சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் | Sashti Viratha Murugan Song Tamil - Vel Maaral | Anush Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2021
  • Powerful Maha Mantra - Vel Maaral with Lyrics in Tamil | Sashti Viratham Special Song
    Song : Vel Maaral
    Lyrics : Vallimalai Sri Sachithananda Swamigal
    Music & Vocal : Veeramani Kannan
    Production : Anush Audio
    #velmaaral#murugansongs#anushaudio
    #tamildevotionalsongs
    சஷ்டி விரத சிறப்பு - வேல் மாறல் பாடல் வரிகளுடன்
    பாடல் : வேல் மாறல்
    தொகுத்தருளியவர் : வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
    இசை & குரலிசை : வீரமணி கண்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல்
    செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
    பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும்
    சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
    தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும்
    பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
    சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
    துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும்
    தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும்
    பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும்
    திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
    சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும்
    தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    தேரணி யிட்டுப் புரம்
    எரித் தான்மகன் செங்கையில்வேற்
    கூரணி யிட்டணு வாகிக்
    கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி யிட்டு வளைந்த
    கடகம் நெளிந்து சூர்ப்
    பேரணி கெட்டது தேவேந்த்ர
    லோகம் பிழைத்ததுவே
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @ranjithas1997
    @ranjithas1997 24 วันที่ผ่านมา +12

    முருகா எங்களுக்கு குழந்தையாக...நீங்க வரவேண்டும்...வரம் தருவாயாக..அப்பனே முருகா உங்களையே..நம்பி இருக்கேன்.அப்பா

  • @preethiskuttichannel6001
    @preethiskuttichannel6001 4 วันที่ผ่านมา

    எனது மகன் விரைவில் பேச வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் அம்மா என்று கூப்பிட வேண்டும் முருகா😢🙏

  • @milonraja3771
    @milonraja3771 29 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤

  • @kalaimanipasupathy4074
    @kalaimanipasupathy4074 หลายเดือนก่อน +67

    முருகா சொந்த வீடு வேணும்....கால் வயிறு கஞ்சி கிடைச்சாலும் கடன் இல்லா வாழக்கை வேணும் அப்பா முருகா

    • @gowsalyar8352
      @gowsalyar8352 24 วันที่ผ่านมา

      Kandippa Nadakkum..!

    • @RajeshRajesh-lv9yy
      @RajeshRajesh-lv9yy 9 วันที่ผ่านมา

      Super ithu iruntha pothum Thane ethuvum athigam vendam

    • @deepeshb5032
      @deepeshb5032 3 วันที่ผ่านมา +1

      Thiruchendoor murugan Kandipa ungal venduthalai tharuvar

  • @elavarasanselvi-ru9qk
    @elavarasanselvi-ru9qk หลายเดือนก่อน +4

    முருகா என் கணவர் இல்லை என் இரு குழந்தைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 6 วันที่ผ่านมา +1

    முருகனை நம்பினோர் கெடுவதில்லை என்றும் துணை இருப்பான் என் அப்பன் முருகன்🙏🙏

  • @subramanianganesanbe3603
    @subramanianganesanbe3603 หลายเดือนก่อน +198

    முருகா உனது பாடலை கேட்டு பிராத்திக்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி அருள்புரிய வேண்டும் முருகா!🦚🛕📯

    • @user-iq9xq7mg5l
      @user-iq9xq7mg5l หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน +4

      நன்றி உங்கள் அன்பு மனசுக்கு,, நீடூழி, வாழ்க வளமுடன், இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும்.❤🎉

    • @nagus9140
      @nagus9140 หลายเดือนก่อน +1

      நன்றி முதலில் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் நிச்சயம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு முருகன் துணை புரிவார்

    • @rajia33
      @rajia33 หลายเดือนก่อน

      Tku for prayingfor us.

    • @anuratharasathurai325
      @anuratharasathurai325 หลายเดือนก่อน

      Om muruga

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ நமக

  • @sudharamesh2213
    @sudharamesh2213 8 วันที่ผ่านมา

    Muruga my son should pass his exam this time.shower your blessings on him Muruga.

