vedasandur valli kummi aattam |valli kummi attam | வேடசந்தூர் தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் |Dindigul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #vallikummi
    #tamilnews
    #vedasandur
    vedasandur valli kummi aattam
    வேடசந்தூர் அருகே ஒரே சீருடை அணிந்து நடனம் ஆடி அசத்திய தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் - ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டப மைதானத்தில் கடந்த (11-02-2024) தேதி தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
    வேடசந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள பெண்கள் சுமார் ஒரு மாத காலம் பயிற்சி பெற்று இந்நடனத்தை அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.
    இந்நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 60 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினர் .
    ஆறு வகையான நிலைகளில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இந்த வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
    குறவர் இன வள்ளி குற்றாலம் பக்கத்தில் உள்ள வேள்விமலையில் நம்பிமகாராஜா, நங்கை மோகினிக்கு மகளாக பிறந்து, வளர்ந்து, பருவம் அடைந்து விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடினர்.
    தமிழ்நாட்டில் கொங்கு மண்டலங்களில் இந்த வள்ளி கும்மியாட்டம் தற்போது பிரசித்து பெற்று வருகிறது.
    இதில் நடனமாடிய அனைவரும் ஓரே சீருடை அணிந்து சிறப்பாக நடனம் ஆடியது பார்ப்போரின் மனதை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.
    #opentalktamil
    #aanmeegam
    #tamilnadu
    #vallikummiyattamtamil
    #vallikummiattam
    #vallikummiattamtamil
    #vallikummiyattam
    #vallikummi2024
    #வள்ளிகும்மி
    #கொங்குநாடு
    #வள்ளிகும்மிஆட்டம்
    #வள்ளிகும்மிடான்ஸ்
    #வள்ளி
    #கொங்குஆட்டம்

ความคิดเห็น • 1