கண்வலி கிழங்கு விதை அறுவடை| செங்காந்தள் மலர் சாகுபடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #கண்வலிகிழங்குஅறுவடை
    #செங்காந்தள்மலர்சாகுபடி
    கண்வலி கிழங்கு விவசாயம்
    வீடியோ லிங்க்👇
    • கண்வலி கிழங்கு | செங்க...
    கண்வலி கிழங்கு மூலிகை பயிரானது, ‘செங்காந்தள்’ என்ற பெயரில் தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தியுள்ளது.
    குறிப்பாக கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் விவசாயிகள், இப்பயிரை குழந்தை போல் கவனித்து சாகுபடி செய்கின்றனர்.
    அதற்கு காரணம் இப்பயிரின் மகசூல் மற்றும் லாபமே. கடந்த மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ கண்வலி கிழங்கு விதை 3,000 ரூபாய் வரை விற்பனையானது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
    மருத்துவ குணம்
    இதன் கிழங்குகள் மருத்துவ குணமுடையது. எனினும் விதையே பிரதான மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகளில் இருக்கும் ‘கொன்ச்சிசைன்’ என்ற பொருள் நரம்பு, தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் புற்று நோய்களுக்கான மருந்துகள் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை பெருமளவில் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இதன் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்துள்ளது.
    உறங்கும் கிழங்கு
    இப்பயிரின் கிழங்கானது மண்ணிற்கடியில் உறக்க நிலையில் இருக்கும். மழைக்காலம் (ஜூன் - ஆகஸ்ட்) வந்ததும் செடிகள் வளர்ந்து வெளியில் வரும். 5 முதல் 8 வாரம் வளர்ந்து அதிகப்படியான பூக்களை உருவாக்கும். சுமார் ஏழு வாரங்கள் பூத்து, காய்களையும், விதைகளையும் உருவாக்கிய பின் செடிகள் மடிந்து விடும். கிழங்குகள் மீண்டும் உறக்க நிலையை அடையும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு செடி 2 முதல் 3 புதிய கிழங்குகளை உருவாக்கும். ஒரு முறை கிழங்கு நடுவதன் மூலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்

ความคิดเห็น • 5

  • @getzcars9791
    @getzcars9791 8 หลายเดือนก่อน +1

    அருமை, நல்ல தகவல்

  • @mannummanasum
    @mannummanasum 8 หลายเดือนก่อน +1

    👌

  • @muthuchelvam452
    @muthuchelvam452 8 หลายเดือนก่อน +1

    oho super….

  • @pothigaihillsvlogs2029
    @pothigaihillsvlogs2029 8 หลายเดือนก่อน +1

    Entha place. Farmer contact No Annupunga

  • @palanim4777
    @palanim4777 28 วันที่ผ่านมา

    Rate