  • @user-rc9pe9bh8l
    @user-rc9pe9bh8l 15 ชั่วโมงที่ผ่านมา

    என் மகள் எழுந்து நடக்க
    அருள்புரியவேண்டுகிறேன்வேண்டும்என்றால்என்உயிரைஅர்ப்பணிக்கிறேன்
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி

  • @selvamabinila3671
    @selvamabinila3671 หลายเดือนก่อน +17

    முருகா என் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க நீங்க தான் அருள் புரியணும் ஒம்முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻💖💖💖💖💖💖💐💐💐💐💐💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @user-bx1kg9gy2y
    @user-bx1kg9gy2y 3 หลายเดือนก่อน +30

    முருகன் அருளால் 10 கோடி ரூபாய் பெறுகிறேன் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน +4

      இயலாதவர்கள் துன்ப படுபவர்களுக்கு மனதார உதவி செய்

    • @priyachinnasamy
      @priyachinnasamy 8 วันที่ผ่านมา

      Try to help others who are in financial crisis you will be blessed more dear.

    • @ravisivagami7167
      @ravisivagami7167 4 วันที่ผ่านมา

      நானும் முருகரிடம் வேண்டிகிறேன் தருவார் என்ற நம்பிக்கையுடன்

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 4 วันที่ผ่านมา

      முருகன் மேல் உண்மையிலேயே, பக்தியும், அன்பும், நம்பிக்கையும் இருக்கும் என்றால்,, இயலாமையால் துன்பப்படுகின்ற மக்களுக்கு, மருத்துவ உதவி, படிப்புக்கு,, உணவு,, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்,,, வாயில்லா ஜீவன்களுக்கு என்று முடிந்தவரை பகிர்ந்து உதவுங்கள் ஐயா, இறைவனே நீங்கள் தான் ஐயா..,,, கொடுப்பவர்க்கு தெரியாது,,, கேட்ப்பது,, கடவுள் என்று,,,,,, ஆனால் கேட்ப்பவருக்குத்,, தெரியும்,,,,,, கொடுப்பது,, கடவுள் என்று,,,, மனிதன் என்பவன்,,, தெய்வமாகலாம்,,,,,, {மனிதன்,}வாரி,, வாரி, வழங்கும் போது வள்ளல் ஆகலாம்,,,, மழையைப் போல் பயன் கருதா உதவி,,,,, யாராக இருந்தாலும்,,போகும் போது உடன் கொண்டுப் போவது,,, பாவமும்,, புண்ணியமும் மட்டும் தான் மக்களே, 👍👍👍🙌🙌🙌❤️❤️🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 22 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @ravisivagami7167
    @ravisivagami7167 4 วันที่ผ่านมา

    முருகா எனக்கு வெளில பணம் குடுத்து உதவி செய்தேன் அவர்கள் மனம்மாறி எனக்கு தறவேண்டும் முருகா

  • @tamilselvithirumoorthyswam9190
    @tamilselvithirumoorthyswam9190 6 หลายเดือนก่อน +257

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்புடன் வாழ அருள்புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @user-jy9nb1ty6k
      @user-jy9nb1ty6k 5 หลายเดือนก่อน +1

    • @TamilArasi-wy6by
      @TamilArasi-wy6by 4 หลายเดือนก่อน

      ​@@user-jy9nb1ty6kஎன சென்னை விமான நிறுவனங்கள் மூலம் 😊😊எ

    • @manogarana6053
      @manogarana6053 2 หลายเดือนก่อน

      ஸழௌஸௌ

    • @panchatsharammurugesan7761
      @panchatsharammurugesan7761 2 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் வேண்டும் உங்களுக்கு நன்றி

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน +3

      சுயநலத்தோட சிந்திக்காம எல்லோருக்காகவும் வேண்டிக்கிற உங்க மனசுக்கு நல்லதே நடக்கும். நீங்களும் நல்லா இருப்பீங்க நாங்களும் நல்லா இருப்போம் முருகன் அருளால. நன்றிகள் பல

  • @user-ed3vt5wk6p
    @user-ed3vt5wk6p หลายเดือนก่อน +5

    வேலும் மயிலும் துணை முருகா என்னோட உடம்பு சரி ஆகணும் 🙏🙏🙏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உடம்பு சரியாகி ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ்வீர்கள்

