள் நடந்துவந்தபோது, நளன் எறிந்த பாறைகள் மட்டுமே மிதப்பதைக் கண்ட லட்சுமணர் அதன் காரணம் என்னவென்று ஸ்ரீராமரை ஆச்சர்யத்தோடு கேட்டார். ”மாதவேந்திரர் என்ற மகாஞானி ஒரு சூரியகிரகணத்தன்று நீரில் முங்கி கிரகண தோஷநிவர்த்திக்காக நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நளன் என்ற இந்தக் குட்டி வானரம் மகிழ்ச்சி கொண்டது. பிறந்ததிலிருந்தே சேட்டைகள் செய்து பலரை அவதிக்குள்ளாக்கும் இயல்பு கொண்ட வானரம் நளன். நீராடிக்கொண்டிருந்த ஞானியைக் கண்டதும் அது உற்சாகமாகி, குளத்தின் கரையிலிருந்த கற்களை வீசி, அது முங்கும்போது உண்டான சத்தமும் சாரலும் கண்டு சிரித்தது. இதனால், முனிவரால் மந்திரங்களை முறையாக உச்சரிக்கமுடியாமல் போனது. அந்த வானரத்தை விரட்டினார். பலமுறை விரட்டியும் நளன் போகவில்லை. ஞானிக்குக் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டார். மந்திரம் சொல்லும்போது கோபம் கொண்டு சாபம் விட்டால் மந்திரசக்தி குறைந்து விடும் என்பது ஐதீகம். இதனால், ‘இனி நீ எறியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்து கிடக்கட்டும்’ என்று சொல்லி மந்திரத்தைத் தொடர்ந்தார். அதன்படி நளன் எறிந்த கற்கள் மிதக்கத் தொடங்கின. கல் மூழ்காமலும் சத்தம் வராமலும் போனதால் சுவாரஸ்யம் குறைந்து நளன் அங்கிருந்து சென்றுவிட்டது. அன்று முதல் நளன் எறியும் எந்தக் கல்லும் மிதக்கும் என்பதாலேயே இந்தப் பாலத்தின் பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றன” என்று ஸ்ரீராமர் விளக்கினார்.

ความคิดเห็น • 8

  • @agalyaannamalai8857
    @agalyaannamalai8857 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥🔥

  • @sumathikanniyappan5112
    @sumathikanniyappan5112 ปีที่แล้ว +2

    Awaiting for Next video

    • @eaglenithu
      @eaglenithu  ปีที่แล้ว

      th-cam.com/video/e8JvNdxMpOs/w-d-xo.html

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 6 หลายเดือนก่อน +1

    மீண்டும் பாலம் கட்டி இருநாட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்

    • @eaglenithu
      @eaglenithu  6 หลายเดือนก่อน

      அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அண்மையில் செய்திகள் வலம் வந்தது

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 6 หลายเดือนก่อน

      உண்மை.
      அடுத்த கட்டமாக விசா இல்லாமல் இந்திய- நேபாளம்; இந்திய- பூடான்; மற்றும் இந்திய- மாலத்தீவு போன்று இந்திய- இலங்கை மக்கள் போக்குவரத்தை துவக்க இரு நாடுகளும் உடன்படிக்கை செய்ய சிந்திக்கலாம்!