மூட்டு தேய்மானமும்,பகுதி மூட்டு மாற்றுச் சிகிச்சையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • பெரும்பாலானோருக்கு, கீல்வாதம் முழங்கால் மூட்டில் ஏற்படும். மூட்டின் இரு பக்கமுள்ள எலும்புகளின் எலாஸ்டிக் போன்ற குருத்தெலும்பு உறை சேதமடையும். கீல்வாதத்தால், எலும்புகள் நேருக்கு நேராக உராய்ந்து, வலி, மூட்டு இறுக்கம் ஏற்பட்டு, நாள்பட, மூட்டு அசைவுகள் குறையத் தொடங்கி, மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனப்படும்.உதாரணமாகக் காலை வேலைகளில் மூட்டுகளில் அதிக விரைப்புத் தன்மையும் அதன் பிறகு சாதாரணமாக இருந்தால் உங்களுக்கு ஆர்த்ரைட்டீஸ் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
    இந்த நோய் சிறிதாக ஆரம்பித்த பின்பு வருடக் கணக்கில் வளர்ந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
    பொதுவாக ஆர்த்ரைடிஸ் அதன் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் தேய்மானத்தைப் பொருத்து 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது
    1.சந்தேகத்திற்குரிய நிலை
    2.லேசான நிலை
    3.மிதமான நிலை
    4.தீவிரமான நிலை
    இந்த மூட்டு தேய்மானங்கள் வயதானவர்களுக்கும்..பெற்றோர்களின் வழியாகவும் ..உடல் பருமனால் ..உடல் உழைப்பு இல்லாதா போதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
    மூட்டு தேய்மானம் அதிகமா ஏற்பட்டு 4 காம் நிலையில் உள்ளவர்களுக்கு உள்ளவர்கள் முழு மூட்டு சிகிச்சை தேவைப்படுகிறது.ஆனால் முழங்கால் மூட்டின் குறிப்பிட்ட பகுதி மட்டும் தேய்ந்த வர்களுக்கு தேய்ந்த சிறிய பகுதியை மட்டும் மாற்றி அமைக்கும் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், மூட்டு பகுதியை முழுமையாக மாற்றும் அறுவை சிகிச்சை பற்றிய அச்சம் மக்களிடம் குறைந்துள்ளது.
    பகுதி மூட்டு மாற்று சிகிச்சையால் அறுவை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறைகிறது.நோயாளி குணமடைவதும் ,இயல்பான தனது பணிகளை விரைவில் தொடரவும் முடிகிறது.
    மேலும் முழங்காலின் தசை நார்கள் பாதுகாக்க படுகிறது.
    பகுதி மூட்டு செயற்கை மூட்டுகள் மூட்டுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்வதால் சிகிச்சையின் பலன் கூடுகிறது.
    மிகக் குறைந்த தேய்ந்து போன எலும்புகளை மட்டும் நீக்குவதால் மூட்டின் பகுதிகள் பாதுகாக்கப் படுகிறது.செயற்கை மூட்டுகள் 120 டிகிரி வரை வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கிறது.மூட்டுகளின் இயற்கையான வழுவழுப்பு தன்மையுடன் செயற்கை மூட்டுகள் இருப்பதால் அதன் பயன்கள் பல ஆண்டுகள் நீடிக்கிறது.
    சிறிய பகுதி மட்டும் கீறலிட்டி செய்யும் சிகிச்சை என்பதால் அறுவை சிகிச்சையால் ஏற்படும் இரத்த இழப்பு மிகவும் குறைவு,எலும்புகளும் ,தசை நார்களும் பாதுகாக்கும் சிகிச்சை முறையால் நோயாளிகள் விரைவில் நலம்பெறுகின்றனர்.
    குறிஞ்சி எலும்பியல் சிறப்புப் பிரிவு
    குறிஞ்சி மருத்துவமனை,
    Dr.T.J.சாலை,5 ரோடு,சேலம்-16
    விவரங்களுக்கு : 96009 30333
    #kneereplacement #kneepain #hipreplacement #orthopedics #orthopedicsurgery #kneesurgery #jointreplacement #partialkneereplacement #salem #kurinjihospital

ความคิดเห็น •