  • @nithinhashini4133
    @nithinhashini4133 8 วันที่ผ่านมา +1

    முருகா மனம் உடல் ஆரோக்கியம் வேண்டுகிறேன்

  • @user-ww2bl5wd2n
    @user-ww2bl5wd2n 15 วันที่ผ่านมา

    முருகா ஒருவேளை இல்லையேல் இந்த பூமியில் வேலையில்லை முருகா

  • @LakshmiAnnamalai-kt5pd
    @LakshmiAnnamalai-kt5pd หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சிக்கிரம் என் மகன் சீனிவாசன் மருமகள் அபிராமி இவர்களுக்கு சிக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா எல்லோரும் பிரச்சினை சரியாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @revathyrevathy926
    @revathyrevathy926 26 วันที่ผ่านมา +3

    என் அப்பனே முருகா அடியவளை காப்பாற்றுங்கள் முருகா மலை போல் பிரசனையில் தவிக்கிறேன் முருகா பனி போல் கரைந்து போகட்டும் அய்யனே என் கடன் தீருந்து போகட்டும் அய்யனே நான் இழந்த பணம் மீட்டு தாருங்கள் முருகா அப்பனே வேல் கொண்டு வந்து காபாற்றுங்கள் சுப்பிரமணிய சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramalp24
    @veeramalp24 15 ชั่วโมงที่ผ่านมา

    முருகா சொந்த வீடு வேண்டும்முருகாஅருள்புரியவேண்டும்முருகாசரணம்

  • @shanmugamalagesan5347
    @shanmugamalagesan5347 2 หลายเดือนก่อน +105

    யாருக்கு என்ன தேவையோ அதை என்னப்பன் முருகன் நிச்சயமாக கொடுப்பான் எல்லாம் முருகன் செயல் ஓம் சரவணபவ🎉🎉

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน

      நன்றி உங்கள் நல்ல அன்பு மனசுக்கு நீடூழி வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும் 🎉❤

    • @nirmalasridhar7744
      @nirmalasridhar7744 หลายเดือนก่อน

      அஅஅ ஆஆ​@@vskgyvskgy2959

    • @Arivatasi
      @Arivatasi 24 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🌹👍🌹🌹🌹🌹🌹🌹

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 7 หลายเดือนก่อน +5

    முருகா நீயே கதி...இறைவா எனக்கு 1 லட்சம் பணம் கடன் அடைய அருள் புரிவாய்

  • @tamilselvipandiarajan4218
    @tamilselvipandiarajan4218 2 วันที่ผ่านมา

    என்மகள்கர்பமாக உள்ளாள்கிட்னியில்ஸ்டோன்உள்ளதுசீக்கிரம்கரையவேண்டிஉன்கரம்கூப்பிவணங்குகிறேன்

  • @Maheswari2013-eu6it
    @Maheswari2013-eu6it 2 วันที่ผ่านมา

    முருகா உனை பாட பாட எனக்கு பிடித்த என் பழைய நண்பர் watsap பேசுறேன் அவுங்களும் அவுங்க குடும்பமும் எனக்கு உறவா வந்தா சந்தோசம் நீங்க நல் வழி காட்டுங்க முருகா

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs 16 วันที่ผ่านมา +17

    என் தெய்வமே என்மகன்நல்லபடியாக
    பேச அருள்புரிவாயாக ஒம் முருகாபோற்றி இவன் வே ச தினகரன்

  • @trikkyjuniors6851
    @trikkyjuniors6851 2 หลายเดือนก่อน +13

    என் மனதில் உள்ள கஷ்டம் என்ன என்று உனக்கு தெரியும்.நான் நினைக்கும் படி என் மகன் திருமணம் நடக்க அருள் புரி முருகா.
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 5 วันที่ผ่านมา +1

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @eniyanv.a.9024
    @eniyanv.a.9024 6 หลายเดือนก่อน +2

    என் மகன் இனியன் எழுதபோகும்JEE.NEET Examல் நல்ல மதிப்பெண் பெற முருகப்பெருமான் அருள்கூர்ந்துஅருள்தர வேண்டுகிறேன்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 หลายเดือนก่อน +9

    அப்பனே முருகா என் மகன் சிவமுருகன் உடம்புக்கு சுகம் தந்ததற்கு நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா அப்பனே எல்லா மக்களையும் காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesansairam9415
    @ganesansairam9415 15 วันที่ผ่านมา +16

    முருகா, என் உயிரே உன்னை என்றென்றும் மறவா வரம் வேண்டும் .❤

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 21 วันที่ผ่านมา +1

    முருகா முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @user-lm7uj3wr3p
    @user-lm7uj3wr3p 13 วันที่ผ่านมา +1

    முருகா என் மகனுக்கு நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா

  • @susithravenkatachalapathi5126
    @susithravenkatachalapathi5126 2 หลายเดือนก่อน +6

    முருகா சின்ன மகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

  • @karthikarthi8597
    @karthikarthi8597 หลายเดือนก่อน +6

    முருக என்னோட வேண்டுதலை நிறைவேற்று முருக நடத்து குகன் வேலே 😢

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 4 หลายเดือนก่อน +10

    வேல் மாறல் தொடர்ந்து கேட்டு வருகிறேன்என்மகளுக்குசீக்கிரம்அரசுநிரந்தரவேலைஅக்ரிஆபீஸர்பேங்கிங்வேலையும்நல்லதிருமணவாழ்க்கையும்சந்தோஷமானமருமகன்குடும்பம்கொஞ்சம்பெரியகுடும்பமாகவும்நல்லவாழ்க்கையும்அமையவேண்டும்முருகாஅப்பாமுருகா

  • @mattamannarassociates4083
    @mattamannarassociates4083 2 หลายเดือนก่อน +37

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா

    • @sreevidhya2866
      @sreevidhya2866 2 หลายเดือนก่อน +1

      வேல்மாறல் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து படித்து வாருங்கள்...ஒரு வாரத்திலயே உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்

  • @AyyasamyMariappan
    @AyyasamyMariappan วันที่ผ่านมา

    எனது கடன் தீர அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

  • @user-ns7gq4ro4c
    @user-ns7gq4ro4c 2 หลายเดือนก่อน +25

    வேல்மாறல் பாராயணம் செய்தால் நல்லதே நடக்கும். அதற்கு நானே உயிருள்ள சாட்சி

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t 2 หลายเดือนก่อน +2

      Thanks for your postive post

    • @dhamayanthim3630
      @dhamayanthim3630 2 หลายเดือนก่อน +1

      Thalaiku kulichudan padikanuma…slunga sister..iam in uk sis..10days ah padichuttuiruken…non veg avoid pannamudiyalaa…48days ah padichutuirukenn

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c 2 หลายเดือนก่อน +3

      Sister, manasaara vungalukku yeppa mudiyum appalaam padinga. Mudiyla nna TH-cam pottuk kellunga. Sathyam. Nenaichadhu nadakkum. Namakku nalladhe nadakkumnnu nambhi sollunga, kelunga. Padinga. Nalladhe nadakkum. Sathyam.

  • @mahavigneshwar4014
    @mahavigneshwar4014 17 วันที่ผ่านมา +15

    முருகா என் கணவருடன் சேர"வேண்டும் அய்யா😢😢😢😢

  • @Aadhav.958
    @Aadhav.958 10 วันที่ผ่านมา

    ,,, தமிழ்ல முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் கச்சாமி இது குறித்து நாம் அனைவரும்

  • @user-pt4lb2ze1c
    @user-pt4lb2ze1c 8 วันที่ผ่านมา

    வேல் மாற்றல் தினம் படித்து வருகிறேன் என். கணவரைக் காப்பாற்று முருகா

  • @sriniro1940
    @sriniro1940 2 หลายเดือนก่อน +4

    முருகா என்னுடைய கணவர் வெளிநாடு போக வழிவிடு முருகா

  • @SorryForeverthing
    @SorryForeverthing หลายเดือนก่อน +6

    என் அப்பன் முருகன் நினைத்ததே குடுப்பவர் ❤❤❤❤❤அப்பனே போற்றி போற்றி ❤❤❤❤குகனே போற்றி போற்றி ❤❤❤ஆறுமுகனே போற்றி ❤❤❤கந்தனே போற்றி போற்றி ❤❤❤

  • @Maheswari2013-eu6it
    @Maheswari2013-eu6it 2 วันที่ผ่านมา

    முருகா என் இல்லம் உங்க வசமாகணும்

  • @sugumarr160
    @sugumarr160 2 หลายเดือนก่อน +4

    எனது தம்பி மணிவண்ணனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் விரைவில் குணமாக முருகா🦚🙏🐓

  • @karthikarthi8597
    @karthikarthi8597 27 วันที่ผ่านมา +3

    முருகன் திருப்புகளையும் இதேமாதிரி பாடி போட்டால் நன்றாக இருக்கும் எங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும்

  • @gomathibabu7897
    @gomathibabu7897 15 วันที่ผ่านมา +1

    Muruka enaku kulanthaibakiyam kudu muruka unnai than nambi irrukan

  • @mahesnagaratnam8620
    @mahesnagaratnam8620 14 วันที่ผ่านมา +4

    என்அப்பனேமுருகாஎன்மகனுக்குதிருமணம்நடைபெறவரம்தரவேண்டும். வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @nithyasridevi5541
    @nithyasridevi5541 หลายเดือนก่อน +23

    என் மகள் உடல் நலம் பெற வேண்டும் முருகா

  • @lizagandhi2648
    @lizagandhi2648 28 วันที่ผ่านมา

    Engalukku Singapore visa extend pannittu MSG varanum appa nanga may month fulla Inga irukkanum appa arul puriyungal appan Mugane en kuzhanthai aasaya niraivetri thanga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 5 หลายเดือนก่อน +7

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா

  • @annitrust8231
    @annitrust8231 3 หลายเดือนก่อน +11

    முருகா என் கஷ்டத்தில் கடனில் இருந்து காப்பாற்றும் முருகா என் மகளின் வாழ்கை ஏன் இப்படி அப்பா உன்சன்னதியில்நடந்தகல்யாணவாழ்கை ஏன் சிதரிகிடக்குதுஅப்பாமுருகாகாப்பாற்றும்முருகா

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน +1

      அவன் சன்னதியில் நடந்த திருமணம் ஒரு குறையும் வராது இன்னும் சில நாட்களில் எல்லாம் சரியாகும் கவலை வேண்டாம் பிறக்கும் முதல் குழந்தைக்கு அவன் பெயரை வையுங்கள் நல்லதே கண்டிப்பாக நடக்கும் கவலை வேண்டாம்

  • @krishnapriyap4731
    @krishnapriyap4731 7 หลายเดือนก่อน +6

    முருகா எனக்கு சீக்கிரம் ஒரு அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா என்னோட ஆசை நிறைவேறனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 6 หลายเดือนก่อน +107

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு அப்பா... தாய்மை வரத்தை தந்தருள வேண்டும் முருகா

    • @parameswari2660
      @parameswari2660 6 หลายเดือนก่อน +2

      Appaxiye aagaddum 🙏🙏

    • @Muthulakshmi-hr8lp
      @Muthulakshmi-hr8lp 5 หลายเดือนก่อน

      Nichayam varum don't worry illandhai இலை kaippidi pottu milagu seragam pottu kahi iruvarum kudithu varungal

    • @urupudachannel
      @urupudachannel 2 หลายเดือนก่อน

      Seekram nadakum 9 Vara vethilai deebam pottu viratham irunga 9 varum nallathey nadakum

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน

      Nichayam pirakkum. Kavalayai vidunga. Kandhanai nambunga.

    • @SugirtharajJeyarajah
      @SugirtharajJeyarajah หลายเดือนก่อน +2

      குழந்தை வரம் கிடைக்கும் ஓம் முருகா...

  • @lavanyav6457
    @lavanyav6457 หลายเดือนก่อน +1

    முருகன் அருளால் என் கடன் பிரச்சினை தீர வேண்டும் குடும்பத்தில் நிம்மதி நிலவ வேண்டும் எல்லோரும் நோய் இன்றி இருக்க வேண்டும் மேலும் என் மகன் பத்தாவது தேர்வு எழுதி இருக்கான் அவன் 400க்கு மேல் மார்க் எடுக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவா

  • @gjeyalakshmi2999
    @gjeyalakshmi2999 หลายเดือนก่อน

    முருகா பேரன் நன்றாக பேசவேண்டும் 🙏🙏🙏

  • @muruga615
    @muruga615 3 หลายเดือนก่อน +12

    என் பையன் இன்னும் நடக்கல பேசல முருகா .... அருள் புரிவாய்.........

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน +1

      முருகனை நம்புறவங்களை அவன் கைவிட்டதேயில்ல. கட்டாயம் எ்லோரையும் போலப் பேசி எழுந்து நடப்பான். வேல்மாறலை தொடர்ந்து பாராயணம் பண்ணுங்க. நல்லதே நடக்கும்

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน

      இறைவன் உங்கள் வேண்டுதல்களை அனைத்தையும் வெகு சீக்கிரமாகவே நிறைவேற்றி வைப்பார் கவலை படவேண்டாம் நல்லதே நடக்கும் 🎉

  • @sasireka907
    @sasireka907 19 วันที่ผ่านมา

    முருகா சிக்கிரமா என் புண் குணமாகுமனும் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @DeviSree-nq2ir
    @DeviSree-nq2ir หลายเดือนก่อน +2

    Om muruka

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 8 หลายเดือนก่อน +53

    முருகா என் சின்ன மகளுக்கு குழந்தைவரம் வேண்டும்

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน +2

      கட்டாயம் குழந்தை பிறக்கும். கவலை வேண்டாம்.

  • @user-pq6vv3zt2p
    @user-pq6vv3zt2p หลายเดือนก่อน +5

    என்.பையனுக்குழந்தைகொடு.முருகா..முருகா.முருகா.கெஞ்சிகேக்குறேன்.முருகா.பழனி.ஆண்டவறே.திருதணி.முருகா.பழமுதிர்சோலை.முருகா

    • @nagalakshmimohanraj7857
      @nagalakshmimohanraj7857 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும்

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน

      Kandipaa kuzhandhai pirakkum. Pirandhadhum santhoshamaa yengaloda share pannuveenga. Murugan erukka bayam yen?

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஆயுள் ஆரோக்கியத்துடன் நல்லபடியாக குழந்தை பிறக்கும் அவன் திரு பெயரை வையுங்கள் நல்லதே நடக்கும்

  • @user-wk3iw6md9o
    @user-wk3iw6md9o 7 วันที่ผ่านมา

    Muruga enakum udambu saribanunga ayya kozhanthai varam kudunga appa😢😢😢😢

  • @pushpamalaponnambalam9207
    @pushpamalaponnambalam9207 10 วันที่ผ่านมา

    அப்பா முருகா
    என் மகள் தட்ஷினியை காப்பாத்தி நல்லபடியாக என்னிடம் கொண்டுவந்து தாருங்கள் அப்பா. குடும்பம் ஒன்றுசேர்ந்து நிம்மதியான வாழ்வு வாழ உங்கள் அருளை தாருங்கள் அப்பா முருகா. நன்றி அப்பா

  • @elavarasuporkodi2908
    @elavarasuporkodi2908 2 หลายเดือนก่อน +6

    எனது சகோதரனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் அவன் பொன் பொருள் அவனிடம் வந்து சேர வேண்டும் வேல் மாறா வேல் வெற்றி வேல் வேல் நின்று வினை இன்றி

  • @sathyabama1816
    @sathyabama1816 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏மருதாசலமூர்த்திக்கு அரோகரா , எல்லாமும்எங்கப்பன் மருதாசலமூர்த்திபெருமான்அருளால் கிடைத்தவை என்ன சொல்வது எங்கப்பனின் கருனையை எத்தனைகோடி கோடி ஜென்மத்தின் புன்னியமோ எங்கப்பனின் பக்தர்களாக வாழ

  • @user-wk3iw6md9o
    @user-wk3iw6md9o 7 วันที่ผ่านมา

    Group exam la na pass. Pannanum appa. Veela ketaikanum appa😢😢😢😢😢romppa kastama eruku appa😢😢😢😢

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 17 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம்
    எங்கள் மூத்த மகனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தெரிவு செய்து இல்லற வாழ்க்கை அமைய வழி காட்ட வேண்டும் முருகா.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 2 หลายเดือนก่อน +25

    முருகாகுழந்தைகள்அனைவரும் உடல்நலமுடன்பல்லாண்டுவாழ அருள்புரிவாய்முருகா 🦚🦚👃🏽👃🏽🦚🦚🔔👃🏽👃🏽

  • @Happy-Moment-2023
    @Happy-Moment-2023 หลายเดือนก่อน +12

    முருகா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @MuthukrishnanMuthu-ky2rj
    @MuthukrishnanMuthu-ky2rj 27 วันที่ผ่านมา

    Nan amma vaga vandum murugan

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 หลายเดือนก่อน +16

    எனது கடன்கள் அனைத்தும் அடைத்து மனநிம்மதி பெற வேண்டும் அதற்கு அருள்வாய் முருகப்பெருமானே

  • @saranyasaravana9701
    @saranyasaravana9701 หลายเดือนก่อน +30

    நீ மட்டும் போதும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @radhav3927
    @radhav3927 16 วันที่ผ่านมา +1

    Muruga en kadan theer arul puriyithedugal appa...... arumugam aruleda anudeenam erumugam .

  • @revathyrevathy926
    @revathyrevathy926 2 หลายเดือนก่อน +5

    அப்பனே முருகா என் மகன் சிவமுருகன் உடம்புக்கு சுகம் இல்லையா காப்பாற்றுங்கள் முருகா சன்முக கடவுளே சரவணபவனே சுப்பிரமணிய சுவாமி திருத்தணி முருகா என் மகன்க்கும் சுகம் தாங்கள் ஐய்யனே...🙏🙏🙏🙏🙏🙏

    • @rifilrajiv9914
      @rifilrajiv9914 2 หลายเดือนก่อน +1

      முருகன் சுகம் அருள்வார்

    • @revathyrevathy926
      @revathyrevathy926 2 หลายเดือนก่อน

      நன்றி தெய்வமே நன்றி தெய்வமே நன்றி தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน

      முருகன் காப்பார். கவலை வேண்டாம். கந்தனே காவல். கந்தனே துணை.

  • @revathyrevathy926
    @revathyrevathy926 2 หลายเดือนก่อน +10

    அப்பனே முருகா என் மகன் செந்தில் குமார்க்கு உடம்பில் உள்ள நோய் பினி பிடி சுகம் ஆகட்டும் முருகா பதிகம் தந்ததற்கு நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t 2 หลายเดือนก่อน +1

      Good news happened soon

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 หลายเดือนก่อน +50

    எனக்கு வரும் வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும்😢கடன் தீர வேண்டும் 🙏🙏😭😭🙏🙏

  • @drrenukaramakirshnan6034
    @drrenukaramakirshnan6034 หลายเดือนก่อน +1

    என்னால் படிகிக முடியாது கேட்டால் பொதுமா

  • @vmannamalvmannamal590
    @vmannamalvmannamal590 หลายเดือนก่อน +3

    முருகா முருகா என் மகள் பகையை மறந்து என்னை வந்து சேர வேண்டும் வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா

  • @subbulakshmichandra1933
    @subbulakshmichandra1933 หลายเดือนก่อน +5

    முருகா நின் பாதம் சரண்.
    எங்கெங்கு இருந்து உயிர்
    ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் புரிவாய்
    என் அப்பனே❤

  • @malligas215
    @malligas215 4 หลายเดือนก่อน +2

    முருகா முருகா எனது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தி கொடுங்கள் மனம் நிம்மதி கொடுங்கள் ராம் ராம் சாய் ராம் 🎉🎉🎉

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 4 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🐓

  • @tulirlikes3012
    @tulirlikes3012 6 หลายเดือนก่อน +17

    முருகப்பா என் தம்பிக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா..... 🙏🙏

    • @urupudachannel
      @urupudachannel 2 หลายเดือนก่อน

      Kandipa 9 vaara vazhipadu pannunga Palani ponga nallathey nadakum

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน

      நிச்சயம் குந்தைப் பேறு கிடைக்கும். ஓம் சரஹணபவ. முருகா சரணம்

  • @rajananusamnatchithiram446
    @rajananusamnatchithiram446 8 หลายเดือนก่อน +96

    என் அப்பன் முருகனை நம்பினோர் ஒருபோதும் அவர் யாரையும் கைவிட மாட்டார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அந்த வேல்முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @ramachandran.v3769
    @ramachandran.v3769 หลายเดือนก่อน +5

    திருத்தணியில் உதித் து அருளும் ஒருத்தன் மலை
    விருத்ன் என் து உள்ளத்தில்உறை
    கருத்ன்மயில் நடத்துகுகன் வேலே

  • @JAYARAJJAYARAJ-do1rg
    @JAYARAJJAYARAJ-do1rg หลายเดือนก่อน +4

    முருகா சரணம் மலைபோல் இருக்கும் எல்லா நோய்களையும் பனிபோல் விளக்கி எனக்கு சுகத்தையும் நலத்தையும் அரோக்யதயும் குடு முருகா எனக்கு நீயே துணை யா இருந்து எல்லா நோயிலிருந்து காப்பாத்தி மீண்டும் என்ன வேலைகி போக வை முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா...

  • @thenmozhikanagaraju2057
    @thenmozhikanagaraju2057 4 หลายเดือนก่อน +4

    தைப்பூச நாதரே சரணம்.. சரணம்... சரணம்... முனைவர் ப.தேன்மொழி தேக‌நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கானூர் அரியலூர் மாவட்டம்

  • @rathna.a8100
    @rathna.a8100 หลายเดือนก่อน +6

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @SaiselavaSelava-tj6it
    @SaiselavaSelava-tj6it 11 หลายเดือนก่อน +21

    ஓம் முருகா சரணம் சாமி எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்க சாமி 🙏🙏🙏😢😢😢😢

    • @adava315-ie3ec
      @adava315-ie3ec 9 หลายเดือนก่อน +2

      God bless you you will get a child very shortly

    • @naliniramachandran6380
      @naliniramachandran6380 9 หลายเดือนก่อน

      Please ரிப்ளை for NiniRamachandran to cure Vericosevein

    • @mvanitha6081
      @mvanitha6081 8 หลายเดือนก่อน +2

      பக்தியுடன் சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பிறப்பது உறுதி. ஓம் முருகா

  • @besttech4208
    @besttech4208 28 วันที่ผ่านมา +4

    என் அப்பனே முருகா மன பயம் போக்கி அமைதி கொடு முருகா

  • @prabakaranvelmurugan8892
    @prabakaranvelmurugan8892 หลายเดือนก่อน +4

    தடை பட்ட திருமணம் நல்ல படையாக நடத்து குகன் வேலே ... திருத்தணி முருகா

  • @narayanamoorthycg9671
    @narayanamoorthycg9671 5 หลายเดือนก่อน +3

    சண்முககவசமும் தொடர்ந்துபாராயணம்செய்யுங்கள்.கந்தன் கருணையினால் எழுந்துநடப்பாள். சிறுவாபுரி நாராயணமூர்த்தி.

  • @gomathit4339
    @gomathit4339 26 วันที่ผ่านมา +2

    என் மகளுக்கு நீட் தேர்வு வினாக்கள் எளிதாக இருக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என் அப்பனே முருகா உன் அருளால் நடைபெற வேண்டும்.

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel 2 หลายเดือนก่อน +26

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்

    • @umasankar3744
      @umasankar3744 15 วันที่ผ่านมา

      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @thenmozhikanagaraju2057
    @thenmozhikanagaraju2057 4 หลายเดือนก่อน +6

    வேல் மாற்றல் திருத்தணிகை முருகா சரணம் சரணம்.. சரணம்..தேக.நிலாழினி முனைவர் ப.ப.தேன்மொழி டாக்டர் க கனகராஜு வெங்கானூர் அரியலூர் மாவட்டம்

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v 16 วันที่ผ่านมา +1

    முருகா மேல மேல கஷ்டம் வேதனைதா குடுக்கர ஒன்னு குறையில அதிகமாதா ஆவுதுபா என் மேல ஒரு துளி கருனை காட்ட மாட்டியாபா

  • @palanini5292
    @palanini5292 2 หลายเดือนก่อน +10

    முருகா எனது பிரச்சினைகளுக்காக வேண்டுகிறேன் நல்லபடியாக நிவர்த்தி செய்து என்னை காக்க வேண்டும் இறைவா

    • @ramaputtia9423
      @ramaputtia9423 หลายเดือนก่อน +1

      உபஸச🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎮♈

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v หลายเดือนก่อน +8

    சோதிக்காத முரூகா தாங்கள் சக்தி இல்லபா

  • @gunasai5167
    @gunasai5167 9 หลายเดือนก่อน +11

    அப்பா இன்னை க் கு நல்ல ரிப்போர்ட் வரணும் முருகா அப்பா நல்லபடி யாக்கணும் முருகாமுருகா முருகா

    • @rebel6042
      @rebel6042 2 หลายเดือนก่อน

      🙏